கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/L
L1 cache:எல்1 கேஷ்: நிலை 1 இடைமாற்றகம்: இன்டெல் 486 மற்றும் அதைவிட மேம்பட்ட செயலிகளில் உள்ளமைக்கப்பட்டுள்ள இடைமாற்று நினைவகம். நிலை 1 இடைமாற்றகம் பொதுவாக 8கேபி கொள்திறனுள்ளது. ஒற்றைக் கடிகாரச் சுழற்சியில் படித்துவிட முடியும். எனவே தொடக்க காலங்களில் இது பரிசோதிக்கப்பட்டது. இன்டெல் ஐ1486 ஒரேயொரு நிலை 1 இடைமாற்றகம் கொண்டது.பென்டியம் செயலியில் இரண்டு உண்டு. ஒன்று ஆணைகளுக்கு, மற்றொன்று தரவுகளுக்கு.
L2 cache:எல்2 கேஷ்;நிலை2 இடைமாற்றகம்:ஐ1486 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகள் பயன்படுத்திக் கொள்ளும் இடைமாற்று நினைவகம்.இது செயலிக்கு அருகில் தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டுள்ள நிலை ரோம் (static RAM) ஆகும்.நிலை 2 இடைமாற்றகம் பொதுவாக 128 கேபி முதல் 1 எம்பி வரை இருக்கலாம்.முதன்மை நினைவகத்தைவிட வேகமானது.ஆனால்,செயலிக்குள்ளே உள்ளமைந்துள்ளநிலை 1 இடைமாற்று நினைவகத்தைவிட மெதுவானது.
Ꮮ8Ꮢ:எல்8ஆர்:பிறகு என்று பொருள்படும் Later என்ற சொல்லை செல்லமாய்ச் சுருக்கமாகக் குறிப்பிடல்,சியூஎல்8ஆர் (See you Later) என்பதைப் போன்றது.மின் அஞ்சல்,யூஸ்நெட் செய்திக் குழுக்களில் தற்காலிகமாக விடைபெறும் போது பயன்படுத்தப்படுவது.
.la:.எல்.ஏ:ஓர் இணையதள முகவரி லாவோஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
lab hours:ஆய்வு நேரம்.
lable,header:தலைப்புச்சிட்டை.
lable identifier:சிட்டை அடையாளம் காட்டி.
lable,trailer:முன்னோட்டச்சிட்டை.
lands:சமதளங்கள்:குறுவட்டுகளில் 1 எனும் பிட்டைக் குறிக்கும்.குழி(pit) 0-வை குறிக்கும்.
landscape:அகண்மை.
landscape mode:பரப்புத்தோற்றப் பாங்கு: அகண்மைப் பாங்கு: ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம்.நீள்மைப் பாங்கு Portrait எனப்படும்.
landscape format:அகண்மை வடிவமைப்பு: பரப்புத்தோற்ற உருவமைவு.
landscape monitor:அகண்மைத் திரையகம்; பரப்புத்தோற்றக் காட்சித்திரை:உயரத்தைவிட அகலம் அதிகம் இருக்கும் கணினித் திரையகம். இதுபோன்ற திரை உயரத்தைக் காட்டிலும் அகலம் 33 சதவீதம் அதிகம் இருக்கும்.ஒரு தொலைக்காட்சித் திரையின் நீள அகல வீதங்களை ஒத்திருக்கும். landscape printing:அகலவாக்கில் அச்சிடுதல்.
lansel mail bag:கையளவு மின்அஞ்சல் கருவி.
language and script:மொழியும் வரிவடிவும்.
language,assembly:தொகுப்புமொழி; சில்லுமொழி;சிப்புமொழி.
language, basic:அடிப்படை மொழி.
language checker:மொழி சரிபார்ப்பி; மொழி திருத்தி.
Language,Common Business Oriented: பொதுத் தொழில் சார்ந்த மொழி.COBOL மொழியின் விரிவாக்கப் பெயர்.
language,high level:உயர்நிலை மொழி.
language independent platform:மொழிசாராப் பணித்தளம்.
language,low level:அடிநிலை மொழி.
language,machine:பொறி மொழி.
language,object:இலக்கு மொழி.
language,query:வினவு மொழி.
language,source:ஆதார மொழி;மூலமொழி.
language tools:மொழியாளும் கருவிகள்
'laptop computer:மடிக்கணினி.
last in first out:கடைபுகு முதல் விடு: ஓர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழிமுறை.ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள்களில்(சாப்பாட்டுத் தட்டுகள்)கடைசியாக வைக்கப்பட்ட பொருளைத்தான் முதலில் எடுப்போம்.ஒரு சாரையில்(queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் முறைக்கு (first in first out) மாறானது.
last modified:இறுதியாகத் திருத்தப்பட்டது.
latest:அண்மை.
large icons:பெரிய சின்னங்கள்.
large model:பெரிய மாதிரியம்: இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் ஆணைகள் மற்றும் தகவல்கள் இரண்டுமே 64 கிலோபைட்டு களைவிட அதிகமாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்த்து 1 மெகா பைட்டுகளைவிடக் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தகவல் கட்டமைப்பும் 64 கிலோ பைட்டுகளைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும்.
largest main frame computing capacity: உயர்ஆற்றல் பெருமுகக் கணினித்திறன்.
laser font:லேசர் எழுத்துரு;
laser disk:ஒளிவட்டு,லேசர் வட்டு.
laser print:ஒளி அச்சு.
LaTex or LATEX:லேடெக்ஸ்: லெஸ்லி லேம்போர்ட் (Leslie Lamport)நிறுவனம் (TeX) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைத்த ஓர் ஆவண உருவாக்க மென்பொருள். உரைப்பகுதியின் தலைப்பு,உள்ளடக்கம் போன்று உரை உறுப்புகளுக்குரிய மிக எளிய கட்டளைகள் மூலம் ஆவணத்தின் தோற்றத்தைக் காட்டிலும் ஆவண உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்த லேட்டெக்ஸ் உதவுகிறது. launcher:ஏவி,தொடக்கி:மேக்சஎஸ் இயக்க முறைமையில்,அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளையும்,நிரல்களையும்,பயனாளர் ஒற்றைச்சுட்டிச் சொடுக்கில் இயக்கவகை செய்யும் ஏவு நிரல்.
.la.us:.எல்.ஏ.யுஎஸ்:ஓர் இணையதள முகவரி அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
layered panel:அடுக்குப் பாளம்.
layered interface:அடுக்குநிலை இடைமுகம்: கணினி வன்பொருளுக்கும் அதில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளுக்கும் இடையே ஒன்று அல்லது மேற்பட்ட நிலைகளில் இருந்து செயல்படக் கூடிய நிரல்கூறுகள்.முடிக்க வேண்டிய பணிகளுக்கேற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பயன்பாட்டையும் அது செயல்படும் வன்பொருளையும் நேரடித் தொடர்பின்றி பிரிப்பதே அடுக்குநிலை இடைமுகத்தின் நோக்கம்.முடிவில் இதுபோன்ற இடைமுகம்,ஒரு நிரலை வெவ்வேறு வகைக் கணினிகளில் இயங்கச் செய்வது சாத்தியமாகும்.
layout,character:எழுத்து உருவரை.
lazy evaluation:சோம்பல் மதிப்பாய்வு; மடிமதிப்பாய்வு:தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம்.மிகப்பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தகவல் கட்டமைப்புகளை சரியான நேரத்தில் திறன்மிக்க முறையில் கையாள்வதற்கு மடிமதிப்பாய்வு முறை உதவுகிறது.
.lb:எல்பி:ஓர் இணையதள முகவரி லெபனான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
.lc:எல்சி: ஓர் இணையதள முகவரி செயின்ட் லூசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
LCD projector:எல்சிடி படப்பெருக்கி: நீர்மப் பழகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள்படும் Liquid Crystal Display Projector grairp தொடரின் சுருக்கப் பெயர்.ஒரு கணினியின் ஒளிக்காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி மூலம் பெரிய திரையில் படமாகக் காட்டும் கருவி.
lead ion battery:ஈய அயனி மின்கலன்: மின்சக்தியைச் சேமித்து வைக்கும் சாதனம், வேதியல் சக்தியை மின்சாரச் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அமில ஊடகத்தில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அயனிகள் பாய்கையில் மின்னுற்பத்தி நடைபெறுகிறது.
leadless chip carrier:இணைப்பிலா (சில்லு) சிப்புச் சுமப்பி:பலகையில் சிப்புகளைப் பொருத்தும் ஒரு வழிமுறை.சிப்பினை பலகையில் இணைக்க கால்கள் போன்ற பின்கள் கிடையாது. சாதாரணத் தொடர்புகளே இருக்கும்.சிப்பு ஒரு பொருத்து வாயில் (socket) பொருத்தப்பட்டிருக்கும்.பொருத்துவாயின் அடிப்பகுதியில் தொடர்புகள் இருக்கும்.அதன் மூலம் மின்இணைப்புக் கிடைத்துவிடும். இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சிப்பு பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.
learning partner programme:கல்விப் பங்காளர் நிரல்;கல்விப் பங்காளர் நிகழ்ச்சி.
least significant bit:மீக்குறை மதிப்புத் துண்மி: ஒன்று அல்லது மேற்பட்ட பைட்டுகள் கொண்ட ஓர் இரும எண்ணில் குறைந்த மதிப்பு (value)உள்ள துண்மி(பிட்) பொதுவாக வலது ஓரத்தில் உள்ளது.
least significant character:மீக்குறை மதிப்பு எழுத்து:ஒரு சரத்தில் வலது ஓரத்தில் உள்ள எழுத்து.எல்எஸ்சி(LSC)என்பது தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
LED printer:எல்இடி அச்சுப்பொறி: ஒளி உமிழ் இருமுனைய அச்சுப் பொறி என்று பொருள்படும் Light Emitting Diode Printer என்ற தொடரின் சுருக்கச் சொல்.எல்இடி,லேசர், எல்சிடி அச்சுப்பொறிகளின் முக்கியமான வேறுபாடு ஒளி மூலம் ஆகும்.எல்இடி அச்சுப்பொறிகளில் ஒளி உமிழும் இருமுனையங்களின்(Diodes)கோவை(Array) பயன்படுத்துகின்றன.
left arrow:இடது அம்புக்குறி.
left justification:இடது ஓரச்சீர்மை: சொல்செயலி,கணினிப் பதிப்பகப்பணிகளில் உரையைத் தட்டச்சு செய்து,இடப்புற ஓர இடைவெளியை ஒட்டி ஒருசீராக வரிகளை அமைத்தல்.வரிகளின் வலப்புற ஓரங்கள் சீராக இருப்பதில்லை.
left justified:இடப்புற ஓர்ச்சீர்மை.
legacy:மரபுரிமை;மரபுவழி:கொஞ்ச காலத்துக்கு முன்பு நிலவிய ஆவணங்களை அல்லது தகவல்களைப் பற்றியது.ஒரு செயலாக்கத்தில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது.இந்த மாற்றத்தின் காரணமாக, பழைய தகவல் கோப்புகளைப் புதிய முறைமைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
legacy data:மரபுவழித் தகவல்:ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏற்றுக் கொள்ளும் நிறுவனம்,இருக்கும் தகவலை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது.
legacy hardware:பேற்று வன்பொருள்:
legacy system:மரபுவழி முறைமை:ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்கும்.புதிய பதிப்புகளை நிறுவும்போது மரபுவழி முறைமைகளுடன் ஒத்திசைவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.(எ-டு) இருக்கின்ற வணிகப் பரிமாற்ற விற்று வரவு ஏடுகளை,புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விரிதாள் மென்பொருள், செலவும் நேரமும் அதிகம் எடுத்துக்கொள்ளும் புதிய வடிவமாற்றம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுமா? பெரும்பாலான மரபு வழி முறைமைகள் பெருமுகக் கணினி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் அவை கிளையன்/வழங்கன் கட்டுமானம் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன.
legend:படக்குறிப்பு: ஒரு வரைகலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி.ஒரு வரைபடத்தில் அல்லது இயல்படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்குவதாக இருக்கும்.
Lempel ziv algorithm:லெம்பல் ஜிவ் படிமுறை:தகவல் கோப்புகளை அவற்றின் உள்ளடக்கத்திற்குப் பங்கமின்றி அளவினைச் சுருக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணிதப் படிமுறைத் தருக்கம்.
length,block:தொகுப்பு நீளம்;தொகுதி நீளம்.
length,fixed block:மாறாத் தொகுதி நீளம்.
length,record:ஏட்டின் நீளம்.
'length record,fixed:மாறாத் தொகுதி நீளம்.
less time:குறைந்த காலம்.
letter:எழுத்து மடல்.
letterbomb:கடிதக் குண்டி:பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம்.சில வேளைகளில் நச்சுநிரல் (virus) மடலில் மறைந்திருக்கலாம். பெறுபவரின் கணினியில் மறைந்திருந்து தாக்கும் ட்ரோஜான் குதிரை நச்சுநிரலாக இருக்கலாம்.சில வேளைகளில் மடலின் செய்தியே மிகப் பெரிதாக இருந்து அஞ்சல்பெட்டியை நிரம்பி வழியச் செய்யலாம்.
letter translation:எழுத்து மொழிமாற்றம்.
level,access:அணுகு மட்டம்;அணுகு நிலை.
level address,zero:பூச்சிய நிலை முகவரி; அடிநிலை முகவரி.
level language,hígh:உயர்நிலை மொழி.
level language,low:அடிநிலை மொழி.
lexicon analyser:சொற் பகுப்பான்.
..lib.us:லிப்.யுஎஸ்:ஓர் இணையதள முகவரி, அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நூலகத்துக்குரியது என்பதைச் சுட்டும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
library function:உள்ளிணைப்பு செயற்கூறு:நூலகச் செயல்கூறு.
licence policy:உரிமக் கொள்கை.
license agreement:உரிம ஒப்பந்தம்; ஒரு மென்பொருள் விற்பனையாளருக்கும் ஒரு பயனாளருக்கும் இடையேயான ஒரு சட்ட ஒப்பந்தம்.மென்பொருள் தொடர்பாக பயனாளருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடும்.இந்த உரிம ஒப்பந்தம் பயனாளர் மென்பொருள் தொகுப்பை பிரிக்கும்போதே நடைமுறைக்கு வந்துவிடுகிறது.
licensing key:உரிம விசை;உரிமத் திறவி; உரிமத் திறவுகோல்:உரிமம் பெற்ற ஒரு மென்பொருளை நிறுவும் போது, நுழைசொல்லாகப் பயன் படும் ஒரு சிறிய எழுத்துச்சரம்.உரிமம் பெற்ற மென்பொருளை சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் உரிமத் திறவுகோலான இந்துழை சொல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது.
light dots:ஒளிப்புள்ளிகள்.
lightest:மிகு ஒளிர்மை;மிகவும் லேசான.
light pen:ஒளிப்பேனா:ஓர் உள்ளிட்டுச் சாதனம்.கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஓர் எழுத்தாணி.இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களைச் சுட்டி,எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழுத்தித் தேவையானதைத் தேர்வு செய்யலாம்.அல்லது எழுத்தாணியால் திரைப்பரப்பைத் தொட்டுத் தேர்வு செய்யலாம். இது,சுட்டி மூலம் தொட்டுச் சொடுக்குவதற்கு இணையானது.
lighting:ஒளியூட்டு.
light source:ஒளி மூலம்.
light sensitive:ஒளி உணர்வு;ஒளி உணரி.
light weight directory access protocol: குறைச்சுமை கோப்பக அணுகு நெறிமுறை: இது ஒரு பிணைய நெறிமுறை.டீசிபி/ஐபி நெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டது.எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது.கணினியிலுள்ள தகவல் குவிப்பைத் தேடி பயனாளர் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது தொடர்புக்கான பிற தகவல் இவைபோன்ற ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைப் பெறுவதற்கான ஒற்றைக் கருவியை இந்த நெறிமுறை பயனாளர்களுக்கு வழங்குகிறது.
light weight internet person schema: குறைச்சுமை இணைய நபர் திட்ட வரை: குறைச்சுமைக் கோப்பக அணுகு நெறிமுறையில், பயனாளர் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தகவலைப் பெற்றுத் தருவதற்கான வரன்முறை.
LIM EMS:லிம் இஎம்எஸ்:லோட்டஸ்/இன்டெல்/மைக்ரோசாஃப்ட் விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும்.Lotus/Intel/ Microsoft Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
limiter:வரம்பி.
limit to list:வரம்புப் பட்டியல்.
linear addressing architecture:தொடரியல் முகவரியிடல் கட்டுமானம்: ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம்.இதன்படி, முகவரியிடத்தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவக இருப்பிடங்களும் ஒரு தனித்த வரையறுத்த முகவரியைப் பெற்றுள்ளன.
linear list:தொடரியல் பட்டியல்: உறுப்புகளின் வரிசைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியல்.இப்பட்டியலில் முதல் உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப்பினைத் தொடர்ந்து அடுத்ததாக இடம் பெறும்.கடைசி உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப்பின் முகவரியைப் பெற்றிருக்கும்.
line art:கோட்டு ஓவியம்.
line-based browser:வரி அடிப்படையிலான உலாவி ஒரு வலை உலாவி.இதில் வரைகலைப் படங்களைக் காண இயலாது.உரைப்பகுதிகளை மட்டுமே காணமுடியும்.செல்வாக்குப் பெற்ற வரி அடிப்படையிலான உலாவி லின்ஸ்க் (Lynx)ஆகும்.
line cap:வரி முடி:குறிப்பாக போஸ்ட்ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் ஒரு வரித் துண்டம் அச்சிடப்படும்போது அவ்வரித்துண்டம் முடித்து வைக்கப்படும் முறை.
line concentration:இணைப்பு குவியமாக்கம்/ஒருமுகமாக்கம்:பல்வேறு உள்ளிட்டுத் தடங்களைக் குறைந்த எண்ணிக்கையிலான வெளியீட்டுத் தடங்களில் செலுத்துவதற்கான வழிமுறை.
line join:வரி இணைப்பு: குறிப்பாக ஒரு போஸ்ட்ஸ் கிரிப்ட்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் இரண்டு வரித் துண்டங்கள் அச்சிடப்படும்போது இணைக்கப்படும் முறை.
line load:இணைப்புச் சுமை: 1.தகவல் தொடர்பில்,ஒரு தகவல் தொடர்புத் தடத்தின் உச்சக் கொள்திறனுக்கும் நடப்பில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளுக்கும் இடையேயான விகிதமாக அளக்கப்படுகிறது.2. மின்னணுவியலில் ஒரு மின்னிணைப்பு சுமந்து செல்லும் மின்னோட்டத்தின் அளவு.
line noise:இணைப்பு இரைச்சல்: ஒரு தகவல்தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள்.தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போல வடிவெடுக்கும்.ஓர் இலக்கமுறை (digital) இணைப்பில்,இரைச்சல், தகவலைப் பெறும் முனையில் உள்ள சாதனம் சரியான தகவலைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும்.
lines of code:குறிமுறை வரிகள்: ஒரு நிரலின் நீளத்தை அளவிடும் முறை. சூழ்நிலையைப் பொறுத்து,ஒரு குறிமுறை வரி என்பது நிரலின் ஒவ்வொரு வரியையும் குறிக்கலாம்(வெற்று வரிகள்,விளக்கவுரை உட் பட).சிலவேளைகளில் கட்டளை வரிகளைமட்டும் குறிக்கும்.அல்லது ஒரு கட்டளைக் கூற்றினைக் குறிக்கலாம்.
line of sight transmission:நேர் பார்வைச் செலுத்துகை.
line printer controller:கட்டுப்படுத்தி.
line out:வெளிசெல் இணைப்பு.
lineup icons:சின்னங்களை வரிசைப் படுத்து.
linguistics:மொழியியல்:மனித மொழிகளைப் பகுப்பாய்வு செய்தல். மொழியியலுக்கும் கணினி அறிவியலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இலக்கணம்,சொல்தொடர் அமைப்பு,மொழிக் கொள்கை மற்றும் இயற்கைமொழிச் செயலாக்கம் ஆகியவை இரு இயல்களுக்கும் பொது.
linguistic knowledge:மொழியியல்அறிவு. linguistic theories:மொழியியல் கோட்பாடுகள்.
link adapter:தொடுப்புத் தகவி.
link attribute:தொடுப்புப் பண்புக்கூறு.
link designator:தொடுப்புக்குறிசுட்டி.
link name:தொடுப்புப் பெயர்.
link reference:தொடுப்புத்தொடர் குறிப்பி.
link resource:தொடுப்பு ஆதாரம்:இணைப்பு வளம்.
link type:தொடுப்பு வகை.
linkeage:தொடுப்புகை.
linked object:தொடுப்புப் பொருள்.
Linked Talk Manager:தொடுப்புடைய அட்டவணை மேலாளர்.
linker:தொடுப்பி;இணைப்பி:ஒரு நிரலின் மொழிமாற்றப்பட்ட (compiled) கூறு நிரல்களையும் தரவுக் கோப்புகளையும் தொடுத்து,இயக்குறு (executable) நிரலாக மாற்றும் நிரலே தொடுப்பி எனப்படுகிறது.தொடுப்பிக்கு நூலகங்களை உருவாக்குவதுபோன்ற வேறுசில பணிகளும் இருக்கமுடியும்.
links:தொடுப்புகள்.
link tables:அட்டவணைகளைத் தொடு.
link time:இணைப்பு நேரம்:தொடுப்பு நேரம்:1.தொடுப்பு உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம்.2.தொடுப்பு உருவாக்குகின்ற நேரம்.
link time binding:தொடுப்புநேர பிணைப்பு: மொழிமாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங்காட்டி (identifier)க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல்.இதுபோன்ற பணியை மூல நிரலை மொழிமாற்றம் செய்யும் போதோ,நிரலின் இயக்க நேரத்திலோ செய்யமுடியும்.
linux:லினக்ஸ்: 80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உருவாக்கப்பட்ட,யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3.0.ஐ அடிப்படையாகக் கொண்டமுறை coloé & CŞouðub (system kernel),ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லினஸ் டோர்வால்டு என்பவர் உருவாக்கினார்.உலகிலுள்ள எண்ணற்ற ஆர்வலர்களும் லினக்ஸ் உருவாக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர்.இணையம் வழியாக மூல வரைவுடன் இலவசமாக வினியோகிக்கப்படு கிறது.இலவசம் மட்டுமின்றி மூல வரைவினைப் பெற்று எவர் வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்து மேம்படுத்தலாம்.சில நிறுவனங்கள் பின்னுதவிக்கு மட்டும் கட்டணம் என லினக்ஸை வினியோகிக்கின்றன.கட்டறு மென்பொருள் அமைப்பு (Free Software Foundation) லினக்ஸில் செயல்படக்கூடிய ஏராளமான ஜிஎன்யூ பயன்கூறுகளை உருவாக்கியுள்ளது. லினக்ஸ் கெர்னலை வெளியிட்டுள்ளது.
liquid plastics:நீர்மக்குழைமம்.
liquid crystal display panel:நீர்மப் படிகக் காட்சிப் பாளம்.
list box:பட்டியல் பெட்டி;விண்டோஸ் போன்ற வரைகலை பணிச்சூழலில் பயன்படும் ஓர் இயக்குவிசை.விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து பயனாளர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும்.பட்டியல் பெட்டி இருவகையாகத் தோற்றமளிக்கும்.முதல் வகை:தகவலை உள்ளீடு செய்வதற்குரிய உரைப்பெட்டி (Text Box) ஒன்று இருக்கும். அதனை ஒட்டிக் கீழே ஒரு பட்டியல் தோற்றமளிக்கும்.பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் உறுப்பு உரைப்பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளும்.இரண்டாவது வகை உரைப்பெட்டி மட்டுமே இருக்கும்.வலது ஓரத்தில் சிறிய தலைகீழ் முக்கோணப் புள்ளி இருக்கும்.அதைச் சொடுக்கினால்,பட்டியல் விரியும்.பட்டியலிலுள்ள ஓர் உறுப்பை தேர்வுசெய்துகொள்ளலாம். இரண்டுவகை பட்டியல் பெட்டிகளிலும்,பயனாளர் தாமாக எதையும் உள்ளீடு செய்யமுடியாது.
list error:பட்டியல் தவறு.
list rows:பட்டியல் கிடைக்கைகள்.
LISTSERW:லிஸ்ட்செர்வ்:வணிக முறையிலமைந்த மிகவும் செல்வாக்குப் பெற்ற அஞ்சல் பட்டியல்.எல்-சாஃப்ட் பன்னாட்டு நிறுவனம் பிட்நெட்,யூனிக்ஸ் மற்றும் விண்டோஸில் செயல்படும் பதிப்புகளை வெளியிட்டுள்ளது.
listing:பட்டியலிடு.
lithium ion battery:லித்தியம் அயனி மின்கலம்:உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்பு சாதனம்.வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.விலை அதிகமான போதும் மடிக்கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் மிகவும் உகந்ததாய்க் கருதப்படுகிறது. ஏனெனில்,மடிக்கணினிகளில் அதிவேக செயலிகள்,சிடி ரோம் இயக்ககம் போன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான மின்சாரத்துக்கு ஈடுகொடுப்பதிலும்,உயர் சேமிப்புக் கொள்திறனிலும் இது,நிக்கல் கேட்மியம் மற்றும் நிக்கல் உலோக ஹைடிராக்ஸைடு மின்கலன்களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது.
little endian:சிறு முடிவன்:எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும்.(எ-டு) A028 என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறுமுடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து வைக்கப்படும்.இன்டெல் நுண்செயலிகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.இம்முறை பின்னோக்கு பைட் வரிசை என்றும் அழைக்கப்படும்.
live:நேரடி;நிகழ்நேர:1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இணைப்பின் மூலம் பெறமுடியும்.அவ்வாறில்லாமல் அவை உருவாக்கப்படும் போதே அலைபரப்பச் செய்வது. 3.ஓர் ஆவணத்தை அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியை பயனாளர் இணையம் வழி பார்வையிடும் போதே மாற்றியமைக்க வாய்ப்பளிப்பது.
Live 3D:லைவ் 3டி(நிகழ்நேர 3டி): நெட்ஸ்கேப் நிறுவனத்தின் மென்பொருள்.வலை உலாவியுடன் இணைக்கப்பட்ட மெய்நிகர் நடப்பு உருவார மொழி (Virtual Reality Modelling Language)ஆகும்.இணையப் பயனாளர்கள் மெய்நிகர் நடப்பு உலகைப் பார்வையிடவும் ஊடாடவும் அனுமதிக்கும் மென்பொருள்.
live project:நடப்புத் திட்டம்; நேரடிசெய்முறைப் பயிற்சி;நிகழ்நேரத் திட்டம்.
.lk:எல்கே: ஓர் இணையதள முகவரி, இலங்கை நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
loaded line:சுமையேற்று தடம்/ இணைப்பு: தகவல் தொடர்புக்கான கம்பித்தடத்தில் மின்னோட்டத்துக்கு ஏற்ப மாறும் மின்தடையைச் சேர்த்து வீச்சுச் சிதைவினை (Amplitude distortion)குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அலைபரப்பு ஊடகமான கம்பி வடத்தில் சுமைச்சுருணைகளை (loading coils) இணைப்பது.பெரும்பாலும் ஒரு மைல் தொலைவு இடைவெளிகளில் இவை இணைக்கப்படும்.
loader:ஏற்றி.
loader,card:அட்டை ஏற்றி.
loader routine:ஏற்று நிரல்கூறு: இயக்குறு குறிமுறைக் கோப்புகளை நினைவகத்தில் ஏற்றி, இயக்கும் ஒரு நிரல்கூறு.ஓர் ஏற்று நிரல்கூறு இயக்கமுறைமையின் ஓர் அங்கமாக இருக்கலாம் அல்லது இயங்கும் நிரலின் ஒருபகுதியாகவும் இருக்கலாம்.
loading பளுவேற்றம்;ஏற்றம்:நிரலேற்றம்.
local group:உள்ளமை குழு;வட்டாரக் குழு; 1.விண்டோஸ் என்டியிலுள்ள பயனாளர்குழு.குழு உருவாக்கப்பட்டுள்ள பணிநிலையக் கணினியின் வளங்களை மட்டும் கையாளும் உரிமையும் சலுகையும் பெற்ற ஒரு பயனாளர் குழு.பணி நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பயனாளர்கள் பணிநிலைய வளங்களை அணுக வசதியான ஒரு வழிமுறையை வட்டாரக் குழுக்கள் வழங்குகின்றன.2.விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர் இயக்கமுறைமையில் வட்டாரக் குழு என்பது அதன் சொந்தக் களம் (own domain) அமைந்துள்ள வழங்கன்(server)கணினிகளின் வளங்களை மட்டும் அணுக உரிமையும் சலுகையும் பெற்ற பயனாளர்களின் குழு,களத்தின் வெளியேயும் உள்ளேயும் உள்ள பயனாளர்கள், அவர்கள் சார்ந்த களத்தின் வழங்கன்களிலுள்ள வளங்களை மட்டும் அணுக வட்டாரக் குழுக்கள் வாய்ப்பாக உள்ளன.
localhost:உள்ளமை புரவன்:ஒரு டீசிபி/ஐபீ செய்தி அனுப்பப்படும் அதே கணினியை புரவனாக உருவகிக்கும் பெயர்.உள்ளமை புரவனுக்கு அனுப்பப்படும் தகவல் பொட்டலம் 127.0.0.1என்ற ஐபீ முகவரியைக் கொண்டிருக்கும்.ஒரே கணினி கிளையனாகவும் புரவனாகவும் செயல்படும். உண்மையில் அச்செய்தி இணையத்திற்கு அனுப்பி வைக்கப்படமாட்டாது.
localization:வட்டாரமயமாக்கல்: ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல் முறை. (எ-டு).சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணைகளை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்.ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையும் எழுத்துக் குறிமுறை பிற மொழியில் வேறு வரிசையில் அமையலாம்.
local network:வட்டாரப் பிணையம்.
local newsgroups:வட்டாரச் செய்திக்குழுக்கள்: ஒரு நகரம்,ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக்குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப்படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையே கொண்டிருக்கும்.
local reboot:உள்ளமை மீட்டியக்கம்: ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்ட ஒரு கணினியை அதனுள்ளேயே மீட்டியக்குவது.(தொலைப் புரவனிலிருந்தும் மீட்டியக்க முடியும்).
local usenet hierarchy:உள்ளமை யூஸ்நெட் படிநிலை:
local variable:வரம்புறு மாறிகள்;உள்ளமை மாறிகள்:ஒரு நிரலில் ஒரு செயல்கூறு செயல்முறை அல்லது துணைநிரல்கூறு போன்ற ஒரு குறிமுறைத் தொகுதிக்குள் பயன்படுத்தக்கூடிய மாறிகள்.
location,bit:துண்மி அமைவிடம்;பிட் இருப்பிடம்.
locked file:பூட்டிய கோப்பு:1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தகவலை மாற்றியமைத்தல்,புதிய தகவலைச் சேர்த்தல்,இருக்கும் தகவலை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்படும் கோப்பு.2.அழிக்க முடியாத, வேறிடத்துக்கு மாற்ற முடியாத அல்லது பெயர்மாற்ற முடியாத ஒரு கோப்பு.
locked volume:பூட்டிய தொகுதி:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் சேமிப்பகங்களில் எழுத முடியாமல் தடுக்கப்படும் தொகுதி.ஒரு வன்பொருள் கருவி மூலமோ அல்லது ஒரு மென்பொருள் மூலமோ இவ்வாறு பூட்டிவைக்க முடியும்.
logical:தருக்கமுறை: 1.எண்வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை.(எ-டு)ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது,அதன் இறுதி விடை சரி அல்லது தவறு என்கிற ஒற்றை விடையாக இருக்கும்.2.கருத்துருவாக நிலவும் ஒரு கொள்கை அல்லது கோட்பாடு.அதை உண்மையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கியமில்லை.
logical errors:தருக்கப் பிழைகள்.
logical device:தருக்க சாதனம்:ஒரு கணினி அமைப்பில் ஒரு சாதனத்தின் பருவுரு வகையிலான உறவுமுறை எப்படி இருப்பினும் மென்பொருள் முறைமையின் தருக்க அடிப்படையில் பெயர் குறிக்கப்பட்ட ஒரு சாதனம். (எ-டு)எம்எஸ் டாஸ் இயக்கமுறைமையில் ஒற்றை நெகிழ்வட்டு இயக்ககம் ஏ என்றழைக்கப்படும். அதனையே பி என்றும் பெயரிடலாம்.கணினியில் இரு நெகிழ்வட்டகம் இல்லாத போதும் DISKCOPY A: B:என்ற கட்டளை அமைக்கலாம்.இதில் B என்பது தருக்க சாதனமாகச் செயல்படுகிறது.
logic board:தருக்கப் பலகை:தாய்ப்பலகைக்கு அல்லது செயலிப் பலகைக்கு இன்னொரு பெயர்.முற்காலக் கணினிகளில் ஒளிக்காட்சிப் பலகையை(தொடர் (popul Lavo-Analog Board)தாய்ப்பலகையிலிருந்து பிரித்துக்காட்ட இப்பெயர் வழங்கலாயிற்று.
logical data design:தருக்கமுறைத் தரவு வடிவமைப்பு.
logical decision:தருக்கமுறைத் தீர்வு.
logical interface:தருக்க இடைமுகம்.
logical network:தருக்கமுறைப் பிணையம்.
logical shift:தருக்கமுறை நகர்வு.
logical unit:தருக்கமுறை அலகு.
'logic operator:தருக்க இயக்கி;தருக்கச் செயற்குறி.
logic programming:தருக்க நிரலாக்கம்.
logic seaking:தருக்கத் தேடல்.
logic symbol:தருக்கக் குறீயீடு.
logic theorist:தருக்கக் கோட்பாடு.
logic tree:தருக்க மரம்:கிளைபிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும்.மரத்தின் ஒவ்வொரு கிளைக்கணுவும் ஒரு தீர்வுசெய்புள்ளியைக் குறிக்கின்றன.கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறிக்கப்பட்டிருக்கும்.
long filenames:நீண்ட கோப்புப்பெயர்: அண்மைக்கால பீசி இயக்கமுறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98,விண்டோஸ் என்டி மற்றும் ஓஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட,பயனாளருக்கு வாய்ப்புத் தருகிறது.250-க்கு மேற்பட்ட எழுத்துகளில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம். ஆங்கிலச் சிறியஎழுத்து,பெரியஎழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம்.
login security:உள்நுழை காப்பு.
logon file:நுழைமுறை கோப்பு:தொடங்கு கோப்பு:புகுதிகைக் கோப்பு.
lock and teel:தோற்றமும் உணர்வும்': தோற்றம்-செயல்பாடு: ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டைக் குறிக்கும் தொடர்.பெரும்பாலும் இத்தொடர் ஒப்பிட்டுச் சொல்லப் பயன்படுகிறது.(எ-டு) விண்டோஸ் என்டி-யின் தோற்றமும் உணர்வும் விண்டோஸ் 95 போலவே இருக்கிறது.
look in:உள் நோக்கு.
lookup :தேடியறி:விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு.ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தகவலை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்மை மதிப்புகளைக் கொண்ட தேடியறி (Lookup)அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். தேடியறி அட்டவணையில் கிடக்கை (Row) நெடுக்கை (Column)களில் தகவல் பதியப்பட்டிருக்கும்.ஒரு தேடியறி செயல்கூறு (Lookup Function)இந்த அட்டவணையில் கிடைமட்டமாகவோ செங்குத்தாகவோ குறிப் பிட்ட முதன்மை மதிப்பைத் தேடும். அதைக்கொண்டு மூலத்தகவல் அட்டவணையில் அம்மதிப்புக்குரிய சரியான தகவலைக் கண்டு சொல்லும்.
lookup function:தேடியறி செயல்கூறு.
lookup table:தேடல் அட்டவணை.
lookup reference:தேடல் குறிப்பு.
loop configuaration:மடக்கு தகவமைவு;ஒருவகை தகவல் தொடர்பு இணைப்பு முடிவுற்ற மடக்காகச் செயல்படும் நிலையங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு தகவல் தொடர்புத் தடமாக்குதல்.இது போன்ற அமைப்பில், ஒரு நிலையம் அனுப்பும் தகவலை அடுத்திருக்கும் நிலையம் பெறும்.தகவல் தனக்கில்லையெனில் அதனை அடுத்த நிலையத்துக்கு அனுப்பி வைக்கும்.இவ்வாறு,தகவலானது இறுதி இலக்கை அடையும்வரை பயணம் செய்யும்.
loop,control:கட்டுப்பாட்டு மடக்கி.
loop,invariant:மாறாநிலை மடக்கி:ஒரு மடக்குச் செயல் திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது சரி என்ற நிலை மாறாதிருக்கும் ஒரு நிபந்தனை.
loop,nesting:பின்னல் மடக்கு.
loop,ring network:வளைய பிணைய மடக்கி.
loss:இழப்பு.'
loss balancing:இழப்பு ஈடுகட்டல்: 1.அலைபரப்பில் ஒரு சமிக்கை திறனிழக்கும்போது அதனை ஈடுகட்டும் பொருட்டு திறன்பெருக்கல் (amplification)2.ஒரு மதிப்பினை வேறொன்றாகப் பெயர்க்கும்போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்டல்.
low bandwidth:குறுகிய அலைக்கற்றை.
low density:குறைந்த அடர்த்தி.
lowest layer:அடிநிலை அடுக்கு.
low level language:அடிநிலை மொழி: பொறிசார்ந்த மொழி அல்லது மிக்க குறைந்த கட்டுப்பாட்டு ஆணைகளையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி.அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்கும்.
low memory:கீழ் நினைவகம்;அடி நினைவகம்:மீச்சிறு எண்களால் சுட்டப்படும் நினைவக இருப்பிடங்கள்.ஐபிஎம் பீசிகளில் 1 மெகாபைட் நினைவகப் பரப்புக்குள் இருக்கின்ற முதல் 640 கிலோபைட் அளவுள்ள நினைவகப் பகுதி கீழ் நினைவகம் எனப்படுகிறது.கீழ் நினைவகப்பகுதி,ரோம்(RAM)நினைவகத்துக்கென ஒதுக்கப்படுகிறது.எம்எஸ் டாஸ் இயக்கமுறைமையும் பயன்பாட்டுப் புரோகிராம்களும் அப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.
low misconvergence:குறைவான காட்சித் திருப்பம்.
low pass filter:கீழ்க்கற்றை வடிகட்டி. ஒரு குறிப்பிட்ட அலை வரிசைக்குக் கீழேயுள்ள அதிர்வலைகளைக் கடந்து செல்ல அனுமதிக்கின்ற ஒரு மின்னணுச்சுற்று.
low pitch:தாழ் தொனி.
low power microprocessor:குறை திறன் நுண்செயலி.
low quality:தாழ் செறிவு. low voltage:குறைந்த மின்னழுத்தம்;தாழ் மின்னழுத்தம்.
LPT:எல்பீடி:வரி அச்சுப்பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர்.எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப்பொறித் துறைக்(port)கென ஒதுக்கப்பட்ட பெயர்.அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம்.எல்பீடி1,எல்பீடி2,எல்பீடி3 என அவை அழைக்கப்படும்.பிஆர்என் (PRN) என்பதும் அச்சுப்பொறியைக் குறிக்கும் தருக்கநிலைச் சாதனப் பெயராகும்.இதுதான் எம்எஸ் டாஸில் முதன்மை அச்சுநகல் வெளியீட்டுக்கான சாதனமாகக் கொள்ளப்படுகிறது.பெரும்பாலும், எம்எஸ்டாஸில் எல்பீடீ என்பதும் பிஆர்என் என்பதும் ஒன்றாக இருக்கும்.
.lr:எல்ஆர்:ஓர் இணையதள முகவரி, லைபீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
.ls:.எல்எஸ்:ஓர் இணையதள முகவரி, லெசோத்தோ நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
ls:எல்எஸ்:யூனிக்ஸ் இயக்க முறைமையில் ஒரு கட்டளை.நடப்புக் கோப்பகத்திலுள்ள உள்கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கச் செய்யும் கட்டளை. அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பகப் பெயரைக் கட்டளையுடன் குறிப்பிட்டு அதன் உள்ளடக்கத்தைப் பெற முடியும்.இணையத்தில் ஏராளமான எஃப்டீபீ தளங்கள் பலவும் யூனிக்ஸ் முறைமையில் இயங்குபவை என்பதால் அத்தளங்களிலும் இக்கட்டளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
LS-120:எல்எஸ்-120:ஓர் ஒற்றை 3.5 அங்குல நெகிழ்வட்டில் 120 எம்பி தகவலைச் சேமிக்கும் திறனுள்ள ஒரு நெகிழ்வட்டு இயக்ககம். எல்எஸ்120 இயக்ககங்கள் பிற நெகிழ்வட்டு வடிவாக்கங்களுக்கும் ஒத்திசைவானவை.
.lt:எல்டி:ஓர் இணையதள முகவரி லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
.lu.எல்யூ:ஓர் இணையதள முகவரி லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
LU:எல்யூ:தருக்க அலகு எனப்பொருள்படும் Logical Unit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஓர் ஐபிஎம் எஸ்என்ஏ பிணையத்தில் ஒரு தகவல் தொடர்பு உரையாடலின் தொடக்கம் அல்லது முடிவைக் குறிக்கும் புள்ளி.
LUG:எல்யூஜி: Linux Users Group என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.
luggable computer:எடுத்துச்செல் கணினி:கைப்பெட்டிக் கணினி:1980களின் தொடக்கத்தில் அல்லது மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க முதல் கணினிகள்.இந்தத் தொடக்க காலக் கணினிகள் சிஆர்டி அடிப்படையிலான காட்சித் திரைகளைக் கொண்டிருந்தன.20 பவுண்டுக்கு மேல் எடை கொண்டவை.நடுத்தரக் கைப்பெட்டியின் அளவுடையவை.எனவேதான் இப்பெயர் ஏற்பட்டது. lurk:ஒளிவு:பதுக்கம்:ஒரு செய்திக் குழுவில் அல்லது நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் தாம் எதுவும் அனுப்பாமல் கட்டுரைகளையும் செய்திகளையும் பெற்றுக் கொண்டிருத்தல்.
.lw எல்வி:ஓர் இணையதள முகவரி லாத்துவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
.ly:.எல்ஒய்:ஓர் இணையதள முகவரி, லிபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
lynx:லின்ஸ்க்: யூனிக்ஸ் பணித்தளத்தில் செயல்படும் ஒரு வலை உலாவி. உரைப்பகுதிகளை மட்டுமே பார்வையிட முடியும்.
.lzh:எல்இஸ்ட்ஹெச்; லெம்பெல் ஸிவ் மற்றும் ஹகுயாசு படிமுறைத் தருக்கப்படி இறுக்கிச் சுருக்கப்பட்ட காப்பகக் கோப்புகளின் கோப்பு வகைப்பெயர்(File Extension).
LZW compression:எல்இஸ்ட் டபிள்யூ இறுக்கம்:கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதற்கான ஒரு படிமுறைத் தருக்கம் (algorithm).மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரே மாதிரியான சரங்கள் (strings) சில குறிப்பிட்ட குறியீடுகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஜிஆர்எஃப் இறுக்கு முறைக்கும் இதுவே அடிப்படை ஆகும்.