எதிர்பாராத முத்தம்/பாடல் 17


17


ஆசைக்கொரு பெண்


புன்னையில் அவளு டம்பு
புதைந்தது! நினைவு சென்று,
கன்னலின் சாறு போலக்
கலந்தது செம்ம லோடு!
சின்னதோர் திருட்டுமாடு
சென்றதால், அதைப் பிடித்துப்
பொன்னன் தான் ஓட்டி வந்தான்;
புன்னையில் கட்டப் போனான்.

கயிற்றெடு மரத்தைத் தாவும்
பொள்னளின் கையில், தொட்டுப்
பயிலாத புதிய மேனி
பட்டது. சட்டென் றங்கே
அயர்கின்ற நாய்கணைப் போய்
அழைத்தனன்; நாய்கன் வந்தான்
மயில்போன்ற மகளைப், புன்னை
மரத்தோடு மரமாய்க் கண்டான்.

குழந்தாய் என் றழைத்தான், வஞ்சி
வடிவிளைக் கூவி, "அந்தோ,
இழந்தாய் நீ உனது பெண்ணை !"
என்றனன். வஞ்சி தானும்,
முழந்தாளிட் டழுது, பெண்ணின்
முடிமுதல் அடிவ ரைக்கும்
பழஞ்சீவன் உண்டா என்று
பதைப்புடன் தடவிப் பார்த்தாள்.

"அருமையாய்ப் பெற்றெடுத்த
ஆசைக்கோர் பெண்ணே!" என்றும்,
அருவிநீர் கண்ணீ ராக
அன்னையும் தந்தை யும், "பொற்
திருவிளக் கனையாய்!" என்றும்
செப்பியே, அந்தப் புன்னைப்
பெருமரப் பட்டை போலப்
பெண்ணினைப் பெயர்த்தெடுத்தார்!

கூடத்தில் கிடத்தி னார்கள்
கோதையை ! அவள் முகத்தில்
மூடிய விழியை நோக்கி
மொய்த்திருந் தார்கள். அன்னாள்
வாடிய முகத்தில், கொஞ்சம்
வடிவேறி வகுதல் கண்டார்.
ஆடிற்று வாயிதழ் தாள்!
அசைத்தன கண்ணி மைகள் !

எழில்விழி திறந்தாள்." "அத்தான்"
என்றுமூச் செறிந்தாள்! கண்ணீர்
ஒழுகிடப், பெற்றோர் தம்மை
உற்றுப் பார்த்தாள். கவிழ்ந்தாள்.
தழுவிய கைகள் நீக்கிப்,
பெற்றவர் தனியே சென்றார்
பழமைபோல் முணு முணுத்தார்;
படுத்தனர் ; உறங்கி னார்கள்.