கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/காணிக்கை
கடந்த கால் நூற்றாண்டுக்குமேல்
மலேசிய இந்தியர் காங்கிரசின்
தேசியத் தலைவராகவும் மலேசிய
அரசு அமைச்சராகவும் அரும்
பணியாற்றி வருபவர் சேவைச் செம்மல்
மாண்புமிகு டத்தோஸ்ரீ. ச. சாமிவேலு அவர்கள்
மலேசியா வாழ் இந்தியத்
தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு
எல்லா வகையிலும் அளப்பரிய
தொண்டாற்றி வருவதோடு,
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின்
காவலராகவும் விளங்கி வருபவர்.
தமிழர் நலன், தமிழ்மொழி,
கலை, இலக்கிய பண்பாட்டு
வளர்ச்சிக்கும் செழுமைக்கும்
எல்லா வகையிலும் உதவி, ஊக்குவித்து வரும்
அன்னாரின் அரும்பணிக்கு
இந்நூலை
காணிக்கையாக்குகிறேன்.
மணவை முஸ்தபா
நூலாசிரியர்