எதிர்பாராத முத்தம்/பாடல் 24
24
ஊமையின் உயர் கவிதை.
அம்மையே அப்பா என்று
பெற்றோரை அவன் எழுப்பிச்
செம்மையே நடந்த தெல்லாம்
தெரிவித்தான்! சிந்தை தைந்து
கைம்மையாய் வாழ்வாள் நல்ல
கணவனைப் பெற்ற தைப்போல்,
நம்மையே மகிழ வைத்தான்
நடமாடும் மயிலோன் என்றார்!
மைந்தனாம் குருப ரன் தான்
மாலவன் மருகன் வாழும்
செந்தூரில் விசுவ ரூப
தரிசனம் செய்வா னாகிக்,
கந்தரின் கலிவெண் பரவாம்
கனிச்சாறு பொழியக் கேட்ட
அந்த ஊர் மக்கள் யாரும்
அதிசயக் கடலில் வீழ்ந்தார்!