ஒப்பியன் மொழிநூல்/தமிழ்த் தோற்றம்

III. தமிழ்மொழித் தோற்றம்

(1) கத்தொலிகள்.Cries.

கா ; ஓ, கோ , கூ..

இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் வினிப்பொலிகள்.

ஓ—ஓசை, ஓதை ; ஓல்—ஓலம்,

ஓதை—ஓது. ஓல்—-ஓல் - ஒலி.

கூ—கூவு. கூ( க்குரல்) கூப்பு (தொழிற்பெயர்) + இடு - கூப்பிடு.

(2) ஒப்பொலிகள் --Imitatives:

கா: கூ (கூயில்) - குயில். ஒ. நோ, (கூக்கூ ) - குக்கூ (cuckoo) கக்கூ என்பது பிற்காலத் துச் சரிப்பு: மா - மாடு, காகா—காக்கா —காக்கை—காகம்; குர்—குரங்கு .

ஒலிக்குறிப்புக்கள் — Onomatopoeia

கா: பட்(டு) - படு(விழு). தூ-துப்பு:

உரறு (roar). அரற்று (rattle), பினிறு (blare), கரை (cry, crow) முதலிய சொற்களெல்லாம் ஒலிக்குறிப்பே.

உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள்—Interjections.

ஒளி—பளபள, தகதக, பலார், பளிச்சு (flash)

நிறம்—பச்சு வெள், கரு.

ஊறு—பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து;

நாற்றம்—கம், கமகம.

விரைவு—சடு(சட்), E, sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு.

அச்சம்—துண், திடுக்கு, பே.

இரக்கம்—ஆ. ஆஆ—ஆவா—ஆகா
.

அருவருப்பு -சீ, சே, சை.
வியப்பு-ஓ. ஆ, ஏ, ஐ, ஆ ஆ--(ஆவா) ஆகா.
தெளிவு-ஓ, ஓஓ-ஓவோ --ஓகோ.
சுருக்கம்-சிவ், சிவுக்கு.
விரிவு -பா, பளா.
பருமை-பொந்து, பொது, பொதுக்கு.
செறிவு -கொசகொச, மொசுமொசு.
கனம்--திண்.
கேடு - நொசகொச.
பொலிவு-சம், (ஜம்).
மூட்சி ---குப்.
ஏவல்-உசு (உஸ்).
விளி-தோ, சூ, பே.
அமைத்தல்--உசு (உஷ்) E: hush.

நுணுகி நோக்கினால், எல்லாக் குறிப்புக்களும் ஒலிக்குறிப் பினின்றே தோன்றினமை புலனாகும் ஆ, ஏ, ஓ என்பவை சுட்டடிகள்.

குறுகுறு என்பது காதில் அங்ஙனம் ஒலிப்பது. பிசு பிசு என்பது பசையுள்ள பொருளைத் தொடும் போது தோன்றும் ஒலி. திடும் என்பது ஒரு பொருள் திடீர் என்று விழும் ஒலி. ஆ என்பது நோவு தோன்றும்போது அரற்றும் ஒலி. இங்ஙனமே பிறவும்.

பிசு என்னுங் குறிப்பினின்று, பிய், பிசின், பிசிர், பிசினி, பிசினாறி முதலிய சொற்கள் பிறக்கும். இங்ஙனமே பிறவற்றினின்றும்.

குறிப்புச் சொற்கள் இணைக்குறிலாயிருப்பின், இரட்டைக் கிளவியாயிருப்பது பெரும்பான்மை. ஆனால், சில அடுக்குத் தொடர்களும் இரட்டைக்கிளவிபோல் தோன்றுவதுண்டு: அவற்றைப் பிரித்தறிய வேண்டும்.

கா: இரட்டைக்கிளவி அடுத்குத்தொடர்
குறுகுறு மினுமினு (மின்னு மின்னு)
மடமட சுடுசுடு
இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும் ; தனித்து வந்து பொருள் தராது ; அடுக்குச்சொல் தனித்துவந்து பொருள் தரும்:

செக்கச்செவேர், சின்னுஞ்சிறு என்பவற்றை இரட்டுக்கிளவி யெனலாம்:

(3) வாய்ச் சைகைபொலி—Oral Gesture.

முதலாவது அழைப்புவிடுப்புகளும் அண்மை சேய்மைப் பொருள்களும் கத்தொலியோடு கூடியகைச்சைகையினாலேயே குறிக்கப்பட்டன. பின்பு வாய்ச்சைகையோடுகூடிய ஒலிகளாற் கூறப்பட்டன:

அழைப்பு : வா. (பா என்றும் உலக வழக்கில் வழங்கும்.)

வா என்னும் ஒலியை ஒலிக்கும்போது, கீழுதடு மேல் வாய்ப்பல்லைத் தொட்டிறங்குவது, ஒருவன் சேய்மையிலுள்ள வனைத் தன்னிடம் வரச்சொல்லுவதைக் குறிக்கும். இதைக் கைக்சைகையில் கையானது மேலுயர்ந்து கீழிறங்கும் செய்கையுடன் ஒப்பநோக்குக.

விடுப்பு : போ.

போ என்னும் ஒலியை ஒலிக்கும்போது, பகரமாகிய வெடிப் பொலி (Explodent)யும் ஒகாரமாகிய கீழ்மேலங்காப்பொலியும், முறையே போக்கையும் சேய்மையையும் குறிப்பனவாகும்.

சுட்டு :

வாயை விரிவாயங்காத்தலால் சேய்மையையும், பக்கவாரியாய் நீட்டிக் கீழ்மேல் ஒடுக்கியங்காத்தலால் அண்மையையும், இடை நிகர்த்தாய்க் குவித்தங்காத்தலால் இடைமையையும், பக்கவாரியா யொடுக்கிக் கீழ்மேல் நீட்டியங்காத்தலால் உயரத்தையும் முதற்றமிழர் குறித்தொலித்ததால், முறையே, ஆ ஈ ஊ ஓ என்னும் ஒலிகள் பிறந்திருக்கின்றன. இவற்றை ஒலித்துக்காண்க.

ஓ உயரத்தை யுணர்த்துவதை, ஓங்கு, ஓச்சு முதலிய: சொற்களாலறிக,

ஓ...ஓ. கா : ஒய்யாரம்.

ஓ—ஊ, ஓ—உ, ஒகரத்தை உகரமாகவும் உகரத்தை ஒகரமாகவும் ஒலிப்பது உலக வழக்கு. உயரங்குறித்து முதலாவது தோன்றியவொலி ஓகாரமே.

ஊங்கு, உம், உம்மை , உம்பர், உம்பல், உத்தரம், உச்சி, உயர், உன்னதம் முதலிய சொற்களில், ஊகாரவுகரங்கள் உயர்ச்சி குறித்தல் காண்க.

மேல் என்னும் உயரங்குறித்த சொல், மேற்சொன்ன என்று இறந்த காலத்தையும், இனிமேல் என்று எதிர்காலத்தையும் உணர்த்தல் போல, ஊகாரவுகரச் சுட்டடிப்பெயர்களும் அவ்விரு காலத்தையும் உணர்த்தும்.

கா; 'காணாவூங்கே "— இறந்தகாலம்

"உம்மை எரிவாய் நிரயத்தும்"—எதிர்காலம்

எதிர்காலம் பிற்காலம் என்று சொல்லப்படுவதாலும், பின் என்னும் பெயர் காலத்தைப் போன்றே இடத்தையும் குறித்தலாலும், பின்பக்கம் உப்பக்கம் எனப்பட்டது.

ஆகவே, உகரச்சுட்டு உன்னதம் உச்சி முதலிய சொற்களில் உயரத்தையும் : ஊங்கு. உம்பர் முதலிய சொற்களில் உயரத்துடன் இறந்தகாலத்தையும்; உம், உம்மை என்னுஞ் சொற்களில் உயரத்துடன் எதிர்காலத்தையும், உத்தரம் என்னுஞ் சொல்லில் உயரத்துடன் (நூலின்) பிற்பாகத்தையும் பிற்கூறும் மறுமொழியையும்; உப்பக்கம் என்பதில் பின்பக்கத்தையும் முதுகையும் உணர்த்துமென்க,

இடைமைச்சுட்டான உகரமும் உயரச்சுட்டான உசுரமும் வெவ்வேறு; முன்னது இயற்கையினாயது, பின்னது ஓகாரத்தின் திரிபு:

வினா :

(1) ஈற்று வினா—ஓடு

ஓகாரம் உயரச்சுட்டென்று முன்னர்க் கூறப்பட்டது. விளர்ப்பொருளில் உயரச்சுட்டுக்களே பயன்படுத்தப்பட்டன. ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, கீழே கிடக்கும் பல பொருள்களில் ஒன்றை மேலேயெடுத்துக்காட்டிக் கேட்டல் போன்ற வுணர்ச்சி குறிப்பாய்த் தோன்றுதலை நுண்ணிதி னோக்கி யுணர்க. சொற்கள் தோன்று முன், எதுவேண்டுமென்னும் கருத்தில், ஒரு பொருள் எடுத்து அல்லது குறித்துக் காட்டியே கேட்கப்பட்டது.

ஓகாரம் அவனோ, வந்தானோ என்னுஞ் சொற்களிற் போல ஈற்றுலினாவாகவே யிருக்கும்.

(2) இரு தலைவினா---ஏ:

சேய்மை யண்மை யிடைமைச் சுட்டுக்களினின்று முறையே அவன் இவன் உவன் முதலிய சுட்டுப் பெயர்களும், அன்மைச்சுட்டினின்றே முன்னிலைப் பெயரும் பிறந்தபோது, தன்னைக் குறிக்க ஓர் ஒலி வேண்டியதாயிற்று. அதற்கு உள் ளிருந்தெழுப்பப்படும் ஓர் ஒலியே பொருத்தமாகும். அவ்வொலி ஏகாரமே. உண்ட பின் வயிற்றிலிருந்து எழும் ஒலி ஏப்பம் (Eructation) என்றும், இன்பத்தில் விடும் (அடிவயிற்றினின் றெழும்) நெட்டுயிர்ப்பு ஏங்கு என்னும் சொல்லாலும் குறிக்கப் படுதல் காண்க.

ஏ என்னும் ஒலி அடிவயிற்றினின்று மேனோக்கியெழுப்பப் படுவதால், அது எழற்பொருளையும் உயரத்தையும் உண்ர்த் துவதாகும். ஏ-எ.

கா:
எ—எக்கு, எழு, எடு, எம்பு, எவ்வு:
ஏ—ர, ஏகு, ஏத்து, ஏந்து, ஏன், ஏர், ஏறு:

தென்னூ, நெடு, நெம்பு, சேண், மே, மேடு என்பவை, மெய்யொடு கூடிய எகர ஏகார வடியாய்ப் பிறந்தவை:

எழால், எழில், எழிலி, எழினி என்பவை எழு என்பதினடியாய்ப் பிறந்தவை,

"ஏபெற் றாகும்" என்றார் தொல்காப்பியர் (உரி. 8).

ஏண் என்பதினின்றே ஏணி, ஏணை, சேன், சேணோன் முதலிய சொற்கள் பிறக்கும்.

சேய்மையிற் செல்லுதல் அல்லது தொடர்ந்தொன்றைச் செய்தல் மேற்செல்லுதலாகக் கூறப்படும்: ஒ. நோ. go on "go on reading.

மேற்செல்லுதல் என்னும் கருத்தையே ஏ (அம்பு), ஏவு' ஏரு என்னும் சொற்கள் தழுவியன. செய்து கொண்டேயிரு என்பதில் ஏகாரம் தொடர்ச்சியையும், ஒன்றேகால் என்பதிற் கூடுதலையுங் குறிக்கும்.

Educate, elate, erect, eructate, heave, heaven முதலிய சொற்களெல்லாம், எகர ஏகார அடியாய்ப் பிறந்து, எழல் அல்லது எடுப்புப்பொருளை உணர்த்துபவையே.

ஒ.நோ : சுவரெடு - to erect a wall.

எகரம் அல்லது எடுத்தல் என்னுஞ் சொல், எடுப்பாக (உயரமாக) வளர்த்தல், வெளியே எடுத்தல், வெளியே எடுத்து நடத்தல், வெளியே என்னுங் கருத்துகளை முறையே தழுவும்.

ஒ.நோ : L. educo, E. educate, to bring up; to draw out the mental powers of, as a child,

L. educo, E. educe, to draw out.

L. educo, duco (Aphesis), to lead.

L. e, ex; Gr. ec, ex; E. ex, out, out of.

பண்டைத்தமிழில் வினைச்சொற்கள் எடுக்க, நடக்க என்று நிகழ்கால வினையெச்ச வடிவிலே கூறப்பட்டிருக்கின்றன. அவையும் கல்லார்வாயில் எடுக்கோ, நடக்கோ என்று ஓகார வீறாகவே வழங்கினதாகத் தெரிகின்றது. இதை இன்றும் மலையாளத்திற் காணலாம். எடுக்கோ, educo (L.) என்னும் சொற்கள் ஒத்திருத்தலைக் காண்க.

எடு என்னும் சொல் தமிழில் வெளியே எடு என்னும் பொருளில் வழங்குவதை, வாயாலெடு, காலில் முள்ளெடு என்னும் வழக்குகளாலுணர்க. எ-e; எக்கு - ec, ex. எகரவொலியே பண்டு e என்னும் ஆங்கில வெழுத்திற்கு மிருந்தது.

ஏ என்னும் ஒலி, ஒருவனுக்குள்ளிருந்து வருவதால், அவன் தன்னைக் குறிக்கும் தன்மைப் பெயரடியாயிற்று. ஏன் — யான் — நான்.

ஏகாரம் எழலைக் குறித்தலால் ஓகாரம்போல வினாப் பொருட்கும் ஏற்றது.

கா : ஏது, ஏவன் (முதல்); அவனே, வந்தானே (ஈறு)

ஏ — எ. கா: எது, எவன், என்.
ஏ — யா. கா: யாது, யாவன், யார்.

ஏகாரத்தின் திரிபே யா என்பது. இதனாலேயே தொல்காப்பியர் யாவை வினாவெழுத்தாகக் கூறவில்லை.

ஒ. நோ: ஏன் — யான், (ஏனை) — யானை. ஏனம் = கருப்பு, பன்றி. ஏழ் — யாழ்.

ஈற்றில் வரும் ஆ வினா சேய்மைபற்றியதாகும். சேய்மையும் உயரத்திற்கினமான பண்பாதலையும், ஆன் ஓன் என்னும் இருவடிவிலும் ஆண்பாலீறு வழங்குவதையும், ஈரெழுத்தும் ஏறத்தாழ ஒரே முயற்சியால் பிறப்பதையும் நோக்கியுணர்க.

ஆ வினா முதலில் வராது. ஆர் என்பது யார் என்பதன் மரூஉ.

தமிழிலுள்ள ஆ, ஈ, ஊ, ஓ, ஏ என்ற ஐந்தெழுத்துகளே, சுட்டும் வினாவும் உயரமும்பற்றிய ஆரியச்சொற்களுள் பெரும்பாலனவற்றிற்கு வேர் என்பது, இந்நூலின் மூன்றாம் மடலத்தில் விளக்கப்படும்.

சுட்டு வினாவடிகள் ஆரிய மொழிகளிற் சொற்களாயும், அவற்றுள்ளும் சில எழுத்து மாறியு மிருக்கின்றன. தமிழிலோ அவை எழுத்துகளாயும், ஓரிடத்திலும் பிறழாமலும் இருக்கின்றன.

கா: வடமொழியில்,

பிறழ்ந்தவைபிறழாதவை

அத்ய = இன்றைக்குஇ(த்)தி = இப்படி

அத்ர = இங்கேஇத்தம் = இவ்வாறு, E. item.

இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப்படியேயிருத்தல் காண்க.

(4) சொற்கள் தோன்றிய பிறவகைகள்

சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு.

ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை.

எழுத்துத்திரிபு : புழலை — புடலை, பெள் — பெண்

திரிசொல் : கிளி — கிள்ளை, மயில் — மஞ்ஞை.

மரூஉ : பெயர் — பேர், கிழவர் — கிழார்.

முதன்மெய்நீக்கம் : சமர் — அமர், தழல் — அழல்.

முதன்மெய்ப்பேறு : ஏண் — சேண்.

சிதைவு : எம்மாய் — யாய், நும்மாய் — ஞாய், தம்மாய் — தாய்.

போலி : நாலம் — ஞாலம், நெயவு — நெசவு, குதில் — குதிர்.

இலக்கணப்போலி - சிவிறி (எழுத்துமாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று).

முக்குறை:—

முதற்குறை : தாமரை — மரை, ஆட்டுக்குட்டி — குட்டி.

இடைக்குறை : வட்டை — வடை, உருண்டை — உண்டை.

கடைக்குறை : தம்பின் — தம்பி, கோன் — கோ.

அறுதிரிபு (உலக வழக்கு) :—

வலித்தல் : கொம்பு — கொப்பு, ஒளிர் — ஒளிறு, பதர் — பதடி.

மெலித்தல் : போக்கு — போங்கு.

நீட்டல் : நடத்து — நடாத்து, கழை — கழாய்.

குறுக்கல் : ஆங்கு — அங்கு.

விரித்தல் : — முதல்விரி : காயம் — ஆகாயம்.

இடைவிரி : காதம் — காவதம்

கடைவிரி : திரும் — திரும்பு

தொகுத்தல் : செய்யுமவன் — செய்வோன்.

குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முசுமுசுக்கை).

எதுகை : (இயற்கை) செயற்கை (செயல் + கை).

காரணச்சொல் : உள்ளி, நாளி — நாழி (நாளம் = மூங்கில்).

தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை.

பண்புப்பெயர் : வெளுமை — வெண்மை.

வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான்.

ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி)

திரிபாகுபெயர் : பித்தம்—பைத்தியம்.

குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி—தொட்டில்,

பருமைப்பெயர் : குன்று- குன்றம், தெருஞ்சில் — ஆனை நெருஞ்சில்,

உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன்,

இல்லோன் பெயர் : அறிவிலி.

தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி.

அறுதொகை:--

வேற்றுமை : ஊற்றுக்கண், பிழைபொறுத்தான்,

வினை : நிறைகுடம், சுடுசோறு.

பண்பு : வெந்நீர், செம்மறி:

உவமை : கண்ணாடியிலை.

உம்மை : பயிர்பச்சை, தாய் பிள்ளை:

அன்மொழி : நால்வாய்,

இடைச்சொற்றொடர் ; இன்னொன்று.

புணர் மொழித்திரிபு! புகவிடு—புகட்டு, வரவிடு—வரட்டு, 'போகவிடு—போகடு—போடு. L. Pono; Gacl. Put; W. Pwitio ; A. S. potian; E. put, pose.

மரு உப்புணர்ச்சி : தெங்கு -|- காய் = தேங்காய்,

துணைவிகைப்பேறு — எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு,

முன்னொட்டுச்சேர்பு: முற்படு, உட்கொள்,

பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம்:

அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற் நான் -

சினைமுதல் ; வாற்குருவி, கொண்டைக்கடலை,

அடைச்சினை முதல் (வண்ணச் சினைச் சொல்) : செங்கால் நாரை.

ஒட்டுப் பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்.

ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துக்கள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தையுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும்.

கா : வள்,

+இ=வள்ளி—வளி.
+ஐ = வள்ளை —வளை , + அம் = வளையம் —வலயம் (வ)
+அல்=வளையல்
+ வி= வளைவி
+அகம் = வளாகம்
+அம் =வள்ளம்— வளம்— வளமை— வனப்பும்: வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும்.

+அர் = வளர்
+அல்= வள்ளல்
+ஆர்= வளார்

வள்

+தி= வட்டி,+இல் வட்டில்
+ அணை = வட்டணை
=வண்டிவண்டி—பண்டி—பாண்டி
+இல் = பாண்டில்
+ அன் = பாண்டியன்
+து = வட்டு+அகம் - வட்டகம்- (வட்டுகம்)—வட்டுவம்.

=வண்டு
+ தம் = வட்டம் (வ்ருத்த, வ.)+ அகை = வட்டகை
+ ஆரம் =வட்டாரம்
+தை = வட்டை — வடை

வட்டம் என்பதை நிலை மொழியாகக்கொண்டு வட்டக் கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வரு மொழியாகக்கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர் மொழிகளும் தோன்றும்.

வள்—வாளம்—வாளி:

வாளம் — வாணம்—பாண (வ).

வாளம் = வளைத்தது, வளைந்த மதில். ஓ. தோ. சக்கர வாளம்.

Lat. vallum a rampart; Ger, wall ; A. S. Weall; E. wall.

வாளம்—பாளம்(மதில் போன்ற கனத்த தகடு):

வாளம் —வாள் (வளைந்த கத்தி) அரிவாளையும் வெட்டறுவாளையுங் காண்க.

வள்—வணர் — வணங்கு.

வள்—uri (Sans), verto (L)

வள்—வரி—வரை. வரி+சை = வரிசை, வரி+ அம்= வரம்:

வரி + அணம் = வரணம் — வண்ணம்
வரணம்—வரணி—வண்ணி,
வண்ணம்+ஆன் = வண்ணான்.

இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள்களைக் குறிப்பன. அவற்றையும், வள் என்னும் வேரடியாய்ப் பிறந்த பிறசொற்களையும், எனது செந்தமிழ்ச் சொல்லியலக ராதியிற்றான் காணமுடியும்.

தமிழ்மொழி வளர்ச்சி

தமிழ்மக்கள் குறிஞ்சிய விருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்தினைகளுக்குச் சென்ற போது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தில் தோன்றினவை பலவாகும். மருதத்திலும் நகரந் தோன்றிய பின்னரே பல சொற்கள் தோன்றின.

பல தொழிலும் பல கலையும் பல நூலும் தோன்றிய போது ஒவ்வொன்றிலும் பற்பல சொற்கள் தோன்றின.

ஒவ்வொரு திணையிலும் பொருளும் தொழிலும் கருத்தும் வேறுபடுதலின், வெவ்வேது சொற்கள் பிறந்தன; ஒவ்வொரு தொழிலிலும் கலையிலும் நூலிலும் கருத்துக்கள் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன.

மருத நிலத்தரசன் ஏனை நாற்றிணைகளையும் அடிப்படுத்திய போது. ஐந்திணை வழக்கும் ஒரு மொழியாயின : பின்பு அடுத்த நாடுகளைக் கைப்பற்றிய போது, சொல்வளம் விரிந்தது:

விலங்கு பறவை முதலிய ஒவ்வோர் உயிரினத்தினின்றும் சில சொற்களும் வழக்குக்களும் கருத்துக்களும் கோன்றின. அவற்றுள் நிலைத்திணையினின்றும் தோன்றியவை மிகப்பல. அவையாவன :—

முதல் :—

“அறுகுபோல் வேரூன்றி அரசு போலோங்கி அத்திபோல் துளிர்த்து ஆல்போற்படர்ந்து...........” என்று ஒருவரை வாழ்த்துவது வழக்கம்.

அரசாணிக்கால் நட்டல், அறுகிடல் என்பவை திருமண வழக்கு:

கொடி = குலத்தொடர்ச்சி. கா : கொடி வழி, கொடி கோத்திரம்,

புல் = சிறுமை. கா , புன்மை , புல்லியர், புன்செய், புன் செயல், புன்னகை,

பனை = பெருமை, ஓரளவு.

மரம் — மரபு. அடியுங் கவையுங் சிளையும் உடைய மரம் போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின், குல வழி மரபெனப்பட்டது.

மன்று என்னும் சொல்லும் மரம் என்பதினின்றே வந்திருக்கின்றது. கா = சோலை. காத்தல் பழச்சோலையைப் போற் காத்தல்:

வாழை — வாழ்:

வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடின பின் பிள்ளைகள் தலையெடுப்பது போலத் தாய் வாழை முதிர்ந்த பின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்கனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக.

“வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்” என்றார் இராமலிங்க அடிகள்.

வாழை முதிர்த்தபின் சாயும்.

சாய்— சா = இற. ஒ. நோ. let. deyja ; Dan. do : Scot. dee ; E. dic.

சகர டகரங்கட்கு ஓர் இயைபிருப்பதனாலேயே, ஓடி— ஓசி, vide—vise என்று திரிகின்றன:

சா + வி = சாவி (சப், வ.) சாவி+ அம் = சாவும் (சாபவ ) —சாபம்.

சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு:

வாழ்விX சாவி, வாழ்த்து—வழுத்து. வாழ்த்தல் சொல் வளவே.

சினை :-
வேர் : வேரூன்று, வேர்கொள், வேரறு.
முளை : கான்முளை , முளை = தோன்று(வி.), இளமை, துவக்கம் (பெ).
தண்டு : தண்டு = தடி, படை (பெ.); தண்டல் = வரி
திரட்டல், தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக் கட்டணம், வீண்.
தண்டி = பெரு, ஒறு (வி.)
தடி = கம்பு, திரட்சி, ஊன் (பெ.) ; பெரு, வெட்டு (வி.). தடியாலடித்ததே முதல் தண்டனை.
கவை : கவை = பிரி, (வி.) கவடு = காலிடை, கவை—கவான்—கமா (உருது).
கிளை : கிளை = பிரி(வி.). இனம், பிரிவு (பெ.) கிளைவழி.
கொம்பு : கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள்
கொம்பு— கொழு கொம்பு, விவங்குக்கொம்பு, எழுத்துக்கொம்பு, ஆடுகொப்பு, கொடு, வாங்கு

(கிளை பயிர் வளைவதால் தோன்றியவை).

கோடு : கோடு (stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு.
இலை : மூவிலைச்சூலம், இலைத் தொழில்.
இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம்,

இலக்கித்தல் எழுதல்,
இலக்கு-இலக்கியம், இலக்கணம்,

பூ : பூத்தல் = தோன்றுதல். பூப்பு (puberty). பூசுணம் பூத்தல், உவகைபூத்தல்,
அரும்பு : அரும்பல் தோன்றல். முகிழ் = தோன்று, ஒடுங்கு. மொக்கு = கோலம். அம்பல் = சிறிது வெளிப்பட்ட பழி.
கூம்பு = ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை)

கூம்பு—கூப்பு,

மலர் : முகமலர்ச்சி, மலர்த்தல் = மல்லாத்தல், அலர் = பழி.
காய் : கை காய்த்தல், காய் விழுதல் (abortion);

மாங்காய் = குலைக்காய் (beart)

பழம் : பழுத்தல் = முதிர் தல். கா : பழுத்த கிழம், சளி, சிலந்தி முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும்.
= நிறைதல். கா : நைவளம் பழுநிய",

பழுத்த சைவன்,

= தண்டனை நேர்தல். கா : 10 உருபா

பழுத்து விட்டது.

பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி
இலைப்பழுப்பு. பழுப்பு—பசுப்பு (தெ.);

பசப்பு—பசலை:

பழம்—பழமை—பழைமை—பழகு—பழங்கு—வழங்கு.
பழவினை, பழையன், பழங்கண்,
பழம்—பயம். பழன் —பயன், ஒ. நோ, fruit

= effect.

பழம்— பல (வ.), fruit : பலி (வ.), to fructify; பண்டு =பழம் (தெ.), பழைமை.
கனி : கன்னுதல் = பழுத்தல், கொப்புளம் தோன்றல்.
கன்னி (பழுத்தது)—கனி.
கன்னி = பருவமான பெண்: ஒ: நோ. matured girl
கன்னி—கன்னீகை: கன்யா (வ.).
குலை : ஈரற்குலை.
விதை : வித்து = முதற்காரணம். இம்மி, எள், தினை = சிற்றளவு. என்(ளு) = இகழ் (வி.).
எண்மை-எளிமை. எள்கு (எஃகு)-இளகு-இளமை-இளை, இளகு -இலகு-இலேசு, இளை-எய்.
குன்றி ஓரளவு, காணம் (கொள்)= ஓரளவு பொன், பொற்காக. பொக்கு = பொய், பொக் கணம் = பை.
தழை : தழைத்தல்.
குழை : நகை.
தோடு : கம்மல், திரட்சி. ஓலை = எழுத்து, திருமுகம், ஆவணம், திருமண முன்னறிவிப்பு (இக்

காலத்தது).

கொழுந்து : குலக்கொழுந்து, “கங்கைக் கொழுந்து”,
குருத்து : காதின் குருத்து.

.

தமிழிலக்கியத் தோற்றம்

ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திரு மன்றாட்டுகள், மறை நூல் என்ற வகையாகவே இருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும்.

தமிழில் மறை நூலிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது.

“நிறைமொழி மாந்தர்” என்னும் தொல்காப்பிய நாற்பா வுரையில், “‘தானே’ என்று பிரித்தான், இவை தமிழ் மந்திர மென்றற்கும், பாட்டாகி அங்க தமெனப்படுவனவும் உள அவை நீக்குதற்குமென உணர்க” என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.

தமிழிலக்கணத் தோற்றம்

எழுத்து :

எழுத்துக்களில் முதலாவது நெடிலும் பின்பு குறிலும் தோன்றின. முதற்றமிழர் குழந்தையர் போன்றனர், குழந்தைகள் வாயில் நெடிலே முன் பிறக்கும், குறிலினும் நெடிலே ஒலித்தற்கெளிது. நெடிலுங் குறிலும் ஒலியில் வெவ்வேறல்ல; அளவிலேயே வெவ்வேறாகும். நெடில் குறுகிக் குறிலாயிற்றென்க.

சுட்டும் வினாவும் முதலாவது நெடிலாகவே இருந்தன. இதை,

“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி”

(மொழி. 10.)

“குற்றெழுத் தைந்தும் மொழி நிறை பிலவே"

(மொழி. 11.)

“ஆ-ஏ-ஓ அம் மூன்றும் வினா"

(நூல். 32)

"நீட வருதல் செய்யுளுள் உரித்தே”

(உயிர். 6.)

என்று தொல்காப்பியர் கூறுவதாலும், பிற திராவிடமொழிகளில் நெடில்கள் இன்றும் உலக வழக்கில் வழங்குவதாலும் அறியப்படும்.

ஐ, ஔ இரண்டே தமிழில் புணரொலிகள் (Diphthongs).

தமிழில் அரிவரி தோன்றினபோது, ஏகார ஓகாரங்கட்குக் குறிகளமைத்திருக்கவில்லை. பிற்காலத்தில் தான் அவை தோன்றின. அப்போது அவற்றின் மேலும் அவையேறின மெய்யெழுத்துக்களின் மேலும் புள்ளியிட்டனர். கற்காலத்தில் புள்ளிக்குப் பதிலாக, உயிரெழுத்துக்கரில் கீழிழுப்பு கீழ்ச் சுழிகளும், உயிர் மெய்யெழுத்துக் கொம்புகளில் மேற்சுழிகளும் இடப்பட்டன.

ஆய்தம் இத்தாலிய ஹகரம் போன்ற மெல்லிய ககரம்.

“ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்”

என்பது தொல்காப்பியம் (உரி. 34). ஆய்தம் = நுணுக்கமான ஒலி.

மெய்யெழுத்துக்களில், ழ ள ற ன என்ற நான்கும் முதன் முதல் அரிவரி தோன்றிய காலத்திற்குப் பிற்பட்டவை. அதனாலேயே அவை ஈற்றில் வைக்கப்பட்டன.

ல—ள—ழ. ஒலித்தற் கெளிமை கருதி ழகரம் ளகரத்திற்கு. முன் வைக்கப்பட்டது. ர-ற றகரத்திற்கு இனமாக னகரம் தோற்றுவிக்கப்பட்டது. னகரம் தோன்று முன் நகரமே வழங்கிற்று. வெரிந், பொருந், மகிழ்நன், கொழுநன் முதலிய சொற்களை நோக்குக.

எழுத்து படவெழுத்து (Hieroglyphic or Ideographic) அசையெழுத்து (Syllabic), ஒலியெழுத்து (Phonetic) என மூவகைப்படும். உலகில் முதன் முதல் தோன்றினது படவெழுத்தே. தமிழிலும் அதேயென்பது,

“உருவே யுணர்வே யொலியே தன்மையென
இருவகை யெழுத்து மீரிரண் டாகும்”

என்று யாப்பருங்கல விருத்தியிலும், 'இன்ன பலபல வெழுத்து. நிலைமண்டபம்' என்று பரிபாடலிலும் (19: 53), ”கடவுளெழுதிய பாவை” என்று மணிமேகலையிலும் (20: 111) கூறியிருப்பதாலும், படமெழுதுதல் என்னும் வழக்கு இன்று முண்மையாலும் அறியப்படும்.

திருவாளர் தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்னும் அரிய ஆராய்ச்சி நூலால், ஒருவகைத் தமிழெழுத்துக்கள் அடைந்து வந்துள்ள மாறுதல்களை நன்றாயறியலாம். தமிழில் இருவகையெழுத்துக்கள் இருந்தன.

சொற்கள்

முதன் முதல் தோன்றினவை தனிச்சொற்களே, குழந்தைகள் சோறு வேண்டும்போது சோறென்று மட்டும் கூறுதல் காண்க.

சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை இடை உரி என நான்காக வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள், முதல் மூன்றே உண்மையில் சொல்வகையாகும், இறுதியது செய்யுள் வழக்குப் பற்றியதே.

உரிச்சொல்—Poetic Idiom

உரிச்சொல் செய்யுள் வழக்குப்பற்றியதே யென்பதற்குக் காரணங்களும் சான்றுகளும்:—

(1) சொற்கள் மூவகைக்கு மேற்படாமை.

பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் அவ்விரண்டையும் சார்ந்து வரும் இடைச்சொல்லுமென மூவகையே சொற்கள், எச்சவினை காலங்காட்டின் தெரிநிலையும், காட்டாவிடின் குறிப்புமாகும்.

ஆங்கிலத்திலுள்ள எண்வகைச் சொற்களையும்,

I. Nouns பெயர்ச்சொல்.
II. Verbs வினைச்சொல்
II. Particles இடைச்சொல்

என மூன்றாகலே அடக்குவர் கென்னெடி (Kennedy) என்பார்.[1]

அரபியிலும் அதைப் பின்பற்றும் உருதுவிலும், பெயர் வினை இடை என மூன்று சொல்வகையே கூறப்படுகின்றன;

(2) “உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை.........
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்”

என்று தொல்காப்பியர் உரிச்சொல்லிலக்கணங் கூறல்,

(3) தொல்காப்பியர் ஏனை மூன்று சொற்கட்கும் இலக்கணங் கூறியது போல, உரிச்சொற்கோர் இலக்கணங் கூறாமையும், அகராதி முறையில் பொருளே கூறிச் செல்லுதலும்,

(4) செய்யுள் வடிவிலுள்ள அகராதிகளான நிகண்டுகள் உரிச்சொல்லென்று பெயர்பெறல்,

“இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்

சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
எல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே”

என்றார் பவணந்தியார்.

உரிச்சொல் நிகண்டு என்று ஒரு நிகண்டுமுளது. செய்யுளிற் சிறப்பாக வரும் சொற்களெல்லாம், மாணாக்கர் இளமையிற் பாடஞ் செய்தற் பொருட்டுத் தொகுக்கப்பட்டன. அத்தொகையே நிகண்டென்பது.

இப்போதுள்ள அகராதிக்கு முந்தின நிலை நிகண்டும், அதற்கு முந்தின நிலை உரிச்சொல்லுமாகும்.

(5) உரிச்சொல் செய்யுட் சொல்லேயென்று பண்டைக் --காலத்தில் கூறப்பட்டமை.

“பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியலாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர்“ என்று சேனாவரையர் கூறுதல் காண்க.

பிறவுரை மறுப்பு

(1) உரை : இசை குறிப்பு பண்பு என்பவற்றிற்

குரியவை உரிச்சொல் என்பது.

மறுப்பு : இது நாற்சொற்கும் பொதுவிலக்கணம் என்பது.
(2) : பெயர்க்கும் வினைக்கும் உரியது உரிச்சொல் என்பது.
: இஃது இடைச்சொற்கும் ஏற்குமென்பது.
(3) : பலபொருட் கொருசொல்லும் ஒரு பொருட்குப் பல சொல்லுமாக உரியது உரிச்சொல் என்பது.
: இதுவும் நாற்சொற் பொது விலக்கணம் என்பது.
(4) : வினைவேரே உரிச்சொல் என்பது.
: வினைவேர் (தாது) ஏவலாகவும் பகுதியாகவும்

வினையியலிற் கூறப்பட்டுள்ளது.

வினை வேரை வேறாகக்கூறின், இடைவேரையும் வேறாகக் கூறவேண்டும். குரு மாலை முதலிய பெயர்ச்சொற்களும் செல்லல் அலமரல் முதலிய
வினைச் சொற்களும் ஏ ஐ முதலிய இடைச் சொற்களுமாக, உரிச்சொல் மூவகைப்படுதலானும், அவற்றுள் வினைச்சொல் பகுதியும் தொழிற்பெயருமாக இருவேறு வடிவிற் கூறப்படுதலானும், உரிச்சொல்லை ஒரு தனிச்சொல் வகையென்றும். வினைவேரென்றம் கூறுதல்

தவறே என்பது.

(5) :

“உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
குறிப்பீனும் பண்பினும் இசையினும் தோன்றி
தெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி ”

உரிச்சொல் என்பது.

(குற்றி. 77)

: இதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ளாவின் விணைத்தது,
வெள்ள விளர்ந்தது முதலிய சாட்டுகளில், நிலைமொழிகள் இடைச்சொல்வாயும் வருமொழிகள் வினைச்சொல்லாயு மிருத்தலின், இவ்வுரை போலியுரையென்பது.

பிறர் மறுப்புக்கு மறுப்பு

உரிச்சொல் செய்யுட் சொல்வேயென்று, முன்னமே நான் செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை வரைந்திருக்கின்றேன், அதன் உண்மையை உணராத சிலர், பலவாறு மறுப்புக் கூறியிருக்கின்றனர். அம்மறுப்பும் அதன் மறுப்புமாவன :—

(1) : வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன." (உரி. 2)

என்று தொல்காப்பியர் வெளிப்படுசொல்லும் உரிச் சொல்லுள் அடங்கக் கூறியிருப்பதால், உரிச்சொல் செய்யுட் சொல்லன்றென்பது.

ம. ம : ஒரு குழுவார் பிறர்க்குத் தெரியாது மறை பொருளலாகத்
தமக்குள் வழங்கும் குறிகளே குழூஉக் குறியாயினும். அவற்றுள் பொருள் வெளிப்பட்டவும் பண்டை நிலை நோக்கிக் குழூஉக் குறி யெனப்படும், ஆசிரியன் குழூஉக்குறிகட்குப் பொருள் கூறும் போது. வெளிப்படை யானவற்றிற்குப் பொருள் கூறான். இது போன்றதே மேற்கூறிய நூற்பாக் கூற்று மென்பது.
மேலும், செய்யுட்கே யுரியதும் செய்யுட்கும் உரை நடைக்கும் பொதுவானதுமெனச் செய்யுட்சொல் இருவகை. அவற்றுள், செய்யுட்கேயுரிய சொல்லே உரிச்சொல்லெனப் படுவது என்பதைக் குறித்தற்கே, வெளிப்படு சொல்லைச் சொல்லென்றும் வெளிப்படாச் சொல்லை உரிச்சொல்லென்றும் தொல்காப்பியர் குறித்ததூஉமென்க.

மேலும், உரிச்சொற்பெயர் ஒரு சொல்லை மட்டுமன்று. அது செய்யுளில் சிறப்பாக ஒரு பொருளில் வழங்கற்பாட்டையும் பொறுத்தது.

செல்லல் என்பது போதலைக் குறிப்பின் தொழிற்பெயர்; பிறரிடம் போயிரக்கும் வழமையாகிய இன்னாமையைக் குறிப்பின் உரிச்சொல், வாள் என்பது கருவியைக் குறிப்பின் பெயர்ச்சொல் ; அதன் ஒளியைக் குறிப்பின் உரிச்சொல். இங்ஙனமே பிறவும்.

சுதழ் துனை போன்ற சொற்கள், உலக வழக்கில் வழங் காமையால், எல்லாப் பொருளிலும் உரிச்சொல்லாகும்.

இங்ஙனம், சொல்லே உரிச்சொல்லாவதும், ஒவ்வொரு பொருளில் மட்டும் உரிச்சொல்லாவதுமென, உரிச்சொல் இருவகை.

பழுது முழுது முதலிய சொற்கள், இக்காலத்தில் வெளிப் படையாயினும், தொல்காப்பியர் காலத்தில், அல்லது அவர்க்கு முன்னொரு காலத்தில், வெளிப்படையல்லாதிருந்ததிருக்க வேண்டும். மறை வெளிப்படையாவதும் வெளிப்படை மறையாவதும் சொற்கட்கியல்பே

(2) ம. தட, கய முதலிய சொற்கள் அகரவீறாயிருப்பதால் அஃது ஒரு தனிச் சொல் 'கையைக்குறிக்கும் என்பது.
ம. : தொல்காப்பியர் ஓர் இலக்கணியேயன்றி மொழி நூற் புலவரல்லர்.
ஆகையால் சில சொற்களை ஈறு நீக்கிப் புணர் நிலை வடிவிற் குறிப்பர்; மத என்று ஓர் உரிச் சொல்லைக் குறித்துள்ளார். அது மதம் மதன் என்று வழங்குதல் காண்க. இங்ஙனமே பிறவும் என்பது.
சொற்கள் சொல்லியல் முறையில், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என, நால்வகையாக வகுக்கப்படும்.

இவற்றுள், இயற்சொல் (Primitive word) என்பது இயல்பான சொல்; திரிசொல் (Derivative word) என்பது அவ்வியற் சொல்லினின்றும் திரிந்த அல்லது திரிக்கப்பட்ட சொல். இவற்றிற்கு இவையே பொருள் என்பதை, இப்பொருட் பொருத்தத்தினின்றும், கிளி-கிள்ளை, மயில்-மஞ்ஞை என்பவற்றை உறுப்புத் திரிந்தவையென்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதினின்றும் உணர்ந்து கொள்க.

இயற்சொல்லெனினும் வேர்ச்சொல்லெனினும் ஒக்கும். இது முதல்வேர், வழிவேர், சார்புவேர் என மூவகைப்படும்.

பளீர், பளிச்சு முதலிய சொற்களில் வேராயிருப்பது பள் என்பது. இது முதல்வேர். பள் என்பதன் திரிபு பால் என்பது. இது வழிவேர், பால் என்பது வால், வெள் என்று திரியும். இவை சார்பு வேர்.

சில சொற்களில் ஒவ்வோர் எழுத்தே பொருள் நிறைந்திருக்கும். அவ்வெழுத்தை விதையெழுத்தென்னலாம். பள் என்னும் சொல்லில் 'ள' விதையெழுத்தாகும் த(ன)மலள என்ற எழுத்துக்கள் ஒளிபற்றிய சொற்களில் வருதல் பெரும்பான்மை.


திரிசொல்லும் முதல், வழி, சார்பு என மூன்றாம்.
கா : வேர் முதல் திரிவு வழித்திரிவு சார்புத்திரிவு
ஏண் சேண் சேணோன்
அர் அரி அரம் அரவு, அராவு

திசைச்சொல் என்பது, செந்தமிழ் நாட்டில் வழங்கும் பொருளினின்றும் வேறான பொருளில் வழங்கும் கொடுந் தமிழ்ச் சொல்லாகும்.

கா : வளர (மலையாளம்) = மிக. வடசொல் வடமொழிச் சொல்.

கிளவி

கிளவியென்பது பெயர் முதலிய நால்வகைச் சொல்லுக்கும் பொதுப் பெயர், கிளத்தல் சொல்லுதல்.

இலக்கண நூல் தோன்றுமுன்னமே, திணை பால் எண் இடம் வேற்றுமையும், வினாவும் செப்பும் பிறவும்பற்றிய மரபு களும், தமிழிய அமைந்திருந்தன. அவற்றின் பாகுபாடுகளும் குறியீடுகளுமே இலக்கணிகளா லுண்டானவை. இதைக் குறித்தற்கே கிளவியாக்கம் முதலிய நான்கு இயல்கள், தொல்காப்பியத்திற் பெயரியலுக்கு முன் கூறப்பட்டுள்ளன.

பெயர்ச்சொல்

பெய்+ அல் = பெயல்—பெயர், பெய்தல் இடுதல். பாட்டன் பெயரும் பெயரன் (பேரன்) பெயரும் மாறி மாறி வந்தது பிற்காலமாதலின், பெயர் தற்பொருள் பிற்பட்டதாகும்.

பொருட்பெயர்—மூவிடப்பெயர்

தன்மை: ஏ தன்மைச்சுட்டு

ஏ+ன் = ஏன் (ஒருமை), ஏ+ம்= ஏம் (பன்மை ).
ஏன் — யான்— நான், ஏம்— யாம்— நாம்.
யாம்+கள் = யாங்கள், நாம்+கள் = தாங்கள்.

யாம் தனித்தன்மைக்கும் நாம் உளப்பாட்டுத்தன்மைக்கும் வரையறுக்கப்பட்டன.

முன்னிலை : ஈ அண்மைச்சுட்டு.

ஈ+ன் = ஈன்—(யீன்) — நீன். ஈ+ம் = ஈம்— (யீம்)—நீம்.

நீன்—நூண். நீம்—நூம். நீம் + கள் = நீங்கள், நீன்—நீ. நீமர்—நீமிர்—நீவிர்—நீயிர்—நீர்.

நீன்— நீம், நீமர் என்பவை இன்றும் தென்னாட்டில் உலக வழக்கில் வழங்குகின்றன. செந்தமிழ் தோன்றிய காலத்தில், நீ நீயிர் நீவிர் என்பன சிறந்தனவாகக் கொள்ளப்பட்டதினால், ஏனைய நூல்வழக்கற்றன. முன்னிலைப் பெயர்கள் வினை முற்றீறுகளாகும்போது பின்வரும் வடிவங்களையடையும்.

ஈ (முன்னிலையொருமைப்பெயர்)—ஏ-ஐ ஆய். நீ-தீ-தி.
கா : வந்தீ—வந்தே—வந்தை—வந்தாய் (இ. கா.)

ஓ. நோ, சீ—சே—சை. கழை— சுழாய். ஐ = அய்—ஆய்.
(செய்தி)— செய்தி (ஏவலும் நிகழ்கால ஒருமையும்.)

வா, தா என்பவற்றின் கால்மேல், வேறுவகையாய் வந்த புள்ளியை எழுத்துப்புள்ளியென் றெண்ணி, முதலாவது வர் தர் என்றும், பின்பு வரு தரு என்றும், ஏட்டைப் பார்த்துப் பெயர்த்தெழுதினவர் தவறு செய்ததாகத் தெரிகின்றது. இறந்த காலத்தில் இவ்வினைகள் வந்தான் தநதான் எனக் குறுகி மட்டும் நிற்றல் காண்க.

ந—த, போலி. ஓ. நோ. நுனி-நுதி. ஆன்மா -ஆத்மா (வ).

இடைமைப் பெயர் :

ஊ இடைமைச்சுட்டு, ஊ+ன் = ஊன் (வழக்கற்றது).. ஊ+ம்=ஊம் (வழக்கற்றது).

படர்க்கைப் பெயர் :

படர்க்கைச் சுட்டு. ஆ+ன்= ஆன்— தான், ஆ+ம்= ஆம்—தாம். தாம் +கள் = தாங்கள்.

மூவிடப்பெயர்களும் வேற்றுமைப்படும் போது பின் வருமார திரியும்.

யான் —என், யாம்—எம். யாங்கள்—எங்கள், நான்—(நன்), நாம்—நம், நாங்கள்— தங்கள், நீன்— நின், (நூன்—நுன்—உன், நீம் — (நிம்), (நூம்)— நும்—உம், நீங்கள்—(நிங்கள்). (நூங்கள்)— நுங்கள்—உங்கள், தான்—தன், தாம் தம், தாங்கள்—தங்கள்.

பிறைக்கோட்டுளுள்ளவை இது போது தமிழில் இருவகை வழக்கிலும் வழக்கற்றவை. இவற்றுக்குப் பதிலாக இவற்றை யொத்த பிற சொற்களே வழங்குகின்றன. நன் என்பதற்கு என் என்பதும் நங்கள் என்பதற்கு எங்கள் என்பதும் வழங்குதல் காண்க.

வினாப்பெயர்

ஏ உயரச்சுட்டு, ஏ+ள்—ஏன். ஏ+ம் = ஏம் (தமிழில் வழக்கற்றது).

குறிப்பு :

(1) முதலாவது, ஏ ஈ ஊ ஆ என்ற நெடில்களே, மூவிடப் பெயராகவும், வினாப்பெயராகவும் திணையும் பாலும் காட்டாது இடமும் எண்ணும் மட்டும் காட்டி வழங்கிவந்தன.

வடஇந்தியாவில் வழங்கும் இந்தியில் இன்றும் எ ஒ என்னும் தனி நெடில்கள் சுட்டுப் பெயராய் வழங்குகின்றன, அவை முறையே ஈ ஊ என்பவற்றின் திரிபாகும்.

இடையிந்தியாவில் வழங்கும் தெலுங்கில், ஆ ஈ ஏ என்னும் நெடில்கள் புறச்சுட்டுக்களாய் மட்டும் உலகவழக்கில் வழங்குகின்றன; பெயர்களாய் வழங்கவில்லை.

தென்னிந்தியாவில் வழங்கும் தமிழில், அவை புறச்சுட்டாகவும் வழங்கவில்லை. அவற்றுக்குப் பதிலாய் அந்த இந்த எந்த என்ற சொற்களே வழங்குகின்றன. புறச்சுட்டாகவும் புறவினா வாகவும் அவற்றின் குறில்களே வழங்குகின்றன,

இதற்குக் காரணம் வட இந்திய மொழி நிலை பண்படுத்தப் படாது பண்டை நிலையிலேயே இருப்பதும், தென்னிந்திய மொழி பண்படுத்தப்பட்டு மிகுதியும் மாறியிருப்பதுமே,

புதுப்புனைவுசெய்யும் ஒரு நாட்டில் கருவிகள் மாறிக் கொண்டே வரும், அது செய்யாத நாட்டில் அவை என்றும் சற்றுப் பண்டை. நிலையிலேயே யிருக்கும், இந்தியாவிலுள்ள புதுப்புனைவுக் கருவிகளெல்லாம் மேனாட்டினின்றும் வந்தவை, மேனாட்டில் நாள்தோறும் புதுப்புனைவுக்கலை வளர்ந்து கொண்டேயிருப்பதால், கருவிகள் திருத்திக் கொண்டே வருகின்றன. ஆனால், இந்தியாவில், சென்ற நூற்றாண்டுகளிற் கண்டுபிடிக்கப்பட்டு, மேனாட்டில் வழக்கற்றவை யெல்லாம் காணப்படலாம். இங்ஙனமே தென்னாட்டிலும் வட நாட்டிலும் வழங்கும் சொற்களுமென்க.

(2) முதலில் நெடிலாயிருந்த கட்டுவினா வெழுத்துக்கள் பின்பு குறிலாயின.

(3) குறிலும் நெடிலுமான சுட்டுலினா வெழுத்துக்கள் பல ஈறுகளைக் கொண்டிருந்தன,

கா : ஆம், ஆண், அம், அன், அல், அவ், அண் முதலியன

இவற்றுள் ஆம் அம் என்பவை முந்தினவாக த் தெரிகின்றன

ஆகு—ஆங்கு. ஆண்—ஆண்டு,

அம்—அந்து-அந்த—அந்தா.

அது—அதா—அதோ-அதோள்—அதோனி.

அம் — அன் — அன்ன—அன்னா : அன்ன — அனை—அனைத்து,

அம்— அங்கு, அம்— அம்பு—அம்பர்.

அல் — அள்— அண். அம் — அவ், அல்—அன் என்றுங் கூறலாம்.

அல்+து = அன்று. ஒ. நோ. எல்+து = என்று (சூரியன்).

அல் இல் எல் என்னும் வடிவமும் சுட்டுவினாச்சொற்கட் குண்டென்பதை, அன்று இன்று என்று என்னும் தமிழ்ச்சொற்களாலும், அல ஏலா என்னும் தெலுங்குச்சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கன்னடச்சொற்களாலும் உணர்ந்துகொள்க.

அல் என்னும் வடிவமே இல் எனத் திரிந்து, சேய்மைச் சுட்டாக இலத்தீனில் வழங்குகின்றது.

கா : ille — அவன்illi, illae—அவர்

illa—அவள்illa — அவை

illud—அது

(4) அன் என்பதை ஒருமைக்கும் அம் என்பதைப் பன்மைக்கும் முதலாவது வழங்கினதாகத் தெரிகிறது.

நோக்குக. ஏன், ஏம் : நீன் நீம் : தான், தாம்.

ஈறுகளின் முதலிலுள்ள அசுரம் புணர்ச்சியிற்கெடுதல் இயல்பே.

கா : சிவம்—அன் = சிவன் : மண+அம் = மணம்.

(5) சுட்டடியான உயிர்நெடில்கள் யகரமெய் சேர்ந்து வழங்கியிருக்கின்றன. பின்பு அவ் யகரம் நகரமாக மாறியிருக்கின்றது.

கா : ஏன்— யான்— நான், ஈ—(யீன்) — நீன். ஆன்—(யான்)—(நான்)— தான்.

இ ஈ எ ஏ இன்றும் சொன்முதலில் வரின், யகரம் சேர்ந்தே பேச்சுவழக்கில் வழங்குகின்றன.

கா, யிடம், யீரம், யெழுத்து, யேடு.

யான் நான் என்னும் வடிவங்கள் தன்மையில் வருதலின் அவை மயக்கமின்மைப்பொருட்டுப் படர்க்கையில் விலக்கப்பட்டன. நகரத்திற்குத் தகரம் போலியாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது.

ஆகாரத்தோடும் யகரம் சேர்ந்து வருமென்பதை, yon (ஆண்), yonder (ஆண்டு+அர்) என்னுஞ் சொற்களானுணர்க.

(6) தான் தாம் என்னும் பெயர்கள் முதலாவது படர்க்கைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு அவன் அவர் முதலிய சுட்டுப் பெயர்கள் தோன்றிய பின், படர்க்கைத் தற்சுட்டுப் பதிற்பெயர் (Reflexive Pronoun) களாக வழங்கி வருகின்றன.

தாங்கள் என்பது, இன்று உயர்வு குறித்து முன்னிலை யொருமைக்கும் வழங்குகின்றது. இஃதோர் இடவழுவமைதி,

(7) மூவிடப் பெயர்களிலும் வினாப்பெயர்களிலும், எண் மட்டுங் குறித்தவை முந்தியன, பால் குறித்தவை பிந்தியன.

(8) பால் குறித்த சுட்டுப் பெயர்களையும் வினாப் பெயர்களையும் வேண்டிய போது, அவன் அவள் முதலியவாக, (பிற்காலத்து) இயல்பாகத் தோன்றிப் பால் காட்டாது வழங்கின சுட்டு வினாப் பெயர்களையே, முறையே ஆண்பால் முதலிய ஐம்பாற் சுட்டுவினாப் பெயர்களாகத் தமிழ்மக்கள் கொண்டதாகத் தெரிகின்றது. அவற்றுள் வினாப் பெயரடிகள் நெடிலாகவும் வழங்கும்.

அவ்—அவ — அவை. அவ—அ :

அவன் அவள் முதலிய சொற்கள் இயல்பாய்த் தோன்றியவை யென்பதும், அவை முதலாவது பால் காட்டவில்லையென்பதும், எவன் என்னும் பெயர் அஃறிணையிரு பால் வினாக் குறிப்பு வினைமுற்றாயும் ஆண்பால் வினாப்பெயராயு, மிருத்தலானும், அவள் என்பதன் திரிபான அவன் என்பதும் அதோள் உவள் என்பனவும் இடத்தைக் குறித்தலானும், அது என்னும் பெயர் சில வழக்குகளில் இருதிணைக்கும் பொதுவாயிருத்தலானும், அன் அர் என்னும் ஈறுகள் பால் காட்டியும் காட்டாமலும் அஃறிணைக்கும் வழங்குவதாலும் பிறவற்றாலும் அறியப்படும்.

அது என்னும் பெயர் உயர்திணைக்கும் வழங்குமாறு:—

யார் அது? கொற்றனது மகன் :

சுட்டுப் பெயர்கள்

அவன்—ஆண்பால்
அவள்—பெண்பால்
அவர்—பலர் பால்
அது—ஒன்றன்பால்
அவை—பலவின்பால்
சேய்மைச் சுட்டுப் பெயர்கள்

இங்கனமே அண்மை யிடைமைச் சுட்டுப்பெயர்களும், இடைமைச் சுட்டு தமிழில் உலகவழக்கற்றது . இந்தியில் சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது. இந்தி நிலை முந்தியது, அதன்பெயர் பிந்தியது.

வினாப்பெயர்கள்

ஏவன் – எவன் ஏது – எது
ஏவள் – எவன் ஏவை – எவை
ஏவர்– எவர்

ஏ—யா. யா+அன் = யாவன். இங்ஙனமே ஏனை யீறுகளையும் ஒட்டிக்கொள்க;

யா என்னும் வினாவடி, அஃறிணைப் பன்மை வினாப் பெயராகச் செய்யுளில் வழங்கும்,

காலப்பெயர்

காலம் என்னும் பெயர் செந்தமிழ்ச்சொல்லே யென்பது, யான் செந்தமிழ்ச் செல்வியில் வரைந்துள்ள ‘காலம் என்னும் சொல் எம் மொழிக்குரியது’ என்னுங் கட்டுரையிற் கண்டு கொள்க.

பொழுது : பொழுது = சூரியன், வேளை (சிறு பொழுது) பருவகாலம் (பெரும் பொழுது.) பொள்—(போள்)—போழ், - போழ்து—(பொழுது)—போது. ஒ. நோ. வீழ்து—விழுது.

போழ்தல் = பிளத்தல், வெட்டுதல், நீக்குதல்,

சூரியன் இருளைப் போழ்வது.

"வாள்போழ் விசும்பில்" என்றார் நக்கீரர்

(திருமுருகாற்றுப்படை).

பொழுது என்னும் சொல் முதலாவது சூரியனைக் குறித்து. பின்பு அதன் தோற்ற மறைவுகளால் நிகழும் காலத்தைக் குறித்தது. பொழுது புறப்பட்டது, பொழுது சாய்ந்தது என்னும் வழக்குகளில், இன்றும் அச்சொல் சூரியனைக் குறித்தல் காண்க.

சமையம் : சமை+ அம் = சமையம். சமைதல் பக்குவமாதல், ஒரு பொருள் பக்குவமான வேளை சமையம் எனப்பட்டது. இன்று அச்சொல் தகுந்த வேளைக்குப் பெயராய் வழங்குகின்றது.

பருவம் : ஒரு பொருள் நுகர்ச்சிக்கேற்ற அளவு பருத்திருக்கும் நிலை பருவம். பரு+வு =பருவு, பருவு + அம்=பருவம்:

நேரம் ; நேர்+ அம் = நேரம், தேர்தல் நிகழ்தல்: ஒரு வினை நேரும் காலம் நேரம்:

வேளை ; வேல் — வேலி — வேலை—வேளை,

கருவேல முள்ளால் அடைப்பது வேலி, வேலி ஓர் இடத்தின் எல்லை. வேலை = ஒரு கால வெல்லை. வேலையென்பதின் திரிபு வேளையென்பது. .வேலை செய்யுள் வழக்கு

மாதம் : மதி+அம் = மாதம்:

மாதம் என்னுங் கால அளவு மதியினாலுண்டானது;

ஆண்டு: என்று (சூரியன்) — (ஏன்று) — (ஏண்டு) - யாண்டு...ஆண்டு.

ஆண்டென்னுங் கால அளவு சூரியனாலுண்டானது. இங்ஙனமே பிற்காலப் பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியவையாகும்.

இடப்பெயர்

இடு+ அம் — இடம்; பொருள்களை இடுவதற்கிடமானது. இடம். ஒ. நோ. E, position, from L. pono, to place.

தலம் என்னும் பெயர் ஸ்தலம் என்பதின் திரிபாகக்கருதப்படுகிறது. ஸ்தலம் என்பதற்கு ஸ்தா (நில்) என்பது வேர், இது ஆரிய மொழிகள் எல்லாவற்றிலுமிருக்கின்றது. State, Station, stand, steady, establish முதலிய சொற்கட்கெல்லாம் sta என் பதே வேர். ஆனால், இதனால் மட்டும் அதை ஆரியத்திற்தே யுரிய சொல்லாய்க் கொள்ள முடியாது; தா (கொடு) என்னுஞ் சொல்லை நினைத்துக் கொள்க.

காலுக்குத் தாள் என்று ஒரு தனித் தமிழ்ச்சொல் உளது. அதற்குத் தா என்பது தான் வேராயிருக்கவேண்டும். தாவு என்னுஞ் சொல், இடப் பொருளில் தென்னாட்டில், சிறப்பாய்க் கல்லா மக்களிடை வழங்குகின்றது. தாள் என்னுஞ் சொற் போன்றே, தா என்னுஞ் சொல்லும் முயற்சியென்னும் பொருளில் நூல்வழக்கில் வழங்குகின்றது

"தாவே வலியும் வருத்தமும் ஆகும்" (உரி. 48.)

என்றார் தொல்காப்பியர், வலி = வன்மை. வருத்தம்= முயற்சி தாளம், தாளி (கள்னி), தாண்டு, தாவு, தாழ், தங்கு, தக்கு, தாங்கு, தளம், தளர் முதலிய பல சொற்கள் தா என்னும் வேரினின்று பிறந்தவையே. ஆகையால், குமரிநாட்டில், தா என்னும் வேர்ச்சொல் நில் என்னும் பொருளில் தமிழில் வழங்கி யிருக்கவேண்டும். தளம்- தலம். ஆராயப்படா மையாலும் வேர் வழக்கற்றதினாலுமே இச்சொல் வடசொல்லாகத் தோன்றுகின்றது. தலம்—ஸ்தலம் (மூன்மெய்ச்சேர்பு:)

உலகம் : உல—உலகு —உலகம்: உலத்தல் அழிதல், உலப்பது உலகம். இங்ஙனமே பிற இடப்பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியனவயேயாகும். உலகம்-லோக(வ.)

சினைப்பெயர் :

சில்—சில்லை—(சின்னை )—சினை—துண்டு , பிரிவு, உறுப்பு:

சில சினைப்பெயர்கள் இடப்பொருளை முதலாவது பெற்றுப் பின்பு பல சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன;

கா : கண் — நகக்கண், சல்லடைக்கண், ஊற்றுக்கண் (இடம்);

அலக்கண், இடுக்கண், பழங்கண் (துன்பம்);

உறுகண், தறுகண் (பண்பு )

பண்புப்பெயர் (Abstract Noun)

பண்புப்பெயரீறு :

மை = மேகம், 'நீர், நீரைப்போன்ற நல்லதன்மை, தன்மை :

ஒ: நோ. நீர்= தன்மை. நீர் என்பது புனற்பொருளொடு மயக்காமைப் பொருட்டு, நீர்மை என மையீறு பெறும்.

படி+மை = படிமை = போன்ளம = போன்ற தன்மை, தீமை = தீயின் தன்மை, நன்மை=நல்ல தன்மை, புல்+மை= புல்லின் தன்மை, பெருமை=பெரிய தன்மை, தான்=தன். தன்மை = தன்குணம், குணம்: இனிமை= இனிக்குந்தன்மை;

அம் = நீர்.

தல் +அம் = நலம் = நல்லதன்மை . வள்+அம்= வளம்= வளத்தன்மை , சின + அம் = சினம் = சினக்குந்தன்மை.

அப்பு = நீர்: அப்பு—பு

இனி+ அப்பு= இனிப்பு: இன்+பு= இன்பு: இன்லுதல் = இனித்தல். இன்பு+அம் = இன்பம்:

அப்பு என்பதில் அகரம் கெட்டது; ஒ: நோ: மற+ அத்தி = மறத்தி.

திசைப்பெயர் :

திகை — திசை; திகைத்தல் மயங்கல், திகைப்பதற்கிடமானது திகை, திசைத்தல் திகைத்தல்: திக்குவதற்கிடமானது தீக்கு: திக்குதல் தடுமாறல். திக்குமுக்காடுதல் என்னும் வழக்கை நோக்குக. வடநூலார் திஸ் (காட்டு) என்னும் மூலத்தைக் காட்டியது பிற்காலம்.

திசைச்சொல் என்பது ஓர் இலக்சணச்குறீயீடாயிருத்தலை நோக்குக திசை திக்கு என்னும் இருசொல்லும் வடசொல்லாயின், தமிழுக்குத் திசைபற்றிய சொல்லே யில்லை யென்றாகும். இது கூடாமையே, எல்லையென்னுஞ்சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு முறையே வேளை, குறித்த வேளை, குறித்த இடம், வரம்பு என்னும் பொருள்களைத் தழுவியது. ஆகையால் இச்சொல் திசைப்பெயருக் கேற்காமையறிக:

வடக்கு: வடம் + கு = வடக்கு.

வடம் = பெருங்கயிறு, வடம் போன்ற விழுதுகளை விடுவது வட(ஆல) மரம். வடமரம் வங்காளத்தில் மிகுதியாய் வளர்கின்றது. அதனாலேயே அது Ficus bengalensis என்று நிலைத்திணை நூலில் அழைக்கப்படுகிறது. நாவலந் (இந்து) தேயத்தின் வடபாகத்தில் வடமரம் மிகுதியாய் வளர்தலின், அத்திசை வடம் எனப்பட்டது;

தெற்கு : தென் + கு = தெற்கு.

நாவலத்தேயத்தின் தென்பாகத்தில் தென்னைமரம் இன்றும் சிறப்பாய் வளர்கின்றது. தென்னாட்டையும் கரு நீசியத் தீவுகளையும் நோக்குக.

தென்னைமரம் மிகுதியாய் வளரும் திசை தென்திசை யெனப்பட்டது.

கிழக்கு மேற்கு என்பவை, மொழிநூற் பெரும்புலவர் கால்டுவெல் ஐயர் நுணித்தாய்ந்து கண்டபடி, முறையே கீழ் மேல் என்னும் சொற்களடியாய்ப் பிறந்தவை.

வடம் தென் கீழ் மேல் என்று முதலில் வழங்கிய பெயர்கள், இன்று நான்காம் வேற்றுமை வடிவில் வழங்குகின்றன. இனி, அக்கு என்பது ஒரு பின்னொட்டு எனினும் ஓக்கும்.

உத்தரம் : உ+ தரம் = உத்தரம் = உயர் நிலை.

உகரம் உயர்ச்சி குறித்தல் முன்னர்க் கூறப்பட்டது.

தக்கணம்: தக்கு+அணம் = தக்கணம். தக்கு = தாழ்வு.

தக்குத் தொண்டை, தக்கில் பாடுதல் என்னும் வழக்குகளை நோக்குக அணம் ஒரு பின்னொட்டு,

பனிமலை எழுந்த பின், வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது. அதனால் அவை முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. இவற்றை மேற்கு கிழக்கு என்னும் பெயர்களுடன் ஒப்புநோக்குக.

உத்தரம் தக்கணம் என்னும் தென் சொற்களே, உத்தர தக்ஷிண என்று வடமொழியில் வழங்குகின்றன என்பது தேற்றம்.

குடம்: குடம் = வளைவு. குடம் குடக்கு. அக்கு ஓர் ஈறு.

சூரியன் மேற்கேபோய் வளைவதனால், அத்திசை குடம் எனப்பட்டது. குடமலை, குடநாடு, குடவர், குடக்கோ என்பவை செந்தமிழ் வழக்குகளாதல் காண்க.

குணம் : குடம்—குணம், ட—ண, போலி. ஓ. நோ. படம்—பணம், கோடு—கோணு, குடக்கு—குணக்கு.

குனம் = வளைவு. குணக்கெடுத்தல் என்னும் வழக்கை நோக்குக, சூரியன் கீழ்த்திசையிலும் வளைதல் காண்க. ஒரே வடிவம் இரு திசைக்கும் வழங்கின் மயங்கற்கிடமாதலின், குடம் என்பது மேற்றிசைக்கும் குணம் என்பது கீழ்த்திசைக்கும் வரையறுக்கப்பட்டன.

எண்ணுப்பெயர் :

எ உயரச் சுட்டு: எ—எண்: எண்ணுதலால் தொகை மேன் மேலுயர்தல் காண்க.

ஒன்று : ஒல்—ஓ. ஒல்லுதல் பொருந்தல், ஒத்தல் பொருந்தல். ஒல்+து = ஒன்று = பொருந்தினது, ஒன்றானது.

இரண்டு : (இரள்) +து = இரண்டு.

இதற்கு இருவகையாய்க் காரணங் கூறலாம்.

(1) ஈர்தல் அறுத்தல், இரு துண்டாக ஈர்ப்பது, இரண்டு .

ஈருள் = ஈர்தல், ஈருள்—(இருள்)—(இரள்).

(2) இருமை = கருமை, இருள்.

இரா, இருள், இருட்டு, இரும்பு, இருந்தை, இறடி முதலிய சொற்களிலெல்வாம், இர் என்னும் வேர் கருமை குறித்தல் காண்க. இர்—எர்—என்—ஏன், கா : எருமை, ஏனம்

இருள் அகவிருள் புறவிருள் என இரண்டாதலின், இரண்டாம் எண் இருமையெனப்பட்டது.

இங்ஙனம் கூறுவது பொருட்டொகை (பூதசங்கியை) முறையாகும்: ஒன்பதுவரை ஏனையெண்களும் இம்முறை பற்றியவையே.

மூன்று : மூ =முக்கு. மூக்கின் பக்கங்கள் மூன்றாயிருத்தல் காண்க, மூன்று என்னும் வடிவம் ஒன்று என்பதனுடன் எதுகை நோக்கியது.

நான்கு : நாலம் — நாலு—நாலுகு—தால்கு—நான்கு:

நாலம்—ஞாலம் (பூமி). ந—ஞ, போலி,

உலகத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வந்ததின் காரணம் முன்னர்க் கூறப்பட்டது. நாலம் என்னும் உலகப் பெயர் அதன் பகுதியையும் குறிக்கும். "மைவரை யுலகம்", தமிழுலகம் என்னும் வழக்குகளை நோக்குக உலகம் இயற்கையில் நால்வகையாயிருத்தலின், நாம் என்னும் பெயர் நான்காம் எண்ணைக் குறித்தது. உலகம் நானிலம் எனப்படுவதையும் நோக்குக.

ஐந்து : கை—ஐ. ஐ+து = ஐது—ஐந்து:
ஒரு கையின் விரல்கள் ஐந்து:

பொருள் விற்பனையில் கை என்னும் சொல் ஐந்து என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது.

ஆ : இதன் வரலாறு தெளிவாய்ப் புலப்படவில்லை.

ஆறு= வழி, ஒழுக்கநெறி, சமயம், மார்க்கம் என்னும் வடசொல் இப்பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் (நாஸ்திக) மதமுஞ் சேர்ந்து ஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுமதங்கள் எண்ணப்பட்டிருக்கலாம். அறு சமயம் என்னும் தொகை வழக்கு மிகத்தொன்மை வாய்ந்தது.

ஏழு: ஏழ் —ஏழு—எழு.

பண்ணைக்குறித்த யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. யாழ் என்னும் நரம்புக்கருவி தோன்றுமுன்னமே, குறிஞ்சியாழ் பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னுஞ்சொல் வழங்கினதினால், யாழ் யாளியின் தலை வடிவைக் கடையிற்கொண்டதென்ற காரணம்பற்றி, அதை யாளி என்னுஞ் சொல்லின் திரிபாகக்கூற முடியாது. யாழின் கடையிலிருப்பது சரியான யாளிவடிவமுமன்று.

கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை, யெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ், ஏழ்= இசை. இசைச்சுரங்கள் ஏழு. "ஏழிசைச் சூழல்", 'ஏழிசை வல்லபி' என்னும் வழக்குகளை நோக்குக. ஏழ் என்னும் இசையின் பெயர், அதன் சுரத் தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.

எட்டு : எண்+து = எட்டு.

எண் = எள், இப்பெயர் ஆகுபெயராய் உணவைக் குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும் ; எள்ளைக் குறிப்பின், அதன் காயிலுள்ள பக்கங்களின் தொகைபற்றிய தாயிருக்கலாம்.

நெல், புல் (கம்பு), சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணிஎன்ற எட்டே முதலாவது எண் கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின் வகையாயடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையாயிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டிருக்கலாம்;

தொண்டு : தொள்+து = தொண்டு, தொள் = தொளை.

உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.

தொண்டு — தொண்டி = தொளை.

ஓ. நோ, தொண்டை (throat) = தொளையுள்ளது.

பஃது : பல்+து = பஃது. ஓ. நோ. அல்+து = அஃது.

பல்=பல, முதன் முதலாய்த் தமிழர்க்கு எண்ணத்தெரிந்தது பத்துவரைக்குந்தான். கைவிரல் வைத்தெண்ணியதே இதற்குக் காரணம். இரு கைவிரல் பத்து. பத்து கடைசி யெண்ணாயிருந்தமையின், அதைப் பலவென்னுஞ்சொல்லா லேயே குறித்திருக்கலாம். இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு. 12ஆம் , அல்லது 13-ஆம் மாதத்தில், குழந்தைக்குப் பத்துப்பல்லேயிருப்பதாக பெர்ச் (Birch) கூறுகிறார்[2] பல் — பன்—பான், கா : பன்னிரண்டு. இருபான்,

முதன் முதலாய்ப் பத்து மட்டுமே எண்ணப்பட்டதினால் தான், அதற்கு மேற்பட்ட எண்களெல்லாம் பத்துப்பத்தாக என்ணப்பட்டு, பத்தாம் பெருக்க இடங்கட்கெல்லாம் கோடி வரை தனிப்பெயர்கள் இடப்பட்டுள்ளன:

முதலாவது, நூறு பத்துப்பத்தெனப்பட்டது: பதிற்றுப் பத்து என்னும் பெயர் இன்றும் நூல் வழக்கில் உள்ளமை காண்க, நூற்றுக்கு மேலெண்னும் போது, பத்துப் பதினொன்று என்று கூறின் அது 110 என்ற எண்ணையுங் குறிக்கும். ஆகையால் நூறு என்றொரு பெயர் வேண்டியதாயிற்று: இங்ஙனமே, ஆயிரத்தைப் பத்து நூறென்று கூறினும் நூற்பத்தென்று கூறினும் இடர்ப்பாடுண்டானமையின், அதற்கும் வேறு பெயர் வேண்டியதாயிற்று. இங்ஙனமே பிறவும்.

நாகர் கால் விரலையுஞ் சேர்த்து என்ணினமையின், இருபதிருபதாய் எண்ணினதாகத் தெரிகின்றது.

வகரம் தகரத்தொடு புணரின் ஆய்தமாகத் திரிவது,

"தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே" (புள்ளி . 74)

என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது.

அஃது பஃது என்று தகரம் றகரமாகத் திரியாத வடிவம் முந்திடாகவும், அஃறிஎன பஃறொடை என்று தகரம் றகரமாகத் திரித்த வடிவம் பிந்தியதாகவும் தெரிகின்றது:

நூறு : நூறு = பொடி, பொடி எண்ண முடியாதபடி, மிக்கிருத்தலில், அஃது ஒரு பேரெண்ணுக்குப் பெயராயிற்று.

ஆயிரம் : அயிர் — அயிரம் — ஆயிரம்.

அயிர் = நுண் மணல்; நூறு என்பதற்குக் கூறியதே ஆயிரம் என்பதற்கும்

இலக்கம் : இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்.

இலக்கம் என்பது பேரெண், என்னும் கருத்தில் நூறாயிரத்தைக் குறிக்கும், எடை தூக்கு நிறை என்னும் எடுத்தலளவைப் பொதுப்பெயர்களே ஒவ்வோர் அளவைக் குறித்தல்போல,

கோடி : கோடி = கடைசி, கடைகோடி, தெருக்கோடி என்னும் வழக்குகளைக் காண்க.

கடையெண் என்னுங் கருத்தில். கோடியென்னும் பெயர் நூறிலக்கத்தைக் குறிக்கும்.

இலக்கம் கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் மிகப் பித்தியவை. தமிழர் கணிதத்தில் சிறந்தவராயிருந்ததினாலும், மேனாடுகளில் இலக்கத்திற்கு வழங்கும் பெயரின் வடிவம் (lakh) தமிழ்ப்பெயர் வடிவத்தை ஒத்திருப்பதாலும், இலக்கத் தீவுகள் (Laccadive Is.) என்னும் பெயர் ஆங்கிலத்திலும் திரியாது வழங்குவதாலும், இலக்கம் கோடி என்னும் பெயர்கட்குத் தமிழிற் பொருத்தமான பொருளுண்மையாலும், “மதியாதார் தலைவாசல்....... மிதியாமை கோடி பெறும்”. ‘கோடியுந் தேடிக் கொடிமரமும் நட்டி’, 'காணியாசை கோடி கேடு' என்று பழைமையான வழக்குகளுண்மையாலும், இலக்கம் கோடி என்னுஞ் சொற்களை வடசொற்கள் என்பதினும் தென் சொற்கள் என்பதே பொருத்தமுடைத்தென்க.

குறுமைப் பெயர்-Diminutives.

(1) தனிப்பெயர் :

குள் - குள்ளன், குழவு, குழவி, குண்டு, குட்டி, குட்டன், குட்டான், குட்டம், குட்டை, குணில், குந்தாணி, குருளை, குருவி, குறள், குறளி. குறில், குற்றி -குச்சி குச்சு, குஞ்சி (குஞ்சு) குக்கல், குன்று, குன்றி, குன்னி, கூழி, கூழை. சில்-- சில்லான், சிறுக்கன், சிடுக்கான், சிடுக்கான்-கிச்சான், சிண்டு, சிட்டி, சிட்டு, ஓட்டு, சின்னம், சின்னான், சீனி, சுள்-சுள்ளி, சுருவம் சுருவை, சுருங்கை, சுண்டு, சுக்கு, சுக்கல், சுப்பி. இங்கனமே பிறவும்:

(2) முன்னொட்டுச் சேர்பு :

கண் விறகு, சுண்டெலி, சீனிமிளகாய், ஊசிமிளகாய், குறுமகன் (குறுமான்). குறுதொய், குக்கிராமம் (இருபிறப்பி), குற்றில்-குச்சில், பூஞ்சிட்டு, சில்லுக்கருப்புக்கட்டி, பிட்டுக்கருப்புக்கட்டி, கூழைவால், நரிக்கெளிறு. அரிசிப்பல், அரி நெல்லி, மணிக்குடல், கட்டைமண், குட்டிச்சுவர், பூச்சிமுள், அரைத்தவளை, சிற்றாமணக்கு, கதலிவாழை, இட்டிகை முதலியன

(3) பின்னொட்டுச் சேர்பு:

தூண்டில், முற்றில்— மூச்சில், கெண்டைக்கசனி, அயிரைப் பொடி முதலியன.

(4) வலித்தல் திரிபு : (நந்து) — நத்தை :

(5) சொன்முறைமாற்று : (கால்வாய்)—வாய்க்கால்:

பருமைப் பெயர் - Augmentatives.

(1) தனிச்சொல் ;

கடல், கடகம், கடப்பான், கடா, சேடன், சேடா, சாவி தாழி, நெடில், படாகை —-பதாகை, பூதம், மிடா, முரடு, முருடு முதலியன,

(3) முன்னொட்டுச் சேர்பு :

ஆனைக்குவளை, பாம்புமுள், பேரிந்து, பொத்த மிளகாய், மொந்தன் வாழை, மோட்டெருமை, சுட்டெறும்பு: கடப்பாரை, அல்லது கட்டிப்பாரை, மாட்டுப்பல், கடகால், பரவைச்சட்டி, பெருநாரை முதலியன,

(3) பின்னொட்டுச் சேர்பு :

குன்றம், பொட்டல் முதலியன.

தொழிற்பெயர்–Gerundial and Abstract Nouns.

தொழிற்பெயரும் பண்புப்பெயரும் மிக நெருங்கியவை. இதனால் ஆங்கிலத்தில் அவை ஓரினமாகக் கூறப்படுகின்றன; கோபித்தல் என்னும் வடிவம் தொழிலையும் கோபம் என்னும் வடிவங் குணத்தையும் குறித்தலையும், மை து அம் முதலிய ஈறுகள் இவ்விருகைப் பெயர்க்கும் பொதுவாயிருத்தலையும் நோக்குக, தன்மை, அறிவு, ஆற்றலென முத்திறப்பட்ட குணத்தின் வெளிப்பாடு அல்லது நுகர்ச்சியே தொழிலேன்க: பண்பு, இயல்பு என்னும் பெயர்களும் முதலாவது தொழிற் பெயராக விருந்தவையே. பண்+பு = பண்பு (செயல்). இயல்+பு=இயல்பு (நடக்கை ).

தொழிற்பெயர் வடிவங்கள் பின்வரும் முறையில் தோன்றியவை.

(1) முதனிலைத் தொழிற்பெயர்:

கா : அடி, வெட்டு.

(2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்,

கா : ஊண், பாடு, (கோட்படு) — கோட்பாடு,

(3) ஈற்று வலியிரட்டித்த தொழிற்பெயர்.

கா : எழுத்து, பாட்டு, மாற்று.

(4) இடைமெலிவலித்த தொழிற்பெயர்:

கா : விளக்கு, பொருத்து:

இந்நான்கு முறையும் அசையழுத்தம் பற்றியவை:

ஈற்று வலியிரட்டித்தலே, பிற்காலத்தில் மெலிதோன்றிய வடிவத்திற்கும் கொள்ளப்பட்டதாகவும் கொள்ளலாம்.

கா: இலகு — இலக்கு. இலகு — இலங்கு: இலங்கு — இலக்கு.

(5) ஈறுபெற்ற தொழிற்பெயர்:

ஈறுகளெல்லாம் பற்பல சொற்களின் திரிபே; அவை பின் வருமாறு அறுவகைப்படும்.

(i) கைப்பெயர் :

கை செய்கை. கா : நடக்கை.

பாணி = கை: கா : சிரிப்பாணி (தென்னாட்டு வழக்கு).

(ii) இடப்பெயர் :

இடம்+ அடம்+ அணம்—அனம்+ அனை+ஆனை.

கா : கட்டிடம், கட்டடம், கட்டணம். விளம்பனம், வஞ்சனை, வாரானை,

இடம் — இதம்— தம்—சம், கா : தப்பிதம், கணிதம்; கணிசம்.

அடம்—அரம்— அரவு. கா : விளம்பரம், தேற்றரவு.
இல் = வீடு, இடம், கா : எழில்.
இல் — அல்—ஆல். கா : எழில் , எழல், எழால்
தலை = (ஒரு சினைப்பெயர்), இடம். கா : விடுதலை.
தலை — தல்—சல் —சில்.
கா : விடுதலை, கடைதல், கடைசல், (அடுசில்) — அடிசில்.

(iii) சுட்டிடப் பெயர் :
(அது) — அத்து —து— சு.

கா : பாய்ந்து — பாய்ச்சு, காண்+து = காட்டு, உருள் +து = உருட்டு, ஈன்+து = ஈற்று.
(அது) — அதி —சி. கா : மறதி, காட்சி.
அக்கு = அவ்விடம், இடம். கா : கணக்கு.
அகம் = அவ்விடம், இடம். கா : வஞ்சகம், நம்பகம்.
(அவ்) — அஅ — வு. கா : செலவ, தேய்வு.
(அவ்) — (அவி)—வி—இ. கேள்வி, வெகுளி. (அவ்) — (அவை)— வை ; பார்வை.
(அவ்) — (அவ)—(அ)—ஐ. கா : கொடை, விலை.
(அ) — ஆ. கா : உணா, பிணா, இரா, நிலா.

வுகரவீறே உகரமாக இலக்கண நூல்களிற் கூறப்படுகின்றது.

உள் = பின்னிடம், உள்ளிடம், இடம், உவள் — உள்.
கா : விக்குள், செய்யுள், கடவுள்.
(iv) நீர்ப்பெயர். அம் = நீர். அப்பு (நீர்)—ப்பு—பு.
கா : கோட்டம். படிப்பு.

மை = நீர், மை மம் — மன், கா : பருமை, பருமம், பருமன்.

(v) மிகுதிப்பெயர், காடு = மிகுதி. ஒ. நோ, வெள்ளக் காடு, திரம் = திறம், கா : வேக்காடு, உருததிரம்.

(vi) அளவுப்பெயர் : மானம் = அளவு. கா: படிமானம்.

(vii) இயக்கப் பெயர் : இயம் = இயக்கம்: கா : கண்ணியம்.

(viii) எச்சந்தொடர்ந்த பெயர். கா: வந்தமை, வந்தது (வந்த+அது).

(ix) கலவை முறை.

கா : கொடுப்பு+அனை = கொடுப்பனை. கொள்வு+ அனை = கொள்வனை.

தீன்+இ = தீனி, கொள்+தல் = கோடல், திருத்து+ அம்=திருத்தம்.

அத்து+ஐ = அத்தை —தை—சை. கா : சிவத்தை , புரிசை.

ஒரு பகுதி பலஈறும் பெறும் : ஈறுதோறும் பொருள் வேபடும்.

கா: கற்றல், கல்வி, கலை, கற்பு.

(x) இரு மடித்தொழிற்பெயர்.

கா : நகு+ஐ= நகை, நகை+பு= நகைப்பு.

கள் + அவு = களவு. களவுசெய் + தல் = களவு செய்தல்,

ஆகுபெயர்—Metonymy and Synecdoche.

பெயர்கள் தோற்றமுறைபற்றி இயற்பெயர் ஆகுபெயர் என இருவகைப்படும் அவற்றுள் ஆகுபெயர் பல் திறத்தது.

கா : முதலாகு பெயர் கவரி (மயிர்)
சினையாகு ,, தலை(மறுதலை), கை(இடக்கை)
இடவாகு ,, குறிஞ்சி (யாழ்)
இடவனாகு ,, கழல், விளக்கு
காலவாகு பெயர் அஞ்சு மணி, செவ்வந்தி (ஜாமந்தி)
[3] காலவனாகு ,, கார், கோடை,
பண்பாகு ,, வெள்ளை, குட்டை.
பண்பியாகு ,, சாம்பல் (வாழை), பனை (அளவு).
அளவையாகு ,, காணம், அரை,
தொழிலாகு ,, வற்றல், செய்யுள்.
செய்வோனாகு ,, திருவள்ளுவர், கோலியன்.
கருவியாகு ,, செம்பு, கண்ணாடி, பொழுது.
காரணவாகு ,, அம்மை (தவறாயெண்ணியது).
காரியவாகு ,, வளை, வெண்கலம்.
உவமையாகு ,, காளை, பாவை.
சின்னவாகு ,, கோல், குடை.
சொல்லாகு ,, உரை, (பொருள்).
[4] பொருளாகு ,, பள்ளு, இலக்கணம்.
பெயராகு ,, பேர் (ஆள்). அடையடுத்த
அடையடுத்த
ஆகு ,, வெற்றிலை, நால்வாய்.
பன்மடியாகு ,, மடங்கல், கார்.
திரிபாகு ,, பைத்தியம்.

பெயரிலக்கணம்

திணை பால் எண் இடம் வேற்றுமை என்னும் ஐந்தனுள் முதலாவது தோன்றியது இடமே. அதன்பின், முறையே எண் பால் திணை என்பவை தோன்றின. வேற்றுமை எண்ணுக்குப் பின் தோன்றியிருக்கலாம்.

திணையென்னும் பெயர் தின் என்னும் மூலத்தினின்றும் தோன்றியது. திர+ள் = திரள் = திரட்சி. திர+அம் = திரம் — திறம்—திறன்—திறல் = தடிப்பு, உறுதி, வலிமை, கூறுபாடு, திரள்+ஐ= திரளை— திரணை— திரட்சி, திண்ணை— திரளை = திரட்சி, உருண்டை, திண்ணை — திட்டை. திண்டு—திட்டு திண்ணம். திட்டம் = உறுதி, தேற்றம். திரம் — திறம்—திடம் உறுதி. திண்ணம் = தடிப்பு, திரட்சி, உறுதி, தேற்றம். திண்ணை —திணை = திரட்சி, குழு, வகுப்பு, ஓ. நோ. குழு= திரட்சி, கூட்டம் வகுப்பு.

பால் :

பகு+அல் = பகல்—பால் = பிரிவு.

ஆண்பால் பெண்பாற் பெயர்கள் பின் வருமாறு மூவகையாயமையும்.

(1) வேற்றுப்பெயர். கா : ஆடவன், பெண்டு.

(2) ஈற்றுப் பேறு. கா: மகன், மகள்,

ஆண்பாலீறுகள் அலன், அன், ஆன், ஒன், ன், மகன் — மான் — மன் — வன், ஆளன், காரன் முதலியன.

கா : வில்லவன், இடையன், தட்டான், மறையோன், கோன், திருமகன்—திருமான் (ஸ்ரீமான்), களமன், மணாளன், வேலைக்காரன்.

பெண்பாலீறுகள் அவள், அள், ஆள், ஒள், ஐ. மகள்—மாள், மி, வி, மாட்டி. ஆட்டி அத்தை , அத்தி, அச்சி, காரி முதலியன. இவற்றுள் ஈற்றயல் மூன்றும் முறைப்பெயர்கள்.

கா: வல்லவள், நல்லள், கண்ணாள், மாயோள், பண்டிதை, வேண்மகள்—வேண்மாள், சிறுமி, புலவி, பெருமாட்டி, தம்பிராட்டி, பரத்தை, வண்ணாத்தி, மருத்துவச்சி, வேலைக்காரி.

மேற்காட்டிய ஆண்பாலீறுகட்கெல்லாம் னகரவொற்றும், பெண்பாலீறுகட்கெல்லாம் ளகரவொற்றும் இகரமுமே மூலமாகும்.

மாந்தருள், ஆண்மை திரிந்த பெண்பாற் பெயர் பேடி என்பது; பெண்மை திரிந்த ஆண்பாற் பெயர் பேடன் என்பது. இவ்விரு பாற்கும் பொதுப்பெயர் பேடு என்பது; இவ்விருபாலும் அல்லாததின் பெயர் அலி என்பது. (அலி மாத்தரும் உலகில் உளர்.)

அன் இ முதலிய ஈறுகள் இருதிணைக்கும் பொதுவாம்:

கா: கடுவன், கொள்ளி, கண்ணி.

அஃறிணையிலும் ஆண்பால் பெண்பாலுண்டு.

(1) வேற்றுப்பெயர்: களிறு—பிடி.

(2) முன்னொட்டுச் சேர்பு. ஆண்பனை — பெண்பனை, சேங்கன்று—கிடாரிக்கன்று.

(1) பின்னொட்டுச் சேர்பு, மயிற்சேவல்— மயிற்கோழி, மயிற்பேடை.

அஃறிணையாண்பெண் பாற்பகுப்பு, திணைப்பாகுபாடு பற்றி இலக்கணத்திற் கொள்ளப்படவில்லை.

(4) முன்னொட்டுச் சேர்பு.

கா : ஆண் பிள்ளை, பெண் பிள்ளை.

எண்:

பன்மையிறு:

சீன மொழியில், பன்மையுணர்தற்குத் தொகுதிப்பெயர் பெயர்களின் ஈற்றிற் சேர்க்கப்படுகிறது.[5]

கா : gin=man; kiai= whole or totality.

gin-kiai=men.

i=stranger. pei=class. i =r pei—strangers.

ngo = I, ch¢= assembly. ngo-che=we

தமிழிலும் 'கள்' ஈறு இங்கனம் தோன்றியதே.

கல—கள—களம். கள + அம் =களம் = கூட்டம். கூட்டத்தின் பெயரே கூடும் இடத்தையுங் குறிக்கும்.

மன்று, மந்தை, அம்பலம் என்னும் பெயர்கள் கூட்டத்தையும் கூடுமிடத்தையும் குறித்தல் காண்க.

'அவையஞ்சாமை' என்னும் அதிகாரத்தில்,

“உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்”(குறள், 736.)

என்று திருவள்ளுவர் அவையைக் களனென்றார். நன்னூலாரும் “காலங்களனே“ என்றார்.

கள—கள். மரங்கள—மரங்கள்:

கள் ஈறு இருதிணைக்கும் பொது, கா: மக்கள், மாக்கள், மரங்கள்.

அர், அ, வை என்பவை இயல்பா வாசுவே தெரிகின்றன.

குருவார்— குருமார், வ—ம, போலி:

வேற்றுமை :

வேறு+மை=வேற்றுமை: பெயரின் இயல்பான எழுவாய்ப்பொருள், செய்பொருள் கருவிப்பொருள், முதலியவாக வேறுபடுவது வேற்றுமை.

எட்டு வேற்றுமைகளுள், 1 ஆம், 3 ஆம், 3 ஆம், 4 ஆம். 6 ஆம், 7 ஆம் வேற்றுமைகளே முந்தித் தோன்றியவை. இவற்றுள்ளும், 2 ஆம், 4 ஆம், 7ஆம் வேற்றுமைகளே மிக முந்தியவை என்று கொள்ள இடமுண்டு. முதல் வேற்றுமையிலிருந்து 8 ஆம் வேற்றுமை தோன்றினது. 8 ஆம் வேற்றுமையே இறுதியில் தோன்றினது, தொல்காப்பியர் காலத்தில், வீளியைச் சேராமல் வேற்றுமை யேழென்றும், அதனைச் சேர்த்து வேற்றுமை யெட்டென்றும் இருகொள்கைகள் நிலவின. தொல்காப்பியர்,

“வேற்றுமை தாமே ஏழென மொழிப“

“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே“

என்று கூறிய பின்பு, வேற்றுமை யெட்டென்னுங் கொள்கை: நிலைத்து விட்டது.

எட்டு வேற்றுமைகளும் இப்போதமைந்துள்ள முறைக்குக் காரணத்தை, பின்வரும் வினாக்களாலும் சிற்றாலுமறியலாம்,

அழகன் (யார்? அல்லது) என்ன செய்தான்? எதைச் செய்தான்? எதனாற் செய்தான்? எதற்குச் செய்தான்? எதனின்று செய்தான்? அது இப்போது யாரது? யாரிடத்திலிருக்கிறது?

எட்டாம் வேற்றுமை இறுதியில் தோன்றினதினால், இறுதியில் வைக்கப்பட்டது. அது முன்னிலை எழுவாயே

2 ஆம் வேற்றுமையுருபு ஐ.

இது ஆய் என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம், சோறாய்ச் சாப்பிட்டான், பெட்டியாய்ச் செய்தான் என்னும் வழக்குகள் இன்றுமுள்ளன, ஆய் என்பது ஐ என்று தெலுங்கிலும் திரிகின்றது.

கா : சாரமாயின (த.)—சாரமைன (தெ.).

3 ஆம் வேற்றுமையுருபு ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்.

ஆல்—ஆன். ஓ. நோ; மேல — மேன.

இல் (7 ஆம் வே, உ:)—ஆல், ஒ. நோ. எழில்—எழால்: மையில் எழுதினான் என்னும் வழக்கை நோக்குக, செருப்பாலடியென்பதைச் செருப்பிலடி யென்பர் வடார்க்காட்டு வட்டகையார்.

குடம் — உடம் — உடன் — உடல், குடம்பு — உடம்பு. குடங்கு —உடங்கு. குடக்கு—உடக்கு. குடம், குடம்பு முதலியவை கூட்டின் பெயர்கள், உடல் கூடுபோற் கருதப்பட்டது.

“குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு” (குறள், 338.)

என்றார் திருவள்ளுவர்.

“கூடுவிட்டிங் காவி தான் போனபின்பு“ என்றார் ஔவையார். 'கூடுவிட்டுக் கூடு பாய்தல்' என்பது அறிவராற்றல் குறித்த வழக்கு.

ஒருவனுடன் இன்னொருவன் செல்லுதல், ஒருவன் தன் உடம்போடு செல்வது போன்றிருக்கிறது.

உடன் என்னும் சொல்லுக்குப் பதிலாக, கூட என்னுஞ் சொல்லும் வழங்குகின்றது. கூடு (பெ)—கூடு (வி.)— கூட (நிகழ்கால வினையெச்சம்)

ஓடு என்பது சில காய்கனிகளின் கூடு. ஓடு—ஒடு.

தோடு என்பதும் இங்கனமே தோட என்பது தெலுங்கில் 3 ஆம் வேற்றுமை உடனிகழ்ச்சியுருபு. ஒ. நோ, கூடு — கூடா

ஆல், ஓடு என்னும் ஈருருபுகளும், தனித்தனி கருவி உடனிகழ்ச்சி யென்னும் இருபொருளிலும் வழங்கும்.

கா : ஊரானொரு கோயில் = ஊருடன் அல்லது ஊர் தொறும் ஒரு கோயில்.

கொடியொடு துவக்குண்டான் = கொடியால் துவக்குண்டான்.

சுருவி உயர் திணை அஃறிணையென இருவகை. அவற்றுள் உயர்திணைக் கருவியே, எழுவாய் (கர்த்தா) என்று பிரித்துக் கூறப்படுவது.

இவற்றையெல்லாம் நோக்காது, 3 ஆம் வேற்றுமை வேறுபட்ட பொருள்களை யுடையதென்றும், வடமொழியைப் பின்பற்றியே தமிழில் எட்டு வேற்றுமை யமைக்கப்பட்டன வென்றும் கூறினர் கால்டுவெல் ஐயர்.

கொண்டு என்பது உடனிகழ்ச்சிப் பொருட் சொல்லுருபு. கொண்டு = பிடித்து. உளிகொண்டு = உளியைக் கையிற் கொண்டு.

4 ஆம் வேற்றுமையுருபு கு.

இஃது ஒக்க என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம்.

மழவன் நம்பியொக்கக் கொடுத்தான், திருவாணன் (ஸ்ரீநிவாசன்) ஊரொக்கப் போனான், என்பவை பொருத்தமாயிருத்தல் காண்க. ஒக்க — (ஒக்கு) — உக்கு(அக்கு)—கு. கா : அழகன் + உக்கு = அழகனுக்கு. என்+அக்கு = எனக்கு, அவன் +கு= அவற்கு.

பொருட்டு (பொருள்+து) நிமித்தம் என்பவை 6 ஆம் வேற்றுமை யுருபோடும், ஆக என்பது குவ்வுருபோடும் கூடி 4 ஆம் வேற்றுமைச் சொல் ஒருபாக வரும்.

5 ஆம் வேற்றுமையுருபு இல், இன்:

இல் (7 ஆம் வே, உ)—இன், இருந்து, நின்று என்னும் எச்சங்கள், இல் இன் என்பவற்றோடு சேர்ந்து வரும்: இவற்றுள் முன்னது இருந்த நிலையையும் பின்னது நின்ற நிலையையுங் குறிக்கும்.

6 ஆம் வேற்றுமையுருபு எண் காட்டுவனவுங் காட்டாதனவுமாக இருவகை.

அது ஆது அ என்பவை எண் காட்டுவன. அது—து.

இவை அஃறிணை வினை முற்றீறுகளே, எழுவாய்த் தொடர் வினைமுற்றுத் தொடராக மாற்றிக் கூறப்பட்டதால் இவ்வுருபுகளுண்டாயின.

கா : புத்தகம் அம்பலவாணனது - அம்பலவாணனது புத்தகம்.
புத்தகம் எனாது—எனாது புத்தகம்.

ஒருமை.

புத்தகங்கள் கண்ணன — கண்ணன புத்தகங்கள் (பன்மை ).

இன் அன் என்பவை எண் காட்டாதன. இல் (7 ஆம் வே. உ.)—இன்—அன்.

கா : அதன், வேரின்.

உடைய என்பது உடைமை என்னும் பண்புப் பெயரடியாய்ப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.

அது, இன், அன் என்லும் உருபுகள் கலந்தும் வரும். அது என்பது அத்து என் இரட்டியும், து எனக் குறைந்தும் வரும்.

கா அத்து + இன் = அத்தின், இன் + அது= இனது. இன்+ து =இற்று. இன்+து+இன் =இற்றின், அன்+ அது = அனது. அன் + து = அற்று. அன் + து + இன் = அற்றீன், இங்ஙனமே பிறவும்.

7 ஆம் வேற்றுமையுருபுகள் இல் முதலியன.

அவை பின்வருமாறு நால்வகைப்படும் :

(1) இடப்பெயர் கா : இல் (வீடு),
(2) அருகிடப்பெயர். கா : முன், பின், இடம், வலம்.
(3) சினைப்பெயர். கா : கண், கால், கை, வாய், தலை,
(4) புணருருபு. கா : இடம் + அத்து = இடத்து.
இடம் + அத்து+இல் = இடத்தில்.

8ஆம் வேற்றுமையுருபு பெயரின் விளித்தற்கேற்ற திரிபே. அது பெரும்பாலும் ஈற்று நீட்டம். அது சேய்மையும் உயரமுங் குறிக்கும். ஆ ஏ ஓ என்னும் நெடில்கள் சேர்வதாலும், ஈற்றில் அல்லது ஈற்றயலிலுள்ள குறில்கள் நீளுவதாலும் உண்டாகும். கா : மகனே, தேவி, அண்ணா.

வினிவேற்றுமை இரக்கக் குறிப்பும் வியப்புக் குறிப்பும் பற்றிய சில சொற்களைப் பிறப்பித்திருக்கின்றது.

கா : ஐயோ, ஐயவோ, ஐயகோ, அன்னோ -இரக்கக் குறிப்பு.

அம்ம, அம்மா, அப்பா - வியப்புக்குறிப்பு.


  1. The Revised Latin Primer,pp,12,13.
  2. Management to Children. in India. p. 79...
  3. காலவன் = காலத்தில் தோன்றுவது.
  4. பொருள்— நூற்பொருள்
  5. L. S. L. Vol. I, p. 48,