எதிர்பாராத முத்தம்/பாடல் 29


29

இறைவி மறைவு


என் றந்தப் பாடல் சொன்னான்
குருபரன் ! சிறுமி கேட்டு
நன்று நன்றென இசைத்தாள் ;
நன்றெனத் தலை அசைத்தான் ;
இன்னொரு முறையுங் கூற
இரந்தனள்; பிறகும் கேட்கப்
பின்னையும் குரு பரன்தான்
தமிழ்க்களி பிழியுங் காலை,


பாட்டுக்குப் பொருளாய் நின்ற
பராபரச் சிறுமி, நெஞ்சக்
கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
கொஞ்சினாள். அரங்கு தன்னில்!
ஏட்டினின் றெழுத்தோ டோடி
இதயத்துட் சென்ற தாலே,
கூட்டத்தில் இல்லை வந்த
குழந்தையாம் தொழும் சீமாட்டி!