எக்கோவின் காதல்/பதிப்புரை

பதிப்புரை

கவியரசர் முடியரசன்
வள்ளுவனின் குறளியத்தை
வாழ்வியல் நெறியாகக் கொண்டு
வாழ்ந்தவர்.

மாபெருங்கவிஞன் பாரதி
பாவேந்தர் பாரதிதாசன்
வழித்தோன்றல்.

பெருந்தலைவர் பெரியார்
பேரறிஞர் அண்ணா
வழியாகவும், விழியாகவும்
கொண்டவர்.

தன்மான இயக்கத்தின்
தனிபெருங்கவிஞர்.

தாய்மொழியாம் தமிழுக்கு
அரணாக இருந்தவர்.

மொழி, இனம், நாடு
உயிர் மூச்சாய்க் கொண்டவர்.

இந்நூலுள்...
நகையழகை மறந்து
கல்வி அழகை உணர்ந்து

சமூக விடுதலைக்கும்
விதவைத் திருமணத்திற்கும்
பாடாற்ற வேண்டும் என்று கவியரசர் முடியரசன் வலியுறுத்துகிறார்.

பகுத்தறிவு:-

கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும். விதி தன்னலக்காரர்களின் சதி, நம்பிக்கை இழந்தவர்களும் சுயநலக்காரர்களும் தான் கடவுளைத் துணைக்கு அழைப்பார்கள் என்று சிந்தையைத் துண்டும் வகையில் கவியரசர் முழக்கமிடுகிறார்.

முனைவர் இளவரசு:-

அஞ்சா நெஞ்சினர். நேர்மை உணர்வினர். தனித் தமிழ் இயக்க மறவர்களுக்கு வேராக இருப்பவர். வாழும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு. இந்நூல் வெளிவர ஆக்கமும் ஊக்கமும் தந்த பெருமைக் குரியவர். அவருக்கு எம் நன்றி.

பாரி:-

தந்தையின் கொள்கைகளை தன் நெஞ்சில் ஏந்திய திருமகன். இந்நூலை வெளியிட தோன்றாத்துணையாக இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. தமிழ்க் குமுகாயம் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

தமிழ்மண் பதிப்பகத்தார்.