ஓடி வந்த பையன்/‘காணவில்லை’

4

காணவில்லை

அந்த ஹோட்டலிலே மிகவும் பரபரப்பான பொழுதல்லவா அது! -

கல்லாவில் 'கனபாடி' கங்காதரம்-அதாவது, கோபுவின் தகப்பனார் வீற்றிருந்தார். உச்சியில் சுற்றிய காற்று அவருக்குப் போதுமா? -போதாது. ஆகவே, கையிலும் ஒரு விசிறி மட்டையை வைத்திருந்தார். பில்களைப் பார்த்துப் பணம் வாங்கிப் போட்ட நேரம் போக, ஒழிந்த வேளையில் அவரது கை அவ்விசிறியை நாடும்; முதுகு அரித்தாலும் விசிறி அவருக்குக் கை கொடுப்பதும் உண்டு.

‘வைரக் கடுக்கன் அறுபது காசு!’ என்ற குரல் உள்ளேயிருந்து கேட்டது.

குரல் ஈந்தவன் மாஸ்டர் மணி.

ரொம்பத் துடி! -

இல்லையென்றால் புளித்துப்போன ஒரு பழைய ஹாஸ்யத்தை இத்தனை தைரியமாகச் சொல்லி ஒப்பிக்கக்கூடுமா?

ஹோட்டல் அதிபர் வைரக் கடுக்கனை எடை போட்டாரோ, அதைப் போட்டிருந்த நபரை எடை போட்டாரோ ? -அவர் கொடுத்த காசுகளை எண்ணிப் பெட்டியில் போட்டுக்கொண்டார். பிறகு, காற்றில் புறம் மாறிவிட்ட அந்த அட்டையை வாகாய்த் திருப்பிவிட்டார்.

அதில் :

"இன்று முதல் சாப்பாடு ஆரம்பம்!” என்ற அறிவிப்பு இருந்தது. அளவுச் சாப்பாடு, எடுப்புச் சாப்பாடு, முழுச் சாப்பாடு, டிக்கட் சாப்பாடு என்ற பாகுபாடுகளின் விலை விவரங்களும் இருந்தன.

அது தருணம், முதலாளி கூப்பிட்டார்: “டேய் பாலா!"

உமைபாலன், பாலரவாக வடிவம் பெற்று ஓடி வந்தான். கையில் துடைக்கும் நீலத் துணி காட்சியளித்தது. பணிவுடன் நின்றான்.

“எங்கேடா ஜெயராஜ்?"

அவன் உள்ளே சென்றான். "பாலா, நம்ம ராஜ் சர்பத் சாப்பிடக் கொல்லைப் பக்கமாய்ப் போயிருக்கான். நீ கண்டுக்காதே. பெரிய பணக் காரப்பிள்ளை அவன். அவன் தயவு நமக்கு எப்பவும் வேணும். அவன் இங்கே இனி இருக்கப் போறது நாள் கணக்குத்தாண்டா! ... உன்னையும் என்னையும் கூட அவன் பட்டணத்துக்கு அழைச்சுக் கிட்டுப்போய்த் தன்னோட பங்களாவிலே வச்சுக்கிடப்போறதாச் சொல்லியிருக்கானே!...” என்றான் அப்துல்லா.

இவர்களின் சம்பாஷணை முடிவதற்கும் ஜெயராஜ் அங்கு வருவதற்கும் கனகச்சிதமாக இருந்தது. "முதலாளி அய்யர் கூப்பிடுகிறார் உன்னை!” என்றான் உமைபாலன், ஜெயராஜிடம்.

அவனோ வெகு அலட்சிய பாவத்தோடு, "ம். சரிடா, நீ போ!" என்றான்.

உடனே இதைக் கேட்டதும் உமைபாலனுக்குக் . கோபம் வந்துவிட்டது. “டே பட்டம் போடறியா?... ரொம்பத் திமிர்தான்! உன் பணக்கொழுப்பை எங்கிட்டவா காட்டறே?..." என்று முஷ்டியை ஓங்கினான்.

ஜெயராஜ் அதற்குள் அசந்துவிட்டான். “வீட்டிலே கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பழக்கமாப் போச்சப்பா! கோபிக்காதே!” என்று பவ்யமாகக் கெஞ்சினான்.

உமைபாலன் கோபம் ஆறினான்.

இருவரும் வெளிப்புறம் வந்து நின்றர்கள்.

“சாப்பாட்டுக்கு நேரமாயிடுத்து... உள்ளே டேபிள் - நாற்காலியையெல்லாம் செட்டிலா ப் போட்டாச்சாடா? ...ஆத்திலேருந்து வந்ததுகளையும் உள்ளவே போட்டுடணும்டா!"என்றார் முதலாளி.

“ஆத்திலேருந்து மேஜை - நாற்காலி கூடவா வரும்?" என்று ஜெயராஜ் “ஜோக் அடிக்க, மற்றவன் ரசித்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பொருளுடன் பார்த்தனர். பேச்சுக்குப் பேச்சு 'டா’ போட்டுப் பேசினாரே, அதற்காகவா ?

காரியம் என்றால் உமைபாலனுக்கு எப்போதுமே கண். அவன் உள்ளே போய்த் திரும்பி வந்து 'சரியாக எல்லாம் போடப்பட்டிருப்பதாகச் சொன்னான்.

“நானும் பார்க்கிறேன், அந்தப் பயல் ஜெயராஜ் என்னவோ பெரிய குபேரர் வீட்டுப் பிள்ளையாண்டான் மாதிரிதான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம திரியறான்!” என்றார் பெரியவர்.

உமைபாலன் முன்வந்து, தன் நண்பன் ஜெயராஜின் உண்மைக் கதையைச் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தான்.

ஆனால், அதற்குள்ளாக ஏதோ கார் ஒன்று வாசலில் வந்த நிற்பதைக் கண்டதும், ஏனே உமைபாலன் சலனம் அடைந்தவனாக வாய் மூடி மெளனியானான்.

ஐயரோ அவரையும் அறியாமல் மேஜையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு, 'ம்... போங்களேண்டா பசங்களா! ... யாரோ பெரியவா வர்ரா!...போய் டேபிளைச் சுத்தம் பண்ணுங்களேண்டா!...” என்றார். பதட்டம் குரலில் பேசியது.

சிறார்கள் இருவரும் உள்ளே விசையுடன் விரைந்தனர்.

வெளியே கார் நின்றதும், அதிலிருந்து பட்டுச் சொக்காய் போட்ட ஆசாமி ஒருவர் இறங்கி வந்து, கல்லாவை அணுகினார். தம் பையன் ஒருவன் காணாமல் போய்விட்டதாயும் பேப்பரிலே விளம்பரம் செய்தும் பயனில்லை என்றும், பையன் பெயர் கருணாகரன் என்றும், தமக்குக் காரைக்கால் சொந்த ஊர் என்றும், பெரிய ஜவுளி வியாபாரி எனவும் விவரித்தார் அவர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பின், “உங்க நேம்?" என்று கேட்டார் ஹோட்டல்காரர்.

“செங்காளியப்பன்!” என்று சொல்லி, சாண் அகல ஜரிகைக் கரையைத் தரையில் படாமல் கொய்து ஒதுக்கினர். அப்படிப்பட்ட பையன் வந்தால் தெரிவிப்பதாகக் கூறி, காரைக்கால் புள்ளியின் முகவரியையும் கேட்டார். அதற்கு, அவர் தமது விலாசம் எழுதி பதினேந்து பைசா தபால் தலை ஒட்டப்பட்ட வெள்ளைக்கூடு ஒன்றையும் கொடுத்தார். “இருங்கோ... ஒரு கப் டிக்ரி காப்பி சாப்பிட்டுப் போங்கோ... தஞ்சாவூர் ஸ்பெஷல் இது!... உங்க ஊரிலே காப்பி நல்லதாக் கிடைக்காதில்லே!”.... என்று கூறி, உமைபாலன் - ஜெயராஜ் இருவரது பெயர்களையும் அழைத்தார்.

இருவருமே வரவில்லை.

மேஜையைச் சுத்தம் பண்ண அப்துல்லாதான் வந்தான்.

“காப்பி எனக்கு ஒத்துக்காதுங்க!” என்று தீர்ப்பளித்தார் காரைக்கால் செங்காளியப்பன்.

'போச்சு, இருபத்தஞ்சு காசு என்ற ஏமாற்றத்தில், வந்தவரை வழியனுப்பக்கூட ஒப்பாமல், வியாபாரத்தில் கவனம் செலுத்தலானார் ஐயர்.

சாப்பாட்டு டிக்கெட்டுகள் கேட்டு, ஆட்கள் வந்தனர்.

ஐயர் தம் உடம்பை வெகு சிரமத்துடன் சுமந்துகொண்டு நடந்து உள்ளே சென்றார். “அம்பி கோபுவுக்கு உடம்பு நன்னா இல்லாதாலே இத்தனை கஷ்டம். ... ஈஸ்வரப் பிரபோ!" என்று வாய்விட்டு அலுத்துக்கொள்ள வேண்டியவர் ஆனார்.

டிக்கட்டுகள் வியாபாரம் ஆயின.

உள்ளே முதற்பந்தி ஆரம்பமாயிற்று. கல்லாப் பெட்டி மூடிக்கொண்டது.

தலைக்கு மேலே தொங்கிய “இங்குள்ள பலகாரங்கள் அசல் நெய்யில் செய்தவையல்ல !" என்ற எச்சரிக்கை பலகையினை இடது கையால் லேசாகத் துடைத்தார். பிறகு வலம் வந்தார்.

கீழ்ப்பகுதியில் உமைபாலன் டபரா - தம்ளர் முதலியவைகளைச் சுத்தம் செய்து கழுவிக்கொண்டிருந்தான். காலடியில் ஒட்டி உறவாடிய சூட்டைச் சட்டை செய்தால் முடியுமா? சட்டையை உதறி வேர்வையைத் துடைத்தபடி கைவேலையில் முனைந்தான். மகாத்மா காந்தி வீட்டுப் பாத்திரங்களைக் கழுவிய நிகழ்ச்சியையும் அவன் அப்போது எண்ணிப் பார்த்தான்.

“இங்கே எச்சில் துப்பு’’ என்ற பலகை இருந்த இடத்தை நெருங்கினார். எச்சில் துப்பினார். அப்புறம், தூங்கி வழிந்த ஜெயராஜை முதுகில் தட்டி, சாக்குக் கட்டி வாங்கி வரச் சொல்லி, 'துப்பு' என்கிற இடத்தில் ‘ங்கள்’ - என்று சேர்த்துவிட்டு நகர்ந்தார்.

கல்லாச் சாவியை எடுத்துத் திறந்தார்.

அவ்வேளையில்:

“சாமி! தண்டனுங்க! ... எம் பையன் காத்தான் ... நல்ல செகப்புங்க ... இங்காலே வந்தானுங்களா?” என்று பரிதாபமாகக் கேட்டான். அவனுக்கு அறந்தாங்கிப் பகுதியாம்! பெயர்: சாம்பான் !

கடைக்காரருக்குப்பைசா லாபம் வருகிறது என்றால்கூட, வாய்ச்சோம்பல் படமாடடார். ஆனால், வந்த ஆள் வாசலிலேயே நின்றதைக் கண்டதும் ஐயருக்கு விஷயம் விளங்கிவிட்டது. உடனே முகம் கோணியது. திரும்பியபடி, “யாரும் அப்படி இங்கே இல்லேப்பா ... போ...ஜல்தி !" என்று பதட்டத்துடன் மொழிந்தார். ரேடியோவை ட்யூன் பண்ணினார்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம் !"

என்று பாடியது ரேடியோ.

அலுப்புக்கொண்டு தலையை வடபுறம் திருப்பினார்.

அங்கே, தேசத்தலைவர்கள் விஷமப் புன்னகையை வேதனையுடன் சிந்தியபடி காட்சி தந்தார்கள்.

இப்போது அதிபருக்கு மனத்தை என்னவோ செய்தது. திரும்பிப் பார்த்தார். வந்த ஏழை இன்னமும் தயங்கி நின்றான். ஒரு பொட்டலம் பக்கோடாவை எடுத்து அவன் கை தொட்டுக் கொடுத்து, உள்ளே கையைப் பிடித்து அழைத்து வந்து ஸ்டுலில் குந்தச் செய்து காப்பியும் கொடுத்து அனுப்பினார். காணாமற் போன அந்த ஏழையின் குமாரனின் விவரங்களையும் முன்போலவே வாங்கிக் கொண்டு அனுப்பினார்.

அப்போது ஐயர் நிம்மதியாகப் பெருமூச்சு விடலானார்.

முதற் பந்தி முடிந்தது.

ஐயர் எட்டிப் பார்த்தார்.

எச்சில் இலைகள் அப்படி அப்படியே இருந்தன. டேய் பசங்களா !” என்றார்.

ஜெயராஜ் மட்டுமே அய்யரின் பார்வையில் தென்பட்டான். அடுத்து, உமைபாலனும் ஓடி வந் தான். -

“ இலைகளை எ டு ங் கடா!’ என்று பணித் தார் அவர். -

உமைபாலன், ஜெய’ ராஜை நோக்கினன்.

ஜெயராஜோ, “எவண் ; டா- எச்சல் இ லே ைய | எடுப்பா ன் ! ... சே!” என்றான் கம்பீரத் தொனி யுடன்.சே.கேவலம்’ ;

ஆல்ை உமைபாலன் அங்கிருந்து நகர்ந்தான். மேல் வரிசையிலிருந்த முதல் எச்சில் இலையை எடுத்துக்கொண்டிருந்தான். திருடறது கேவலம்; பொய்பேசறது கேவலம்! இது கடமை ! » . . . . . . . அப்போது, “அட கடவுளே!’ என்று விம்மிய படி அங்கே தோன்றிய காரைக்கால் செங்காளியப் பன், அந்த எச்சில் இலையைப் பிடுங்கிமடித்து அதை எச்சில் இலத்தொட்டியில் போட்டுவிட்டு, அந்த மேல் வரிசை இலைகளையும் எடுத்துச் சுத்தம் செய்ய லானுர் ! - உமைபாலனப் பேய் அறைந்துவிட்டதா,என்ன?