எதிர்பாராத முத்தம்/பாடல் 16
16
எந்நாளோ!
பாராது சென்ற பகல், இரவு, நாழிகையிள்
ஈராயிரத்தில் ஒன்றும் இல்லை எனும்படிக்குத்
தூங்கா திருக்கின்றேன். தொண்ணூறு நாள்
கடந்தேன்.
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்
நாள்?
கண்டவுடன் வாரி அணைத்துக் கண்ணாட்டி
யென்று
புண்பட்ட தெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான்
அன்பு நிலையம் அடையும் நாள் எந்தாளோ?
என்புருகிப் போகின்றேன்; ஈடேற்றம் எந்
நாளோ?
கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும்
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு,
தோனின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி,
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ?
என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை
இன்னே நான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே?
ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன்
யாரும் புறப்படவே இல்லை இது என்ன?
என்று பலவா றழுதாள். பின் அவ்விரவில்
சென்றுதன் தோட்டத்திற் சேர்த்தாள். இப்
புன்னை தனைக்
கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்
தாங்க த
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித், தன்
கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக,
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப்
பொன்னுடம்பு நோகப் புடைக்க, அவரைப்
பிணித்த
யுன்னை, இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்
தான்!
தொட்டபோ தெல்லாம் சுவையேறும்
நல்லுடம்பை—
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்
மெய்யைக்—
கட்டிவைத்த காரணத்தால், புன்னை நீ காரிகை
நான்.
ஒட்டுறவு கொண்டுவிட்டோம் தந்தை ஒரு
பகைவன்!
தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ?
நோயே உணவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ?
சாதல் தமைமறக்கத் தானென்ன காரணமோ!
ஏதோ அறியேன் இனி