ஓடி வந்த பையன்/எச்சில் இலை

5

எச்சில் இலை

ம் ; உமைபாலன் பேயறை பட்டவனாகத் தான் வாய்ச்சொல் ஏதுமின்றி, வாய்ச் சொல்லுக்கு ஏது எதுவுமின்றி அப்படியே நிலைகலங்கி நின்று விட்டான் ! ...

உமைபாலன் தன் கடமையின் பேரில் அந்த எச்சில் இலைகளை எடுத்துத் துப்புரவு செய்ய வேண்டியிருக்க, அவனுக்குப் பதிலாக, அந்தப் பணக்காரப் பெரிய மனிதர் அந்த எச்சில் இலைகளை அவ்வளவு அவசரமாக எடுத்துப் போட்டுச் சுத்தம் செய்த நிகழ்வு அங்கே ஒரு பெரும் பரபரப்பையும் அதிசயத்தையும் விளைவித்தது.

இச் செய்தியைச் சரக்கு மாஸ்டரும் செர்வர் மணியும் சொல்லக் கேட்டு, வேகமாக வந்தார் பெரிய ஐயர். தற்செயலாக, கோபுவும் வந்துவிட்டான்.

அற்பம் என எண்ணப்படும் சிறிய சம்பவம், ஒருவனது வாழ்கையில் மகத்தான திருப்பத்தை உண்டாக்கக்கூடும். இதற்கு உதாரணமாக, எத்தனையோ பெரிய மனிதர்களின் வாழ்வு ஏடுகளிலே இடம் பெறவில்லையா ?

 இதை மனத்தில் கொண்டு, அச்சிறுவனையும் அப்பெரியவரையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. ‘சரிதான் ; இந்தச் சீமானுக்குப் பிள்ளை இருக்காது. துடியான களை சொட்டும் நம்ம உமைபாலன சுவி காரம் எடுத்துக்கப் போறார் போலிருக்கு!' என்ற முடிவுதான் அவன் நெஞ்சில் மேலோங்கியிருந்தது.

"தம்பி! ..."

"... ... ..." "கருணுகரா!.."

"... ... ..."

“மகனே! ... கருணுகரா !..."

உமைபாலன் சீற்றத்துடன் தலையை உயர்த்தினான். “ யார் உமது மகன்?” என்று ஆங்காரமாகக் கேட்டான்.

“நீ ! ... நீதான் என் மகன் ! ... " என்று. நெஞ்சு வெடிக்க விம்மினர் காரைக்கால் மனிதர் !

“நானாவது உம் மகனாவது ! ... உமக்குப் பைத்தியமா ஐயா ?" சிரித்தான் சிறுவன் ! ...

என்ன அதிசயம் இது ? ...

சுற்றி நின்றவர்கள் மூக்கில் விரலை வைத்தனர்; குழப்பம் அடைந்தனர்.

சிறுவர்கள் ஜெயராஜ், அப்துல்லா, காளி முதலியவர்கள் உமைபாலனேயே இமை வலிக்கப் பார்த்தார்கள். 'உங்க அப்பாகூட இப்படி ஒருநாள் வந்து உன்னை அழைச்சுக்கிட்டுப் பறந்திடுவார் ! நீ கொடுத்து வச்சவனப்பா!' என்று ஏக்கப் பெருமூச்சுடன் செப்ப, !" நீ போடா! ... என் கதையே தனியடா ! ... நான் ராஜா! டே, அப்துல்லா !... இப்ப நடக்கிற நாடகத்திலே கட்டாயம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கணும்டா!" என்று பேச்சுக்குப் பேச்சு, ஆளை அறிந்து ‘டா’ போட்டு அந்த வெற்றியிலேயே கர்வம் கொண்டு நின்றான் ஜெயராஜ்.

அப்போது, வாசலில் யாரோ சிலர் சாப்பாட்டு டிக்கட் கேட்பதறிந்து விரைந்து, மேஜை மீதிருந்த டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்தான். கொடுக் கப்பட்ட சில்லரைகளை வாங்கினான். அவன் யதேச்சையாகத் திரும்பிய பொழுது, ஏன் அவன் முகம் அப்படி வேர்த்துக் கொட்ட வேண்டும் ? ...

கத்தரி வெயிலுக்கென்று இப்படியொரு மகிமையா ?

ஜெயராஜ் ரொம்பவும் சுருக்காகவே திரும்பி விட்டான். நாடகத்தின் முழு விவரத்தையும் அறிய வேண்டாமா? வந்ததும், டிக்கட்டுகள் விற்ற பணத்தை முதலாளியிடம் சமர்ப்பித்தான், அவன் போய்த் திரும்புவதற்குள் எந்த ரகசியமும் இடம் பெற்றுவிடவில்லை யென்பதையும் தன் சேக்காளிகள் மூலம் புரிந்துகொண்டான்.

கைக்குட்டையில் முகத்தைப் புதைத்த வண்ணம் அப்படியே நின்றிருந்தார் காரைக்கால் ஆசாமி.

உமைபாலனே அங்கிருந்து நகர்ந்துவிட்டான், கிராப்பை ஒதுக்கியபடி !

இந்தப் புதிர்க் குழப்பத்துக்கு ஏற்ற நேரம் இதுவல்லவென்றும், இப்படியே இந்நிலை நீடித்தால், 'பிஸினஸ்' கெட்டுவிடுமென்றும் அறிந்துணர்ந்த முதலாளியும் அவர் பிள்ளையும்; இரவு கடை அடைக்கும் நேரத்துக்கு வரும்படியும் காரைக்கால் அன்பரிடம் சொல்லி யனுப்பினார்கள்.

உடம்பு சரியில்லையென்று அரை நாள் லீவு வாங்கிகொண்டு போனான் ஜெயராஜ்.

காலம் கரைந்தது.

இரவு மணி ஒன்பது.

விளக்குகள் பிரகாசமாக எரிந்தன.

உமைபாலனே அனுப்பிவிட்டு, கோபு கல்லாவில் அமர்ந்தான். மேஜை இழுப்பைத் திறந்து சில்லறைகளையும் ரூபாய்த் தாள்களையும் இனம் பகுத்து மேஜையின் மீது வைத்தான். அருகில் உட்கார்ந்திருந்த ‘கனபாடி’ பொடி மட்டையைப் பிரித்து மூக்கின் துவாரங்களிலே செலுத்திவிட்டு, குத்துக் கம்பியில் செருகப்பட்டிருந்த பில்களையும் சாப்பாட்டு டிக்கட்டுகளையும் எண்ணிக் கணக்கிட்டார்.

அப்போது, வாசல் பெட்டிக்கடையில் ஏதோ கசமுசவென்று பேச்சுக் கேட்டது. தம் கடையில் அலுவல் பார்க்கும் ஜெயராஜ் என்பவனும் பெரிய இடத்துப் பிள்ளை என்று அங்கு பேச்சு அடிபட்டது. “டே அம்பி! கேட்டியாடா சங்கதியை ! நம்ம ஹோட்டல் பேர் பேப்பரிலே வரப் போகுதுடா ! ” என்று குவி யுடன் பேசி, ஜெயராஜ் பற்றிக் காதில் விழுந்ததையும் கொட்டினார். மத்தியானம் நடந்த கூத்தின் போது, டிக்கட் விற் ற பணத்தை ஜெயராஜ் தம்மிடம் கொடுத்ததையும் அவர் நினைத்தார்.

ஆளுல்,கோபு ஏனோ உதடுகளைப் பிதுக்கினன். முதற் பந்தி முடிந்ததும், எச்சில் இலைகளை எடுக்க மறுத்த ஜெயராஜைப்பற்றி யாரோ சொன்ன விவரத்தை அப்பாவிடம் எடுத்துக் காட்டினான். “ ம் ... விதின்னு ஒண்னு இருக்கத்தாண்டா இருக்கு !...நம்ம வேலையைக் கவனிப்போம்டா !” என்றார், பெரியவர் சின்னக் குரலிலே!

டிக்கட்டுகளின் வரிசை எண்களேச் சரிபார்த்து வந்த பெரியவர் சடக்கென்று திகைப்புற்றார். இடை யில் விற்கப்பட்ட டிக்கட்டுகளிலே இரண்டின் எண்கள் அடுத்தடுத்து விடுபட்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு ஜெயராஜின் ஞாபகம் வந்தது. ‘நாலு டிக்கட்டுக்கு மாத்திரமே பணம் தந்தான். இரண்டைச் சாப்பிட்டுவிட்டான் பயல் !’ என்று சிந்தித்தபடி, அந்தப் பையனுக்கு ஆள் அனுப்பினர். லீவு எடுத்துச் சென்றவன் இன்னமும் மீளவில்லை என்று தாக்கல் சொல்லப்பட்டது.

அப்போது, ஜெயராஜைத் தேடி, அவனது கழுத்தில் தொங்கிய சிலுவைச் சின்னத்தை அடையாளம் கூறி, யாரோ ஒருவர் வந்தார். தான் யாரென்று சொல்லாமல், அவர் வேகமாகத் திரும்பி விட்டார், சைக்கிளிலே!

ஒன்பதரை மணி.

காரைக்கால் செங்காளியப்பன் கையில் ஒரு துணி முடிச்சுடன் உள்ளே பிரவேசம் செய்தார். பெரிய ‘செவர்லே’ கார் வாசலில் நின்றது. வந்தவர் குந்தினர். பட்டு ஜிப்பா பளபளத்தது.

“பையனை எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்னா!... ஒன்றும் பலிக்கல்லே! ஒம்மைத் தெரியவே தெரியாதுன்னு சாதிக்கறான்!” என்று விளக்கினர் பெரியவர்.

“அப்படியா?...” அதற்கு மேல் காரைக்கால் நபர் பேச முடியவில்லை. விழிகள் சிவப்பு ஏறின. பிறகு பேசலானர்: “என்னேட மானத்தைப் பறிக்கிற அளவுக்கு அவன் - என் மகன் பொய் பேசறான் ஸார்!... பெற்ற தகப்பன் ஐயா நான்!... எனக்கு இவன் முதல் தாரத்துப் பையன். இவனோட தாய் காலராவிலே இறந்ததாலே, நான் இரண்டாந்தாரம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் தான். ஒரு நாள் இவனோட சின்னம்மா என்னமோ சொல்ல, இவன் அவளை எதிர்த்துப் பேச , புத்தி தப்பியிருந்த நான் இவனை அடிக்கப்போக... ஐயையோ, இப்ப நான் - நிலைகுலைஞ்சு, என் மகனே எனக்கு இல்லைன்ன ஆயிடுமோ என்கிற துர்ப்பாக்கிய நிலைமையிலே நிற்கிறேனுங்க!... பகவான் என்னை ஏன் தான் இப்படிச் சோதிக்கிறானோ?... இவனுக்குள்ள சொத்து நாலு தலைமுறைக்குக் காணும்; இவன் வந்து இங்கே பெயரை மாற்றிக்கிட்டு, தன்னையும் மாற்றிக்கிட்டு அடிமை வேலை செய்யணுமா?...சரி!... ரொம்பக் கெட்டிக்காரப்பிள்ளை, என் பேரைச் சொல்ல வைப்பான்னு கனவு கண்டேன். ஆனா இப்படி என்னை ஏமாத்துகிறானே!.... தெய்வமே!... இதோ பாருங்க, இதுங்களை! -”

மூச்சு இரைத்தது. அவர் கொணர்ந்த முடிச்சை அவிழ்த்தார்.

"எல்லாம் தங்க நகைகள்! எல்லாம் இவனுடையது!.... இது தேதி வச்ச கடிகாரம்!"

ஒவ்வொன்றாகக் காட்டினார். அவன் காணாமல் போனவுடன் அவன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்த தாளையும் காண்பித்தார்.

"தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நீங்க ஊருக்குப் போங்க!... உங்க பையன் தான் இவன். எனக்குப் புரியுது. வரட்டும்!... பாசத்துக்கு மகிமை ஜாஸ்தி, நான் உங்க மகனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கறேன். கவலைப்படாமல் நீங்க போங்க ஊருக்கு.... அவன் மனம் சட்டென் மாறி டும். ஒம்மோட கண்ணீரைப் பகவான் சீக்கிரமே துடைச்சுடுவார். அவரோட விளையாட்டு வேலையும் அதுவேதானாக்கும்!

கனபாடி கங்காதரம் பாசத்தின் அற்புதம் அறிந்தவராக, உணர்ந்து, மனம் விட்டுப் பேசினார்.

காரைக்கால் நபர் விடைபெறும் பொழுது, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ஐயரிடம் நீட்டினார். "என் உயிர் இங்கேயே தானுங்க இருக்கும் ......." இதை வச்சுக்கங்க!...

ஹோட்டல் உரிமையாளர் ஏற்க ,மறுத்துவிட்டார். “ஒம் பையன் இனி எம் பையனாட்டம்!... பணத்தை நீங்களே வச்சுக்கங்க.... பத்திரம்!... நிம்மதியாய்ப் போயிட்டு வாங்கோ !....” என்று வழியனுப்பி வைத்தார்.

அன்றிரவு எல்லோரும் உறங்கிவிட்டார்கள்.

ஆனால் சிறுவன் உமைபாலன் மட்டும் சிலை போல் உட்கார்ந்திருந்தான். சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி, நேருஜி போன்ற மனித தெய்வங்களின் முன்னே மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தான்!

தரையிலே விரிந்து கிடந்த பத்திரிகை விளம்பரத்தில் அச்சிடப்பட்டிருந்த சிறுவன் கருணாகரனின் கிறுக்கப்பட்ட முகத்திலே, உமைபாலனின் கண்ணீர்த் துளிகள் சிதறிச் சிந்தின!....