உண்மை விளக்கம்-வெண்பா 21-30
உண்மை விளக்கம்
தொகுஆசிரியர்: திருவதிகை மனவாசகங் கடந்தார்
தொகுவெண்பா 21 (சுத்தவித்தை )
தொகுசுத்தவித்தை ஞானமிகுந் தொன்மையவா மீசுரந்தா () சுத்த வித்தை ஞானம் மிகும் தொன்மையவாம் ஈசுரந்தான்
னத்தன் றொழிலதிக மாக்கியிடு- மொத்தலிவை () அத்தன் தொழில் அதிகம் ஆக்கி இடும்- ஒத்தல் இவை
சாதாக்கிய மென்றுஞ் சத்தி சிவங்கிரியை () சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை
யாதார ஞானவுரு வாம். () ஆதார ஞான உருவாம்.
வெண்பா 22 (ஆறாறு...சொன்னோம் )
தொகுஆறாறு தத்துவமுஞ் சொன்னோ மடைவாக () ஆறு ஆறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறி () மாறா மலம் இரண்டும் வாசொல்லக்- கூறில்
லறியாமை யாணவநீ யானசுக துக்கங் () அறியாமை ஆணவம் நீயான சுக துக்கம்
குறியா வினையென்று கொள். () குறியா வினை என்று கொள்.
வெண்பா 23 ( ஆறாறு...ஆணவமும்)
தொகுஆறாறு தத்துவமு மாணவமும் வல்வினையு () ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல் வினயும்
மாறா வருளால் வகுத்துரைத்தீர் -வேறாகா () மாறா அருளால் வகுத்து உரைத்தீர்- வேறு ஆகா
வென்னை வெனக்கறியக் காட்டீ ரிவைகண்டே () என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன்
னுன்னரிய தேசிகரே யுற்று. () உன்னரிய தேசிகரே உற்று.
வெண்பா 24 (நன்றா )
தொகுநன்றா வுரைக்கக் கேள் நல்லசி்த்தின் முன்னசித்திங் () நன்றா உரைக்கக் கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு
கொன்றாது சித்தசித்தை யோராது- நின்றிவற்றை () ஒன்றாது சித்து அசித்தை யோராது- நின்று இவற்றை
யன்றே பகுத்தறிவ தான்மாவே யென்றுமறை () அன்றே பகுத்தறிவது ஆன்மாவே என்று மறை
குன்றாம லோதுங் குறித்து. () குன்றாமல் ஓதும் குறித்து.
வெண்பா 25 (தத்துவங்கள் )
தொகுதத்துவங்க ளாறாறுந் தம்மைத்தா மென்றறியா () தத்துவங்கள் ஆறாறும் தம்மைத் தாம் என்று அறியா
வெத்தன்மை யென்னி லியம்பக்கேள்- சுத்தமா () எத்தன்மை என்னில் இயம்பக் கேள்- சுத்தமாம்
மாறு சுவையு மறியாது தன்னைத்தான் () ஆறு சுவையும் அறியாது தன்னைத் தான்
கூறி லவையிவைபோற் கொள். () கூறில் அவை இவை போல் கொள்.
வெண்பா 26 (ஆறுசுவையும் )
தொகுஆறு சுவையு மருந்தி யவைதம்மை () ஆறு சுவையும் அருந்தி அவை தம்மை
வேறொருவன் கூறியிடு மேன்மைபோ- லாறாறு () வேறு ஒருவன் கூறி இடும் மேன்மை போல் - ஆறு ஆறும்
மொன்றென்றா நாடியுணர்ந் தோதிலதி லுற்றறிவாய் () ஒன்று என்றா நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய்
நின்றபொருள் தானேகா ணீ. () நின்ற பொருள் தானே காண் நீ.
வெண்பா 27 (குன்றா )
தொகுகுன்றா வருளாலே கூறினீ ரென்வடிவு () குன்றா அருளாலே கூறினீர் என் வடிவு
பொன்றாத நும்முருவம் போதியீர் - நின்றருக்கன் () பொன்றாத நும் உருவம் போதியீர்- நின்று அருக்கன்
கண்ணுக்குக் காட்டுமாப்போலே யுனதறிவின் () கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவின்
நண்ணியறி வித்திடுவோம் நாம். () நண்ணி அறிவித்திடுவோம் நாம்.
வெண்பா 28 (அன்றியுங்கேள் )
தொகுஅன்றியுங்கே ளான்மாவா லாய்ந்தறியு மைம்பொறிக () அன்றியும் கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள்
ளின்றி யறியா விவையென்ன- நின்றதுபோ () இன்றி அறியா இவை என்ன- நின்றது போல்
லோவாம லுன்னை யுணர்த்துவோ முன்னறிவில் () ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில்
மேவாமல் மேவிநா மே. () மேவாமல் மேவி நாமே.
வெண்பா 29 (அக்கரங்கட் )
தொகுஅக்கரங்கட் கெல்லா மகரவுயிர் நின்றாற்போல் () அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றாற் போல்
மிக்க வுயிர்க்குயிராய் மேவினோ- மெக்கண்ணு () மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம்- எக்கண்ணும்
நில்லா விடத்துயிர்க்கு நில்லா தறிவென்று () நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று
நல்லா கமமோது நாடு. () நல் ஆகமம் ஓதும் நாடு.
வெண்பா 30 (நற்றவத்தோர்)
தொகுநற்றவத்தோர் தாங்காண நாதாந்தத் தஞ்செழுத்தா () நல் தவத்தோர் தாம் காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால்
லுற்றுருவாய் நின்றாட லுள்ளபடி- பெற்றிடநான் () உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி- பெற்றிட நான்
விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே () விண்ணார் பொழில் வெண்ணெய் மெய் கண்ட நாதனே
தண்ணா ரருளாலே சாற்று. () தண் ஆர் அருளாலே சாற்று.
பார்க்க:
தொகுஉண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு
- [[]][[]]