கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/I

I

I/O Control System (IOCS): உள்ளீடு/வெளியீடு கட்டுப்பாட்டு முறைமை.

IAC : ஐஏசி : தகவல் பகுப்பாய்வு மையம் எனப் பொருள்படும் Infromation Analysis Centre என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கிடைக்கின்ற அறிவியல் தொழில்நுட்ப தகவல்களைப் பயன் படுத்திக்கொள்ள அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத்துறை உருவாக்கியுள்ள பல்வேறு அமைப்புகளுள் இதுவும் ஒன்று. வரலாற்று, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தகவல்கள் உட்பட ஒட்டுமொத்த அறிவுத் தளங்களை (knowledge bases) உருவாக்கிப் பராமரிக்கும் பணியை ஐஏசி-க்கள் செய்கின்றன. மேலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான பகுப்பாய்வுக் கருவிகளையும் நுட்பங்களையும் உருவாக்கிப் பராமரிக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.

IBM : Information Business Machine என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முன்னணி கணினி நிறுவனம்.

l-BEAM : ஐ-உருக்குறி : விண்டோ வலில் சொல்செயலி போன்ற தொகுப்புகளில் உரையைத் தொகுக்கும்போது திரையில் தோற்றமளிக்கும் ஆங்கில ஐ-வடிவச் சுட்டுக்குறி. இக்குறியானது, ஆவணத்தில் ஒரு பகுதியை உட்செருக, அழிக்க, மாற்ற, இடம் பெயர்த்தெழுதருக்கும் இடத்தைச் சுட்டுகிறது. ஆங்கில எழுத்து I போலத் தோற்றமளிப்பதால் இவ்வாறு பெயர்பெற்றது.


IBM AT : ஐபிஎம் ஏட்டி : 1984இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளில் ஒருவகை. ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/ஏட்டி (AT-Advance Technology) வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் ஏட்டீ கணினி இன்டெல் 80286 நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாயிருந்த எக்ஸ்ட்டி (XT) கணினியை வேகத்தில் விஞ்சியது.

IBM PC : ஐபிஎம் பீசி : ஐபிஎம் சொந்தக் கணினி எனப் பொருள் படும் IBM Personal Computer என்பதன் சுருக்கம். 1981இல் அறிமுகப் படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளுள் ஒருவகை. ஐபிஎம்மின் பீசி வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் பீசி, இன்டெல் 8088 நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டது. கணினி உலகில் பல ஆண்டுகளாக ஐபிஎம் பீசிகள்தாம், உண்மையில் பீசி மற்றும் நகலிகளுக்கு அடிப்படையாக விளங்கின. ஐபிஎம் வரையறுப்புகளின்படி அமைந்த கணினிகள் பீசி-ஒத்தியல்பிகள் (PC-compatibles) என்று வழங்கலாயின.

ICMP : ஐசிஎம்பி : இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழைதிருத்தம் மற்றும் ஐபீ (IP-Internet Protocol) பொதி செயலாக்கத்திற்குத் தேவை யான பிற தகவல்களையும் தரக் கூடிய இணைய நெறிமுறை. எடுத்துக்காட்டாக, அடைய முடியாத இலக்கு பற்றிய தகவலை ஒரு கணினியிலுள்ள ஐபீ மென்பொருள் இன்னொரு கணினிக்குத் தெரிவிக்க உதவுகிறது.

icon parade : அடையாள அணி வகுப்பு; சின்ன அணிவகுப்பு : ஒரு மெக்கின்டோஷ் கணினி இயக்கப் படும்போது திரையில் வரிசையாகத் தோற்றமளிக்கின்ற சின்னங்கள்.

.id : ஐடி : ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

IDE : ஐடிஇ : ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப் பொருள் படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் வட்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். தனியான தகவி அட்டைகள் தேவையில்லை. பீசி/ஏட்டீ கணினிகளில் ஐபிஎம் பயன்படுத்திய கட்டுப்படுத்திகளுடன் ஒத்தியல்பானது. அதே வேளையில் முன்னோக்கிய இடைமாற்று நினைவகம் (Lookahead Caching) கொண்டது.

identification :அடையாளம் காணல்.

identification, file : கோப்பு அடை யாளம் காணல்.

identifiar, lable: சிட்டை காட்டி அடையாளம் காட்டி.

identity of server : வழங்கன் அடையாளம், தலைமைக்கணினிஅடையாளம்.

idiot box : அறிவிலிப் பெட்டி.

idle : செயலற்ற : 1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல்படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல்.

idle character : செயலற்ற குறி : தகவல் தொடர்பில், உடனடியாக அனுப்பவேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது, அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு.

idle interrupt :செயலற்ற குறுக்கீடு: ஒரு சாதனமோ அல்லது ஒரு செயலாக்கமோ செயலற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு குறுக்கீடு.

idle state : செயலற்ற நிலை : ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலை.

IDSL ஐடிஎஸ்எல்: இணைய இலக்க முறை சந்தாதாரர் தடம் எனப் பொருள்படும் Internet Digital Subscriber Line என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சாதாரணத் தொலைபேசி இணைப்புக் கம்பி வழியாகவே வினாடிக்கு 1.1 மெகாபிட் வரை இணையத் தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்ற அதிவேக இலக்கமுறைத் தகவல் தொடர்பு சேவை. ஐடிஎஸ்எல், சேவையானது ஐஎஸ்டிஎன் மற்றும் இலக்கமுறை சந்தாதாரர் தடத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலப்பு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

ie : ஐஇ : ஒர் இணைய தளம் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

IE : ஐஇ : 1. தகவல் பொறியியல் எனப்பொருள்படும் Information Engineering என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு நிறுவனத்துக்குள் கணினி அமைப்புகள், பிணையங்கள் உட்பட தகவல் செயலாக்க அமைப்புகளை உருவாக்கி பராமரிப்பதற்கான வழி முறை. 2. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய உலாவி மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயர்ச் சுருக்கம்.

IEEE 488 : ஐஇஇஇ 488 : பொதுப்பயன் இடைமுகப் பாட்டை (General Purpose Interface Bus - GPIB) -யின் மின்சார வரையறை. பாட்டையின் தகவல் மற்றும் கட்டுப்பாட்டுத் தடங்களையும் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட அளவுகளையும் குறிப்பிடுகிறது.

IEPG : ஐஇபீஜி: இணையப் பொறியியல் மற்றும் திட்டக் குழு என்று பொருள்படும் Internet Engineering and Planning Group groupஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தின் செல்வாக்கை வளர்த்தெடுப்பது, அதன் தொழில்நுட்ப முனைவுகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இணையப் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குழு.

IESG : ஐஇஎஸ்ஜி : இணையப் பொறியியல் நெறிப்படுத்துங் குழு எனப் பொருள்படும் Internet Engineering Steering Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர்.

IETF ஐஇடிஎஃப் : இணையப் பொறியியல் முனைப்புக் குழு என்னும் பொருள்தரும் Internet Engineering Task Force என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்து அவற்றுக்கான தீர்வுகளை ஐஏபி-க்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பினை இவ் வமைப்பு வகிக்கிறது. ஐஇஎஸ்ஜி இந்த அமைப் பினை மேலாண்மை செய்கிறது.

iff . ஐஎஃப்எஃப் (இஃப்) : ஒரு கோப்பு, மாறுகொள் கோப்பு வடிவாக்கத்தில் (Interchange File Format) உள்ளது என்பதைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர் (File extension). அமிகா பணித்தளத்தில் இது மிகப் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. எவ்வகை தகவல்களைக் கொண்டதாகவும் அக்கோப்பு இருக்க முடியும். வேறு பணித்தளங் களில் பெரும்பாலும் படிமம் (image) மற்றும் ஒலி (sound) கோப்புகளுக்கான வகைப்பெயராகவே இது பயன்படுத்தப்படுகிறது.

IFF: ஐஎஃப்எஃப் : பரிமாற்றக் கோப்பு வடிவாக்கம் என்ற பொருள்படும் Interchange File Format என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

if statement : if கட்டளை; if கூற்று : ஒரு பூலியன் தொடரின் விடை மெய் (அல்லது சரி) என்ற நிலையில், நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைத் தொகுதியை நிறைவேற்றப் பயன்படும் கட்டளையமைப்பு. பெரும் பாலான நிரலாக்க மொழிகளில்IF-உடன் ELSE-என்னும் துணைப் பிரிவும் பயன்படுத்தப்படுகிறது. அப் பூலியன் தொடர் பொய் (அல்லது தவறு) என்ற நிலையில் நிறைவேற்றப் படவேண்டிய கட்டளைத் தொகுதி ELSE பகுதியில் குறிப்பிடப்படுகிறது.

(எ-டு) if (n>10)

      {a+=100;
      b=1*c+200; }

else

{ a = 100;

 b=a/c-200;

}

ignore : புறக்கணி; தவிர்.

ignore all : அனைத்துப் புறக்கணி: அனைத்தும் தவிர்.

IGP : ஐஜிபீ : உள்ளக நுழைவி நெறி முறை என்று பொருள்படும் Interior Gateway Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். திசைப்படுத்தும் தகவலை அனுப்புவதை ஒழுங்குபடுத்தும் நெறிமுறை.

IGRP : ஐஜிஆர்பீ :உள்ளக நுழைவி திசைவிக்கும் (வழிப்படுத்தும்) நெறிமுறை எனப் பொருள்படும் Interior Gateway Routing Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்கியது. ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவிகளை திசைவித்தலில் (வழிப்படுத்தலில்) ஒர் இணக்கத்தை ஏற்படுத்த இந்நெறிமுறை உதவுகிறது. மிகப்பெரிய பிணையங்களில் நிலைத்த வழிப்படுத்தல், பிணையக் கட்டமைவுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப விரைவான தகவமைவு மற்றும் குறைந்த செலவு இவையே ஐஜிஆர்பீ-யின் குறிக்கோள்கள்.

IIS : ஐஐஎஸ் : இணையத் தகவல் வழங்கன் எனப் பொருள்படும், Internet Information Server என்பதன் முதல் எழுத்துக் குறும் பெயர். மைக் ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள வலை வழங்கன் மென்பொருள்.

.il : .ஐஎல் : ஒர் இணைய தளம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர்.

illegal : சட்டப்புறம்பான; முறை கேடான; அனுமதிக்க முடியாத; கணினிச் செயல்பாட்டில் அனுமதிக்க முடியாத நடவடிக்கை. மென்பொருள், வன்பொருள் எதில் வேண்டுமானாலும் ஏற்பட முடியும். (எ-டு) ஒரு சொல்செயலி மென் பொருளில் அனுமதிக்க முடியாத எழுத்து என்பது அந்நிரலால் அறிந்து கொள்ள முடியாத எழுத்தாகும். கணினி இயக்க முறைமை தவறான ஒரு நிரலின் வரம்புமீறிய செயல் பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. 'முறை கேடான செயல்பாடு!' என்று அறிவிக்கப்பட்டு அந்நிரல் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

illuminance : ஒளிர்வூட்டம் : 1.ஒரு குறிப்பிட்ட தளப் பரப்பின்மீது விழுகின்ற ஒளிர்வூட்டும் ஒளியின் அளவு. 2. தொலைக்காட்சிப் பெட்டியின் திரை, கணினித் திரை போன்ற சாதனங்களின் ஒளிர்வூட்டத்தை அளவிடும் அலகு. ஒரு சதுர மீட்டருக்கு எத்தனை வாட்ஸ் என்று அளவிடப்படுவதுண்டு.

illustration software :விளக்க மென்பொருள்.

ILUG : ஐஎல்யூஜி Indian Linux User Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

il.us : ஐஎல்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

image base visual serving :படிமத் தளப் புலக்காட்சி வழங்குகை.

image color matching :படிம நிறப் பொருத்தம் : வருடப்பட்ட அல்லது உள்ளீடு செய்யப்பட்ட ஒர் படிமத்தின் நிறங்களை அப்படியே வெளியீடாகத் தருவதற்காகச் செய்யப்படும் திருத்தச் செயலாக்கம்.

image compression : படிம இறுக்கம்; ஒரு வரைகலை படிமக் கோப்பினைச் சேமிக்க தகவல் இறுக்க நுட்பங்களைப் பயன்படுத்துதல். இறுக்கப்படாத வரைகலைக் கோப்புகள் சேமிப்பகத்தில் அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, படிம இறுக்கம், சேமிப்பக இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும்.

image editing :படிமத் திருத்தம் : ஒர் படிமத் தொகுப்பானில் ஒரு பிட்மேப் படிமத்தை மாற்றுதல் அல்லது திருத்துதல்.

image editor உருத்தோற்றத் தொகுப்பான்; படிமத் தொகுப்பான் : பிட்மேப் படிமங்களைத் திருத்தியமைத்துச் சேமிக்க வகைசெய்யும் பயன்பாட்டு நிரல். வருடுபொறியில் வருடப்பட்ட ஒளிப்படங்களை (photographs) வடிகட்டல் மற்றும் வேறுபல செயல்கூறுகள் மூலம் திருத்தி, செழுமைப்படுத்த முடியும். புதிய படிமங்களை, படங்களை இதில் உருவாக்க முடியாது. அதற்கென தனியான மென்பொருள் தொகுப்புகள் உள்ளன.

image map : படிமக் குறிபடம் : ஒரு வலைப்பக்கத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மீத் தொடுப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு படிமம். ஒரு படிமத்தின் மீது வேறுவேறு பகுதிகளில் பயனாளர் சுட்டியால் சொடுக்கும்போது அதே வலைப் பக்கத்தின் வேறு பகுதிக்கோ, வேறொரு வலைப் பக்கத்துக்கோ, வேறொரு கோப்புக்கோ இட்டுச் செல்லப்படுவார். படிமக் குறிபடம் பெரும்பாலும் ஒர் ஒளிப்படமாகவோ, ஒர் ஒவியமாகவோ, பல்வேறு வரைபடங்களின்/ஒளிப்படங்களின் கூட்டாகவோ இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தின் பல்வேறு வளங்களைச் சுட்டும் குறியீடுகளாக இப்படங்கள் அமைகின்றன. படிமக் குறிபடங்கள் சிஜீஐ (CGl) நிரல் மொழியின் மூலம் உருவாக்கப் படுகின்றன. சொடுக்குறு குறிபடம் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

imaginary number :கற்பனை எண் : ஒரு மெய்யெண், (real number) மற்றும் i (12-ன் மதிப்பு - 1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகையாகக் குறிப்பிடப்படும் எண் கற்பனை எண் ஆகும். ஒரு மெய்யெண், ஒரு கற்பனை எண் ஆகியவற்றின் கூட்டு கலப்பு (complex number) எனப்படுகிறது. கலப்பெண், a+ib என்ற வடிவில் எழுதப்படும். a, b ஆகியவை மெய்யெண்கள். பொதுவாக நம் வாழ்வில் கற்பனை எண்களை நாம் சந்திப்பதில்லை. நீளம் 15i அடி என்றோ, வினாடிக்கு 150i மெகாபிட் என்றோ நாம் பயன்படுத்தப் போவதில்லை. ஆனால், மின் பொறியியலில் சிலவகை இணை எண்ணிக்கைகள் ஒரு கலப்பெண்ணிலுள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைப்போலக் கணித முறை யில் கணக்கிடப்படுகின்றன.

imaging : உருத்தோற்றி ; படிம மாக்கம் : ஒரு வரை கலை உருத் தோற்றத்தை படமாக்கி, சேமித்து, திரையிட்டு, அச்சிடும் செயல் பாடுகள் உள்ளடக்கிய செயலாக்கம். imaging system :உருத் தோற்ற முறைமை; படிமமாக்க முறைமை,

IMAP4 : ஐமேப்4; இணையச் செய்தி அணுக்க நெறிமுறை-4 என்று பொருள்படும் Internet Message Access Protocol-4 என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐமேப்பின் அண்மைக்காலப் பதிப்பு. ஒரு அஞ்சல் வழங்கன் கணினியில் (mail server) மின்னஞ்சல் மற்றும் அறிக்கைப் பலகை செய்திகள் (Bulletin Board Message) சேமிக்கப்படுவதற்கான ஒரு வழி முறையே ஐமேப். பாப் (POP-Post Office Protocol) என்னும் இன்னொரு முறையும் பயன்பாட்டில் உள்ளது. ஐமேப் முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலிருந்து அஞ்சல்/ செய்திகளை மிகச் சிறப்பாக மீட்டெடுக்க முடியும். பாப் முறையில் இது இயல்வதில்லை.

IMHO : ஐஎம்ஹெச்ஓ ஐமோ : எனது தாழ்மையான கருத்தின்படி என்று பொருள்படும் In My Humble Opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ்நிலைக் கருத்தரங்குகளில் பயனாளர் ஒருவர் முன் வைக்கும் அவரின் சொந்தக் கருத்தினைக் குறிக்கும். ஒரு மெய்ம்மை அடிப் படையிலான கூற்றாக இருக்க வேண்டியதில்லை.

immediate operand : நேரடி மதிப்புரு: சில்லு மொழி ஆணையைச் செயல் படுத்துகையில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிப்பு. ஆணையிலேயே அம்மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு முகவரியின் மூலம் சுட்டப்படும் மதிப்பைக் குறிக்காது.

immediate printing : உடனடி அச்சிடல் : கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் ஒர் உரையையும், அச்சிடுவதற்கான கட்டளைகளையும் நேரடியாக அச்சுப்பொறிக்கு அனுப்பும் முறைக்கு உடனடி அச்சிடல் என்று பெயர்.

IMO : ஐஎம்ஓ : என் கருத்தின்படி என்று பொருள்படும் In my opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சலில், இணையச் செய்தி/விவாதக் குழுக்களில் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல். தாம் குறிப்பிடுவது நிச்சயமான ஒரு மெய்ம்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதை அவரே ஒத்துக் கொள்ளும் ஒரு கூற்று.

impact print  : தொட்டச்சு.

impliment : செய்முறைப்படுத்து; செயலாக்கு.

importing class : இறக்குமதி இன குழு.

impulse : கண உந்துகை.

.in : இன்; ஐஎன் ; ஒர் இணைய தள முகவரி இந்திய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

in-band signalling : உள்-காற்றை சமிக்கை  : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பேச்சு அல்லது தகவலைக் கையாளும் அலைவரிசைக்குள் அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.. include sub tolders : உள் உறைகளிலும் தேடு.

increase indent : ஓரச்சீர்மை மிகு .

increase speed : வேகம் கூட்டு .

increase volume : ஒலியளவு கூட்டு .

incoming data : உள்ளீ ட்டுத் தரவு: வரும் தரவு.

incrementing : மிகுத்தல்.

increment compiler : ஏறுமானத் தொகுப்பி; உயர்மானத் தொகுப்பி.

independent : சுயேச்சையான; சார்பற்ற; சார்பிலா.

independent, machine : பொறிசாரா; கணினிசாரா.

indexed : சுட்டுவரிசைப் பட்டது.

indexed file : சுட்டுக்கோப்பு; வரிசை முறைக் கோப்பு.

index hole sensor : கட்டுவரிசை துளை உணரி.

indexed search : வரிசைமுறைத் தேடல் : ஒரு தகவல் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைத் தேடிக் கண்டறியும் நேரத்தைக் குறைப்பதற்காக வரிசைமுறைப் படுத்தலைப் பயன்படுத்திக்கொள் ளும் ஒருவகைத் தேடல் முறை.

indexing : சுட்டு வரிசையாக்கம்.

index sequentlal access : சுட்டு வரிசைமுறை அணுகல்; ஏட்டு எண் வரிசை அணுகல்.

index sequential file : சுட்டு வரிசை முறைக் கோப்பு; ஏட்டு எண்வரிசைக் கோப்பு.

index variable : சுட்டுவரிசை மாறி.

infection : தொற்று : ஒரு கணினி அமைப்பு அல்லது முறைமையில் நச்சுநிரல் குடியேறியுள்ளதைக் குறிக்கும் சொல். ட்ரோஜான் குதிரை அல்லது நச்சுப்புழு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

inter : உய்த்துணர்; ஊகி : குறிப் பிட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. முறையான தருக்க விதிகளின்படியோ, பொது வான கண்ணோட்டத்தின் அடிப் படையிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். (எ-டு) பறவைகளுக்கு இறகுகள் உள்ளன. கானரி என்பது மஞ்சள் நிறமுடைய பாடும் பறவை. இந்த இரு கூற்றுகளின் அடிப்படை யில் கானரிகளுக்கு இறகுகள் உண்டு என்பதை உய்த்து அறியலாம் அல்லவா?

infra structure : உள் கட்டமைவு,

inference engine : உய்த்துணர் பொறி; ஊகித்தறி பொறி; முடிவுசெய் பொறி : ஒரு வல்லுநர் முறைமையின் (Expent System) செயலாக்கப் பகுதி. வல்லுநர் முறைமையில் மெய்ம் மைக் கூறுகளும் (Facts) விதிமுறை களும் (Rules) ஓர் அறிவுத் தளத்தில் (knowledge base) சேமிக்கப்பட்டிருக் கும். ஆய்வுக்கான கருதுகோள்கள் உள்ளீடாகத் தரப்படும் போது அவை மெய்ம்மைகளுடனும் விதிமுறை களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப் பட்டு, முடிவுகள் பெறப்பட்டு அதற்கேற்ப, வல்லுநர் முறைமை நடவடிக்கையை மேற்கொள்கிறது.

inference rule : உய்த்தறி விதி.

infited : உள்புலம்.

infinite number : வரம்பிலா எண்;வரம்பிலி.

infobahn : இன்ஃபோபான்: தகவல் விரைவுச் சாலை; தகவல் நெடுஞ்சாலை : இன்ஃபர்மேஷன் (information),ஆட்டோபான்(Autobahn) ஆகிய இரு சொற்களும் இணைந்த கூட்டுச்சொல். இணையத்தை இச்சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆட்டோபான் என்பது ஜெர்மன் நாட்டில் வாகன ஒட்டிகள் சட்டப்படி மிக வேகமாக வாகனத்தை ஒட்டிச் செல்வதற்கான நெடுஞ்சாலை ஆகும்.

information channel : தகவல் இணைப்பு:தகவல் தடம்:தகவல் அலைவரிசை.

information hiding:தகவல் மறைப்பு: பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு. ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தகவல் மறைக்கப்பட்டிருக்கும். அத்தகைய செயல்கூறுகள் குறிப்பிட்ட செயலாக்க முறையைச் சார்ந்து இருப்பதில்லை. ஒரு நிரல் கூறு அல்லது துணைநிரல் செயல்படும் முறையை அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் நிரல்களுக்குச் சார்பின்றி மாற்றியமைத்துக் கொள்ள தகவல் மறைப்பு கோட்பாடு உதவுகிறது.

information highway :தகவல் பெருவழி; தகவல் நெடுஞ்சாலை.

information management : தகவல் மேலாண்மை.

information storage :தகவல் சேமிப்பகம்:தகவல் களஞ்சியம்.

information storage and retrieval :தகவல் சேமிப்பும் மீட்பும்.

information super highway : தகவல் நீள் நெடுஞ்சாலை :தனியார் பிணையங்கள்,நிகழ் நிலைச்சேவைகள் மற்றும் இதுபோன்ற தகவல் போக்குவரத்தினை உள்ளடக்கிய ,தற்போதுள்ள இணையம் மற்றும் அதன் பொதுக் கட்டமைப்புகளையும் குறிப்பது.

information system, management :மேலாண்மை தகவல் முறைமை.

information technology act :மின் வெளிச் சட்டம்; தகவல் தொழில் நுட்பச் சட்டம்.

information technology manager : தகவல் தொழில்நுட்ப மேலாளர்.

information technology project manager : தகவல் தொழில்நுட்பத் திட்ட மேலாளர்.

information warehouse :தகவல் கிடங்கு: ஒரு நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் வளங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு.

information warfare :தகவல் போர்த்தாக்குதல் : எதிரி நாட்டின் பொருளாதார வாழ்வும் பாதுகாப்பும் பெரிதும் சார்ந்துள்ள கணினி நடவடிக்கைகள் மீதான தாக்குதல். விமானப் போக்கு வரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிலைகுலையச் செய்தல், பங்குச் சந்தை ஆவணங்களை பெருமளவில் பாழாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

infrared : அகச்சிவப்பு : மின்காந்த நிறமாலையில் சிவப்பு ஒளிக்குச் சற்றே கீழான வரம்புக்குள் ஒர் அலை வரிசையைக் கொண்டுள்ள கதிர். பொருட்கள் தத்தம் வெப்ப நிலைக்கேற்ப அகச்சிவப்புக் கதிர்களை வெளியிடுகின்றன. வழக்கமாக, அகச்சிவப்புக் கதிர்வீச்சு அதன் அலைநீளத்தின் அடிப்படையில் நான்கு வேறு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

infrared data association : அகச் சிவப்புத் தரவுச் சங்கம் : கணினிகளுக்கும் அவற்றின் புறச்சாதனங்களுக்கும் இடையே அகச்சிவப்புக் கதிர்மூலமான தகவல் தொடர்புக்குரிய தகவல் வரையறைகளை ஏற் படுத்தியுள்ள தொழில் நிறுவனங்களின் ஒர் அமைப்பு. இவை பெரும்பாலும் கணினி உதிரி உறுப்புகள் மற்றும் தகவல்தொடர்புச்சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகும்.

infrared port : அகச்சிவப்புத் துறை : அகச்சிவப்புக் கதிர் உணரும் சாதனத்துடன் தொடர்புகொள்ள ஒரு கணினியில் அமைந்துள்ள ஓர் ஒளியியல் துறை. இணைப்பு வடக் கம்பிகள் இல்லாமலே தகவல் தொடர்பு இயல்கிறது. தற்போதைக்கு சில அடி தொலைவுக்கே தொடர்பு ஏற்படுத்த முடிகிறது. மடிக் கணினிகள், கையேட்டுக் கணினிகள், அச்சுப் பொறிகளில் அகச்சிவப்புத் துறைகள் வந்து விட்டன. தகவல் தொடர்பில் ஈடுபடும் இரண்டு சாதனங்களின் துறைகள் நேராகப் பார்த்துக் கொண்டிருப்பது கட்டாயம்.

inheritance code :மரபுரிமைக் குறி முறை : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்லது அதன் பொருளிலிருந்து இவை அனுப்பி வைக்கப்பட்டவை ஆகும்.

inhibit தடைசெய் :ஒரு நிகழ் வினைத் தடுத்தல். (எ-டு) கணினியின் புறச்சாதனம் ஒன்றின் குறுக்கீடுகளை (interrupts) தடை செய்தல். அதாவது, அப்புறச்சாதனம் எவ்விதக் குறிக்கீடுகளையும் அனுப்புவதை தடைசெய்வது என்று பொருள்.

.ini : ஐஎன்ஐ : டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x இயக்க முறைமைகளில் இயக்கத்தை தொடங்கி வைக்கும் முக்கிய கோப்பினை அடை யாளங்காட்டும் வகைப்பெயர் (File Extension). பெரும்பாலும் பயனாளரின் விருப்பத் தேர்வுகளையும், ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் தொடக்க நிலைத் தகவல்களையும் ஐஎன்ஐ கோப்பு தன்னகத்தே கொண்டிருக்கும்.

INIT : தொடக்கு இனிட் : 1. பழைய மெக்கின்டோஷ் கணினிகளில், கணினியை இயக்கும்போது நினைவகத்தில் ஏற்றிக்கொள்ளப்படும் முறைமையின் துணைநிரல். 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், முறைமை நிர்வாகி செயல்படுத்தும் ஒரு கட்டளை. 3. ஜாவா குறுநிரல்களில் (Applets) கட்டாயமாக இடம்பெறும் முக்கிய வழிமுறை. குறுநிரல் அழைக்கப்படும்போது இந்த வழிமுறை இயக்கப்படும்.

initial base font: தொடக்க தள எழுத்துரு.

initia! graphics exchange specification : தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை : அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ANSI) ஆதரவு பெற்ற கணினி வரைகலைக் கோப்பு வடிவாக்கத்தரம். குறிப்பாக, கணினியுதவு வடிவமைப்பு (CAD) நிரல்களில் உருவாக்கப்பட்ட மாதிரியங் களைக் கையாள இது ஏற்றதாகும். அடிப்படையான வரைகணித வடி வங்களை உள்ளடக்கியது. கணினி யுதவு வடிவமைப்பின் குறிக்கோள்களுக்கு இசைவானது. உரை விளக்க வரைபடங்கள், பொறியியல் வரை படங்கள் ஆகியவற்றுக்கு உகந்தது.

initialization : தொடக்கி வைத்தல்; தொடக்க மதிப்பிருத்தல்; தொடக்க நிலைப்படுத்தல் :ஒரு நிரலில் மாறிகளிலும், தரவுக் கோவைகளிலும் தொடக்க மதிப்புகளை இருத்தி வைக்கும் செயல்பாடு.

initialization list  : தொடக்க மதிப்பிருத்தும் பட்டியல்.

initialization portion : தொடங்கி வைக்கும் பகுதி.

initialization string : தொடங்கி வைக்கும் சரம் : ஒரு புறச்சாதனத்துக்கு, குறிப்பாக ஒர் இணக்கிக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ச்சியான கட்டளைகளின் தொகுப்பு. இணக்கியைச் செயல்பட வைக்கத் தயார்செய்யும் கட்டளைகள்; பெரும்பாலும் எழுத்துகளைக் கொண்ட சரமாக இருக்கும்.

initializer : தொடக்க மதிப்பிருத்தி : ஒரு மாறியின் தொடக்க மதிப்பாக அமையும் மதிப்பினை தரக்கூடிய கணக்கீட்டுத் தொடர்.

initial program load : தொடக்க நிரல் ஏற்றம்  :ஒரு கணினி இயக்கி வைக்கப்படும்போது, ஒர் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றி எழுதிக் கொள்ளும் செயல்முறை.

initiate : தொடக்கிவை.

initiator : தொடக்கி  : ஸ்கஸ்ஸி(SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது.

ink cartridge : மைப் பொதியுறை; : பெரும்பாலும் ஒரு மையச்சுப் பொறியில் (Ink-jet printer) பயன்படுத்தக் கூடிய மைக் குப்பி. பெரும்பாலும், மை தீர்ந்தவுடன் எறியப்படக் கூடியதாக இருக்கும்.

Ink character reader, magnetic : காந்த மையெழுத்துப் படிப்பி.

inline : உள்ளமை : 1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தருமதிப்புகளால் (arguments) பதிலீடு செய்யப்படுகின்றன. ஒரு நிரலின் செயல் திறனை மிகுவிக்க மொழிமாற்றத் தருணத்திலிலேயே உள்ளமை செயல்கூறுகள் பதிலீடு செய்யப்படு கின்றன. 2. ஹெச்டிஎம்எல் நிரலில் ஒரு வரைகலைப் படத்தை உரைப் பகுதியுடன் உள்ளமைத்து அதனைச் சுட்டுதல். இதற்கு (IMG) என்னும் குறிசொல் (Tag) பயன்படுகிறது.

inline function : உள்ளமை செயல்கூறு. சி++ மொழியில் உள்ளமை செயல் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

inline graphics : உள்ளமை வரை கலை : ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரை கலைக் கோப்புகள். ஹெச்டிஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடியும். தனியான கோப்புத் திறப்பு செயல்பாட்டினைத் தவிர்ப்பதன் மூலம், உள்ளமை வரை கலைப் படங்கள் ஹெச்டிஎம்எல் (HTML) ஆவணத்தை அணுகுதல் மற்றும் நினைவகத்தில் ஏற்றுதல் போன்ற செயல்பாடுகள் விரைவாக நடைபெறும்.

inline image: 2 உள்ளமைப்பு படிமம்: ஆவணத்தில் உரைப்பகுதியினூடே உள்ளமைக்கப்பட்ட ஒரு படிமம். வலைப்பக்கங்களில் இது போன்ற படிமங்களை அதிகம் காணலாம்.

inner join : உள் இணைப்பு : உறவு முறைத் தரவுத் தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணை களை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும் முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும்.

input bound :உள்ளீட்டு வரம்பு/ எல்லை.

input buffer : உள்ளீட்டு இடையகம் : ஒரு கணினிக்குள் உள்ளீடாகச் செலுத்தப்படும் தகவல்களைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்கென கணினி நினைவகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பகுதி.

input job stream: உள்ளீட்டுப் பணி தாரை: உள்ளிட்டுப் பணியோட்டம்.

input mask :உள்ளீட்டு மறைப்பு.

input/output buffer : உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம் : ஒரு கணினியில் உள்ளீடாகத் தரப்படும் தகவல்களையும், வெளியீடாகப் பெறப்படும் தகவல்களையும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக நினைவகத்தில் ஒதுக்கப்படும் ஒரு பகுதி. மையச் செயலி நேரடியாக உள்ளிட்டு/வெளியீட்டு சாதனங்களுடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டால் செயலியின் பொன்னான நேரம் வீணாகிப் போகும். இடைநிலை நினைவகத்தில் எழுதிவிட்டு செயலி வேறு பணியை மேற்கொள்கிறது என்பதால் அதன் நேரம் பயனுள்ள முறையில் செலவாகிறது.

input output bus : உள்ளீட்டு/வெளியீட்டுப் பாட்டை : ஒரு கணினியின் உள்ளமைப்பில் மையச் செயலிக்கும் பிற உள்ளிட்டு, வெளியீட்டு சாதனங்களுக்குமிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன் படுத்தப்படும் வன்பொருளாலான மின்வழித் தொகுதி.

input/out put channel : உள்ளீட்டு/ வெளியீட்டுத் தடம்.

input/output controller : உள்ளீட்டு/வெளியீட்டுக் கட்டுப்படுத்தி : ஒரு கணினியில் உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனங்களுக்கும் மையச் செயலிக்குமிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்ற மின்சுற்று அமைப்பு. உள்ளீட்டு/வெளியீட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டுத் தகவலைப் பெறுதல், வெளியிடுதல் ஆகிய செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு, செயலியானது தன் நேரத்தைப் பிற பணிகளில் ஈடுபடுத்துவதற்கு உதவி செய்கிறது. நிலைவட்டு இயக்ககக் கட்டுப் படுத்திகளை (Hard Disk Drive Controllers) எடுத்துக்காட்டாகக் கூறலாம். பல கட்டுப்படுத்திகளுக்கு தகவலைப் பெற்றுக் கையாள்வதற்கு மென்பொருள் தேவைப்படுகிறது. இவற்றை சாதனக்கட்டுப்படுத்தி, உ/வெ கட்டுப்படுத்தி என்றும் அழைப்பர்.

input/output statement : உள்ளீட்டு/ வெளியீட்டுக் கூற்று : நினைவகத்துக்கும், உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனத்துக்கும் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு நிரலில் பயன் படுத்தப்படும் கட்டளை,

input/output unit : உள்ளீட்டு/வெளியீட்டுப் பகுதி.

insert : செருகு.

insert file : கோப்பைச் செருகு.

insert ((INS) key: செருகு விசை

insert page : பக்கத்தைச் செருகு.

insert menu : செருகு பட்டியல்

insert page : இடைச் செருகு பக்கம்.

insertion method :செருகு முறை .

insertion point : செருகு இடம்.

insertion sort : செருகு வரிசை யாக்கம் : பல்வேறு வரிசையாக்க முறைகளுள் ஒன்று. வரிசையாக்க வேண்டிய ஒரேயொரு உறுப்பினை முதலில் எடுத்துக்கொண்டு இந்த வரிசையாக்க முறை தொடங்கப்படுகிறது. இரண்டாவது உறுப்பினை எடுத்து, முதல் உறுப்பினைவிடப் பெரிதா, சிறிதா எனப் பார்த்து முன்னாலோ அல்லது பின்னாலோ இணைக்க வேண்டும். அடுத்த உறுப்பினை எடுத்து, வரிசையாக்கப் பட்டியலில் பொருத்தமான இடத் தில் செருக வேண்டும். இவ்வாறு ஒரு நேரத்தில் ஒர் உறுப்பினை மட்டும் எடுத்துக் கொண்டு பட்டியலில் அதற்குரிய இடத்தில் செருகி எவ்வளவு பெரிய வரிசையாக்கப் பட்டியலையும் உருவாக்க முடியும். குவித்து வைக்கப்பட்டுள்ள சீட்டுக் கட்டில் ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கையில் வரிசையாக அடுக்கும் முறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். கோவைகளை (Arrays) பொறுத்தமட்டில் இம்முறை திறனற்றது. ஏனெனில், ஒவ்வொரு உறுப்பினைச் செருகும்போதும் பிற உறுப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தொடுப்புப் பட்டியல்களுக்கு (Linked Lists) இந்த முறை மிகவும் ஏற்றது.

insight : உள்ளொளி; உள்பார்வை; அகப்பார்வை.

Installable File Systern Manager : நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர்  : விண்டோஸ் 95இல் கோப்புக் கட்டுமானத்தில் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. கோப்பு முறைமையின் பல்வேறு கூறுகளையும் விருப்பப்படி அணுகுவதற்கு இம்மேலாளரே வழியமைத்துக் கொடுக்கிறது.

installation programme : நிறுவு நிரல்: ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகளைப் பின் பற்ற வேண்டியிருக்கும். பயனாளர் பல்வேறு கட்டளைகளை நினைவு வைத்துக் கொண்டு நிறுவும் பணியைத் தொடர வேண்டியிருக்கும். இத்தகைய சிக்கலான பணியை எளிமைப்படுத்தி பயனாளரைத் தோழமையுடன் வழிநடத்தி, மென் பொருள் தொகுப்பைக் கணினியில் நிறுவ உதவுவதே நிறுவு நிரலின் பணி. சட்டத்துக்குப் புறம்பாக அம்மென்பொருள் தொகுப்பை நகலெடுத்துப் பயன்படுத்த முடியாதவாறு நகல் பாதுகாப்பு (Copy Protection) பணியையும் இந்த நிரல் செய்வதுண்டு.

installer : இன்ஸ்டாலர்; நிறுவுனர்; நிறுவி :ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks)உருவாக்கவும் இந்த நிறுவி நிரல் பயனாளருக்கு உதவுகிறது.

installing software: நிறுவு மென்பொருள்.

instant message :உடனடிச் செய்தி .

instant on modem :உடனடி இயக்க இணக்கி.

instant print :உடனடி அச்சு.

instantaneous :அப்போதே.

instruction address:ஆணை முகவரி.

instruction, arithmetical :எண் கணித ஆணை.

instruction, branch:கிளைபிரி ஆணை.

instruction, break point:நிறுத்துமிட ஆணை.

instruction, computer :கணினிக்கட்டளை, கணினி ஆணை.

insulator : மின்விலக்கி : 1.ரப்பர்,கண்ணாடி,பீங்கான் போன்று மின்சாரத்தை அரிதில் கடத்தும் (அல்லது கடத்தாத) பொருட்களை மின் விலக்கிகள் என்கிறோம். 2. ஒரு மின்சுற்றில் மின்சாரம் தவறான பாதையில் பாயாமல் இருக்கும் பொருட்டு இரு உறுப்புகளுக்கிடையே காப்பாகப் பயன்படுத்தப்படும் கருவி. 3.மிக உயர்ந்த மின்பரப்புக் கோபுரங்களில் உயர் மின்னழுத்தக் கம்பிகளிலிருந்து மின்சாரம் பாயாமல் இருக்க களிமண்/பீங்கான் மின்விலக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

instruction, conditional branch : நிபந்தனைக் கிளை ஆணை.

instruction, data manipulation : தகவல் கையாளல் கட்டளை.

instruction, fetch : கொணர் ஆணை.

instruction format, addressless : முகவரியிலா ஆணை வடிவம்.

instruction, halt :நிறுத்தக் கட்டளை:நிறுத்தல் ஆணை.

instruction, jump :தாவு கட்டளை; தாவல் ஆணை.

instruction,machine:எந்திர ஆணை; பொறி ஆணை.

instruction, null : வெற்று ஆணை.

instruction register, current :நடப்பு ஆணைப் பதிவகம்.

instruction, unconditional branch : நிபந்தனையற்ற கிளைபிரி ஆணை.

instrument, input: உள்ளீட்டுக் கருவி .

integer array :முழுஎண் கோவை.

integer attribute :முழுஎண் பண்புக் கூறு.

integer type :முழுஎண் இனம்.

integral modem :ஒருங்கிணை இணக்கி : கணினிப் பெட்டிக்குள் தாய்ப்பலகையிலேயே பொருத்தப் படுகிற இனக்கி. தாய்ப்பலகை யிலுள்ள செருகுவாய்களில் பொருத்தப்படும் விரிவாக்க அட்டையாக (Expansion Card) இது இருக்கும்.

integrated chips :ஒருங்கிணைந்த சிப்புகள்; ஒருங்கிணைந்த சில்லுகள்.

integrated development environment: ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் :ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளின் தொகுதி. அனைத்துக் கருவிகளும் ஒரே பயனாளர் இடை முகத்தில் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நிரல்களை எழுதுவதற்கான ஒர் உரைத்தொகுப்பான் (text editor), மொழிமாற்றி (compiler) பிழைதிருத்தி (debugger), நிரலை இயக்கிப் பார்த்தல் ஆகிய அனைத்தும் பட்டி விருப்பத் தேர்வுகள் (menu options) மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

integrated learning system :ஒருங்கிணைக் கற்றல் முறைமை.

integrated news :ஒருங்கிணைந்த செய்தி.

integrated software : ஒருங்கிணைந்த மென்பொருள்:சொல்செயலி, தரவுத்தள மேலாண்மைத் தொகுப்பு, விரிதாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite). அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பயனாளர் இடை முகத்தைக் கொண்டிருக்கும். வெவ்வேறு தொகுப்புகளுக்கு வெவ்வேறு கட்டளைகளை நினைவு வைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டியதில்லை. பயன்பாடுகளுக்கிடையே தகவலை, இயக்க நேரத்தில் பரிமாறிக் கொள்ளவும் (Dynamic Data Exchange) இக்கூட்டுத் தொகுப்புகளில் வழிவகை இருக்கும். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2000, சன் ஸ்டார் ஆஃபீஸ், லோட்டஸ் ஸ்மார்ட்சூட், கோரல் ஆஃபீஸ் ஆகியவை இத்தகைய கூட்டுத் தொகுப்புகள்.

integrator  : ஒருங்கிணைப்பான்; ஒருங்கிணைப்பி :ஒரு மின்சுற்று. நேரத்தின் அடிப்படையில் உள்ளீடாக பெறும் மின்னோட்டத்தின் தொடர்கூட்டு மதிப்பை(accumulated value) வெளியீடாகத் தரும்.

integrity class :ஒருங்கிணைந்த வகுப்பு : ஒருங்கிணைந்த இனக்குழு.

integrity confinement :ஒருங்கமைப்பு வரையறை .

integrity context :ஒருங்கமைப்புச்சூழல்.

integrity control :ஒருங்கமைப்புக் கட்டுப்பாடு.

integrity label :ஒருங்கிணைந்த முகப்பு;ஒருங்கமைப்புச் சீட்டை.

integrity tower :ஒருங்கமைப்புக் கோபுரம்.

integrity upgrading : ஒருங்கிணைந்த மேம்படுத்தம்.

intelligent :அறிவுநுட்பன்; நுண்ணறிவன் :தன்னுள் இருக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட செயலிகளினால் (processors) பகுதியாக அல்லது முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவி அல்லது ஒரு சாதனத்தின் பண்பியல்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

intelligent cable :நுண்ணறிவு வடம் :வெறுமனே ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குத் தகவல்களை அனுப்பும் பணியை மட்டுமின்றி, அது செருகப்பட்டுள்ள இணைப்பியின் பண்பியல்புகளை நிர்ணயம் செய்யும் திறனையும் உள்ளடக்கிய (கம்பி) வடம்.

intelligent device :நுண்ணறிவுச் சாதனம்; அறிவார்ந்த சாதனம்.

intelligent terminal intensity : அறிவார்ந்த முனையச் செறிவு.

intelligent transportation infrastructure :நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு : 1996ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டுப் போக்குவரத்துச் செயலர் (அமைச்சர்) ஃபெடரிக்கோ பானா அவர்கள் முன்வைத்த திட்டம். நகர்/புறநகர் நெடுஞ்சாலை மற்றும் திரளான போக்குவரத்துக் கட்டுப்பாடு/ மேலாண்மை சேவைகளை தானியங்கு மயமாக்கும் திட்டம் இது.

interactive fiction : ஊடாடு கதை: ஒருவகை கணினி விளையாட்டு. ஒரு பயனாளர் கணினிக்குச் சில கட்டளைகளைக் கொடுத்து, ஒரு கதையில் தானும் ஒரு கதை மாந்தராகப் பங்கு பெறலாம். பயனாளர் தரும் கட்டளைகள் ஒரளவுக்கு கதையின் நிகழ்வுகளை நிர்ணயிக்க முடியும். பெரும்பாலும் ஒர் இலக்கினை அடைவது கதையின் மையக் கருவாக இருக்கும். அந்த இலக்கை அடைவதற்கான சரியான நடவடிக்கைகளின் வரிசையைக் கண்டறிந்து செயல்படுவதே விளையாட்டின் புதிரான பகுதியாகும்.

interactive link :இடைப் பரிமாற்ற இணைப்பு: ஊடாட்டத் தொகுப்பு.

interactive television : ஊடாடு தொலைக்காட்சி : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர் ஊடாட வகைசெய்யும் ஒரு ஒளிக் காட்சித் தொழில்நுட்பம் (Video Technology). இணையத் தொடர்பு,நேயர் விருப்ப ஒளிக்காட்சி (Video on demand), ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்(Video Conference) போன்றவை ஊடாடு தொலைக் காட்சியின் சில பயன்பாடுகளாகும்.

interactive video disk : இடைப்பரிமாற்ற ஒளிக்காட்சி வட்டு: ஊடாடு ஒளிக் காட்சி வட்டு.

interapplication communication : பயன்பாடுகளுக்கிடையேயான தக வல்தொடர்பு : ஒரு நிரல் இன்னொரு நிரலுக்குச் செய்தி அனுப்பும் செயல்பாடு. (எ-டு) சில மின்னஞ்சல் நிரல்கள், பயனாளர் அஞ்சலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதில் குறிப்பிட்டுள்ள ஒர் இணையத் தளத்தைச் சொடுக்கிப் பார்வையிட அனுமதிக்கின்றன. பயனாளர் சொடுக்கியதும், இணைய உலாவி அக்குறிப்பிட்ட இணையத் தளத்தை தானாகவே பெற்றுத் தருகிறது.

Inter Block Gap (IBG) :தொகுதி இடைவெளி.

inter connected network : சேர்த்தினைப் பிணையம்.

inter connected ring: சேர்த்திணைப்பு வளையம்.

Inter link : தொடுப்புறவு; தொடுப்பிணைப்பு

inter process communication : பணியிடைத் தகவல் தொடர்பு.

inter record gap (IRG): ஏட்டிடைவெளி.

interleaved memory :இடைப்பின்னல் நினைவகம் : கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு.மையச்செயலியானது ஒரு பைட்டை அணுகியபின்,அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக,ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.

Interface Message Processor(IMP):இடைமுக செய்திச்செயலி.

intermediate code generator:இடைநிலைக் குறிமுறை உருவாக்கி.

intermediate language(IL):இடைநிலை மொழி:பொதுவாக,ஒரு கணினி மொழி உயர்நிலை மொழியாகவும்,செயல்படுத்த வேண்டிய இலக்கு மொழி எந்திர மொழியாகவும் இருப்பதுண்டு.அதாவது,மொழிமாற்றிகள் (compilers)பெரும்பாலும் உயர்நிலைக் கணினி மொழி நிரல்களை எந்திர மொழிக்கு மாற்றியமைக்கின்றன.ஒருசில உயர்நிலை மொழி மாற்றிகள் முதலில் அசெம்பிளி மொழிக்கு மாற்றிப் பின் எந்திரமொழிக்கு மாற்றுகின்றன.இதில் அசெம்பிளி மொழி இடைநிலை மொழியாகப் பயன்படுகிறது.

intermediate tool:இடைநிலைக் கருவி.

intermittent:விட்டு விட்டு:தகவல் சமிக்கை அல்லது தொலைபேசி இணைப்பு தொடர்ந்து கிடைக்காமலும் அதேவேளையில் துண்டிக்கப் படாமலும் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் விட்டுவிட்டுச் செயல்படுதல்.

internal and external:அகம்-புறம்.

Internal document:அகநிலை ஆவணம்.

internal or external command:அகக்கட்டளை அல்லது புறக்கட்டளை.

internal schema:அகப்பொழிப்பு; அக உருவரை:ஒரு தரவுத் தளத் திலுள்ள கோப்புகள்-அவற்றின் பெயர்கள்,அவற்றின் இருப்பிடம்,அணுகும் முறைகள்,தகவல் தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு.அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற முப்பொழிப்புக் கட்டுமானம்.கொடாசில்(CODASIL),டிபிடீஜி(DBTG) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளில் உள்ள பொழிப்புடன் தொடர்புடையது அகப்பொழிப்பு ஆகும்.பகிர்ந்தமை தரவுத்தளத்தில்,வெவ்வேறு இருப்பிடங்களில் வேறு வேறு அகப்பொழிப்புகள் இருக்க முடியும்.

international data links:பன்னாட்டுத் தரவு இணைப்பு.

International Forum for Information Technology in Tamil(INFITT):உலகத் தகவல் தொழில் நுட்பத் தமிழ்மன்றம்.சுருக்கமாக"உத்தமம்"என வழங்கப்படுகிறது.

international network:உலகளாவிய பிணையம்; பன்னாட்டுப் பிணையம்.

International Tele-communications பnion:பன்னாட்டுத் தொலைத் தொடர்புக் குழுமம்; சர்வதேச தொலை தொடர்புச் சங்கம்: பொதுத் துறை மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கான பரிந்துரைகள் மற்றும் தர வரையறைகள்-இவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும்,பன்னாட்டு அரசுகளின் கூட்டமைப்பு.

Internet: இணையம் :உலகம் முழுவதிலுமுள்ள பிணையங்களின் தொகுப்பு.பிணையங்கள் தமக்குள்ளே டீசிபீ/ஐபீ நெறிமுறைத் தொகுப்புகளின் அடிப்படையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.இணையத்தின் இதயமாக விளங்குவது,பெரிய கணுக் கணினிகள்(Nodes)அல்லது புரவன் கணினிகளை(Hosts)இணைக்கும் அதிவேகத் தகவல் தொடர்புத் தடங்களாலான முதுகெலும்பு(Back bone)ஒத்த அமைப்பே ஆகும். அமெரிக்க நாட்டுப் பாதுகாப்புத்துறை 1969இல் உருவாக்கிய ஆர்ப்பாநெட், இணையத்தின் ஊற்றுக் கண்ணாகும்.அனுப்போர் ஏற்படினும் ஆர்ப்பாநெட் முற்றிலும் அழிந்து போகாவண்ணம் உருவாக்கப்பட்டது.பிட்நெட், யூஸ்நெட்,யுயுசிபீ மற்றும் என்எஸ்எஃப்நெட் ஆகியவை ஆர்ப்பாநெட்டுடன் காலப்போக்கில் இணைந்து விட்டன.

Internet access:இணைய அணுகல்:இணையத்துடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.இருவகையில் இயலும்.முதல் வழிமுறை தொலை பேசி+இணக்கி மூலம் ஒர் இணையச் சேவையாளரின் வழியாகத் தொடர்பு கொள்ளுதல்.வீட்டுக் கணினிகளிலிருந்து பெரும்பாலான பயனாளர்கள் இந்த முறையிலேயே தொடர்பு கொள்கின்றனர்.இரண்டாவது வழிமுறை: தனிப்பட்ட இணைப்புத் தடம்(dedicated line)மூலம் ஒரு குறும்பரப்புப் பிணையத்தை இணையத்துடன் இணைத்தல்.பிணையத்தில் இணைக்கப் பட்ட கணினிகளில் பயனாளர் தொடர்புகொள்வர்.பெரும் நிறுவனங்கள் இத்தகு இணைப்புகளைப் பெற்றுள்ளன.தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்ட கருவி மூலமும் இணையத்தை அணுக முடியும்.இன்னும் பரவலாகப் புழக்கத்தில் வரவில்லை.

internet access device:இணைய அணுகல் சாதனம்:இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும்,சமிக்கைகளை திசைப்படுத்தவும், இணைப்பு நேரத்தின்படி கட்டணம் கணக்கிடவும் பயன்படும் கருவி. ஒன்றுக்கு மேற்பட்ட தொலைதூரப் பயனாளர்கள் ஒரே நேரத்தில் இணையத்தை அணுக வழி செய்யும்.

Internet account:இணையக் கணக்கு: பயனாளர் ஒருவர் இணைய இணைப்புக்காக இணையச் சேவையாளரிடம் பதிவு செய்து கொள்ளல். அவர்கள் தரும் பயனாளர் பெயர்(username),நுழைசொல்(password)மூலமாக இணையத்தை அணுக முடியும்.பீபீபீ(Point To Point)மூலம் இணைய அணுகல், மின்னஞ்சல் போன்ற சேவைகள் கிடைக்கும்.

Internet Architecture Board: இணையக் கட்டுமானக் கழகம்:ஐசாக் (ISOC)எனப்படும் இணையச் சமூக அமைப்பின்(Internet Society)ஒரு குழு.இணையத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமான நோக்கங்களுக்கு பொறுப்பாக விளங்குகிறது.தர வரையறை செயலாக்கங்களில் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் பணியையும் செய்கிறது.தலைப்பெழுத்துக் குறும் பெயர் ஐஏபி(IAB).

Internet backbone:இணைய முதுகெலும்பு:இணையம் என்பது பிணையங்களின் பிணையம்(Network of Networks).ஒரு நாட்டிலுள்ள உள்ளூர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்துடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அதிவேகப் பிணையம். வரலாற்றுப் போக்கில் பார்த்தால்,இணையத்தின் முன்னோடியான என்எஸ்எஃப்நெட் (NSFNet)அமெரிக்க நாட்டின் முதுகெலும்புப் பிணையமாகத் திகழ்ந் தது.தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation)நடத்தி வந்த அனைத்து மீத்திறன் கணினி மையங்களும்(Super Computer Centers) இந்த முதுகெலும்புப் பிணையத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும் தத்தமது முதுகெலும்புப் பிணையங்களை நடத்தி வருகின்றனர்(எ-டு)எம்சிஐ,ஸ்பிரின்ட், இந்தியாவில் விஎஸ்என்எல் மற்றும் தொலைதொடர்புத் துறை (பிஎஸ்என்எல்)முதுகெலும்புப் பிணையங்களை நிறுவியுள்ளன.

Internet broadcasting:இணைய அலைபரப்பு:இணையம் வழியாக கேட்பொலி(Audio)மற்றும் ஒளிக்காட்சி(Video)தகவல்களைப் பரப்புதல்.இது வலைபரப்பு (Webcasting)என்றும் அழைக்கப்படுகிறது. இணைய அலைபரப்பு என்பது வழக்கமான வானொலி நிலையங்கள் இணையம் வழியாக ஒலிபரப்புச் செய்வதையும் உள்ளடக்கியதே. இணையத்தில் மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் நிலையங்களும் உள்ளன. இணையம் வழி ஒலிபரப்பாகும் பாடல்களை ரியல் ஆடியோ(Real Audio) என்னும் மென்பொருள் உதவியுடன் கேட்கலாம்.ஒளிக்காட்சி அலைபரப்பை ரியல் பிளேயரில் காணலாம்.எம்போன்(MBONE)என்பது இணைய அலைபரப்பில் ஒரு முறை.

Internet browser:இணைய உலாவி.

Internet business:இணைய வணிகம்.

Internet call:இணைய அழைப்பு.

Internet connection:இணைய இணைப்பு.

Internet connection wizard: இணைய இணைப்பு வழிகாட்டி.

Internet draft:இணைய நகலரிக்கை:இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப்.(IETF-Internet Engineering Task Force)தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம்.எந்த நேரத்திலும் இதனைத் திருத்தலாம்;மாற்றலாம்.திருத்தமோ மாற்றமோ இல்லையெனில் ஆறுமாத காலத்துக்கு இந்த ஆவணம் செல்லுபடி ஆகும். ஒர் இணைய நகலறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் எனில்,அதனை ஒர் ஆர்எஃ பிசியாக(RFC-Request for Comment)மேம்படுத்தலாம்.

Internet directory:இணைய தகவல் தொகுப்பு.

Internet Engineering Steering Group:இணையப் பொறியியல் வழி காட்டும் குழு:இணையக் கழகத்தின்(Internet Society-ISOC)உள்ளேயே ஐஏபியுடன்(Internet Architecture Board)இணைந்து, இணையப் பொறியியல் முனைப்பு குழு(IETF-Internet Engineering முன்வைக்கும் தர வரையறைகளை மதிப்பாய்வு செய்யும்,

Internet Explorer:இண்டர்நெட் எக்ஸ்புளோரர் :மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்திய இணைய உலாவி மென்பொருள்.விண்டோஸ் 95/98/எம்இ/என்டி/2000 மற்றும் மெக்கின்டோஷ் முறைமைகளில் செயல்படும் பதிப்புகள் பயன்பாட்டில் உள்ளன.பிந்தைய பதிப்புகள்,வலைப்பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ள மேம்பட்ட வடிவமைப்பு நுட்பங்கள்,அசைவூட்டக் கூறுகள்,ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள் மற்றும் ஜாவா குறுநிரல்களை அடையாளங்கண்டு செயல்படுத்தும் வல்லமை பெற்றவை.

Internet gateway:இணைய நுழைவி; இணைய நுழைவாயில்: ஒர் இணைய முதுகெலும்புப் பிணையத்துடன் இன்னொரு பிணையத்தை இணைப்பதற்கு உதவும் சாதனம்.பெரும்பாலும் இத்தகைய சாதனம் இப்பணிக்கென தனித்தொதுக்கப்பட்ட ஒரு கணினியாகவோ,ஒரு திசைவி (Router)யாகவோ இருக்கும்.இணைய முதுகெலும்புப் பிணையத்திற்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிற பிணையங்களுக்கும் இடையேயான நெறிமுறை நிலைமாற்றம்(Protocol Conversion), தகவல் மொழிபெயர்ப்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்களை இந்த நுழைவிகள் கவனித்துக் கொள்கின்றன.ஒரு நுழைவி இணையத்தில் ஒரு கணுவாகக்(Node)கருதப்படுகிறது.

internet group memi arship protocol:இணையக் குழு உறுப்பினர் நெறிமுறை: ஐபீ புரவன்கள்(IP hosts)பயன்படுத்தும் ஒரு நெறிமுறைத் தொகுதி.இவற்றுடன் இணைக்கப்பட்ட பிற பல்பரப்பு திசைவிகளுக்கு(Multicast Routers)தமது புரவன் குழு உறுப்பினர் தகுதியை அறிவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது.

Internet language:இணைய மொழி.

Internet Information Server:இண்டர் நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன்(Webserver)மென் பொருள்.ஹெச்டீடீபீ.(http-Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வையவிரிவலை ஆவணங்களை(www documents)இணையத்தில் வினியோகம் செய்யும்.பல்வேறு பாதுகாப்புச் செயல்கூறுகளை உள்ளடக்கியது.வலைப் பக்கங்களில் சிஜிஐ நிரல்களை அனுமதிக்கிறது.கோஃபர்(Gopher)மற்றும் எஃப்டீபீ வழங்கன்களை(FTP Servers)ஏற்கிறது.

Internet nodes:இணையக் கணுக்கள்.

Internet options:இணையக் விருப்பத் தேர்வுகள்.

Internet phone:இணைய பேசி.

Internet protocol:இணைய நெறி முறை.

Internet Relay Chat:இணையஅரட்டை அரங்கம்.

Internet Research Steering Group:இணைய ஆய்வு வழிகாட்டுங் குழு: இணைய ஆய்வு முனைப்புக் குழுவினை(Internet Research Task Force - IRTF)நிர்வகிக்கும் அமைப்பு.

Internet Research Task Force:இணைய ஆய்வு முனைப்புக் குழு: இணையக் கட்டுமானக் கழகத்துக்கு (AB) இணையம் தொடர்பான நீண்ட காலப் பரிந்துரைகளை முன் வைக்கும் தன்முனைப்பு அமைப்பு.

Internet security : இணையப் பாதுகாப்பு : இணையத் தகவல் பரிமாற்றத்தில் தகவல் சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு)வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்று அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி ஒரு பொருளை வாங்குவதில் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக இணையம் வழியாக அனுப்பப்படும் பற்று அட்டையின் எண்ணை அத்துமீறிகள் எவரும் குறுக்கிட்டு அறிந்து கொள்ளக் கூடாது. அவ் வெண் பதிந்துவைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியிலிருந்து வேறெவரும் நகலெடுத்துவிடக் கூடாது. அந்த பற்று அட்டை எண்ணை அதற்குரிய நபர்தான் அனுப்பினாரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதை அனுப் பியவர் பின்னாளில் தான் அனுப்பவில்லை என்று மறுதலிக்க வழிியிருக்கக் கூடாது.

Internet Service Provider (ISP) : இணையச் சேவை நிறுவனம் ; இணையச் சேவை வழங்குவோர்; இணையச் சேவை மையம்.

Internet society : இணைய சமூகம் : இணையக் கூட்டுறவுச் சங்கம் : இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம் படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக்

244

Internet telephone

கட்டுமானக் கழகம் (ஐஏபி), இதன் ஒர் அங்கமாகும். தவிரவும், இணையச் சமூக அமைப்பு இணையச் சமூக செய்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஐநெட் (INET) மாநாடுகளை நடத்தி வருகிறது.

Internet Software Consortium : இணைய மென்பொருள் கூட்டமைப்பு : இணையம் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கி அவற்றை வைய விரிவலை மற்றும் எஃப்டீபீ மூலம் இலவசமாக உலகுக்கு வழங்கும் ஆதாய நோக் கில்லாத அமைப்பு. டிஹெச்சிபீ (DHCP - Dynamic Host Configuration Protocol) போன்ற இணையத் தர வரையறைகளை உருவாக்கியதிலும் இந்த அமைப்புக்குப் பங்கு உண்டு.

Internet talk radio : இணையப் பேச்சு வானொலி : வானொலியில் ஒலி பரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போன்று இணையத்தில் பதிவிறக்கம் செய் வதற்கு ஏற்ற வகையில் வெளியிடப் படுகின்ற ஒலிக்கோப்புகளிலான நிகழ்ச்சிநிரல். வாஷிங்டனிலுள்ள தேசிய தாளிகை மாளிகையில் இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இருக்கும். 30 நிமிட நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ஒலிக் கோப்புகள் 15 எம்பி வட்டு இடத்தை எடுத்துக் கொள்ளும்.

Internet time : இணைய நேரம்

Internet telephone : இணையத் தொலைபேசி :பொதுத் தொலை தொடர்புக் கட்டமைப்பைப் பயன் படுத்தாமல் இணையத்தின் வழியாக இரண்டுபேர் பேசிக் கொள்ளும் முறை. இரு முனையிலும் ஒரு கணினி, ஓர் இணக்கி (modem), இணையத் தொலைபேசி மென் பொருள் இருப்பின் இணையம் வழியாகத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவும், பெறவும், பேசிக் கொள்ளவும் முடியும்.

Internet television : இணையத் தொலைக்காட்சி :இணையம் வழியாக அலைபரப்பாகும் தொலைக் காட்சியின் கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள்.

Internet tools : இணையக் கருவிகள்

Internet traffic : இணையப் போக்கு வரத்து.

Internet work : இணைப்பிணையம் : ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும்பரப்புப் பிணையங்களுக்கிடையேயான தகவல் தொடர்பைக் குறிக்கும்.

Internet worm : இணையப் புழு :நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத்தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை நிலைகுலையச் செய்தது. யூனிக்ஸ் இயக்க முறைமையிலிருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த நச்சுநிரல் ஊடுருவித் தீங்கு விளைவித்தது. கார்நெல் (Cornell) பல் கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் ஒருவரின் குறும்புத்தனத்தில் உருவானதே இந்த இணையப் புழு நிரலாகும்.

InterNIC : இன்டர்நிக் : இணையப் பிணையத் தகவல் மையம் என்ற பொருள்படும் Inter Network Information Centre என்ற தொடரின் சுருக்கம். களப் பெயர்களையும் ஐபீ முகவரிகளையும் பதிவு செய்யும் பணியை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. இணையத்தைப் பற்றிய தகவலைப் பரப்பும் பணியையும் செய்கிறது. அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம். (National Science Foundation), எடீ&டீ, ஜெனரல் அட்டாமிக்ஸ் (General Atomics), நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் இன்க் ஆகிய நிறுவனங்கள் பங்கு கொண்ட கூட்டமைப்பாக இன்டர் நிக் 1993ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இன்டர்நிக்கின் மின்னஞ்சல் (pseudi info@internic.net. : இணையத் தளம்: http://www.internic.net

interplanetory internet : கொள்களுக்கிடையிலான இணையம்.

interpolate : இடைமதிப்பீடு; இடைக் கணிப்பு : ஒரு வரிசையான மதிப்புகளில் தெரிந்த இரண்டு மதிப்புகளுக்கு இடைப்பட்டமதிப்பினைக்கணக்கிடல்.

interpret ஆணைமாற்று : 1. கணினிக்கான ஒரு கூற்றை அல்லது ஒர் ஆணையை பொறிமொழி வடிவில் மாற்றி அதனைச் செயல் படுத்துதல். 2. ஒரு கணினி மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை, ஒவ்வொரு கூற்றாக பொறி மொழியில் மொழி பெயர்த்து அதனை நிறை வேற்றுவது. ஒட்டு மொத்த நிரலையும் பொறி மொழிக்கு மாற்றம் செய்து, பிறகு தனியாக பொறி மொழி நிரலை இயக்கிக் கொள்ளும் மொழிமாற்று (Compile) முறைக்கு மாற்றானது. interpreted language : ஆணை மாற்று மொழி : எழுதப்பட்ட நிரலை ஒவ்வோர் ஆணையாக பொறி மொழிக்கு மொழிபெயர்த்து உடனுக்குடன் இயக்கும் முறை கொண்ட கணினி மொழி. பேசிக், லிஸ்ப், ஏடிஎல் ஆகிய மொழிகள் பொதுவாக ஆணை மாற்று மொழிகள் எனப்படுகின்றன. ஆனாலும், பேசிக் மொழி நிரலை பொறி மொழிக்கு ஒட்டுமொத்தமாக மொழிபெயர்த்து இயக்கும் மொழி மாற்றிகளும் (Compiler) உள்ளன.

interprocess communication : பணிகளிடை தகவல் தொடர்பு :ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்றவல்ல கணினி முறைமைகளில் இரண்டு பணிகளுக் கிடையே அல்லது செயலாக்கங்களுக்கிடையே தகவல் தொடர்பை நிகழ்த்தும் முறை. குழாய் (pipes), அணுகல்குறி (semaphores), பகிர்வு நினைவகம், சாரைகள் (Queues), சமிக்கைகள் மற்றும் அஞ்சல்பெட்டி எனப் பல்வேறு முறைகளில் இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

interrupt, automatic : தானியங்கு குறிக்கீடு; தானியங்கு இடைமறிப்பு.

interrupt controller : குறுக்கீடு கட்டுப்படுத்தி

interrupt-driven processing : குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம் :ஒரு குறுக்கீடு (interrupt) மூலம் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நடைபெறும் செயலாக்கம். கோரிக்கை நிறை வேற்றப்பட்டபின் மையச் செயலகம் (CPU) அடுத்த செயலை நிறை வேற்றத் தயாராக இருக்கும். அடுத்து செய்யவிருக்கும் பணி முன்பு விட்டு வந்த பணியாகவோ, இன்னொரு குறுக்கீடு மூலம் உணர்த்தப்படும் பணியாகவோ இருக்கலாம். பயனாளர் விசைப் பலகையில் ஒரு விசையை அழுத்துவது, நெகிழ் வட்டகத்தில் ஒரு வட்டினைச் செருகியதும் அது தகவல் பரிமாற்றத்துக்கு தயார் நிலையில் இருத்தல் போன்றவை குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கங்களாகும்.

interruption : குறுக்கீடு

interruption, machine : எந்திரக், குறுக்கீடு; எந்திர இடைமறிப்பு.

intraware : அக இணைய மென் பொருள் : ஒரு குழுமத்தின் அக இணையத்தில் (Intranet) பயன் படுத்தப்படும் குழு மென்பொருள்/ இடை மென்பொருள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மின்னஞ்சல், தகவல் தரம், பணிப்பாய்வு, மற்றும் உலாவிப் பயன்பாட்டுத் தொகுப்புகளை உள்ளடக்கியவை.

intrinsic font :உள்ளுறை எழுத்துரு  :பெரிதாக்கல் சிறிதாக்கல் எதுவுமின்றி அப்படியே ஒரு பிட் படிமமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உருவளவும், வடிவமைப்பும் அமைந்த ஒர் எழுத்துரு.

intruder ; அத்துமீறி : ஒரு கணினியில் அல்லது ஒரு கணினிப் பிணையத்தில் பொதுவாகத் தீங்கெண்ணத்துடன் அனுமதியின்றி நுழைகின்ற ஒரு பயனாளர் அல்லது அத்துமீறி நுழைகின்ற ஒரு நிரல்.

.in.us  : இன்.யுஎஸ் : இணையத்தில் ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

invalid : செல்லாத: பிழையான; தவறான பொருந்தாத : 1. கணினியில் உள்ளீடு செய்யப்படுகின்ற ஏற்றுக் கொள்ளவியலாத மதிப்பு. (எ-டு) எண்வகை மதிப்புக்குப் பதிலாக எழுத்துவகை மதிப்பை உள்ளீடு செய்தல். 2. ஒரு நிரலில் தவறான தருக்க முறையில் எழுதப்பட்ட பிழையான கட்டளை. விடையும் பிழையானதாக இருக்கும்.

invalid media : முறையாண்மை ஊடகம்; பொருந்தா ஊடகம்.

inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பில் ஏடுகள் 3,7,19,24,32 ஆகியவை நிறம் என்ற புலத்தில் சிவப்பு என்னும் மதிப்பைக் கொண்டுள்ளன. நிறம் என்ற புலத்திற்கான தலைகீழ் பட்டியலில் (அல்லது வரிசைப்பட்டியல் -Index) ஒரு ஏடு சிவப்பு என்ற நிறப்பெயரையும் 3,7,19,24,32 என்கிற ஏட்டுக் குறி யெண்களையும் கொண்டிருக்கும்.

inverted - list database :தலைகீழ்ப் பட்டியல் தரவுத் தளம் : உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் தகவல்களின் ஒத்திசைவு, ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவது கடினம். தலைகீழ்ப் பட்டியல் அட்டவணையில் இடை வரிசைகள் (அல்லது ஏடுகள்) ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் வரிசையாக்கங்களின் மூலம் எவ்வித வரிசை முறை ஆக்கப்பட்டிருப்பினும் இது மாறாது. இரு அட்டவணைகளுக்கிடையே சுமத்தப்படும் தருக்கமுறை இணைப்பு, நிபந்தனை அடிப்படையிலும் தரவுத் தளத்தை வரிசைப்படுத்தலாம். எந்தப் புலத்தையும் எத்தனை புலங்களையும் தேடு புலமாகக் கொள்ளலாம். தேடு புலம் தனித்தோ பல சேர்ந்தோ இருக்கலாம். போலிகை (Duplicate) ஏடுகள் இருக்கக் கூடாது, உறவுடைய இரு அட்டவணைகளுக்கு இடையேயான ஒருங்கிணைவு (integrity) கட்டாயம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. அட்டவணைகளோ, வரிசையாக்கக் கோப்புகளோ பயனாளருக்குப் புரியாது.

invert selection : ஏனையவற்றை தேர்வு செய்.

invoice : விலைப்பட்டி.

10. SxS : ஐஓ.சிஸ் : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொடக்க முறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள. மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்-டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBlO.COM என்றழைக்கப்பட்டது. கணினித் திரை, விசைப் பலகை, நெகிழ் வட்டகம், நிலை வட்டகம், நேரியல் துறை மற்றும் நிகழ்நேரக் கடிகாரம் போன்ற புறச்சாதனங்களுக்கான சாதன இயக்கிகளைக் கொண்டிருக்கும்.

lo exception : உ/வெ விதிவிலக்கு.

IP : ஐபீ : இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர், டீசிபி/ஐபி நெறிமுறையின் ஓர் அங்கமாக இருந்து செயல்படு வது. தகவல்/செய்திகளை பொதி களாகப் பிரித்து அனுப்பும் பணியை யும் மறுமுனையில் பொதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மூலத் தகவலைக் கொணரும் பணியையும் செய்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரி யத்தில் அடுக்கில் பிணைய அடுக் கில் (Netwck Layer) இது செயல்படுகிறது.

IP multicasting : ஐபீ குழுவாக்கம் : குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழு வாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப் படையில் டீசிபீ/ஐபீ பிணையமாக மாற்றியமைக்கும் முறை. புரவன் கணினிகள் (Hosts) குழுவாக்கிய செய்தித் தொகுதிகளை அனுப்பும்/ பெறும். இலக்கின் முகவரியில் ஒற்றை ஐபி முகவரிக்கும் பதிலாக ஐபீ புரவன் குழு முகவரிகளைக் கொண்டிருக்கும். ஒரு புரவன் என் பது ஒரு குழுவின் உறுப்பினராகக் கருதப்படும். இணையக் குழு மேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol) இதனை நெறிப்படுத்தும்.

IPng : ஐப்பிங்; அடுத்த தலைமுறைக் கான இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol next generation என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும் பெயர். இணைய நெறிமுறையின் (Internet Protocol) ஒரு வடிவம். மூல இணைய நெறி முறையை (IP) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. சிறந்த பாது காப்புக் கொண்டது. ஐபீ முகவரி முந்தையதைவிட நீளமானது; 16 பைட்களால் ஆனது.

IP spooting : ஐபீ ஏமாற்று ; ஒரு கணினி அமைப்புக்குள் அத்துமீறி நுழையும் பொருட்டு பொய்யான அனுப்புநர் ஐபி முகவரியை இணையத் தகவல் தொடர்பில் செருகும் செயல்.

IP switching : ஐபீ இணைப்பாக்கம் : இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறு வனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையில் (Asynchronous Transter Mode-ATM) அதிவேகத்தில் அனுப்ப வழிசெய்கிறது.

IPv6 : ஐபீவி6 : இணைய நெறிமுறை பதிப்பு 6 என்று பொருள்படும் Internet Protocol Version 6 67 6T தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். அடுத்த தலைமுறை இணைய நெறிமுறையாக, இணையப் பொறி யியல் முனைப்புக்குழு (Internet Engineering Task Force) 1995 செப்டம்பர் 2-ல் பரிந்துரைத்த நெறி முறை. இதன் முந்தைய பெயர் ஐப்பிங் (IPng).

IPX/SPX : ஐபீஎக்ஸ்/எஸ்பீஎக்ஸ் : நாவெல் நெட்வேர் பிணைய முறைமையில் பயன்படுத்தப்படும் பிணைய நெறிமுறை. பிணைய (Network) மற்றும் போக்குவரத்து (Transport Layer) அடுக்குகளில் செயல்படும் நெறிமுறை. டீசிபீயும் ஐபீயும் இணைந்த டீசிபி/ஐபீ நெறி முறைக்கு இணையானது.

.iq : ஐகியூ : ஓர் இணைய தளம் ஈராக் நாட்டைச் சேர்ந்தது என்ப தைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர். .ir : ஐஆர் : ஒர் இணைய தள முகவரி. ஈரான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

IRGB : ஐஆர்ஜிபி : அடர்வுச் சிவப்பு பச்சை நீலம் என்று பொருள்படும் (Intensity Red Green Blue) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். முதன் முதலில் ஐபிஎம்மின் சிஜிஏ (Colour Graphics Adapter) அட்டைகளில் பயன்படுத்தப்பட்ட நிறக் குறியீட்டு முறை. அதன் பிறகு இஜிஏ (Enhanced Graphics Adapter) மற்றும் விஜிஏ (Video Graphics Adapter) அட்டைகளிலும் அது தொடர்ந்தது. வழக்கமான 3 துண்மி (பிட்) ஆர்ஜிபி நிறக் குறியீட்டில் (எட்டு நிறங்களைக் குறிக்கும்) நான்காவதாக ஒரு துண்மியைச் சேர்த்து (நிறத்தின் அடர்த்தியைக் குறிக்க) 16 நிறங்கள் குறிப்பிடப் பட்டன. சிவப்பு, பச்சை, நீல நிறச் சமிக்கைகளின் அடர்த்தியை ஒரே சீராக அதிகரித்துப் புதிய நிறங்கள் பெறப்படுகின்றன.

IRL : ஐஆர்எல் : மெய்யான வாழ்க்கையில் எனப் பொருள்படும் In Real Life என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் நிகழ்நிலை (on-line) பயனாளர்கள் பயன்படுத்தும் சொல். குறிப்பாக, மெய்நிகர் (Virtual) உலகில் இணைய உரையாடல், இணைய அரட்டை, மெய்நிகர் நடப்பு (Virtual Reality) இவற்றுக்கு மாற்றாகப் பொருள் உணர்த்தக் குறிப்பிடப் படும் சொல்.

IRQ : ஐஆர்கியூ : குறிக்கீட்டுக் கோரிக்கை என்று பொருள்படும். Interrupt Request என்ற தொடரின் சுருக்கம். வின்டெல் (விண்டோஸ் இன்டெல்) கணினிகளில் இயலக்கூடிய வன்பொருள் குறுக்கீடுகளின் (Hardware Interrupts) தொகுதியில் ஒன்றை ஒர் எண்ணால் அடையாளம் காணும் முறை. எந்தக் குறுக்கீட்டு கையாளியைப் (Interrupt Handler) பயன்படுத்த வேண்டும் என்பதை ஐஆர்கியூ எண் உணர்த்துகிறது. ஏடீ பாட்டை(AT bus), ஐஎஸ்ஏ மற்றும் இஐஎஸ்ஏ -களில் 15 ஐஆர்கியூக்கள் உள்ளன. நுண்தடக் கட்டுமானத்தில் (Micro Channel Architecture) 255 ஐஆர்கியூக்கள் உள்ளன. ஒவ்வொரு சாதனத்துக்கான ஐஆர்கியூ இணைப்புக் கம்பி அல்லது டிப் நிலைமாற்றி (DIP Switch) களில் நிலையாகப் பிணைக்கப்பட்டிருக்கும். விஎல் பாட்டை (VL Bus) மற்றும் பீசிஐ உள்ளக பாட்டை (PCI Local Bus) ஆகியவை அவற்றுக்கே உரிய குறுக்கீட்டு முறைமைகளைக் கொண்டுள்ளன. குறுக்கீடுகள் குறுக்கீட்டு எண்களாக மாற்றப் படுகின்றன.

IRQ conflict : ஐஆர்கியூ முரண்: ஐஆர்கியூ மோதல் வின்டெல் (Wintel) கணினிகளில் இருவேறு புறச் சாதனங்கள் ஒரே ஐஆர்கியூ மூலமாக மையச் செயலகத்தின் சேவையைக் கோருவதனால் உருவாகும் நிலைமை, ஐஆர்கியூ முரண், கணினியின் சீரான செயல்பாட்டைத் தடுக்கின்றது. (எ-டு) ஒரு கணினியில் நேரியல் துறை (Serial Port}யில் இணைக்கப்பட்ட சுட்டி (Mouse) மையச் செயலகத்துக்கு ஒரு குறுக்கீட்டை அனுப்புகிறது. ஆனால் அதே குறுக்கீட்டு எண் இணக்கி (modem) அனுப்பும் குறுக்கீட்டைக் கையாளும் நிரலைச் சுட்டுகிறது எனில் கணினிச் செயல்பாட்டில் குழப்பமே மிஞ்சும்.

irrational number:அல்பின்ன எண்: இரண்டு முழு எண்களின் விகிதமாகக் குறிப்பிட முடியாத ஒரு மெய்யெண். (எ-டு) 3, π e. ஆங்கிலத்தில் எதிர் மறைக்கு un, im, ir, non போன்ற முன்னொட்டுகள் உள்ளன. வடமொழியில் அ, நிர்,துர் போன்ற முன்னொட்டுகள் உள்ளன. அது போலத் தமிழிலும் அல்லாத என்று பொருள் தரும் அல் என்னும் முன்னொட்டை(prefix) பயன்படுத்தலாம்.

.is : ஐஎஸ் : ஒர் இணைய தளம் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

1ᏚᎪᏢl ஐசாப்பி:" ஐஎஸ்ஏபிஐ இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வரில் இயங்கும் (IIS) பின்னிலைப் பயன்பாடுகளுக்குரிய உயர்திறன் இடைமுகங்களை மிக எளிய வழியில் உருவாக்க இது உதவுகிறது. ஐசாப்பி தனக்கென ஒர் இயங்குநிலைத் தொடுப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது. சிஜிஐ (CGI-Common Gateway Interface) வரையறுப்புகளை விடவும் கூடுதல் திறன்மிக்கது எனக் கருதப்படுகிறது.

ISA slot : ஐஎஸ்ஏ செருகுவாய் : ஐஎஸ்ஏ (ISA - Industry Standard Architecture) தர வரையறைப்படி அமைந்த புறச் சாதனத்துக்கான ஒர் இணைப்புத் துறை. 80286 (ஐபிஎம் பீசி/ஏடீ) தாய்ப்பலகையில் பயன் படுத்தும் பாட்டைக்காக உருவாக்கப்பட்டது.

ISDN terminal adapter : ஐஎஸ்டிஎன் முனையத் தகவி: கணினியை ஐஎஸ்டிஎன் தடத்துடன் இணைக்கும் வன்பொருள் இடைமுகம்.

ISO/OSI model : ஐஎஸ்ஓ / ஓஎஸ்ஐ மாதிரியம்: ஐஎஸ்ஓ தரப்படுத்தலுக்கான பன்னாட்டு அமைப்பு (International Organisation for Standardization); ஓஎஸ்ஐ - திறந்தநிலை முறைமை சேர்த்திணைப்பு (Open Systems Interconnection). இரு கணினிகள் ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தின் வழியாக தகவலைப் பரிமாறிக் கொள்வதில் அடங்கியுள்ள ஊடாடல் வகைப்பாடுகள், சேவைநிலைகள் ஆகியவற்றைத் தரப்படுத்தும் ஒர் அடுக்குமுறை கட்டுமானம். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் கணினிகளுக்கிடையே யான தகவல் தொடர்பினை ஏழு அடுக்குகளாகப் பிரிக்கிறது. ஒரு நிலையின் மீது எழுப்பப்பட்ட இன்னொரு நிலையென, ஏழுநிலைகளைக் கொண்டுள்ளது. ஏழு அடுக்குகளில் முதலாவதாகக் கீழேயுள்ள அடுக்கு கணினி வன்பொருளுடன் தொடர்பு கொள்வதை மட்டுமே கவனித்துக் கொள்கிறது. ஏழாவதாக உள்ள மேலடுக்கு பயன்பாட்டு நிரல் நிலையில் மென்பொருள் ஊடாட்டங்களைக் கவனித்துக் கொள்கிறது.

isolation : தனிமை.

isolation item: தனிமை உருப்படி

ISP : ஐஎஸ்பீ :இணையச் சேவையாளர் எனப் பொருள்படும் (Internet Service Provider) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைவனங்களுக்கு இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம். சில சேவையாளர்கள் ஒரு நகரில் அல்லது ஒரு வட்டாரப் பகுதியில் மட்டுமே இணையச் சேவை வழங்குவதுண்டு. இன்னும் சில சேவை நிறுவனங்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் சேவை வழங்குகின்றன.

ΙΤ: தகவல் தொழில்நுட்பம்: Information Technology என்பதன் குறுக்கம்.

.it : ஐடீ : ஒர் இணைய தளம் இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

iteration: பன்முறை செய்தல்; திரும்பச் செய்தல்.

iterative statement : மடக்கு கூற்று; மடக்குக் கட்டளை : ஒரு நிரலில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளை மீண்டும் மீண்டும் நிறைவேற்றச் செய்யப் பயன் படுத்தப்படும் ஒரு கூற்று அல்லது கட்டளை அமைப்பு.

எடுத்துக்காட்டு :

பேசிக் மொழி : FOR =I To 10

     PRINT "Welcome" 

ΝΕΧΤ I

சி-மொழி : while (n>0) {

    printf("%d", n); 
    n - - ;

}

IT : ஐடிஐ : நுண்ணறிவு போக்குவரத்து அகக்கட்டமைப்பு என்று பொருள்படும் Intelligent Transportation Infrastructure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

I-time : அ-நேரம் : அறிவுறுத்தல் நேரம் என்று பொருள்படும் Instruction Time என்பதன் சுருக்கம்.

ITR ஐடீஆர் : இணையப் பேச்சு வானொலி என்று பொருள்படும் Internet Talk Radio என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

ITU : ஐடியு : பன்னாட்டுத் தொலைத் தொடர்புச் சங்கம் என்று பொருள் பொருள்படும் International Telecommunication Union என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

ivue : ஐவ்யூ : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு படிமக் கோப்பு வடிவாக்கம். ஒரு படத்தை எவ்வளவு பெரிதாக்கிப் பார்த்தாலும் திரையின் தெளிவு நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் கோப்பு வடிவம்.

i-way : ஐ-வழி; இட-வழி; த-சாலை: தகவல் நீள்நெடுஞ்சாலை (மீ நெடுஞ்சாலை).