ஒப்பியன் மொழிநூல்/பின்னிணைப்பு III

பின்னிணைப்பு III.

ஆசியத்திலுள்ள தமிழ்ச்சொற்களிற் சில.

சொற்கள் :—

கவ—L. capio, Ger. baben, A. S. habban, Dan, have, E. have, to hold or possess.

கவர்—L. cupio, O. Fr. covet, to desire.

சேர்—L. sero, to join, சேர்மானம்—L. sarmonis, E2 Sermon, lit an essay.

உக—Goth. hauhs, Ger. hoch, ice. har, A. S. heah, E. high.

உலகு—L. vulgus, the people, E. vulgar, used by the common people.

உறு—L. verus, true ஓ. நோ. உறுதி—உண்மை : Ger: wahr, A. S. voer, E. very adv in a great degree adj. true.

ஒழுங்கு—L. lougus, E. long. இலக்கு —L, locus, சோம்பு—L. sonaus, sleep. கரவு—Gr. cryptos.

சமட்டு—E, smite, to strike. A. S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி—சம்மட்டி. E. hammer, A. S. hamor, Ger. hammer, Ice hamarr, a tool for beating. E. smith, one who smites.

கூடு—E. gather, A, S. gederian, gaed, a company : to gather—together=கூட.

காண்—A. S. cnawan; Ice. kna, Russ. znate, L. nosco. gnosco, (Gr. gignoso, Sans. jna. (All from a base GNA, a secondary form of GAN or KAN, to know. ஓ நோ; காட்சி = அறிவு : vid (Sans), to know; vide (L.), {to see.)

முன்னொட்டுகள் :—

அல் (not) — அன்—Gr. an, A. S. un: அl-— (Sans): ஒ. நோ. நல்--ந, குள்-கு. கா : நக்கீரர், குக்கிராமம்.

இல் (not)—இன்—L. in. இல் (உள்)--இன்—I.-A; S. in, L. em, en, Gr. en E. in.

உம்—A. S. up. உம்பர்-Sans: upari, L. super, Gr. hyper Goth. ufar, E. over. ம-ப-வ. போலி.

கும் = குவி, கூடு. கும்ம (நி. கா. வி, எ.)—L. com, cum, Gr. sys, Sans, sam, E. com, con, together.

பின்னொட்டுகள் :—

குறுமைப்பெயர் : இட்டி —L: E. etee; கா : cigar-ette இல்-L. E. el, le. கா: citad-el: குழவு-L: E; cule. icle. கா : animal-cule, parti-cle,

தமிழ்ச்சொற்களாலான புணர்சொற்கள் ஆரிய மொழிகளில், விதப்பாய் மேலையாரிய மொழிகளில், மிகப் பலவுள.

கா: கும் compose, from கும் and போடு; concert, from -கும் and சேர்: transparent, from துருவ and பார்.

Transparent—L. trans, through, and pareo, to appear. துரு—துருவு—துருவ —A. S. thurh, Ger. durch, W. trw Sans, taras, L. trans, E. through—root tar.

இத்தகைய ஆரியத் தமிழ்த் தனிச் சொற்களும் கூட்டுச் சொற்களும் நூற்றுக்கணக்கின 3ஆம் மடலத்திற் காட்டப்படும்:

முற்றிற்று.