கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/K

K

.ke : .கேஇ : ஒர் இணைய தள முகவரி கென்யா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

kerberos or kerberos : கெர்பராஸ் : எஐடி நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லுபடியாக்க நெறி முறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரிபார்த்து அனுமதிக்கிறது. மறைக்குறியியல் முறையில் தகவல் தொடர்பை மறையாக்கம் செய்கிறது. இணையத்திலிருந்து (http://web.mit.edu/kerbeross/www) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல்வேறு வகையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு மென்பொருள் தொகுப்புடனும் கிடைக்கிறது.

kern : நெருக்கம் : குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக் கோப்பில் எழுத்தமைவில் சமனாக்கம் இயலுகிறது. (எ-டு): கɿ என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும் போது கி எனத் தோற்றமளிக்கும்.

keyboard buffer : விசைப்பலகை இடையகம் : கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல் முறைப்படுத்தப்படுவதற்கு முன் பாக உள்ளிட்டுத் தகவல் இந்த நினைவகத்தில் தங்கியிருக்கும். செயலி மற்றும் புறநிலைச் சாதனங்களுக்கு இடையே நிலவும் செயல்பாட்டு வேக வேறுபாடு காரணமாக இது போன்ற இடைநிலை நினைவகத்தில் உள்ளிட்டு/வெளியீட்டுத் தகவல்களை சேமிக்க வேண்டியுள்ளது.

keyboard enhancer : விசைப்பலகை மேம்படுத்தி : விசைப்பலகையில் அழுத்தும் விசைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு நிரல்கூறினை இயங்க வைக்கமுடியும்.

keyboard layout : விசைப்பலகை உருவரை : ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந்துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண்ணிக்கை (தற்போதைய தர வரையறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை - குவெர்ட்டி (QWERTY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சில நிறுவனங்கள் தம் சொந்த விசைப்பலகை உருவரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. விசைக்கும் அதனோடு தொடர்புடைய எழுத்துக்கும் இடையேயான உறவினை பயனாளர் தம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

keyboard punch : விசைப்பலகை துளை.

keyboard terminal : விசைப்பலகை முனையம். keyboard to - disk system: விசைப்பலகையிலிருந்து - வட்டு முறைமைக்கு

keyboard to - tape system : விசைப்பலகையிலிருந்து - நாடா முறைமைக்கு.

key code : விசைக் குறியெண் : கணினி விசைப்பலகையில் ஒரு குறிப்பிட்ட விசைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித்த குறியெண். இந்த எண்ணைக் கொண்டுதான் எந்த விசை அழுத்தப்பட்டுள்ளது என்பதைக் கணினி அறிந்துகொள்கிறது. ஒரு விசையுடன் மாறாத பிணைப்புக் கொண்டது இந்தக் குறியெண் மட்டுமே. விசையை அழுத்துவதன் விளைவாய்ப் பெறப்படும் எழுத்து, எண், குறிமானம், சிறப்புக் குறிகள் எதுவாயிருப்பினும் அது விசையுடன் நேரடித் தொடர்பு கொண்டதன்று. அது நாமாக நிரல் மூலம் தொடர்புபடுத்திக் கொள்வதாகும்.

key disk : மென்பூட்டு/திறவு வட்டு.

key escrow : கீ எஸ்கிரோ : ஒரு மறையாக்க முறை. அரசு முகமையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித் திறவி (Private key) மூன்றாம் நபர்களுக்கு வழங்கப்படும். அத் திறவி மூலம் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும் செய்திகளை அரசு விரும்பினால் படித்துக் கொள்ள முடியும்.

key-frame : முதன்மைச் சட்டம் : ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானியங்கு அசைவூட்டப்படத்தை உருவாக்கித்தரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

keying - error rate : விசை அழுத்தல் தவறு விகிதம்.

key recovery : திறவி மீட்சி : ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்படி 1998-க்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு மறையாக்க மென்பொருளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.

key, shift : நகர்த்து விசை.

keystroke : விசையழுத்தம் : ஒரு குறிப்பிட்ட எழுத்தை உள்ளீடு செய்யவோ அல்லது ஒரு கட்டளையை நிறைவேற்றும் பொருட்டோ விசைப்பலகையிலுள்ள ஒரு விசையை அழுத்தும் நடவடிக்கை. சில பயன்பாட்டு மென்பொருள்களின் செயல் திறனும் எளிமையும் அதிலுள்ள பொதுவான செயல்பாடுகளை மேற்கொள்ள எத்தனை விசையழுத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றன.

key stroke buffer : விசை அழுத்தல் இடையகம்.

key, user difined function : பயனாளர் வரையறுக்கும் பணிவிசை,

key verifier : விசை சோதிப்பி; விசைச் சரிபார்ப்பி.

keyword : முக்கியச் சொல்; சிறப்புச் சொல்; திறவுச் சொல்; நிர்ணயிக்கப் பட்ட சொல்; கட்டளைச் சொல் : தரவுத் தளங்களில் ஏடுகளிடையே வரிசையாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை. இது, தரவுத் தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.

keyword-in-context : சூழலில்-திறவுச்சொல் : ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப்பகுதியுடன் சுட்டுக் குறிப்பில் பதிவு செய்யப்படும். பெரும்பாலும் ஆவண உரை அல்லது தலைப்புகளில் திறவுச் சொல்லுக்கு முந்தைய அல்லது பிந்தைய சொல் அல்லது சொல் தொடராக இருப்பதுண்டு.

keyword search : திறவுச்சொல் தேடு.

.kh : .கேஹெச் : ஒர் இணைய தள முகவரி கம்போடியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

.ki : .கேஐ : ஒர் இணையதள முகவரி கிரிபேட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

kil : நிறுத்து; முறி; கொல் : 1. ஒரு நிரல் அல்லது இயக்க முறைமையின் ஒரு செயல்பாட்டை இடையிலேயே நிறுத்துதல் அல்லது முறித்தல். 2. கோப்பு மேலாண்மையில் ஒரு கோப்பினை அழித்தல். பெரும்பாலும் அதனை மீட்கும் நம்பிக்கை இல்லமல்.

killer app : அதிரடிப் பயன்பாடு : ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகின்ற செல்வாக்கான மென்பொருள். இந்த மென்பொருள் விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தும். அதுமட்டுமின்றி இதன் விற்பனை காரணமாய் இது செயல்படும் இயக்க முறைமை அல்லது இது செயல்படும் வன்பொருளின் விற்பனையும் அதிகரிக்கும்.

kilobits per second : ஒரு வினாடியில் கிலோ பிட்டுகள் : சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப் படுகிறது. ஒரு பிணையத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் மடங்காக அளவிடப் படுகிறது.

kinesis ergonomic keyboard : கினிசிஸ் சூழலியல் விசைப்பலகை : தொடர்ந்து விசைப்பலகையில் பணியாற்றுவதால் சோர்வும் உலைவும் ஏற்படுத்தாத பணிச்சூழலுக்குகந்த விசைப்பலகை வடிவமைப்பு.

kinetics : இயக்கியல்.

kiosk : கணினி முனையம் : பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம்.

kiosk mode : கணினியகப் பாங்கு..

knowbot : நோபாட்; அறிந்திரன் : அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தகவலைக் கொண்டுள்ள ஒர் ஆவணத்தைத் தேடுதல் - இது போன்ற பணிகளுக்காக அறிந்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

knowledge engineer : அறிவுப் பொறியாளர் : தேவையான அறிவையெல்லாம் தேடிப்பெற்று அவற்றை ஒரு நிரலாக வடிவமைத்து ஒரு வல்லுநர் முறைமையை (Expert System) கட்டமைக்கும் ஒரு கணினி அறிவியலாளர்.

knowledge information processing system : அறிவுத் தகவல் செயற்பாட்டு முறைமை.

korn shell : கார்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளைவரி இடைமுகம். போர்னே (Bourne) மற்றும் சி - செயல் தளங்களிலுள்ள கூறுகளை உள்ளடக்கியது. கார்ன் செயல்தளம் போர்னே செயல்தளத்துடன் முழுமையான ஒத்திசைவு கொண்டது. அதே வேளையில் சி-செயல் தளத்தின் கட்டளைவரி திருத்தல் திறனும் கொண்டது.

.kp : .கேபீ : ஒர் இணைய தள முகவரி வடகொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.kr : .கேஆர் : ஒர் இணைய தள முகவரி தென்கொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

KSR terminal : கேஎஸ்ஆர் முனையம் : விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/ Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தகவலையும் திரைக்காட்சிக்குப் பதிலாக உள்ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும்.

.kw : .கேடபிள்யூ : ஒர் இணைய தள முகவரி குவைத் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ky : .கேஒய் : ஒர் இணைய தள முகவரி கேமான் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

.kz : .கேஇஸட் : ஒர் இணைய தள முகவரி கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.