உலகம் பிறந்த கதை/கருவட்டம் அல்லது செல்
21. கருவட்டம் அல்லது செல்
ஸெல் என்றால் கருக்கூடு எனலாம். கரு வட்டம் என்றும் சொல்லலாம். கருவட்டம் சிறியது; மிகச் சிறியது. ஒரு மயிர் இழை அளவில் பாதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்தக் கருவட்டம் செய்கிற அற்புதமோ! மகத்தானது!! மகத் தானது!!!
கருவட்டம் ஒன்றை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? சாயம் போட்ட நூல் இழை மாதிரி ஏதோ ஒன்று ஜோடி ஜோடியாக இருப்பது தெரிகிறது. இந்த ஜோடிக்கு என்ன பெயர்?
'குரோமோசம்' என்று பெயர். இது கிரீக் சொல். 'குரோமோஸ்' என்றால் நிறம், வர்ணம் என்று பொருள் 'சோமோ' என்றால் உடம்பு.
மனிதருடைய கருவட்டம் ஒன்றிலே இந்த மாதிரி குரோமோசம் எவ்வளவு இருக்கின்றன? இருபத்து நாலு ஜோடி. சுண்டெலியின் உடம்பிலே இருக்கிற கருவட டத்திலே இருபது ஜோடி! ஈயின் கருவட்டம் ஒன்றிலே எட்டு ஜோடி.
இந்த மாதிரி ஜோடி ஜோடியாக 'குரோ மோசம்' உள்ள கருவட்டங்களுக்கு என்ன பெயர்? 'டிப்ளாயிட் செல்' என்று பெயர்.
‘டிப்ளூஸ்' என்றால் ஜோடி, ஜதை என்று பொருள்.
கருவட்டத்திலே நுண்கரு ஒன்று உண்டு. அதற்குள்ளேதான் குரோமோசம் இருக்கிறது. நுண்கருவைச் சுற்றி ஒருவித மான பசை போன்ற சஞ்சி. அதைச் சுற்றி வெங்காயத் தோல் போன்றதொரு ஜவ்வு. இவ்வளவும் அடங்கப் பெற்றதுதான் கருவட்டம். அதன் அளவோ! மயிர் இழையில் பாதி!
இந்த மாதிரி கோடிக்கணக்கான கருவட்டங்கள் சேர்ந்து தான் மனிதனாக காட்சி தருகின்றன. மரமாகத் தோன்றுகின்றன; மாடாகத் தோன்றுகின்றன,
இதிலே அதிசயம் என்ன தெரியுமா? கருவட்டங்கள் எல்லாம் தனித்தனியே இயங்குகின்றன. அதாவது எப்படி?
நாம் உணவு கொள்கிறோம். ஜீரணம் செய்கிறோம். மூச்சு விடுகிறோம். இன விருத்தி செய்கிறோம். இயங்குகிறோம்.
இந்தக் காரியங்களை எல்லாம் கருவட்டங்களும் செய்கின்றன.
ஒரு விளையாட்டு மைதானத்திலே ஆயிரக்கணக்கான பேர் நின்று 'டிரில்' செய்கிறார்களே! அந்த மாதிரி இந்தக் கோடிக் கணக்கான கருவட்டங்களும் செயல்புரிகின்றன. ஆகவே, நாம் செய்கிற செயல் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு கருவட்டமும் புரியும் செயலாகும்.