உண்மை விளக்கம்-வெண்பா 11-20
வெண்பா 11 (ஞானேந்தி )
தொகுஞானேந்திரியங்கள் நன்றா வுரைக்கக்கே () ஞான இந்திரியங்கள் நன்றா உரைக்கக் கேள்
ளூன மிகுபூத முற்றிடமா - வீனமாஞ் () ஊனம் மிகு பூதம் உற்று இடமா - ஈனம் ஆம்
சத்தாதி யையறியுந் தானஞ் செவிதோற்கண் () சத்தாதியை அறியும் தானம் செவி தோல் கண்
ணத்தாலு மூக்கென் றறி. () அத் தாலு மூக்கு என்று அறி.
வெண்பா 12 ( வானிடமா)
தொகுவானிடமா நின்றுசெவி மன்னு மொலியதனை () வான் இடமா நின்று செவி மன்னும் ஒலி அதனை
யீனமிகுந் தோற்கா லிடமாக- வூனப் () ஈனம் மிகும் தோல் கால் இடமாக- ஊனப்
பரிசந் தனையறியும் பார்வையிற்கண் ணங்கி () பரிசம் தனை அறியும் பார்வையின் கண் அங்கி
விரவியுரு வங்காணு மே. () விரவி உருவம் காணுமே.
வெண்பா 13 (நன்றாக )
தொகுநன்றாக நீரிடமா நாவிரதந் தானறியும் () நன்றாக நீர் இடமா நா இரதம் தான் அறியும்
பொன்றா மணமூக்குப் பூவிடமா - நின்றறியு () பொன்றா மணம் மூக்குப் பூ இடமா - நின்று அறியும்
மென்றோது மன்றே யிறையா கமமிதனை () என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை
வென்றார்சென் றாரின்ப வீடு. () வென்றார் சென்றார் இன்ப வீடு.
வெண்பா 14 (கண்ணுதல் )
தொகுகண்ணுதனூ லோதியிடுங் கன்மேந் திரியங்க () கண்ணுதல் நூல் ஓதியிடும் கன்ம இந்திரியங்கள்
ளெண்ணுவச னாதிக் கிடமாக - நண்ணியிடும் () எண்ணு வசன ஆதிக்கு இடமாக - நண்ணி இடும்
வாக்குப்பா தம்பாணி மன்னு குதமுபத்த () வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தமாக்
மாக்கருது நாளு மது. () கருதும் நாளும் அது.
வெண்பா 15 (வாக்காகா )
தொகுவாக்காகா கயமிடமா வந்துவச னிக்குங்காற் () வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்கும் கால்
போக்காருங் காற்றிடமாப் புல்கியன - லேற்கு () போக்க ஆரும்காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும்
மிடுங்கை குதநீ ரிடமா மலாதி () இடும் கை குதம் நீர் இடமா மல ஆதி
விடும்பா ரிடமுபத்தம் விந்து. () விடும் பார் இடம் உபத்தம் விந்து.
வெண்பா 16 (அந்தக்கரண)
தொகுஅந்தக் கரண மடைவே யுரைக்கக்கே () அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்
ளந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தையிவை () அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம்- சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பலகா லெழுந்திருந்தங் () பற்றியது நிச்சயித்துப் பலகால் எழுந்திருந்து அங்கு
குற்றதுசிந் திக்கு முணர். () உற்றது சி்ந்திக்கும் உணர்.
வெண்பா 17 (ஓதியிடு )
தொகுஓதியிடு நாலாறு முற்றான்ம தத்துவமென் () ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று
றாதி யருணூ லறையுங்காண்- தீதறவே () ஆதி அருள் நூல் அறையும் காண்- தீது அறவே
வித்தியா தத்துவங்க டம்மை விளம்பக்கே () வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக் கேள்
ளுத்தமனே நன்றாக வுனக்கு. () உத்தமனே நன்றாக உனக்கு.
வெண்பா 18 (காலநியதி )
தொகுகால நியதி கருதும் கலைவித்தை () காலம் நியதி கருதும் கலை வித்தை
யேலவிரா கம்புருட னேமாயை - மாலறவே () ஏல இராகம் புருடனே மாயை- மால் அறவே
சொன்னோ மடைவாகச் சொன்னவிவை தன்னுண்மை () சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தன் உண்மை
யுன்னி யுரைக்குநா முற்று. () உன்னி உரைக்கும் நாம் உற்று.
வெண்பா 19(எல்லை )
தொகுஎல்லை பலம்புதுமை யெப்போது நிச்சயித்த () எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்
லல்லல் தருங்கிரியை யான்மாவுக் - கொல்லை () அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை
யறிவாசை யைம்புலனு மாரவருங் காலங் () அறிவு ஆசை ஐம் புலனும் ஆரவரும் காலம்
குறியா மயக்கென்று கொள். () குறியா மயக்கு என்று கொள்.
வெண்பா 20 (வித்தியா )
தொகுவித்தியா தத்துவங்க ளேழும் விளம்பினோஞ் () வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாந் தத்துவங்கள் சொல்லக்கேள்- நித்தமாஞ் () சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக் கேள்- நித்தமாம்
சுத்தவித்தை யீசுரம்பின் சொல்லும் சதாசிவநற் () சுத்த வித்தை ஈசுரம் பின் சொல்லும் சதாசிவம் நல்
சத்திசிவங் காணவைக டாம். () சத்தி சிவம் காண் அவைகள் தாம்.
பார்க்க
தொகு[[]] உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு உண்மை விளக்கம்-வெண்பா 21-30 உண்மை விளக்கம்-வெண்பா 31-40 உண்மை விளக்கம்-வெண்பா 41-53