கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/H


H

H.324:ஹெச்.324:பாட்ஸ் இணக்கி(POTS modem) வழியாக ஒளிக்காட்சித் தகவல் மற்றும் குரல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்புவதற்கான, பன்னாட்டுத் தொலைதொடர்புச் சங்கத்தின் தரவரையறைகள்.

hack1:ஏனோதானோ, சிரத்தையற்ற:அரைகுறை:1.நேர்த்தியான தீர்வு காணப் பொறுமையின்றி கணினி நிரலிலுள்ள கட்டளைகளை அவசரகோலமாய் மாற்றியமைத்தல். 2.அரைகுறை வேலை.

hack2:அரைகுறை: 1.படைப்பாக்கக் கூர்மதியுடன் ஒரு சிக்கலை அல்லது ஒரு திட்டப்பணியை அணுகுதல்.2.ஓர் இயக்க முறைமை அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் கட்டளையைத் திருத்தி,அதன் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைத்தல்.

hago:ஹேகோ:நல்லதைப் பெறுக என்று பொருள்படும் Have A Good One என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இணையத்தில் மின்னஞ்சலின் இறுதியிலோ,அரட்டையின் முடிவிலோ பயன்படுத்தப்படும் சொல்.

hairline:மயிரிழை;ஓர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு.மயிரிழையின் அளவீடு,பயன்படுத்தப்படும் மென்பொருள்,வன்பொருள் அல்லது தொழில் நுட்பத்தைச் சார்ந்தது.அமெரிக்க நாட்டின் அஞ்சல்துறை மயிரிழை என்பதை 0.5பாயின்ட் (ஏறத்தாழ 0.007 அங்குலம்) என வரையறுத்துள்ளது.ஆனால் கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் ஃபவுன்டேஷன் (GATF) மயிரிழை என்பது 0.003 அங்குலம் என வரையறுத்துள்ளது.

half adder,binary:இரும அரைக் கூட்டி.

half duplex transmission:அரை இருதிசை அலைபரப்பு:ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டும் நடைபெறும் இருவழி மின்னணுத் தகவல் தொடர்பு.

half height drive:அரை உயர இயக்ககம்: இயக்ககங்களின் தலைமுறையைக் குறிக்கும் சொல்.முந்தைய தலைமுறை சார்ந்த இயக்ககத்தின் உயரத்தில் பாதி உயரம் கொண்ட இயக்ககத்தைக் குறிக்கும் சொல்தொடர்.

half router:session;அரைத்திசைவி:ஓர் இணக்கியைப் பயன்படுத்தி,ஒரு குறும்பரப்புப் பிணையத்தை தகவல் தொடர்புத் தடத்தில் (இணையத்தில் இணைப்பது போன்று) இணைக்கும் ஒரு சாதனம்.

half subtractor:அரைக் கழிப்பி.

halftone:நுண்பதிவுப் படம்:ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப்படத்தை சமஇடைவெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக்கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப்படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் சாயை யில் காட்டுவது.உருவப்படத்தில் சற்றே இருள் சாயலுள்ள பகுதியிருப்பின்,நுண்பதிவுப் படத்தில் அமையும் புள்ளி பெரிதாக இருக்கும்.மரபு வழியிலான பதிப்புத்துறையில்,உருவங்களை ஒர் இடைத்திரையின் வழியாக ஒளிப்படம் எடுத்து இத்தகைய நுண்பதிவுப் படங்களை உருவாக்குவர். கணினிப் பதிப்புத் துறையில் நுண்பதிவுப் படப்புள்ளி என்பது ஒளியச்சுப் பொறி அல்லது இலக்கமுறை உருச்செதுக்கி(Image setter)யால் அச்சிடப்பட்ட புள்ளிகளின் தொகுப்பாக இருக்கும். இரண்டு முறையிலும் நுண்பதிவுப் படப்புள்ளிகளின் எண்ணிக்கை ஓர் அங்குலத்தில் இத்தனை வரிகள் என அளவிடப்படுகிறது.அதிகத் தெளிவுள்ள அச்சுப் பொறியெனில் அதிகப் புள்ளிகள் இடம்பெற்று படத்தின் தரம் மிகும்.

halfword:அரைச்சொல்:கணினி கையாளும் சொல்லின் பிட்(துண்மி)எண்ணிக்கையில் பாதி, ஒரு சொல் 32 துண்மிகள்(பிட்) எனில் அரைச்சொல் என்பது 16துண்மி(பிட்)களை அல்லது இரண்டு பைட்டுகளைக் கொண்டிருக்கும்.

hat:நிறுத்துகை.

halt instruction:நிறுத்துகை ஆணை.

hand device:கைச் சாதனம்.

handheld computer:கையகக் கணினி: கையடக்கக் கணினி.

hard configuration:வன் தகவமைப்பு.

hard contact printing:வன் தொடர்பு அச்சு.

hard disk backup programme:நிலைவட்டுக் காப்பு நிரல்.

hard disk type:நிலைவட்டு வகை:ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள்.நிலைவட்டிலுள்ள எழுது/படிப்பு முனைகளின் எண்ணிக்கை,உருளைகளின் (Cylinders)எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன.நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச்சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும் போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும்.சீமாஸ் அமைப்புநிலை நிரலில் அவற்றைத் தரவேண்டியிருக்கும்.

hard page break:வன் பக்க முறிப்பு.

hard sectored disk:வட்டப்பிரிவு துளைவட்டு:வட்டிலுள்ள ஒவ்வொரு வட்டப் பிரிவின் தொடக்கத்தையும்,உணர்விகள் (sensors) அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, துளையிடப்பட்டுள்ள நெகிழ்வட்டு.

hardware abstraction layer:வன்பொருள் கருத்தியல் அடுக்கு:விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமைகளில்,சில்லு மொழிக்(Assembly Language)கட்டளைகளை பிரித்துத்தரும் அடுக்கு.வன்பொருள் கருத்தியல் அடுக்கு,பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது.சாதனம் சாரா(device independent)பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ்வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

hardware cache:வன்பொருள் இடைமாற்றகம். hardware check:வன்பொருள் சரிபார்ப்பு: கணினியின் உள்செயல்பாட்டில் ஏற்படும் பிழை அல்லது சிக்கலைக் கண்டறிய கணினி வன்பொருள் தானாகவே மேற்கொள்ளும் சரிபார்ப்பு(பரிசோதனை)நடவடிக்கை.

hardware conflict:வன்பொருள் முரண்பாடு.

hardware dependent:வன்பொருள் சார்பி; வன்பொருள் சார்ந்த ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள்,சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள்.எடுத்துக்காட்டாக,சில்லுமொழி (Assembly Language) ஒரு வன்பொருள் சார்பியாகும்.பொறிமொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக்கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக் கூடியதாகும்.

hardware dump,automatic:தானியங்கு வன்பொருள் திணிப்பு:தானியங்கு வன்பொருள் கொட்டல்.

hardware flow control:வன்பொருள் பாய்வுக் கட்டுப்பாடு.

hardware profile;வன்பொருள் குறிப்புரை: ஒரு கணினிக் கருவி பற்றிய வரையறைகள் மற்றும் பண்பியல்புகள் பற்றிய ஒரு தகவல் தொகுப்பு.புறச்சாதனங்களைக் கணினியுடன் இணைத்துச் செயல்பட வைக்க,இந்தத் தகவல் குறிப்புரையின் அடிப்படையிலேயே கணினியில் வரையறுப்புகள் செய்து தயார்ப்படுத்த வேண்டும்.

hardware reset:வன்பொருள் மீட்டெமை.

hardware tree:வன்பொருள் மரவுரு: விண்டோஸ் 95 இயக்கமுறையில்,கணினி அமைப்பின் வன்பொருள் சாதனங்களின் வரையறைகள்,தேவைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு தரவுக் கட்டமைவு(data structure). ஒரு மரத்தில் வேரில் தொடங்கி,கிளை பிரிவது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு கணுவும் (nodes) இயங்கும் ஒரு சாதனத்தைச் சுட்டுகிறது.இந்த வன்பொருள் மரவுரு அமைப்பு இயங்குநிலையிலேயே வடிவமைக்கப்படுகிறது.ஒவ்வொரு முறை விண்டோஸ் 95 இயக்கப்படும்போதும் இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது.இந்த மரவுருப்பட்டியலே விண்டோஸ் 95 முறைமையின் இணைத்து-இயக்கு(plug and play) திறனை இயல்விக்கிறது.

hardware windowing:வன்பொருள் சாளரமாக்கும்.

Harvard architecture:ஹார்வார்டு கட்டுமானம்:நுண்செயலிக் கட்டுமானத்தில் ஒரு வகை.நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணரவும்,தகவலை எழுத/படிக்கவும் தனித்தனிப் பாட்டைகளைக் கொண்டிருக்கும். ஒரேநேரத்தில் நினைவகத்திலிருந்து ஆணையைக் கொணரவும்,தகவலை எழுத/படிக்கவும் முடியும் என்பதால்,செயலியின் செய்திறன்வீதம் அதிகரிக்கிறது.இக்கட்டுமானமுறை நினைவக வடிவமைப்பை உச்சதிறன் உடையதாக்கவும் வழி வகுக்கிறது.எப்படியெனில்,ஆணைகள் எப்போதும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாய்க் கொணரப்படுகின்றன;ஆனால் தகவலைப் படிப்பதோ எழுதுவதோ குறிப்பின்றி (Randomly) நடைபெறுகிறது.

hash search:புலத்தேடல்;அடையாள வழி தேடல் :ஒரு தேடல் படிமுறை.ஒரு பட்டியலிலுள்ள ஓர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை.இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முறை மிகவும் திறன்மிக்கதாகக் கருதப்படுகிறது.

hash totals:புல எண்ணிக்கைகள்.

hospital information system:மருத்துவமனை தகவல் முறைமை.

HDLC:ஹெச்டிஎல்சி:உயர்நிலை தரவுத் தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் High Level Data Link Control என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஐஎஸ்ஓ ஏற்றுக்கொண்டுள்ள தகவல் பரிமாற்ற நெறிமுறை.துண்மியை(bit)அடிப்படையாகக் கொண்ட ஒத்தியக்க நெறிமுறை.ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ-இன் இரண்டாவது அடுக்கான தரவுத் தொடுப்பு அடுக்கில் (Data Link Layer)பயன்படுத்தப்படுகிறது.சட்டங்கள் (frames) எனப்படும் கூறுகளாக செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.கூறுகள் வேறுபட்ட அளவிலான தகவலைக் கொண்டிருக்க முடியும். ஆனால்,அவை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.

HDTV:ஹெச்டிடீவி:1.மேம்பட்ட வரையறைத் தொலைக்காட்சி என்று பொருள்படும் High Definition Television என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.தொலைக்காட்சி சமிக்கைகளை அனுப்புகை/பெறுகையில் ஒரு வழிமுறை.இம்முறையில் வழக்கமான தொலைக் காட்சித் தொழில்நுட்பத்தில் இருப்பதைக் காட்டிலும் தெளிவும் துல்லியமும் மிகுந்த படங்களைப் பெறமுடியும்.

head access aperture:முனையணுகு துளை.

head,combined:இணைந்த முனை:

head,erase:அழிமுனை;அழிக்கும் முனை.

header and footer:தலைப்பு/முடிப்பு.

header record:தலைப்புப் பதிவேடு.

head,read:படிப்பு முனை.

head,read/write:எழுது/படிப்பு முனை.

head,write:எழுத்து முனை.

head per track disk drive:தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்: தடத்துக்கொரு முனை வட்டு இயக்ககம் வட்டிலிலுள்ள ஒவ்வொரு தடத்துக்கும் தனியான படிப்பு/எழுது முனைகொண்ட ஒரு வட்டு இயக்ககம்.தகவலைப் படிக்கவும் எழுதவும் ஒரு குறிப்பிட்ட தடத்தை அணுக,வட்டு முனை நகரவேண்டிய தேவையில்லாத காரணத்தால், இத்தகைய வட்டுகளில் தேடு நேரம் (seek time) மிகவும் குறைவு.ஆனால்,படிப்பு/ எழுது முனைகளுக்கு செலவு அதிகம் என்பதால், இதுபோன்ற வட்டு இயக்ககங்கள் அதிகமாகப் புழக்கத்திலில்லை.

heap sort:குவியல் வரிசையாக்கம்.

heavy client:பருத்த கிளையன்.

height:உயரம். helical wave guide:சுருள அலைவழிப்படுத்தி:

help applet:உதவி குறுநிரல்.'

helper application:உதவிப் பயன்பாடுகள்.

'HGC plus:ஹெச்ஜிசி பிளஸ்:ஹெர்க்குலிஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனம் 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய 36 ஒளிக்காட்சித் தகவி அட்டை.இதில்,256 எழுத்துகளை 12 எழுத்துருக்களில் இருத்தி வைக்கக்கூடுதலான இடைநிலை நினைவகம் கொண்டது.வரைகலை வடிவிலான எழுத்துருக்களை பெற முடியும்.

HHOK:ஹெச்ஹெச்ஒகே:ஹா,ஹா, சும்மா விளையாட்டுக்கு என்று பொருள்படும் Ha,Ha Only Kidding என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மின்னஞ்சல் மற்றும் நிகழ்நிலை (online)தகவல் தொடர்புகளில் நகைச்சுவையை அல்லது குறும்புத்தனத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் சொல்.

hide:மறை:ஒரு பயன்பாட்டு மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் இயக்கச் சாளரத்தை மறைத்து வைத்தல்.இயக்க முறைமையின் ஒரு குறிப்பிட்ட கட்டளையைத் தந்தவுடன் மறைக்கப்பட்ட சாளரம் மீண்டும் தோற்றமளிக்கும்.

hidden character:மறைநிலை எழுத்து.

hide column:நெடுக்கை மறை.

hide window:சாளரம் மறை.

hide document:ஆவணம் மறை.

hierarchial computer network:படிநிலை கணினிப் பிணையம்:1.ஒரு தலைமைப் புரவன்(Host)கணினி பல சிறிய கணினிகளை மேலாண்மை செய்யும்.ஒவ்வொரு சிறிய கணினியும் பல்வேறு பீசி பணிநிலையங்களில் வழங்கலாகச் செயல்படும்.இத்தகைய பிணையம் படிநிலைப் பிணையம் எனப்படுகிறது.2.தகவல் செயலாக்கப்பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டும், கட்டுப்பாட்டுப் பணிகள் அதிகாரப்படி நிலைப்படி ஒழுங்கமைக்கப்பட்டும் இருக்கும் ஒரு பிணையம்.

hierarchical data format:படிநிலைத் தரவு வடிவம்.

hierarchial menu:படிநிலைப் பட்டி:ஒன்று அல்லது மேற்பட்ட துணைப் பட்டிகளைக் கொண்ட ஒரு பட்டி.துணைப்பட்டி அதன்கீழ் துணைப்பட்டிகளைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற பட்டி/துணைப்பட்டி அமைப்புக்குப் படிநிலைப்பட்டி எனப் பெயர்.

high bandwidth:உயர்நிலை அலைக்கற்றை; விரிந்த அலைக்கற்றை.

High-bit-rate Digital Subscriber Line: உயர்துண்மி வீத இலக்கமுறை சந்தாதாரர் தடம்:தொலைபேசியின் சாதாரண செப்புக் கம்பி மூலமாகவே இலக்கமுறைத் தகவல் பரப்புக்கான ஒரு நெறிமுறை.

high byte:மேல் பைட்:இரண்டு பைட் அல்லது 16 பிட்களில் ஒரு மதிப்பினைக் குறிக்கும் அமைப்புகளில்,8 முதல் 15 வரையிலான பிட்டுகளைக் கொண்ட பைட் மேல் பைட் எனப்படும்.0 முதல் 7 வரையுள்ள பைட் கீழ் பைட் ஆகும்.

high-end:உயர்நிலை;உயர்திறன்: செயல்திறனை மேம்படுத்தும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில்நுட்பம் எனில் அதிகவிலை என்பது நிலவும் சூழ்நிலையாகும்.

high level programming language:உயர்நிலை நிரலாக்க மொழி.

higher level software:உயர்நிலை மென்பொருள்.

high-level network:உயர்நிலைப் பிணையம்.

highlight changes:மாற்றங்கள் முனைப்புறுத்துக.

high memory area:மேல் நினைவகப் பரப்பு:ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது.டாஸ் 5.0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM.SYS என்னும் நிரல்,டாஸ் இயக்க முறைமையின் சில தகவல்களை மேல் நினைவகப் பரப்பில் மாற்றிக் கொள்ளும்.இதன் காரணமாய் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குக் கிடைக்கும் மரபு நினைவகப் பரப்பின் அளவு அதிகரிக்கும்.சுருக்கச் சொல்.ஹெச்எம்ஏ(HMA).

highpass filter:மேல்அலை வடிகட்டி: உயரலை சல்லடை:தகவல் சமிக்கையில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு மேல் உள்ள அலைவரிசைகளை அனுமதிக்கும் ஒரு மின்னணு வடிகட்டி மின்சுற்று.

High Performance Serial Bus (1394): உயர் செயல்திறன் நேரியல் பாட்டை:பீசி மற்றும் மெக்கின்டோஷ் கணினிகளுக்கான நேரியல் பாட்டை இடைமுகம்.வினாடிக்கு 100,200,400 மெகாபிட் தகவல் பரிமாற்றம் சாத்தியம்.63 சாதனங்கள் வரை டெய்சிச் சங்கிலி அமைப்பில் இணைக்கமுடியும்.இவ்வாறு இணைக்கப்படும் சாதனங்கள் இடைமுகத்தின் வழியாக நேரடியாய் மின்சாரத்தை பெறமுடியும்.

high pitch:உயர் தொனி.

High Sierra Specification:உயர்நிலை சியாரா வரன்முறை:ஒரு குறுவட்டில் பதியப்படும் தருக்கக் கட்டமைப்பு,கோப்புக் கட்டமைப்பு மற்றும் ஏட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் தொழில்முறை வடிவாக்க வரையறைகள்.1985 நவம்பரில் டாஹோ ஏரிக்கு அருகிலுள்ள சியாரா என்னுமிடத்தில் நடைபெற்ற குறுவட்டு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.ஐஎஸ்ஓ 9660 பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டுக்கான அடிப்படையாக விளங்கியது.

high voltage:உயர் மின்னழுத்தம்:அதிக மின்னழுத்தம்.

HIPPI:ஹிப்பி:உயர் செயல்திறன் இணைநிலை இடைமுகம் என்று பொருள்படும் High Performance Parallel Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மீத்திறன் (super)கணினிகளில் பயன்படுத்தக்கூடிய அன்சி தகவல்தொடர்பு தரவரையறை.

history:வரலாறு:கணினியில் ஒரு மென்பொருளில் பயனாளர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பணிகளின் பட்டியல்.(எ-டு)1. இயக்க முறைமையில் உள்ளீடு செய்யும் கட்டளைகளின் தொகுப்பு.2.கோஃபர் கணினிகளில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கடந்துவரும் பட்டித் தேர்வுகள் (menu options).3.இணைய உலாவியில் அடுத்தடுத்து தொடர்ந்து வந்த தொடுப்புகள் (links).

history list:வரலாற்றுப் பட்டியல்.

history settings:வரலாற்று அமைப்புகள்.

.hk:.ஹெச்கே:ஓர் இணையதள முகவரி ஹாங்காங்கைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

H KEY ஹெச் விசை:கையாள் விசை எனப் பொருள்படும் Handle Key என்பதன் சுருக்கச் சொல்.

.hn:.ஹெச்என்:ஓர் இணையதளம் ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

hold:பிடித்திரு.

Hollerith tabulating/recording machine: ஹோலரித் அட்டவணையிடும்/பதிவுசெய்யும் எந்திரம்:1800களின் பிற்பகுதியில் ஹெர்மன் ஹோலரித் கண்டுபிடித்த மின் எந்திரப்பொறி. குறிப்பிட்ட இடங்களில் துளையிடப்பட்ட அட்டைகளில் பதியப்பட்ட தகவல்களைச் செயலாக்கும் எந்திரம்.துளைகளின் மூலமாக மின்சுற்று நிறைவடைந்து சமிக்கைகள் உருவாக்கப்பட்டு எண்ணுகின்ற மற்றும் அட்டவணையிடும் எந்திரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த எந்திரம் 1890-ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை மூன்றில் இரண்டு பங்கு குறைத்தது.பின்னாளில் ஹோலரித்,டேபுலேட்டிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கினார்.1911ஆம் ஆண்டு இந்தக் குழுமம் இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ்(IBM) என்னும் புகழ்பெற்ற நிறுவனமாக உருவெடுத்தது.

holes,procket வழிப்படுத்து துளைகள்.

holy war:புனிதப் போர்:1.கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம்.(எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றியது அல்லது எண்களை இரும எண் முறையில்(Binary format) சிறு முடிவன்/பெரு முடிவன் முறையில் பதியும் முறை பற்றியது.2. அஞ்சல் பட்டியல்,செய்திக்குழு மற்றும் ஏனைய நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் உணர்வுபூர்வமான சர்ச்சைக்கிடமான பொருள்பற்றி நடைபெறும் விவாதம்.(எ-டு) பாபர் மசூதி,வட அயர்லாந்து,கருக்கலைப்பு,கருணைக் கொலை போன்றவை.எடுத்துக் கொண்ட தலைப்புக்குப்புறம்பாகப் புனிதப் போருக்கு வழிவகுக்குமாறு கருத்துகளை முன்வைப்பது இணைய நாகரிகத்துக்கு (Netiguette) எதிரானது.

home office:இல்ல அலுவலகம்:வீட்டு அலுவலகம்:1.வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம்.2.ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம்.3.ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்துவகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.

home page:முகப்புப் பக்கம்:1.வைய விரிவலையில் (World Wide Web)ஒரு மீவுரை(hypertext) முறைமையில் தொடக்கப்பக்கமாக அமைக்கப்படும் ஓர் ஆவணம். 2.மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப்பக்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.3. ஒரு வலைத்தளத்தில் நுழையும் போது காட்சியளிக்கும் முதல் பக்கம்.

home server:முதன்மை வழங்கன்.

homogeneous:ஒரு படித்தான;ஒரு முகப்பட்ட.

homogeneous environment:ஒரு படித்தான சூழல்:ஒரு நிறுவனத்துக்குள் ஒரே தயாரிப்பாளரின் வன்பொருளையும் ஒரே தயாரிப்பாளரின் மென்பொருள்களையும் பயன்படுத்துகின்ற ஒரு மென்பொருளாக்கச்சூழல்.

homogeneous network:ஒரு படித்தானபிணையம்:அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து,ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம்.

hopper:தத்தி.

hopper,card:அட்டைத் தத்தி.

horizontal feed:கிடைமட்ட ஊட்டு.

horizontal frequency:கிடைமட்ட அலைவரிசை.

horizontal market software:கிடைமட்டச் சந்தை மென்பொருள்:அனைத்து வகையான தொழில்,வணிக நடைவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய சொல்செயலி (Word Processor)போன்ற பயன்பாட்டு நிரல்கள். வேறுசில மென்பொருள்கள் குறிப்பிட்ட தொழில் துறைக்கு மட்டுமே பயன்படும்படி தயாரிக்கப்படுகின்றன.

horizontal retrace:கிடைமட்ட பின்வாங்கல்:பரவல் வருடு ஒளிக்காட்சி திரைக்காட்சியில் ஒரு வருடுவரியின் வலது ஓரத்திலிருந்து அடுத்த வரியின் இடப்புற ஓரம்வரை(வரியின் தொடக்கம்வரை)மின்னணு ஒளிக்கற்றை நகர்வது.

horizontal scan rate:கிடைமட்ட வருடி வேகம்.

horizontal synchronization:கிடைமட்ட ஒத்திசைவு:பரவல் திரைக்காட்சி(Raster display)முறையில் மின்னணுக்கற்றை இடப்புறமிருந்து வலப்புறம்,மறுபடி வலப்புறமிருந்து இடப்புறம் நகர்ந்து வரிவரியாக ஓர் உருத்தோற்றத்தை உருவாக்குவதில் பின்பற்றப்படும் நேரக்கட்டுப்பாடு.கோணம் நிலைத்த மடக்கி(phase locked loop)எனப்படும் மின்சுற்று கிடைமட்ட ஒத்திசைவு சமிக்கையைக் கட்டுப்படுத்துகிறது.

host name:புரவன் பெயர்;புரவலர் பெயர்: ஓம்புநர் பெயர்:இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின்(Server)பெயர்.ஓர் இணையதள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும்பாலும் அத்தளத்துக்குரிய புரவன் கணினிப் பெயராய் இருக்கும்.(எ-டு)chn.vsnl.net.in என்ற முகவரியில் chn என்பது,விஎஸ்என்எல் நிறுவனத்துப் புரவன் கணினிப் பெயர்.

host timed out:புரவன் நேரக்கடப்பு;ஒரு டீசிபி/ஐபி (TCP/IP) பிணைய இணைப்பில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது,ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள்(சில நிமிடங்கள்)தொலைநிலைப் புரவன் கணினி பதிலிறுக்கத் தவறுகையில் ஏற்படும் பிழைநிலை. இந்நிலை பல்வேறு காரணங்களினால் ஏற்படலாம். புரவன் கணினி செயலிழந்து போவதால் அல்லது பிணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏற்படலாம்.ஆனால் பயனாளருக்குக் கிடைக்கும் பிழைசுட்டும் செய்தி,பிழைநிலைக் காரணத்தைத் துல்லியமாகச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.

host unreachable:புரவன் எட்டாநிலை:ஒரு டீசிபி/ஐபி(TCP/IP)பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத்திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரணமாகவோ இந்நிலை ஏற்படலாம்.பிழைசுட்டும் செய்தி,காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம்,தெரிவிக்காமலும் போகலாம்.

hot:சூடான:தனிச்சிறப்பான,அவசர ஆர்வமூட்டும்,மிகவும் புகழ்பெற்ற,

hot docking:சூடான இணைப்பு;நடமாடும் இணைப்பு:பயணம் செய்துகொண்டிருக்கும்போதே ஒரு மடிக்கணினியை வேறொரு தலைமைக் கணினியுடன் பிணைய முறையில் இணைத்துக்கொள்ளல்.அவ்வாறு இணைத்துக்கொண்டு தலைமைக் கணினியில் ஒளிக்காட்சி,திரைக்காட்சி மற்றும் ஏனைய பணிகளையும் இயக்குதல்.

hot insertion:சூடாய்ச் செருகல்:ஒரு கணினி அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போதே ஒரு புறச்சாதனத்தை அல்லது விரிவாக்க அட்டைகளைச் செருகுதல்.தற்காலத்திய புதிய மடிக்கணினியில் பீசிஎம்சிஐஏ கார்டுகளை இவ்வாறு செருக முடியும்.உயர்நிலை வழங்கன் கணினிகளும்(servers)இத்தகைய செருகலை அனுமதிக்கின்றன.இதனால் இயங்காநேரம் குறைகிறது.

Hot Java:ஹாட்ஜாவா:சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஓர் இணைய உலாவி.வலைப்பக்கங்களில் உள்ளுறையும் ஜாவா பயன்பாடுகள் மற்றும் குறுநிரல்களை(applets)இயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உலாவி.

hotlist:சூடான பட்டியல்:பயனாளர் ஓர் இணைய உலாவி மூலம் அடிக்கடி பார்வையிடும் வலைப்பக்கங்களின் முகவரித் தொகுப்பு. பட்டியலிலிருந்து பயனாளர் விரும்பும் பக்கத்தை ஒரேசொடுக்கில் அணுகமுடியும்.இத்தகைய பட்டியல் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் மற்றும் லின்ஸ்க்கில் புத்தகக் குறி(Book mark)எனவும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத்தளக் கோப்புறை(Favourites Folder)எனவும் வழங்கப்படுகிறது.

hot plugging:சூடான இணைப்பு:இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொறியில் இன்னொரு புறச்சாதனத்தை இணைத்தல். கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு விரிவாக்க அட்டை அல்லது இணக்கி,அச்சுப்பொறி போன்ற புறச்சாதனத்தைப் பொருத்துதல்.

hot wired:ஹாட் ஒயர்டு:ஒயர்டு இதழின் வலைத்தளம்.இணையப் பண்பாடு குறித்த கிசுசிசுக்கள் மற்றும் பிறதகவல்கள் அடங்கிய தளம் முகவரி: http://www.hotwired.com/frontolood.

HPFS:ஹெச்பிஎஃப்எஸ்: உயர் செயல்திறன் கோப்பு முறைமை என்று பொருள்படும் High Performance File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒஎஸ்/2 இயக்க முறைமையின் 1.2 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இருக்கும் கோப்பு முறைமை.

HPGL:ஹெச்பீஜிஎல்:ஹீவ்லெட்பேக்கார்டு வரைகலை மொழி எனப்பொருள்படும் Hewelet Packard Graphics Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.வரைவுபொறிகளில் (Plotters) படிமங்களை அச்சிடுவதற்காக உருவாக்கப்பட்ட மொழி.ஒரு ஹெச்பீஜிஎல் கோப்பு,ஒரு வரைகலைப் படிமத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான ஆணைகளையும் கொண்டிருக்கும்.

HPIB:ஹெச்பீஐபி:ஹுவ்லெட்பேக்கார்டு இடைமுகப்பாட்டை என்றுபொருள்படும் Hewlelt-Packard Interface Bus stairp Glgirl flair தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

HP/UXorHP-UX:ஹெச்பீ/யுஎக்ஸ் அல்லது ஹெச்பபீ-யுஎக்ஸ்:ஹீவ்லெட்-பேக்கார்டு யூனிக்ஸ் என்று பொருள்படும்Hewlett Packard UNIX என்ற தொடரின் சுருக்கம்.யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம்.குறிப்பாக,ஹீவ்லெட் பேக்கார்டின் பணிநிலையக் கணினிகளில் இயக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

.hqx:.ஹெச்கியூஎக்ஸ்:பின்ஹெக்ஸ் (BinHex) எண்முறையில் குறிமுறைப்படுத்தப்பட்ட கோப்பின் வகைப்பெயர்(Extension).

.hr:.ஹெச்ஆர்:ஓர் இணையதளம் குரோசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

HREF:ஹெச்ரெஃப்:மீவுரை மேற்குறிப்பு என்று பொருள்படும் Hypertext Reference என்ற தொடரின் சுருக்கச் சொல்.ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிசொல் (tag).இணையத்திலிருக்கும் இன்னோர் ஆவணத்தைச் சுட்டும் தொடுப்பு.

HSB:ஹெச்எஸ்பி:நிறப் பூரிதம்-ஒளிர்மை (பிரகாசம்)என்று பொருள்படும்(Hue-Saturation Brightness)என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சக்கரவடிவில் அமைந்த ஒருநிறமாலை அமைப்பு.0° என்பது சிவப்பு;60°-மஞ்சள்;120°-பச்சை;180°-வெளிர்நீலம்;240-நீலம்;300-செந்நீலம்,வெண்மை நிறத்தின் விழுக்காடு அளவு பூரிதத்தைக் குறிக்கிறது.

HSV:ஹெச்எஸ்வி:நிறப்பூரித மதிப்பு எனப் பொருள்படும் Hue Satuaration Value என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.ht:.ஹெச்டி: ஓர் இணையதள முகவரி ஹைத்தி தீவைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.htm:.ஹெச்டிஎம்:வலைப்பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின்(HTML)கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ்-டாஸ்/விண்டோஸ் 3.எக்ஸ் கோப்புவகைப் பெயர். எம்எஸ்-டாஸ் மற்றும் விண்டோஸ் 3.எக்ஸ் ஆகியவை மூன்றெழுத்து வகைப்பெயர்களையே புரிந்து கொள்ளும் என்பதால் .html என்னும் நான்கெழுத்து வகைப்பெயர் மூன்றெழுத்தாகக் குறுக்கப்பட்டு விடுகிறது.

.html:.ஹெச்டிஎம்எல்: வலைப்பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

HTML document:ஹெச்டீஎம்எல் ஆவணம்.

HTML editor:ஹெச்டிஎம்எல் உரைத் தொகுப்பி.

HTTP:ஹெச்டிடிபீ:மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.வையவிரிவலையில் தகவலைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன்/வழங்கன் (Clienti/Server) நெறிமுறை ஆகும்.

HTTPD:ஹெச்டீடீபீடி:மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப்பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு சிறிய வேகம்மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server) கணினி.இது என்சிஎஸ்ஏ நிறுவனத்தின் இலவசச் சேவையகம்.

HTTPS:ஹெச்டீடீபீஎஸ்:விண்டோஸ் என்டியில் வலை வழங்கனாகச் செயல்படும் மென்பொருள். ஐரோப்பிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்டி அகாடெமி சென்டர்(EMWAC)ஸ்காட்லாந்து நாட்டு எடின்பரோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியது. இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.வெய்ஸ்(WAIS)எனப்படும் தேடு திறனைக் கொண்டது.

HTTP server:ஹெச்டீடீபீ வழங்கன்:1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெடீஎம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டீடீபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள்.கேட்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பு வழங்கப்பட்டவுடன் கிளையனுக்கும் வழங்கனுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிந்துவிடும்.வையவலை மற்றும் இணையதளங்களில் ஹெச்டீடீபீ வழங்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

HTTP status codes:ஹெச்டீடீபீ நிலைமைக் குறியெண்கள்:தகவல் பெறுவதற்கான கோரிக்கையின் விடைகுறித்து ஹெச்டிடிபீ வழங்கன்(server)அனுப்பிவைக்கும் மூன்றிலக்கக் குறியெண்.குறியெண் 1இல் தொடங்கினால், கிளையன் கணினி தான் அனுப்பும் விவரங்களை இன்னும் அனுப்பி முடிக்கவில்லை என்றும்,2-எனில் வெற்றிகரமான விடை என்றும்,3 எனில் கிளையன் இனி,மேல் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது என்றும்,4 எனில் கிளையன் பிழை காரணமாய் விடைபெறும் முயற்சி தோற்றது என்றும்,5 எனில் வழங்கன் பிழை காரணமாய்த் தோற்றது என்றும் பொருள்.

.hu:.ஹெச்ய:ஓர் இணையதளம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

hub, remote access:சேய்மை குவியம் : தொலை அணுகு குவியம்.

huffmann tree:ஹஃப்மன் மரவுரு.

human-machine interface:மனிதன் பொறி இடைமுகம்.

human mind model:மனித அறிவு மாதிரியம்.

humanware:மனிதப் பொருள்

hybrid circuit:கலப்பு மின்சுற்று: அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல்,வெற்றிடக் குழாய்கள்(Vacuum tubes)மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters)பயன்படுத்தி உருவாக்கப்படும் தொகுப்பிசை பெருக்கிகளை (Stereo amplifier) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

hybrid computer:கலப்பினக் கணினி: இலக்கமுறை (Digital) மற்றும் தொடர்முறை (analog) மின்சுற்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி

hyperlink:மீத்தொடுப்பு:ஒரு மீவுரை ஆவணத்திலுள்ள ஒரு சொல்,ஒரு சொல் தொடர். ஒரு குறியீடு அல்லது ஒரு படிமம் ஓர் உறுப்புக்கும்,அதே ஆவணத்திலுள்ள வேறோர் உறுப்பு அல்லது வேறொரு மீவுரை ஆவணம் அல்லது வேறொரு கோப்பு அல்லது உரைநிரல் (Script) இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு.இத்தகைய தொடுப்புகள் பெரும்பாலும் நீல நிற எழுத்துகளில்(ஆவண எழுத்து நிறத்திலிருந்து மாறுபட்ட நிறத்தில்) அடிக்கோடிடப்பட்டிருக்கும்.சுட்டிக் குறியை அருகில் கொண்டு சென்றால் கை அடையாளமாக மாறும். இந்த அடையாளங்களைக் கொண்டு அது ஒரு மீத்தொடுப்பு என்பதை அறியலாம்.சுட்டியைக் கொண்டு தொடுப்பின்மீது சொடுக்கியதும், தொடுப்பில் சுட்டப்பட்டுள்ள ஆவணம் திறக்கும். எஸ்ஜிஎம்எல்,ஹெச்டிஎம்எல் போன்ற மீவுரைக் குறிமொழிகளில் உருவாக்கப்படும் மீவுரை ஆவணங்களில்,பல்வேறு வகையான குறிசொல்கள்(tags) கொண்டு மீத்டுப்புகளைக் குறிப்பிடுகின்றன.

hyperspace:மீவெளி:வைய விரிவலையில் (WWW)மீத்தொடுப்புகளின்(Hyperlinks) மூலம் அணுகும்படியான மீவுரை ஆவணங்கள் அனைத்தின் தொகுப்பு.

hyphenation programme:சொல் ஒட்டு நிரல்; சொல்வெட்டு நிரல்:பெரும்பாலும் சொல்செயலிப் பயன்பாடுகளில் சேர்க்கப்படும் ஒரு நிரல்.ஒவ்வொரு வரி முடிவிலும் இடம் போதாத சொற்களை இருகூறாக்கி இறுதியில் ஓர் ஒட்டுக்குறியைச் சேர்க்கும் வசதி விருப்பத் தேர்வாக இருக்கும்.ஒரு நல்ல சொல்லொட்டு நிரல்,ஒரு பத்தியில்,தொடர்ச்சியாக மூன்று வரிகளுக்கு மேல் வரி இறுதியில் சொற்களைப் பிரிக்காது.அப்படித் தேவைப்படின் பயனாளருக்குத் தெரிவித்து அவரின் ஒப்புதலின் பேரில் முடிவு செய்யும்.

hyper terminal:ஹைப்பர் டெர்மினல் : ஒரு மென்பொருள்.

hyper text transmission protocol HTTP: மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை. hyper text transfer protocol (HTTP): மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை.

hyper text markup language (HTML):மீவுரைக் குறியிடு மொழி.

hyperline:மிகைஇணைப்பு; மீத்தொடுப்பு.

hyper link:மீத்தொகுப்பு.

hypothesis:ஊக்கம்; தற்கோல்; விளக்கம்.

hytelnet:ஹைடெல்நெட்: டெல் நெட் மூலமாக இணைய வளங்களைத் தேடிப் பெற ஒரு பட்டித் தேர்வு மூலம் வாய்ப்புத் தரும் நிரல் மூலம் இயக்க முடியும்.

hightech city:மாநுட்ப நகரம்;பெரும் தொழில்நுட்ப நகரம்.இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகருக்கு அருகில் புறநகராக உருவாகியுள்ள ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.ஏராளமான கணினி நிறுவனங்கள் அங்குள்ளன.