ஊசிகள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
மீரா
அன்னம்
மனை எண்: 1, நிர்மலாநகர்,
தஞ்சாவூர்-613007
ஊசிகள் / © மீரா / முதற்பதிப்பு: 1974 /ஆறாம் பதிப்பு: நவம்பர்.1996/ஏழாம் பதிப்பு: செப்டம்பர் 2003/ வெளியீடு: அன்னம், மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7/ அச்சாக்கம்: ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி/ விலை: ரூ. 30.00
அப்துல் ரகுமான்: | பாலு! 'ஊசிகள்' படித்தாயே எப்படி இருக்கிறது? |
பால சுந்தரம்: | முன்பெல்லாம் புலவர்கள் 'பாடான்திணை'என்று உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தான் தங்கள் பாட்டில் இடம்கொடுப்பார்கள். எல்லாம் மாறுகிற காலமிது. இங்கே, ஊசிகளின் கதாநாயகர்கள் ஊழல் பேர்வழிகள். மீராவுக்கு நயமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சமுதாயத்தைக் கூர்மையாக பொதுநல உணர்வோடு பார்க்கிறான். அவனது மொழிப் புலமையும் இதற்குக் கை கொடுத்திருக்கிறது. |
ரகுமான்: | சரி, மீரா! என்ன நோக்கத்தோடு இந்த ஊசிகளை உருவாக்கியிருக்கிறீர்கள்? |
மீரா: | சமுதாயத்தின் நோய்க்கிருமிகளைப் பார்க்கிறபோது சங்கடப்படுகிறேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமானசமுதாய ஆசை தான் இந்த ஊசிகளை உருவாக்கியது. |
ரகுமான்: | அப்போ இந்த ஊசிகள், மருந்து ஊசி என்கிறீர்கள். |
பாலு: | வெறும் ஊசிகளாகக்கூட எடுத்துக்கொள்ளலாமே. குத்தப்படுகிறவர்களுக்கு வலிக்க |
லாம். குற்றப்பிறவிகள், ஊசிகள் எங்களைக் குத்துகிறதே என்று ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை. இவர்களால் குத்தப்பட்ட நல்லவர்களைக் காணும்போதெல்லாம் கவிஞனுடைய கண்ணும் நெஞ்சும் குத்தப்பட்டி ருக்குமே. அதை நினைத்துப் பார்த்தால் இந்தக் குற்றவாளிகளுக்கு இவை நகக் கண்ணில் ஏற்றும் ஊசிகளாக இருந்தாலும் சரிதான் என்றே படுகிறது. அப்படிப் பார்க்கிற போது இந்த ஊசிகள் உயர்ந்த வையாகவே தோன்றுகின்றன. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ரகுமான்: | அப்போ 'குத்த'லாக எழுதப்பட்டிருக்கிற இந்தக்கவிதைகளுக்கு ஊசிகள் என்ற பெயர் நயமாகத்தான் படுகிறது. ஆனால் இந்த மாதிரி 'குத்தல்' எழுத்துக்கள் உயர்ந்த இலக்கியமாக மதிக்கப்படுமா? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மீரா: | அது எப்படியோ; என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதைவிட்ச் சமுதாய நடை பாதைகளைச் செப்பனிடு வதையே முக்கியமாகக் கருதுகிறேன். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாலு: | சில 'ஊசிகள்' சிலரைக் குறிப்பிட்டுக்குத்துவ தாகப்படுகிறது. பொதுவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்; இல்லையா? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ரகுமான்: | எனக்கும் கூட அப்படித்தான் தோன்றுகிறது அகப்பொருள் பாட்டுக்களுக்கு 'ஒருவர் பெயரைச்சுட்டக்கூடாது' என்ற கட்டுப்பாடு இருந்தது போல இத்தகைய கவிதைகளுக்கும் இருந்தால்தான் அவை வெறும் Scandal, ஆகாமல் இலக்கியமாகவும் ஆகும். நிரந்தரமும் கிடைக்கும்.
❖ |
கவிதை எழுதுவது விதை விதைப்பது போன்றதே. மண்ணைக் கிழிக்காமல் விதைகள் முளைப்பதில்லை. கவிதை இந்த மண்ணைக் கிழித்து முளைத்து வளர்ந்து பிரம்மாண்ட ஆலாவிருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இதில் மண் என்றாலும் தேசமென்றாலும் மக்கள்தான். எனவே கவிதையென்பது சமூகத்தைப் புனரமைப்பது, சமூகத்தை மாற்றுவது, அவலங்களை அம்பலப்படுத்துவது என்று புலனாகும்.
கவிஞர்களில் நிறைய எழுதிக் குவித்தவர்கள் முதல், ஒரே ஒரு கவிதை மட்டும் எழுதியவர் வரை பல ரகம் உண்டு. எனினும் கவிஞர் எதைப்பற்றி எழுதினார் என்பதுதான் கேள்வி. கவிதைப் பயணத்தில் தடம் பதித்தவர்கள் மிகச் சிலரே. கவிதையை ஒரு கை வாளாய் பிரயோகித்தவர்கள் தமிழில் வெகு அபூர்வம். அவர்களில் தோழர் மீராவும் ஒருவர். சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கத்துண்டிய கூர்மையான 'ஊசிகள்' தொகுப்பு பிரபலமானது. 1974ல் வெளிவந்தது. உள்ளடக்க ரீதியில் இத்தொகுப்பு பெரும் வெற்றி பெற்றது. இதே காலத்தில் வெளிவந்த அவரது கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இதோ தமிழுக்கு ஒரு கலீல் ஜிப்ரான் கிடைத்துவிட்டார் என்று கவிஞர்களையே பேசவைத்தது.
தோழர் மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் ஒரு இலக்கிய இயக்கம். அன்னம், அகரம் பதிப்பகங்கள் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டார். பல முகமறியாப் படைப்பாளிகளுக்கு முகங் கொடுத்தவர். சாமான்யப் படைப்பாளிகளைக்கூட அவர்களது நூல்களை துணிச்சலுடன் வெளியிட்டு, பிற்காலத்தில் அவர்கள் பெரிய படைப்பாளிகளாக வளர்வதற்கு ஒரு ஏணியாய் இருந்தார். அவர்களை நானும் நன்கறிவேன். ஒருவேளை அந்தப் படைப்பாளிகள் இதை மறுத்தாலும் மீரா வெளியிட்ட நூல்கள் அதற்கு நிரந்தரச் சாட்சியங்களாய் திகழுகின்றன. மற்றவர்களைப் பெரிய எழுத்தாளர்களாக்கி அவர்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் அவரது எழுத்துப்பணி குறைந்து போனது தமிழின் துரதிருஷ்டம்.
கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த 'ஊசிகள்' தொகுப்பு பற்றி "குத்தலாக எழுதப்பட்டிருக்கிற இந்தக்கவிதைகளுக்கு ஊசிகள் என்ற பெயர் நயமாகத்தான் படுகிறது. ஆனால் இந்த மாதிரிக் 'குத்தல்' எழுத்துக்கள் உயர்ந்த இலக்கியமாக மதிக்கப் படுமா?" என்று கேட்கிறார். அதற்கு "அது எப்படியோ; என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதைவிடச் சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்" என்று மீரா விடையளித்துள்ளார்.
"எல்லாம் மாறுகிற காலமிது. இங்கே ஊசிகளின் கதாநாயகர்கள் ஊழல் பேர்வழிகள். மீராவுக்கு நயமான நகைச்சுவையுணர்வு இருக்கிறது. சமுதாயத்தைக்கூர்மையாகப் பொதுநல உணர்வோடு பார்க்கிறார். அவரது மொழிப் புலமையும் இதற்குக் கை கொடுத்திருக்கிறது" என்று கவிஞர் பாலசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு சின்னஞ்சிறு கவிதைத் தொகுப்பானாலும் கீர்த்திமிக்க ஒன்றாகும். கன்னத்திலடித்தாற்போல கவிதை வரிகள் விழுகிறது. சாதி வெறியில் பிராமணருக்கு மற்றவர்கள் சளைத்தவரல்ல என்பதை,
'தேவ பாஷையில் தேர்ச்சிமிக்க
சாஸ்திரி ஒருவர் சபையில் சொன்னார்;
'ஜாதி வேண்டும் ஜாதி வேண்டும்;
உடனே சீறி ஒரு தமிழ் மறவர்
ஓங்கிக் கத்தினார்; ஒய் ஒய், இனிநீர்
ஜாதி வேண்டும் என்றால் பொறுமையாய்
இருக்கமுடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும் என்றே சாற்றும்...”
எங்கும் சிவப்பு நாடா முறையால் அரசின் பல்வேறு இலாகாக்களில் லஞ்சமும் ஊழலும் தாண்டவமாடுவதை
“நிர்வாகத் தோட்டத்தில்
நீருற்றத் தவறும்
அதிவீர வர்க்கத்தின்
அலட்சியப் போக்கால்
நாங்கள்
நட்டுவைத்த நல்ல லட்சியம்
பட்டுப் போவதைப்
பார்க்கிறோம்... பதைக்கிறோம்"
என்று பாடுகிறார்.
இத்தொகுப்பில் எதிரொலி எனுங்கவிதை மிகவும் குறிப்பிடத்தக்கது. ‘ஊருக்குத்தாண்டி உபதேசமெல்லாம்’ என்ற பழமொழிக்கேற்ப இக்கவிதை ஆப்பு அறைகிறது. சிக்கனத்தை உபதேசிக்கும் பிரதமரைப் பார்த்து -
“பிரியம் மிகுந்த பிரதமரே
உமது மந்தரி சபையின்
எண்ணிக்கையை நீர் கொஞ்சம் குறைப்பீர்
கொஞ்சம் ..... ”
என்று குத்திக்காட்டுகிறது. கவிஞர் மீரா போன்றவர்கள் முப்பதாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, அம்பலப்படுத்தித் தடம் பதித்தனர். ஆயினும் பிற்காலக் கவிஞர்கள் இந்தத் தடம் மறந்து சூனிய வெளியில் சஞ்சரித்து இன்றுவரை வெறுமையைத் தரிசித்து வருகின்றனர். புதுக்கவிதையில் தடம்பதித்த வானம்பாடிகளும், மேத்தா, அப்துல் ரகுமான், பாலா, கந்தர்வன் போன்றவர்கள் அந்தப் பதாகைகளைத் தொடர்ந்து ஏந்திப் பவனி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.
கல்வி வியாபாரமாகி தற்போது சூதாட்டமாய் கொடிகட்டிப் பறக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கல்வி சிறந்த தமிழ்நாடு, கவிதை மூலம் மீரா அம்பலப்படுத்தினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூறும் தொகைப் பட்டியல் இன்று நமக்கு அற்பமாய் தெரிகிறது. ஆயினும் தமிழக அரசியல் அரங்கம் மட்டும் மீரா கூறுவது மாதிரி -
"சினிமா அரங்கில்
அரசியல் கூத்து:
அரசியல் மேடையில்
சினிமாச்சண்டை
ஒரே கல்லில்
இரண்டு மாங்காய்...'
என்று தொடர்கதையாய் நீள்கிறது.
இந்த ஊசிகளை வாசியுங்கள். சமூகப் பிரச்சனை குறையும், மக்கள் பிரச்சனையும் எப்படிக் கவிதைகளாக்க முடியும் என்பதை அறிவீர்கள்.
மதுரைஎஸ்.ஏ. பெருமாள்
மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎச.
(Upload an image to replace this placeholder.)