எதிர்பாராத முத்தம்/பாடல் 25
25
ஞானகுருவை நாடிச் சென்றான்.
ஞானசற் குருவை நாடி
நற்கதி பெறுவ தென்று
தானினைந் தே தன் தந்தை
தாயார்பால் விடையும் கேட்டான்
ஆனபெற் றோர்வ குந்த
அவர் துயர் ஆற்றிச் சென்றான்,
கால்நிழல் போற் கு மார
கவியெனும் தம்பி யோடே.
மீனாக்ஷி யம்மன் பிள்ளைத்
தமிழ்பாட விரைந்து, தம்பி
தானதைக் குறிப் பெடுக்கத்
தமிழ்வளர் மதுரை நாடிப்
போனார்கள்; போகும் போது
திருமலை நாய்க்க மன்னன்
ஆனைகொண் டெதிரில் வந்தே
குருபரன் அடியில் வீழ்ந்தான்.