ஒப்பியன் மொழிநூல்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஒப்பியன் மொழிநூல்

மொழிஞாயிறு

ஞா. தேவநேயப் பாவாணர்

கழக வெளியீடு






ஒப்பியன் மொழிநூல்



ஞா. தேவநேயப் பாவாணர்

ஒப்பியன் மொழிநூல்
திராவிடம்
தமிழ்




மொழிஞாயிறு
ஞா. தேவநேயப் பாவாணர்
எழுதியது




திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.,
154, டி. டி. கே. சாலை, சென்னை -18.
1990

© ஞானப்பிரகாச தேவநேயன் (1902)


1990 THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED.


கிளைகள்:
79, பிரகாசம் சாலை, (பிராடுவே) சென்னை -108.
திருநெல்வேலி-6 மதுரை-1 கோயமுத்தூர்-1
கும்பகோணம்-1 சேலம்-1 திருச்சிராப்பள்ளி- 2


கழக வெளியீடு: ௧௪௧௭



முதற்பதிப்பு: 1940
மறுபதிப்புகள்: மார்ச் 1971, திசம்பர் 1990

P31
N90



OPPIYAN MOZHI NOOL
DRAVIDAM Vol-1
TAMIL


அப்பர் அச்சகம், சென்னை -108

© ஞானப்பிரகாச தேவநேயன் (1902)


1990 THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED.


கிளைகள்:
79, பிரகாசம் சாலை, (பிராடுவே) சென்னை -108.
திருநெல்வேலி-6 மதுரை-1 கோயமுத்தூர்-1
கும்பகோணம்-1 சேலம்-1 திருச்சிராப்பள்ளி- 2


கழக வெளியீடு: ௧௪௧௭



முதற்பதிப்பு: 1940
மறுபதிப்புகள்: மார்ச் 1971, திசம்பர் 1990

P31
N90



OPPIYAN MOZHI NOOL
DRAVIDAM Vol-1
TAMIL


அப்பர் அச்சகம், சென்னை -108

பதிப்புரை

ஒரு நாட்டின் சிறப்பு அந்நாட்டின் மொழி வளத்தைப் பொறுத்தே அமைவதாகும். மொழி, வளமுடையதாயின் அதனைப் பேசும் மக்கள், நாகரிகமும் நல்ல பண்பாடும் உடையவர்களாய்த் திகழ்வர் என்பது தேற்றம். அவ்வகையில் நந் தமிழ் மொழி தன்னேரில்லாத் தனித்தன்மை வாய்ந்தது. அதனைப் பேசும் இத்தமிழக மாந்தர் தம் நாகரிகம், தனித் தன்மையும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது. இது வரலாற்றாசிரியர் அனைவரும் ஒப்ப முடிந்த முடிபாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் நன்மக்கள் முறையாக வளர்ந்தோங்கி வாழ்ந்திருப்பின், இத் தமிழ் நாடு மேலை நாடு கட்கு ஒப்பானதொரு சீரிய நாடாக-உலக அரங்கில் முன்னணி யில் நிற்கக் கூடிய நாடாகத் திகழ்ந்திருக்கக் கூடும். ஆனால் இந்நாட்டில் குடியேறிய ஆரிய இனத்தவரின், சூழ்ச்சிகளாலும், மேலாட்சியினாலும், தமிழினத்தின் வரலாறும், தமிழ்மொழியின் சிறப்பும் புதை பொருளாரய்ச்சிக் குரியனவாய் விட்டன.

இந்திய வரலாறு சரியானபடி எழுதப்பட்டிருப்பின், தமிழகமே அவ்வரலாற்றுக்கு அடிப்படையாக அமைந்து இருக்கும்: வரலாறு குமரி முனையிலிருந்து துவங்கியிருத்தல் வேண்டும். ஆனால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் வட நாட்டை மையமாகக் கொண்டே தம் ஆராய்ச்சிகளை இயற்றினர், அதன் விளைவாகத் தமிழகத்தின் தொன்மை வெளியுலகிற்குத் தெரியாமற் போயிற்று. இதனால் இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்க்கு வாழ்வும் தமிழர்க்குத் தாழ்வும் ஏற்படலாயிற்று. தமிழர் தம்மையே மறக்கலாயினர்.

எனவே, இப்படிப்பட்ட நிலை மாறித் தமிழர்க்குப் புது வாழ்வும், புத்துணர்ச்சியும் ஏற்படவேண்டும். அதற்கு வழி கோலுவதே 'ஒப்பியன் மொழி நூல்' என்னும் இவ் ஒப்பற்ற நூல்; இதன்கண் தமிழினத்தின் வரலாறும், தமிழ் மொழியின் இலக்கண அமைவும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டு உள்ளன. ஆரிய திராவிட நாகரிக வேறுபாடுகள், பார்ப்பனர் தமிழரை வென்ற வகை, ஆரியத்தால் தமிழ் கெட்டமை, மொழி நூல் நெறிமுறைகள், தொல்காப்பியம் பற்றிய ஆராய்ச்சி, தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள், தமிழிலக்கண இலக்கியத் தோற்றம், உலக முதன் மொழிக் கொள்கை ஆகிய செய்திகள் தக்க அகப்புறச் சான்றுகளுடன் விளக்கமாகக் கூறப்படுகின்றன.

இந்நூலைப் பயில்வோர் தமிழக வரலாறு, தமிழ் மொழி இலக்கணம் ஆகிய இரண்டினையும் ஒரு சேரப் புரிந்து கொள்ள லாம். இத்தகைய நூல்கள் போதிய அளவு வெளிவராமை யாலும், வெளிவந்த நூல்களை விரும்பிப் படிப்பார் இன்மையா லுமே தமிழகம் தாழ்ந்தது. தமிழன் தன்னையே மறந்தான்; தமிழர் ஏமாந்த காலத்தில் ஏற்றம்கொண்ட ஆரியப் பார்ப்பனர் அரசியல் துறையிலும், சமயத் துறையிலும் தலைமையேற்றுத் 'தமிழன் என்றோர் இனம் உண்டு' என்ற உண்மையினையே மறைத்துவிட்டனர். இன்று அந்நிலையினின்று மீளத் தமிழர் அரும்பாடுபட வேண்டியதாயிற்று.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழரிடையே விழிப் புணர்ச்சி தோன்றி, அதன் விளைவாக மாண்ட அவர் தம் பெருமை மீளத் துவங்கியுள்ளது. தமிழக வரலாறு-மொழி-கலை- நாகரிகம் இன்ன பிறவற்றை அறிந்து கொள்ளும் வேட்கை கற்றவர்களிடையே அரும்பியுள்ளது. எனவே தான் இத்தகைய வேளையில் இத்தகைய வரலாற்று அடிப்படையுடன் கூடிய இலக்கண நூல்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடலானோம்.

மொழிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்கள், மொழிப் பற்றும், இனப்பற்றும் மிக்கவர். நல்ல ஆராய்ச்சியாளர்; பயனுள்ள நூல்களை ஆக்கும் பன்மொழிப் புலவர்: அத்தகைய அறிஞர் எழுதிய இந்நூல் 1940-ஆம் ஆண்டில் முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்போது திருந்திய மூன்றாம் பதிப்பாகக் கழக வழி வெளிவருகின்றது. இந் நூலாசிரியர்க்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியது.

இதன் முதற் பதிப்பைப் பெற்றதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ப்புரவலர் த, வே. உமாமகேசுரம் பிள்ளையவர்கள் அதைப்பற்றிப் பெரிதும் பாராட்டி எழுதினார்கள்; தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றின் வளர்ச்சியினையே குறிக்கோளாகக் கொண்டு சொற்பொழிவாற்றியும் நூல்கள் எழுதியும் அருந்தொண்டு புரிந்த தனித் தமிழ்த் தந்தை மறைத்திரு. மறைமலையடிகளார் அடிச்சுவட்டைப் பற்றி இற்றை நாள் தொண்டு புரிந்து வருபவர் திருவாளர் பாவாணர் அவர்களே யாவர் எனின் அது மிகையாகாது. அடிகளார் வாழ்ந்தபோது திரு: பாவாணர் அவர்கட்கு அன்புள்ளத்தோடு வழங்கிய சான்றிதழ் இதன்கண் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இதனையும், இதுபோன்ற வரலாற்று இலக்கியங்களையும் கற்றறிந்தோர் ஏற்றுப் போற்றுதல் வேண்டும். அத்துடன் தமிழக அரசும் இத்தகைய நூல்கள் வெளிவரத் துணைபுரிதல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

CERTIFICATE

The Tamil works on the study of Tamil words written by Pandit Jna. Devaneyan, B.O. L. on the lines of general philological principles meet a longfelt want in Tamil. In my early days when I was interesting myself in the study of such English works as Arch Bishop Trench's Study of Words Prof. Max Muller's Science of Language, Prof. Sayce's Comparative Philology etc., my attention turned to making a similar study of Tamil words. Dr. Caldwell's Comparative Study of Dravidian Languages opened up before me a vast and wonderful tract of Tamil knowledge then lay hidden even to great Tamil scholars. Still Caldwell's work as an incipient attempt in an unknown region could not be expected to treat exhaustively of all Tamil words. And this impelled me to write a Tamil Philology myself and publish even one or two essays of it in the first volume of my magazine Jaanasagaram. But I could not continue it, since my activities in other fields as religion, philosophy and literary history absorbed my whole attention. Still I was looking about whether any competent scholar would take up the subject; and I was gratified to a certain extent when Father Jnanaprakasar of Jaffna sent me his interesting work on Tamil Philology. The field being vast and extensive, I was looking forward to some more work on a comprehensive scale founded on ancient classical Tamil and am glad to say that Mr. Devaneyan has met my expectation almost wholly. Tamil scholars may Safely rely on his caroful treatment of the subject and I dare say they will be greatly benefitted by a diligent parusal of his works. It is my humble opinion that in the Study of Tamil words Mr. Davaneyan stands pre-eminent and has few rivals.

Further Mr. Devanayan is an impressive teacher and an interesting lecturer as I had on several occasions when I had presided over the annual deliberations of Tamil Sangams to hear him speak to large audiences and engage their attention by flavouring his speech with wit and humour. As a painstaking research scholar I am confident he will bring name and fame to any institution that will engage his services.

Pallavaram, 1949 (Sd.) MARAIMALAI ADIGAL

சான்றிதழ்[1]

பண்டித ஞா. தேவநேயனார் பி. ஏ. எல். பொதுவாக மொழி நூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி பற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவை யினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய 'சொல்லாராய்ச்சி', பேராசிரியர் மாக்சுமுலர் எழுதிய "மொழியறிவியல்' பேராசிரியர் சாய்சு எழுதிய 'ஒப்பியல் மொழி நூல்' முதலிய ஆங்கில நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு பண்டாரகர் கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு' நூலால் புலப்படலாயிற்று.. எனினும் பண்டாரகர் கால்டுவெல் அறியப் படாத வட்டாரத்தில் செய்ததொரு மூயற்சியாதலால் தமிழ்ச் சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந் துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராயவேண்டுமென்று எம்மைத் தூண்டியது. எனவே "ஞானசாகரம்" (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத்துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப் பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டி ஏற்பட்டமையால் மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத்துறையில் ஆராய் வதற்கு முன் வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பி வைத்தார். அது ஓரளவு எமக்கு மன நிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமுமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம்.

சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும் அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்.

மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின் கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எத்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப்பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.

முகவுரை

மொழிநூற் பயிற்சி, அக்கலையின் ஆங்கிலப் பெயருக்கேற்ப (L. Gr. philos, loving, logos, discourse) சென்ற பத்தாண்டுகளாக எனது சிறந்த இன்பப் போக்காக இருந்துளது; இன்னுமிருக்கும்.

பள்ளியிறுதி (School Final), இடைநடுவு (Intermediate), கலையிளைஞர் (B.A.) முதலிய பல்வகைத் தேர்வுகட்கும் உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்குத் தொடர்ந்து உரை அச்சிட்டு வரும் உரையாசிரியர் சிலர் தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென்சொற்களை யெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை யெழுந்தனவோ என்று தனித் தமிழர் ஐயுறுமாறு, கலை-கலா: ஆவீறு ஐயான வடசொல்; கற்பு-கற்ப என்னும் வடசொல்' சேறு-ஸாரம் என்னும் வடமொழியின் சிதைவு; உலகு-லோக மென்னும் வடசொல்லின் திரிபு; முனிவன்-மோனம் என்னும் வடசொல்லடியாய்ப் பிறந்தது; முகம்-வடசொல்; காகம்-காக என்னும் வடசொல்; விலங்கு-திரியக்ஸ் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப் பல தூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தம் உரைகளிற் காட்டிவருவது பத்தாண்டுகட்குமுன் என் கவனத்தை யிழுத்தது. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றின் வேர்களையும், வேர்ப்பொருள்களையும் ஆராய்ந்தபோது அவை யாவும் தென்சொல்லென்றேபட்டன. அவற்றை முதலாவது வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுச் சொற்களாகவும், போலிப் பொதுச் சொற்களாகவுங் கொண்டு, இவ்வுண்மையை வேறொரு மொழியினின்றும் ஒருபோகு முறையான் உணர்த்துமாறு, ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள பொதுச் சொற்களை ஆராயத் தொடங்கினேன். சேம்பர்ஸ் (Chambers), ஸ்கீற்று (Skeat) என்பவர்களின் ஆங்கிலச் சொல்லியலகராதி (Etymological Dictionary)களைப் பார்த்தபோது, ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்கள் அகப்பட்ட துடன், அவற்றின் வாயிலாகவோ, அவற்றின் மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன் (Latin) கிரேக்கு (Grees)ச் சொற்களும் அகப்பட்டன. பின்பு இலத்தீன் கிரேக்கு அகராதிகளைத் துருவினேன். வேறு சில சொற்களும் எனக்குத் துணையாயின. அவற்றுள் navis (நாவாய்), amor (அமர்-அன்புகூர்) முதலிய இலத்தீன் சொற்களும், telos (தொலை-தூரம்), palios (பழைய) முதலிய கிரேக்குச் சொற்களும் எனக்குப் பெரிதும் வியப்பை யூட்டின. இவற்றுடன், தமிழ் இந்திய-ஐரோப்பிய மூலமொழிக்கு மிக நெருங்கியதென்று, கால்டுவெல் (Caldwell) கூறியிருப்பதையும், அவரும் குண்டர்ட்டும் (Gundert) வடமொழியிலுள்ள திராவிடச் சொற்களிற் சிலவற்றை எடுத்துக் காட்டியிருப்பதையும், பண்டைத் தமிழகம் தென்பெருங்கடலில் அமிழ்ந்துபோன குமரிநாடென்றும், அந்நாட்டிலேயே தமிழர் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்தனரென்றும், தமிழ்த் தொன்னூல்கள் கூறுவதையும், மாந்தன் முதன்முதல் தோன்றினது இலமுரியா (Lemuria-குமரிநாடு) என்று வியன்புலவர் எக்கேல் (Haeckel) கூறியிருப்பதையும், தமிழ் உலகமொழிகள் எல்லாவற்றிலும் எளிய வொலிகளைக்கொண்டு இயற்கைத் தன்மையுள்ளதாய், அதன் சில பல சொற்கள் பல மொழிகளிலும் கலந்து கிடப்பதையும், சேரநோக்கினபோது, தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய தனிப் பண்புகள் புலனாயின. பின்பு மொழிநூற்றுறையில் ஆழ இறங்கினேன்.

நான் மொழிநூற்பயிற்சி தொடங்கியதிலிருந்தே, அவ்வப்போது என் ஆராய்ச்சி முடிபுகளைச் 'செந்தமிழ்ச் செல்வி', 'தமிழ்ப் பொழில்' என்னும் இரு திங்கள் இதழ்களிலும், கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்து வந்திருக்கிறேன். அவை சிலரை மகிழ்வித்தன; சிலர்க்குச் சினமூட்டின. ஒரு நாட்டில் ஒரு புதுக் கலை தோன்றும்போது, பலர் அதில் அவநம்பிக்கை கொள்வதும், அக்கலையைக் கூறுவாரை வெறுப்பதும் இயல்பே. மொழிநூற் கலை மேனாட்டில் தோன்றி இரு நூற்றாண்டுகளாயினும், இன்னும் அது குழவிப் பருவத்திலேயே இருப்பதையும், இந்தியர்க்குப் பெரும்பாலும் தெரியாதிருப்பதையும் நோக்குமிடத்து, எனது மொழிநூன் முடிபை வெறுப்பாரை நோக்கி வருந்துவதற்கு எள்ளளவும் இடமில்லை. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் உலக முழுமைக்கும் மொழிநூற் கதிரவனாய் விளங்கிய மாகசு முல்லரைக் கூடப் பலர், விதப்பாய் அமெரிக்கர், குறைகூறியும் கண்டனஞ்செய்தும் வந்தனர். அதற்கு அவர் அணுவளவும் அசையவில்லை; ஒரு கலையின் தொடக்கத்தில், அதைப்பற்றி எழும் நூல்களிற் பல பிழைகள் நேர்வது இயல்பு. அவற்றை அறிஞர் எடுத்துக் கூறுவதும், ஆசிரியர் அவற்றைத் திருத்திக்கொள்வதும், அக்கலை வளர்ச்சிக் கின்றியமையாத கடமைகளாகும்; இதனால், சில போலிப் பிழைகள் விளக்கம் பெற்று உண்மை வடிவங்கொள்ளும்; பொறாமை யொன்றே காரணமாகக் கூறும் சிலரின் வெற்றொலிகளும் ஒரு நிலையில் அடங்கிவிடும். என் கட்டுரைகளிற் சில பிழைகளிருந்தன என்பதை இன்று உணர்கின்றேன். ஆயினும், அவை என் பெருமுடிபுகளைத் தாக்காதவாறு மிகமிகச் சிறியனவே உண்மையைப்பற்றிக் கொண்ட ஆராய்ச்சியாளன், ஊக்கமாய் உழைப்பின், முதலிலும் இடையிலும் தவறினாலும் இறுதியில் வெற்றிபெறுவது திண்ணம்.

மொழிநூலானது உலக மொழிகள் எல்லா வற்றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும், ஆரியம் (Aryan), சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர். அவற்றுள், துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திரவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற குடும்பங் களை வகுத்துக் காட்டியுள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந் நூலின் நோக்கம்.அவற்றுக்கொரு தொடர்புண் டென்று, அஃதாவது,அம்மூன்றும் ஒரு மூலத்தி னின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (maxmuller) திட்டமாய்க் கூறிவிட்டார். அம்மூலத்திற்குத் திரவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளனர். இக்கூற்றை என்னா லியன்றவரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன்.

இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆசுத்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது; அவற்றுள், இப்பொத்தகம் முதல் மடல முதற்பாகம், தமிழைப்பற்றிக் கூறுவது. இரண்டாம் பாகம் பிற திராவிட மொழிகளைப்பற்றிக் கூறும். இவை தமிழில் வெளிவந்தபின் ஆங்கிலத்திலும் வெளிவரும்.

தமிழ்நாட்டில், பல நூற்றாண்டுகளாகப் பல தமிழ்ப் பகைவர் பலவாறு தமிழைக் கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால், அவற்றை எடுத்துச் சொல்வது இந்நூன்முடிபுக்கு இன்றியமையாததாயிருக் கின்றது. ஆகையால், அறிஞர் அதனை அருள்கூர்ந்து பொறுத்தருள்வாராக. யான் ஏதும் பிழை செய்திருப்பின், அதையும் எடுத்துக்கூறி என்னைத் திருத்துவதும் அவர் கடன்.

மொழிநூற் பயிற்சிக்கு வேண்டிய பொருள், இடம், காலம், துணை முதலிய ஏந்துகள் (வசதிகள்) எனக்கு மிகமிகக் குறைந்துள்ளன. ஆயினும், இந்நூல் இவ்வளவு உருப்பெற்றது இறைவன் திருவருளே.

என் கட்டுரைகளைக் குறைகூறி, என் முடிபுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த, பல நண்பர்கட்கும் யான் மிகவுங் கடப்பாடுடையேன்.

"குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்."
 
“குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்” (குறள். ௫௦௪)


புத்தூர், திருச்சி,

29-1-1940 ஞா. தே.

உள்ளுறை

முன்னுரை 1-74

ஆரிய திராவிடப் பகுப்பு—இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது —பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்—வட மொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு — பார்ப்பனர் தமிழரோடு மணவுறவு கொள்ளாமை — ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு — ஆரியர் தொல்லகம் — ஆரியர் வருகை — தமிழ் நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை—கடைக் கழகக் காலப் பார்ப்பனர் நிலை — பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள் — தமிழகத்தில் இருசார் பார்ப்பனர் — பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்—இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே — பார்ப்பனர் மதிநுட்பமுடையவர் எனல்—ஆரியத்தால் தமிழ் கெட்டமை — ஆரியத்தால் தமிழர் கெட்டமை—ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல்—பார்ப்பனர் தமிழ் நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிகளாகாமை—பார்ப் பனரின் றகர வொலிப்புத்தவறு.

நூல்:

I மொழிநூல் : க-கூ எ

மொழி—மொழிவகை—மொழி பகுப்பு முறை மொழி மரபு வரிசை I, மொழி மரபு வரிசை II. மொழி மரபு வரிசை III — மொழிநூல் நிலை-மொழி நூல் நெறி முறைகள்:


1 குமரி நாடு :
குமரி நாட்டுக் கடல்கோள்கள், குமரிநாடு-புறச் சான்றுகள்:


தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்—தமிழின் தொன்மை — தமிழரசரின் பழமை — தமிழரசர் பெயர் — தொல்காப்பியர் — தொல்காப்பியவழுக்கள்—தொல்காப்
பியர் காலம்—அகத்தியர் காலம்—தொல்காப்பியர் காலத் தமிழ் நூல்களும் கலைகளும்—இலக்கணம்—செய்யுள் இலக்கணம்—இலக்கியம் இசைத் தமிழ்—நாடகத்தமிழ்—தொல்காப்பியத்தினின்று அறியும் பாக்களும், நூல்களும்—அறுவகைப் பாக்கள்—இருபான் வண்ணங்கள் — பொருளீடுகளும் நூல் வகைகளும் — காமப் பொளீடுகள் — வருணனைப் பொருளீடுகள் — போர்ப் பொருளீடுகள் — கருதற் பொருளீடுகள் — பாடாண் பொருளீடுகள்—செய்யுளின் எழுநிலம் — நூல் வகை—எண்வனப்பு—மறை நூல் — தவநூல் — பட்டாங்கு நூல் — உளநூல் — கணித நூல்—வான நூல் — சொல்லியல் நூல்— தருக்க நூல் — அகத்தியர் தருக்க நூற்பாக்கள் — தொழிற் கலைகள் — சிற்பம் — உழவு—கைத்தொழில் — நெசவு வாகைம்—அழிந்துபோன தமிழ் நூல்கள் — அகத்தியர் — அகத்தியர் கதைகள் — அகத்தியம் வழி நூலாதல்—அகத்தியத்திற்கு ஆரிய விலக்கணத் தொடர்பின்மை — தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம் — கடைக்கழகலக்கியம் ஓர் இலக்கிய மாகாமை — அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை— அகத்தியர்க்கு முன் தமிழ் சற்றுத் தளர்த் திருந்தமை — அகத்தியர் தமிழ் நூற்பயிற்சியைப் புதுப்பித்தமை — வடதிசை உயர்ந்ததும் தென் திசை தாழ்த்ததும் — தமிழின் திருத்தம் — தமிழ்ச்சொல் வளம் — தமிழின் வளம்— தமிழ்த் தாய்மை— தமிழ்த் தூய்மை — தமிழின் முன்மை — தமிழில் திராவிட மொழிகளின் திசை வழக்குத் தன்மை — திராவிடம் என்னும் சொன் மூலம்.

திராவிடம் வடக்கு நோக்கித் திரிதல்: க௬௮ - க௯க

தமிழ் நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள்.

3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள் : க௯க - உ௩௩

நிலத்தின் தொன்மை — நிலத்து மொழியின் தொன்மை — நிலத்து, மக்கள் வாழ்க்கை முறை — நகர வாழ்க்கை நிலை — தொழிற்பெருக்கமும் குலப்பிரிவும்வழிபாடும் மதமும் — முல்லைத் தெய்வம் மாயோன்—குறிஞ்சித் தெய்வம் சேயோன்— மருதத் தெய்வம் வேந்தன் — நெய்தல் நிலத் தெய்வம் வாரணன் — பாலை நீலத்தெய்வம் கொற்றவை—சைவம் பற்றிய சில தமிழ்க்
குறியீட்டுப் பொருள்கள் — ஆனைந்து — திருநீறு — உருத்திராக்கம் — மதந்தழுவிய சில கருத்துக்கள் — வீடு — ஏழுலகம் — எழுபிறப்பு — அறு முறை வாழ்த்து — அறிவ (சித்த) மதம் — வடமொழிப் பழமை நூற்பொருள்கள் பல தென்னாட்டுச் செய்திகளேயாதல் — எண்டிசைத் தலைவர் — முண்டரின் முன்னாேர் நாகர் என்பதற்குச் சான்றுகள் — ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை — தமிழர் நீக்கிரோவர்க்கும் ஆரியர்க்கும் இடைப்பட்டோராதல்.

4. பண்டைத்தமிழர் மலையாள நாட்டில் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை : ௨௩௩ - ௨௩௭


5. பண்டைத் தமிழ் நூல்களிற் பிற நாட்டுப் பொருள்கள் கூறப்படாமை : ௨௩௭


III தமிழ்த் தோற்றம் : ௨௩௬ - ௨௬௯

கத்தொலிகள் — ஒலிப்பொலிகள் — ஒலிக் குறிப்புக்கள் — உணர்ச்சி வெளிப்பாட்டொலிகள் - வாய்ச் சைகையொலி — சொற்கள் தோன்றிய பிற வகைகள் — தமிழ்மொழி வளர்ச்சி — தமிழ் இலக்கியத் தோற்றம் — தமிழிலக்கணத் தோற்றம் — எழுத்து — சொற்கள் — உாிச்சொல் — பிறவுரை மறுப்பு — பிறர் மறுப்புக்கு மறுப்பு — கிளவி — பெயர்ச்சொல் — மூவிடப் பெயர் —இடைமைப் பெயர் — படர்க்கைப் பெயர் — வினாப்பெயர் — சுட்டுப் பெயர்கள் — காலப் பெயர் —இடப்பெயர் — சினைப் பெயர் — பண்புப் பெயர் — பண்புப் பெயரீறு — திசைப்பெயர் — எண்ணுப் பெயர் — குறுமைப் பெயர் — பருமைப் பெயர் — தொழிற்பெயர் — ஆகு பெயர் —பெயரிலக்கணம்.

வினைச்சொல் : ௨௮௬ - ௩௦௯

பண்டையிறந்தகால எதிர்கால வினைமுற்று வடிவங்கள் — எச்சவினை — பெயரெச்சம் — வினையெச்சம் — அடுக்கீற்று வினைமுற்றுக்கள் — தன்மை வினை — முன்னிலை வினை — வியங்கோள் வினை — எதிர்மறை வினை — ஏவல் — தொழிற்பெயர் — வினையாலணையும் பெயர்- குறிப்புவினை — முற்று — செயப்பாட்டு வினை — பிறவினை — குறைவினை — வழுவமைதி
வினை — ஒட்டு வினை — துணைவினை — இரட்டைக் கிளவிவினை — பெயரடி வினை.

இடைச்சொல் ௩௦௪ - ௩௦௭

அசைநிலைச் சொற்பொருள்

உரிச்சொல் : ௩௦௭ - ௩௧௯

பல்கலைக்கழக அகராதியின் பல்வகைக் குறைகள் — தமிழே திராவிடத்தாய்.

VI உலக முதன் மொழிக் கொள்கை : ௩௧௧ - ௩௨௧

(1) மாந்தன் தோன்றியது குமரி நாடாயிருக்கலாம் என்பது — (2) தமிழ் உலக முதற் பெரு மொழியாயிருக்கலாமென்பது — (3) தமிழொடு பிறமொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள் — (4) வட மொழி உலக முதன் மொழியாக முடியாமை.


முடிவு ௩௨௨

புறவுரை ௩௨௩

பிற்சேர்பு ௩௨௪ - ௩௨௳

பின்னிணைப்பு—I ௩௨௳ - ௩௩௧

பின்னிணைப்பு—II ௩௩௧ - ௩௯௳

பின்னிணைப்பு—III ௩௯௨ - ௩௩௪



குறி விளக்கம்

+ இது புணர்குறி

= இது சமக்குறி

இது வலப்புறத்திலுள்ளது மொழிபெயர்ப்பு, பொருள், திரிபு என்னும் மூன்றனுள் ஒன்று என்பதைக் குறிக்கும்

<இது வலப்புறத்திலுள்ளது மூலம் என்பதைக் குறிக்கும்

x இது எதிர்மறைக் குறி

இது மேற்கோட் குறியல்லாவிடத்து மேற்படிக்குறி

( ) இது சில இடங்களில் வழிமுறைத் திரிவைக் குறிக்கும்.

வடமொழியிலுள்ள ‘ri’ என்னும் உயிரெழுத்து, இப் புத்தகத்தில் ‘ru’ என்றெழுதப்பட்டிருக்கிறது.

இப் புத்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லியலகராதிகள் கீற்றும் (Skeat) சேம்பராரும் (Chambers) எழுதியவை. ஆங்காங்குத் தொல்காப்பிய நூற்பாவிற்குக் குறிக்கப்பட்டுள்ள எண், சை. சி. நூ. ப. க. அச்சிட்ட தொல்காப்பிய மூலத்தின்படியது.

குறுக்க விளக்கம்

அகத். - அகத்திணையியல் உ. வ. -உலக வழக்கு
இறை, இறையனார்-இறையனார் உவ. -உவமவியல்
அகப்பொருள் உரை உரி. -உரியியல்
இ. -இடைச்சொல் எ. கா. -எதிர்காலம்
இ. கா. -இறந்தகாலம் எச். -எச்சவியல்
இரு. -இருபிறப்பி (Hybrid) எ-டு. -எடுத்துக்காட்டு
எ. எழுத்து-எழுத்ததிகாரம் செ. -செய்யுளியல்
ஐங். -ஐங்குறுநூறு த. -தமிழ்
ஒ. நோ. -ஒப்புநோக்க திருப்பு, -திருப்புகழ்
கலித். -கலித்தொகை திருவாய். -திருவாய்மொழி
கள. -களவியல் தெ. -தெலுங்கு
கற். -கற்பியல் தொல். -தொல்காப்பியம்
கா. -காட்டு நற் -நற்றிணை
கி.பி. -கிறித்துவுக்குப் பின் நன் -நன்னூல்
கி. மு. -கிறித்துவுக்கு முன் நி.கா. -நிகழ் காலம்
குறள் -திருக்குறள் நூ. -நூற்பா
குறுந் -குறுந்தொகை நூ. வ. -நூல் வழக்கு
குற், குற்றி. -குற்றியலுகரப் ப. -பவானந்தம் பிள்ளை பதிப்பு
புணரியல் பக். -பக்கம்
சிலப். -சிலப்பதிகாரம் பு. -புணரியல்
பேரா. -பேராசிரியம் புள்ளி. -புள்ளி மயங்கியல்
பொருள். -பொருளதிகாரம் புறத். -புறத்திணையியல்
ம. -மலையாளம் புறம். -புறநானூறு
மணிமே. -மணிமேகலை பெ. -பெயர்ச்சொல்
மதுரைக். -மதுரைக்காஞ்சி பெ. எ. -பெயரெச்சம்
மனு. -மனுமிருதி Goth -Gothic
மொ. மொழி. -மொழிமரபு Gr. -Greek
வ. -வடசொல் Hind. -Hindustani
வி. -வினைச்சொல் Ice. -Icelandic
வி. எ. -வினையெச்சம் It. -Italian
வி. மு. -வினைமுற்று lit. Lit. -literally
வே. உ. -வேற்றுமை உருபு L, Lat. -Latin
adj. -adjective L.S.I. -Linguistic Survey of
Ar. -Arabic India
A. S. - Anglo-Saxon L.S.L. - Lectures on the Science
cog. - cognate of Language
conj. - conjunction M. E. - Middle English
Celt. - Celtic n. - noun
Dan. - Danish orlg. - originally
Dut - Dutch O. Fr. Old French
E. - English p. - page
Finn. - Finnish pp. - pages
Fr. - French Sans. - Sankrit
Gael. -Gaelic V. - verb
Ger. - German v. t. - verb transitive
சீவ, சீவக. - சீவகசிந்தாமணி உரை Vol. - volume



  1. *மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=ஒப்பியன்_மொழிநூல்&oldid=1711342" இலிருந்து மீள்விக்கப்பட்டது