கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/P

P

package, application : பயன்பாட்டுத் தொகுப்பு

packet assembler/disassembler : பொட்டலச் சேர்ப்பி/பிரிப்பி; பொதிச் சேர்ப்பி|பிரிப்பி : ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்துக்கும், பொட்டல இணைப்பகமல்லாக்கருவிக் கும் இடையிலான ஓர் இடைமுகம்.

packet driver : பொட்டல இயக்கி,பொதி இயக்கி.

packet smigginig : பொதி முகர்தல்.

packet filtering : பொட்டல வடி கட்டல்; பொதி வடிகட்டல் : ஐபி முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத் தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டி களைக் கொண்டுள்ளன. பயனாளர் கள் ஒரு குறும்பரப்புப் பிணையத் துள் நுழையவோ வெளியேறவோ அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் பணியை இவ்வடிகட்டிகள் செய்கின்றன. மின்னஞ்சல் போன்ற தகவல் பொட்டலங்களை அவை அனுப்பப்பட்ட இடத்தின் அடிப் படையில் ஏற்கவோ, புறக்கணிக் கவோ பொட்டல வடிகட்டல் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனியார் பிணையத்தின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

PacKIT: பேக்கிட்: ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினியில் பயன்படுத்தப் படும் ஒரு கோப்பு வடிவாக்கம். மேக் (mac) கோப்புகளின் தொகுதிகளைக் குறிக்கிறது. பெரும்பாலும் அக் கோப்புகள் - ஹஃப்மேன் முறையில் இறுக்கிச் சுருக்கப்பட்டிருக்கும்.

paged memory management unit : பக்க நினைவக மேலாண்மை அகம்: பக்க நினைவக மேலாண்மை அலகு: பல்வேறு மென்பொருள் பயன்பாடு கள் அல்லது மெய்நிகர் நினைவக இயக்க முறைமைகள் பயன்படுத்து கின்ற நினைவகப் பகுதியை அணுகு தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை நிறைவேற்று கின்ற ஒரு மென்பொருள் பாகம்.

page down : கீழ்ப்பக்கம்; இறங்கு பக்கம்.

page down key : கீழ்ப்பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப்பல கைகளில் காணப்படும் அடிப்படை யான விசை. PgDn எனக் குறிக்கப் பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ் வேறு விதமாக இருக்கும். பெரும்பாலான வற்றில் இதை அழுத்தியதும் காட்டி (cursor) ஆவணத்தின் அடுத்த பக்கத் தின் தொடக்கத்தில் நிற்கும். அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரி களைக் கடந்து நிற்கும்.

page, end : முடிவு பக்கம்.

page footer : பக்க முடிப்பு.

page footer key : பக்க முடிப்பு விசை.

page header band : பக்கத் தலைப்புப் பட்டை.

page-image buffer : பக்க-படிம இடையகம் : பக்க அச்சுப் பொறியில் பயன் படுத்தப்படும் நினைவகம். ஒரு பக்கத்திலுள்ள பிட்மேப் படிமத்தை தாங்கியிருக்கும். அச்சுப் பொறியிலுள்ள ராஸ்டர் படிமச் செயலி பக்கத்தை வடிவமைக்கும் அச்சுப்பொறி அப்பக்கத்தை அச்சிடும்.

page-image:file: பக்க-படிமக் கோப்பு: ஒரு பக்கத்தை அல்லது திரைப் படி மத்தை அச்சுப்பொறியோ அல்லது பிற காட்சிச் சாதனங்களோ உருவாக்குவதற்குத் தேவையான குறி முறைகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு.

page layout : பக்க உருவரை.

page layout view button : பக்க உருவரைக் காட்சிப் பொத்தான்.

page number : பக்க எண்.

page orientation : பக்கத் திசையமைவு. நீள்மை ஆண்மை இரண்டில் ஒன்று. page preview : பக்க முன்காட்சி.

page setup/page preview : பக்க அமைவு/பக்க முன்காட்சி.

page size :பக்க அளவு.

pages per minute : பக்கங்கள் ஒரு நிமிடத்தில்: சுருக்கமாக பீபீஎம் (PPM அல்லது ppm) எனக் குறிக்கப்படும். ஒர் அச்சுப்பொறியின் வெளியீட்டுச் செயல்திறனைக் குறிக்கும் அளவீடு. ஒரு நிமிடத்தில் எத்தனை பக்கங்கள் அச்சிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த அளவீட்டை அச்சுப்பொறியைத் தயாரிக்கும் நிறுவனங்களே குறிப்பிடுகின்றன. பக்கம் என்பது வழக்கமான சாதாரணமான (ஏ4) பக்கத்தைக் குறிக்கும். அச்சிடும் பக்கங்களில் அதிகப்படியான வரை கலைப் படங்களோ எழுத்துரு அமைப்புகளோ இருப்பின் அச்சிடும் வேகம் அச்சுப்பொறியில் குறிப்பிட்டுள்ள பீபீஎம் வேகத்தை விட வெகுவாகக் குறைந்திருக்கும்.

page skip : பக்கம் விடுதல், பக்கத் தாவல்.

page Up : மேல் பக்கம், ஏறு பக்கம்.

page up key : மேல் பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப்பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை அழுத்தியும், காட்டி (cursor) ஆவணத்தின் முந்தைய பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளுக்கு முன்னால் சென்று நிற்கும்.

paging memory : பக்கமாக்கும் நினைவகம்.

painter : வரைகலைஞர்; ஒவியர்.

panel, control: கட்டுப்பாட்டுத் பலகம்.

page size : தாள் உருவளவு.

paper source : தாள் வைப்பிடம்

paper tap verifier : காகித நாடா சரி பார்ப்பி, தாள்நாடா சரிபார்ப்புச்சாதனம்.

PAP : பீஏபீ : 1. நுழைசொல் சான்றுறுதி நெறிமுறை என்று பொருள்படும் Password Authentication Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முனைக்கு முனை நெறிமுறையை (point-to-point protocol) பயன்படுத்தும் வழங்கனில் பயனாளர் நுழைய முயலும்போது அவருடைய அடை யாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஒரு வழிமுறை. இதைவிடக் கண்டிப்பான சாப் (CHAP - Challenge Hand - Shake Authentication Protocol) நெறி முறை இல்லாதபோது பீஏபீ மிகவும் பயன்தரும். பயனாளர் பெயரையும் நுழைசொல்லையும் மறையாக்க மின்றி வேறொரு நிரலுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நேரும் போதும் இது பயன்படும். 2. அச்சுப் பொறி அணுகல் நெறிமுறை என்று பொருள்படும் (Printer Access Protocol) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளலாம். ஆப்பிள்டாக் பிணையங்களில் கணினிகளுக்கும் அச்சுப்பொறிகளுக்கும் இடையிலான தகவல் தொடர் பினை மேலாண்மை செய்யும் நெறி முறை ஆகும்.

paper-white : தாள்-வெண்மை : ஒற்றைநிற கணினித் திரையகத்தில் ஒருவகை. வெண்மைநிறப் பின் புலத்தில் கறுப்புநிற எழுத்துகளைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இத்தகைய திரையகங்கள், கணினிப் பதிப்பகம் மற்றும் சொல்செய லாக்கச் சூழல்களில் மிகவும் செல் வாக்குப் பெற்றவை. ஏனெனில், வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்துகள் அச்சிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை இவை தருகின்றன.

paper-white monitor : தாள்-வெண்மைத் திரையகம் : அச்சிட்ட பக்கத் தை ஒத்திருக்கும், வெண்மைநிறப் பின்புலமும் கறுப்புநிற எழுத்து களும் கொண்ட கணினித் திரை யகம். சில உற்பத்தியாளர்கள் தாள்-வெண்மை என்பதை பாண்டுத் தாளில் இருப்பதுபோன்ற இழைக்கப் பட்ட வெண்ணிறப் பின் புலத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.

paradigm : எடுத்துக்காட்டு; மேற் கோள், வாய்பாடு : ஒரு செயலாக் கத்துக்கோ அல்லது ஒரு முறை மைக்கோ மாதிரியத்தை வழங்கக் கூடிய ஒரு சரியான எடுத்துக் காட்டு அல்லது தோரணி.

parallel algorithm : இணைநிலை படிமுறை : ஒரு படிமுறையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படி முறைப் பகுதிகள் செயல்படுமாறு அமைத்தல். இணை நிலைப் படி முறைகள் பெரும்பாலும் பல் செயலாக்க சூழல்களில் பயன் படுத்தப்படுகின்றன.

parallal and serial port : இணை நிலை மற்றும் நேரியல் துறை.

parallel computing : இணைநிலை கணிப்பணி : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண அல்லது ஒரு பணியைச் செய்து முடிக்க பல கணினிகளையோ அல்லது பல செயலிகள் கொண்ட கணினி யையோ பயன்படுத்தும் முறை.

parallel conversation : இணை உரையாடல்.

parallel database : இணைநிலை தரவுத் தளம் : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத் தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தகவல் பரிமாற்றங் கள், உள்ளீடு/வெளியீடு கையாளல், தகவல் இடையக நிறுத்தம் போன்ற தகவல் மேலாண்மைக் கோரிக்கை களை நிறைவேற்ற இவை பயன் படுத்திக் கொள்ளப்படும். ஒரு இணைநிலை தரவுத் தளம், ஏராள மான உடன்நிகழ் பணிகளை பல செயலிகள் மூலமாகவும் பல சேமிப்புச் சாதனங்களிலுள்ள தகவல் களிலிருந்தும் நிறைவேற்றிக் கொள்ளும் திறன்படைத்தது. பல நூறு கிகாபைட் தகவல் சேமிக்கப் பட்டுள்ள தகவல் தளங்களிலும் விரைவான அணுகல் இயல்கிறது.

parallel error : இணைப் பிழை.

parallel operator : இணைநிலை செயற்குறி.

parallel operations: இணைச் செயல் பாடுகள்.

parallel server : இணைநிலை வழங்கன் : வழங்கனின் செயல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒருவகை இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் கணினி அமைப்பு.

parallel transmission : இணைப் பரப்புகை.

parameter-driven : அளபுரு முடுக்கம் : ஒரு நிரல் அல்லது செயல்பாட்டின் இயல்பு அல்லது வெளியீடு, அதற்கு வழங்கப்படும் அளபுருக்களின் மதிப்புகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது.

parameter passing: அளபுரு அனுப்பு கை: நிரலாக்கத்தில் ஒருவகைச் செயலாக்கம். ஒரு செயல்முறை அல்லது செயல்கூறின் அழைப்பு செயல் படுத்தப்படும்போது குறிப்பு அள புருக்களுக்கு மெய்யான அளபுருக்களின் மதிப்புகளைப் பதிலீடு செய்வது.

parameter RAM : அளபுரு ரேம் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களின் தாய்ப்பலகைகளில் மின்கலத் தின் உதவியால் பாதுகாக்கப்படும் சீமாஸ்-ரேமில் உள்ள ஒரு பகுதி. கணினி அமைப்பின் தகவமைவு பற்றிய தகவல் இதில் சேமிக்கப் பட்டிருக்கும். பீரேம் (PRAM) என்று சுருக்கமாகக் கூறுவர்.

parent menu : தலைமைப் பட்டி.

parity : சமன் : சமமாய் இருத்தலைக் குறிக்கும். கணினித் தகவல் பரி மாற்றத்தில் பிழையைச் சோதிக்கும் செயல்முறைக்கு சமன் சரிபார்ப்பு (parity check) என்று பெயர். ஒரு துண்மித் தொகுதி ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அனுப்பப்படும்போது எத்தனை 1-கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு அந்த எண்ணிக்கை ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதைப் பார்த்து 1 அல்லது 0-வை அந்தத் துண்மித் தொகுதியோடு சேர்த்து அனுப்புவர். இந்த 1 அல்லது 0, சமன்துண்மி(parity bit) எனப்படும். பெறும் முனையில் சமன் துண்மி அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட துண்மித் தொகுதி பெறப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். துண்மித் தொகுதி ஒர் எழுத்துக்குறி எனில், செங்குத்து மிகைமைச் சரிபார்ப்பு (vertical redundancy check) என்றும், வேறுவகையான தொகுதி எனில், கிடைமட்ட மிகைமைச் சரிபார்ப்பு என்றும் கூறுவர். இரண்டு இணக்கி களுக்கிடையேயான தகவல் தொடர்பு சமன் சரிபார்ப்பு ஒரு முக்கிய அளபுரு ஆகும். சமன் துண்மி சரியாக இருந்தால் மட்டுமே இரண்டு இணக்கி களும் தகவலைப்பரிமாறிக்கொள்ளும்.

party check, even : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.

parity check, odd : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.

part address : முகவரிப் பகுதி.

pass by address : முகவரி மூலம் அனுப்பல்: ஒரு துணைநிரல் கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம்முறையில் அழைக்கும் துணை நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப்பிடத்தை) அனுப்பி வைக்கும். அழைக்கப்பட்ட துணை நிரல் அளபுருவின் மதிப்பை எடுத் தாளவோ, மதிப்பை மாற்றியமைக் கவோ, அதன் முகவரியைப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.

pass by value : மதிப்பு மூலம் அனுப்பல் : ஒரு துணைநிரல்கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணை நிரலுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைக்கப்பட்ட துணைநிரல் நகல் மதிப்பைப் பயன்படுத்தலாம். மாற்றி யமைக்கலாம். ஆனால் அளபுருவின் மூலமதிப்பை மாற்றியமைக்கமுடியாது.

passive-matrix display: முனைப்பிலா அணி காட்சித் திரை : விலைமலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித் திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப் படுத்தப்படுகின்ற ஏராளமான திரவப்படிகக் கலங்களை (Cells) கொண்டது. ஒரு மின்மப் பெருக்கி ஒரு முழு நெடுக்கை (Column) அல்லது கிடக்கை (Row)யின் படப்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முனைப்பிலா அணித் திரைகள் பெரும்பாலும் மடிக் கணினி கையேட்டுக் கணினிகளில் பயன் படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவை மிகவும் தட்டையாக இருக்கும். ஒற்றைநிற திரைக்காட்சிக்கு இவை தெளிவாக இருக்கும். ஆனால் வண்ணத் திரைக்காட்சி எனில்தெளிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி திரையில் நேரெதிர் நோக்கினால்தான் தெளிவாகத் தெரியும். பிற கோணங்களில் பார்த்தால் தெளிவாக இருக்காது. முனைப்பு - அணி (Active Matrix) திரைக் காட்சிகளில் இக்குறைபாடுகள் கிடையாது. எனினும் முனைப்பிலா அணிக் காட்சித் திரை விலை குறைவானது.

paste : ஒட்டு : ஒர் உரைப்பகுதியை அல்லது ஒரு வரைகலைப் படத்தை ஒர் ஆவணத்திலிருந்து நகலெடுத்து அல்லது வெட்டியெடுத்து அதே ஆவணத்தின் வேறொரு பகுதியில் அல்லது வேறோர் ஆவணத்தில் ஒட்டவைத்தல்.

paste append : புது ஏடாக ஒட்டு.

paste as hyper link: மீத்தொடுப்பாக ஒட்டு.

paste insert : செருகு ஒட்டு.

paste/mix : ஒட்டு/சேர்.

paste special : சிறப்பு ஒட்டு.

path menu : பாதைப் பட்டி : விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல்.

pathname : பாதைப் பெயர் : ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில், நடப்புக் கோப்பகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பினை அணுகக்' குறிப்பிடப்படும் கோப்பகம்/ கோப்புறைப் பெயர்களின் பட்டியல். கோப்பகப் பாதை எனவும் அழைக்கப்படுவதுண்டு. (எ-டு) user work\project\pay.mdb. pattern, bit : பிட் தோரணி.

patterns : தோரணிகள்

pause key : நிறுத்தல் விசை நிறுத்தி வைப்பு விசை, இடைநிறுத்து விசை: 1. ஒரு நிரல் அல்லது கட்டளையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் விசை. அனைத்து வகைவிசைப்பலகைகளிலும் இத் விசை உண்டு. ஒரு நீண்ட பட்டியல் திரையில் வேகமாக மேல்நோக்கி உருளும்போது இந்த விசையைப் பயன்படுத்தி நிறுத்தி நிறுத்தி பட்டி யலைப் பார்வையிடலாம். 2. குறிப் பிட்ட நிரலில், நிரலர் விருப்பப்படி விசைப்பலகையிலுள்ள ஒரு குறிப் பிட்ட விசையை அழுத்தினால் நிரல்/செயல்பாடு தற்காலிமாக நிற்கு மாறு செய்யலாம். குறிப்பாக கணினி விளையாட்டு நிரல்களில் விளை யாட்டை நடுவிலேயே நிறுத்தி வைக்க P என்னும் விசை பயன் படுத்தப்படுவதுண்டு.

pause printing: இடைவிடு அச்சிடல்

pay to play : பணத்துக்குப் பாட்டு

PC-compatible : பீசி-ஒத்தியல்பு: ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/எக்ஸ்டீ மற்றும் பீசி/ஏ.டீ வன்பொருள், மென்பொருள் வரன்முறைகளைக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இதுவே கணினித் தொழில்துறை யில் சொந்தக் கணினிகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறை ஆகிப் போயிற்று. இவை இன்டெல் 80x86 அல்லது அதற்கு ஒத்தியல்பான சிப்புகளில் செயல்பட வல்லவை. இன்றைக்குப் பெரும் பாலான பீ.சி-ஒத்தியல் புக் கணினி கள் ஐபிஎம் அல்லாத நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன. சில வேளைகளில் இவை நகலிகள் அல்லது வார்ப்புகள் (clones) என்றழைக்கப்படுகின்றன. ஐபிஎம் பீசி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC-DOS : பீ.சி-டாஸ் : சொந்தக் கணினிக்கான வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Personal Computer - Disk Operating System என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. தொடக்க காலங்களில் ஐபிஎம்முக் காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ் இயக்க முறைமையை தயாரித்து வழங்கி வந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் சொந்தமாக எம்எஸ் டாஸ் என வெளியிடலாயிற்று. ஐபிஎம் தன் சொந்த இயக்க முறைமையை பிசி-டாஸ் என்ற பெயரில்வெளியிட்டது. எம்எஸ். டாஸ், பீ.சி-டாஸ் இரண்டும் முழுக்க முழுக்க ஒத்திருக்கும். சில பயன்பாட்டு நிரல்களின் கோப்புப் பெயர் மட்டுமே இரண்டிலும் வெவ்வேறாக இருக்கும்.

PCI local bus : பீசிஐ உள்ளகப் பாட்டை : புற உறுப்பு சேர்த்திணைப்பு உள்ளகப் பாட்டை எனப் பொருள்தரும் Pheripheral Component Interconnect Local Bus என்ற தொடரின் சுருக்கம். ஒரு கணினியில் பீசிஐ வகை விரிவாக்க அட்டைகள் 10 வரை பொருத்த முடிகிற உள்ளகப் பாட்டை அமைப்பிற்காக இன்டெல் நிறுவனம் வரையறுத்த வரன்முறை. இப்பாட்டை செயல்பட பிசிஐ வகைச் செருகுவாய்கள் ஒன்றில் பீசிஐ கட்டுப்படுத்தி அட்டை செருகப் பட்டிருக்க வேண்டும். பாட்டையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் சமிக்கை பயணிக்கும் ஒருவகை ஒன்று சேர்ப்பு நுட்பத்தை (Multiplexing Technique) செயலாக்க பீசிஐ வரன்முறை அனுமதிக்கிறது. PCMCIA : பீசிஎம்சிஐஏ : சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கணினி வன்பொருள் உற்பத்தி யாளர்கள் மற்றும் விற்பனையாளர் களின் குழு. பீசி அட்டை அடிப் படையிலான புறச் சாதனங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் செருகு வாய்கள் பற்றிய ஒரு பொதுவான தர வரையறையை உருவாக்க இக்குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக மடிக் கணினி, உள்ளங்கைக் கணினி மற்றும் பிற கையகக் கணினி வகைகளுக் கும், ஏனைய நுண்ணறிவு மின்னணுச் சாதனங்களுக்குமான தர வரையறை இது. 1990இல் முதன்முதலில் வெளியீடு-1 என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்ட, பீ.சி-அட்டைகளுக்கான தர வரையறையும் பீசிஎம்சிஐஏ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது.

PCMCIA connector : பீசிஎம்சிஐஏ, இணைப்பி : 68-பின் உள்ள துளை இணைப்பி (Female Connector). பிசிஎம்சிஐஏ செருகுவாயில் உள்ளது. பிசி-அட்டையிலுள்ள 68-பின் நுழை இணைப்பி (Male Connector) யூடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டது.

PCMCIA slot : பீசிஎம்சிஐஏ செருகு வாய் : கணினியின் கட்டமைப்பில் அதன் புறச்சாதனத்தில் அல்லது பிற அறிவு நுட்ப மின்னணுச் சாதனத்தில் பீசி அட்டை (PC card)யை இணைப்பதற்காக இடம் பெற்றுள்ள ஒரு திறப்பு. பீசி அட்டை செருகுவாய் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC memory card : பீசி நினைவாக அட்டை : 1. ஒரு கணினியின் ராம் நினைவகத்தை அதிகரிக்கின்ற கூடு தல் மின்சுற்று அட்டை. 2. பீசிஎம்சிஐஏ வரையறுத்துள்ள வகை-I சார்நத பீசி அட்டை. இது வழக்கமான நிலைத்த ரேம் சிப்புகளைக் கொண்டிருக்கும். ஒரு சிறிய மின்கலனால் தகவலைக் காப்பாற்றி வைக்கும். கணினிக்குக் கூடுதல் ரேம் நினைவகம் தருவதற்கென வடிவமைக்கப்பட்டது.

PCT : பீசிடி : நிரலைப் புரிந்துகொள் கருவி எனப் பொருள்படும் Programme Comprehension Tool என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இது ஒரு மென்பொருள் பொறிநுட்பக் கருவியாகும். கணினி நிரல்களின் புரிதல் மற்றும்/அல்லது செயல்படு தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

PC/XT : பீசி/எக்ஸ்டி : 1981இல் அறி முகப்படுத்தப்பட்ட மூல ஐபிஎம் சொந்தக் கணினி. இன்டெல் 8088 மையச் செயலகத்தைக் கொண்டது.

PC/XT keyboard : பீசி/எக்ஸ்டீ விசைப்பலகை : ஐபிஎம் சொந்தக் கணினிக்கான மூல விசைப்பலகை திடமானது. நம்பகமானது. 83 விசைகள் கொண்டது. இதில், பீசி/எக்ஸ்டி விசைப்பலகை விசைகளை அழுத்தும்போது ஒரு தட்டச்சருக்கு கிளிக் என்னும் சத்தம் கேட்கும்.

PDA : பீடிஏ : சொந்த இலக்கமுறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்டது. நாட்காட்டி,குறிப்பெடுத்தல், தரவுத் தளம், கணிப்பான் போன்ற சில தனிநபர் பயன்பாடுகளையும் தகவல் தொடர்பு வசதியையும் கொண்டது. பெரும்பாலான பீடி.ஏ-க்கள் விசைப் பலகை, சுட்டி போன்ற உள்ளீட்டுக் கருவிகளுக்குப் பதிலாக பேனா அல்லது அதுபோன்ற சுட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளன. ஆனால் சிலவற்றில் பேனா தவிர தொட்டச்சு செய்யக்கூடிய மிகச்சிறிய விசைப் பலகையும் சேர்த்துப் பயன்படுத்தப் படுகின்றன. தகவலைச் சேமித்து வைக்க, மின்சாரம் அதிகம் தேவைப்படும் வட்டு இயக்ககங்களுக்குப் பதிலாக பளிச்சிடு நினைவகத்தைக் (Flash Memory) கொண்டுள்ளன.

PD-CD drive : பீடி சிடி இயக்ககம்: அழித்தெழுது குறுவட்டு இயக்ககம் எனப் பொருள் படும் Rewriteable DiscCompact Disc Drive என்பதன் சுருக்கும். இது ஒரு சேமிப்புச் சாதனம். ஒரு குறுவட்டு இயக்ககமும், இணைக்கப்பட்ட ஒன்று. அழித்தெழுது ஒளிவட்டுப் பேழைகளில் 650 மெகாபைட் வரை தகவலைச் சேமிக்க முடியும்.

PDD: பீடிடி : கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள் படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறை மையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலைக் கோப்பு. இக் கோப்புகள், அச்சுப்பொறியின் தெளிவு சாரா வடிவமைப்பில் சேமிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அச்சுப் பொறியின் உச்ச அளவு தெளிவு நிலையில் அச்சிடப்படுகின்றன. ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட மூல எழுத்துருக்களை அப்படியே அச்சில் பெறலாம். எனவே பீடிடி ஆவணங்களை அவை உருவாக்கப்பட்ட கணினி அல்லாத பிற கணினிகளிலும் அச்சிட முடியும்.

pdf : பீடிஎஃப்: அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய கையாளத்தகு ஆவண வடிவாக்க (Portable Document Format) முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர். (file extension). ஒரு பீடிஎஃப் கோப்பினை திரையில் பார்வையிட அல்லது அச்சிட, அடோப் அக்ரோபேட் ரீடர் என்னும் இலவச மென்பொருள் உள்ளது.

PDS : பீடிஎஸ் : 1. நேரடி செயலிக் செருகுவாய் எனப் பொருள்படும் Processor Direct Slot என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெக்கின்டோஷ் கணினிகளில் மையச் செயலகத்தின் சமிக்கைகளோடு நேரடியாக இணைக்கக் கூடிய விரிவாக்கச் செருகுவாயைக் குறிக்கிறது. ஒரு கணினியில் செயல் படும் மையச் செயலியைப் பொறுத்து பல்வேறு எண்ணிக்கையிலான பின்கள் மற்றும் பல்வேறு சமிக்கைத் தொகுதி கொண்ட பல்வேறு வகை பீடிஎஸ் செருகுவாய்கள் உள்ளன. 2. இணைநிலை தகவல் கட்டமைப்பு என்று பொருள்படும் Parallel Data Structure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறுக்கம். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் மூலக் கோப்பகத்தில் (Root Directory) மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு. ஆப்பிள் ஷேர் நிரலின்கீழ் பகிர்ந்து கொள்ளப்படும் கோப்பு இது. பல்வேறு கோப்புறைகளின் அணுகு சலுகைத் (Access Privilege) தகவலைக் கொண்டிருக்கும்.

.pe : .பீஇ: ஓர் இணையதள முகவரி பெரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

peak load : உச்சச் சுமை .

peak volume : உச்ச ஒலி அளவு.

.pe.ca : .பீஇ.சி.ஏ :ஓர் இணைய தள முகவரி கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வார்டு தீவுகளைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

pedagogical development: கற்பித்தல் நெறிமுறை.

peep : எச்சரிக்கையொலி.

peer to peer : சம உரிமை, சகாவுக்குச் சகா, சமனிக்குச் சமனி,

peer-to-peer architecture : சம உரிமைக் கட்டுமானம் : தகவல் தொடர்புக்கும் தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரே நிரலை அல்லது ஒரே வகையான நிரலைப் பயன்படுத்துகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் பிணைக்கப்பட்ட ஒரு பிணையம். சமனி (peer) என அழைக்கப்படும் ஒவ்வொரு கணினியும் சமமான கடப்பாடுகளைக் கொண்டவை. பிணையத்தில் ஒவ்வொரு கணினியும் பிறவற்றுக்கு வழங்கனாகச் செயல்படுகின்றன. கிளையன்/வழங்கன் கட்டுமானத்தில் உள்ளதுபோல் ஒரு தனி கோப்பு வழங்கன் இப்பிணையத்தில் தேவையில்லை. எனினும் தகவல் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது கிளையன்/வழங்கன் அமைப்பினைப்போல் செயல்திறன் இருக்காது. இக்கட்டுமானம் சமஉரிமைப் பிணையம் (peer-to-peer network) என்றும் அழைக்கப்படும்.

peer-to-peer communications : சம உரிமைத் தகவல் தொடர்பு : அடுக்கு நிலைக் கட்டுமான அடிப்படையில் அமைந்த ஒரு பிணையத்தில் ஒரே தகவல் தொடர்பு மட்டத்தில் செயல் படக்கூடிய சாதனங்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம். ஒன்று வழங்கன் (server) இன்னொன்று கிளையன் (client) என்கிற பாகுபாடு இதில் இல்லை.

PEL : பீஈஎல் : படப்புள்ளி.

pen computer : பேனாக் கணினி : முதன்மை உள்ளீட்டுச் சாதனமாக விசைப்பலகைக்குப் பதிலாக பேனா (எழுத்தாணி) பயன்படுத்தப்படுகிற கணினி வகை. பேனாக் கணினி பெரும்பாலும் மிகச்சிறியதாக கையடக்கமான சாதனமாக இருக் கும். எல்சிடி திரை போன்ற குறை கடத்தி அடிப்படையிலான தட்டை வடிவ திரையகம் கொண்டவை. பேனா உள்ளீட்டுச் சாதனத்தில் பணியாற்றுவதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனியான இயக்க முறைமையில் செயல்படும். அல்லது இத்தகு சிறப்புப் பயன் சாதனத்துக்கென்றே உருவாக்கப் பட்ட தனிப்பட்ட இயக்க முறைமையில் செயல்படும். சொந்த இலக்க முறைத் துணைவர்கள் (Personal Digital Assistants) எனப்படும் நவீன கணினி வகையின் முன்னோடி மாதிரிகளாக பேனாக் கணினிகள் விளங்குகின்றன.

pentium : பென்டியம் : மார்ச்சு 1993இல் இன்டெல் நிறுவனம், இன்டெல் ஐ486 செயலிக்கு வாரிசாக அறிமுகப்படுத்திய புதிய நுண் செயலி. சிஸ்க் (CISC) அடிப்படையிலான நுண்செயலி. 33 இலட்சம் மின்மப் பெருக்கிகளைக் கொண்டது. 32 பிட் (துண்மி) முகவரிப் பாட்டை, 64 பிட் (துண்மி) தகவல் பாட்டை, உள்ளிணைக்கப்பட்ட இரண்டு 8-கேபி நிலை-1 (L1) இடை மாற்றகம் ஆகியவை கொண்டது. முறைமை மேலாண்மைப் பாங்கு உண்டு. இதன்மூலம் கணினி மையச் செயலகம் தொடர்பிலாப் பணி செய்யும்போதும் எப்பணியுமின்றி வாளா இருக்கும்போதும் சில முக்கிய கணினி உறுப்புகளை மெதுவாக இயக்க அல்லது நிறுத்திவிட நுண்செயலியால் முடியும். தகவல் நம்பகத்தன்மை, செயல்பாட்டு மிகைமைச் சரிபார்ப்பு ஆகிய வசதிகளும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

Pentium Pro : பென்டியம் புரோ : நவம்பர் 1995இல் இன்டெல் வெளியிட்ட 150-200 மெகா ஹெர்ட்ஸ் வேக 32 பிட் (துண்மி) செயலிகளின் குடும்பம். 8086 குடும்பச் செயலிகளின் அடுத்த தலைமுறை செயலிகளாகப் பென்டியம்புரோ விளங்கியது. பென்டியம் செயலிகளின் அடுத்தகட்ட வளர்ச்சி ஆகும். 32 பிட் (துண்மி) இயக்க முறைமைகளும் பயன்பாடுகளும் இதில் செயல்படும். இந்த வரிசையில் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள செயலி பென்டியம் 4 ஆகும். 1.7GHz வேகத்தில் செயல்படுகிறது.

pentium upgradable : பென்டியமாய் மேம்படுத்தத்தகு: 1. பென்டியம் வகைச் செயலியைப் பொருத்த முடிகிற ஐ486 தாய்ப்பலகை, 2. பென்டியம் செயலி பொருத்தி பென்டியம் வகை பீசியாய் மேம்படுத்த முடிகிற 486 பீசி.

perfective : முழுமையாக்கல்.

period : காலம்; நேரம் : ஓர் அதிர்வலை ஒரு முழு சுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஓர் அதிரும் மின் அலையில் திரும்ப நிகழ்வுகளுக்கு இடையே உள்ள கால இடவெளி. f என்பது அதிர்வின் அலைவு எண் (ஹெர்ட்ஸில்), t என்பது நேரம் (வினாடியில்) எனில், t=l/f ஆகும்.

period, retention: தக்கவைப்புக் காலம்.

peripheral equipment: புறநிலை கருவி.

peripheral power supply : மாற்று மின்வழங்கி : ஒரு கணினி அல்லது ஒரு சாதனத்துக்கு வழங்கப்படும் வழக்கமான மின்வழங்கியில் பழுதேற்படும்போது மாற்று ஏற்பாடாக வைக்கப்பட்டுள்ள துணை நிலை மின்வழங்கி.

Perl : பேர்ல் : ஒரு கணினி மொழி. செய்முறைப் பிழிவு மற்றும் அறிக்கை மொழி என்று பொருள் படும் Practical Extraction and Report Language என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சி-மொழி மற்றும் யூனிக்ஸின் பல்வேறு பயன் கூறுகளின் அடிப்படையில் அமைந்த ஆணைமாற்றி (Interpreter) அடிப்படையிலான மொழி. உரைக் கோப்புகளிலிருந்து தகவலைப் பிரித் தெடுக்க மிகவும் திறன்வாய்ந்த, சரம் கையாளும் வசதிகளைக் கொண்டது பேர்ல் மொழி. சொற்கள் இணைத்து ஒரு சரத்தைத் தொடுத்து அதனை ஒரு கட்டளை வடிவில் செயல்தளத்துக்கு (shell) அனுப்பும் திறனுள்ள மொழி. எனவே, பேர்ல் பெரும்பாலும் முறைமை மேலாண்மைப் பணிகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பேர்ல் மொழியில் எழுதப்படும் ஒரு நிரல் உரைநிரல் (script) எனப்படும். அமெரிக்க நாட்டு நாசா நிலையத்தின் பொறி உந்துதல் ஆய்வுக் கூடத்தில் லேரி வால் (Larry Wall) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

permanent swap file : நிலைத்த மாறுகொள் கோப்பு : விண்டோஸ் இயக்க முறைமையில், மெய்நிகர் நினைவகச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் தொடர்ச்சியான வட்டுப் பிரிவுகளில் எழுதப்பட்ட ஒரு கோப்பு.

permission : அனுமதி: ஒரு பிணைய முறை அல்லது பல்பயனாளர் கணினி அமைப்புகளில் தன்னுடைய பயனாளர் கணக்கு மூலமாக ஒரு தகவலை/வசதியை அணுகிப் பெற ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கப்படுவது. இத்தகைய அனுமதிகளை முறைமை நிர்வாகி அல்லது அதிகாரம் தரப்பட்ட வேறு நபர் பயனாளருக்கு வழங்குகிறார். இந்த அனுமதிகள் பற்றிய தகவல் மையக் கணினியில் பெரும்பாலும் அனுமதிக் குறிப்பேடு permission log-என்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன. பயனாளர் கணினி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வளத்தை (தகவல்/வசதி) அணுக முற்படும் போது அனுமதிக் குறிப்பேட்டில் சரி பார்க்கப்பட்டு முடிவெடுக்கப்படுகின்றன.

permission, access: அணுகு அனுமதி.


perpendicular recording: செங்குத்துப் பதிகை: காந்த ஊடகங்களின் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் பதிவு செய்யும் தளத்துக்குச் செங்குத்து திசையில் அமையும் காந்தத் துருவங்களின் போக்கு, துண்மி (பிட்) மதிப்புகளைத் தீர்மானிக்கின்றன.

persistent data ; நிலைத்த தரவு: தரவுத் தளத்திலோ, நாடா போன்ற சேமிப்பு சாதனங்களிலோ ஒரு முறை பதியப்படும் தகவல் அடுத்த முறை அணுகும்போது அழிந்து விடாமல் நிலைத்திருத்தல்.

persistent storage : நிலைத்த சேமிப்பு : ரோம் (ROM) போன்ற நினைவகச் சேமிப்புச் சாதனங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்ட பின்னும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும் தகவல்.

personal communication : தனிவழி தகவல் தொடர்பு.

personal finance manager : சொந்தக் கணக்கு மேலாளர் : பணம் கொடுத்த ரசீதுகள், காசோலைகள் போன்ற எளிய வரவு-செலவுக் கணக்கு வைப்புப் பணிகளுக்கு உதவுகின்ற ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பு.

personal video recorder-PVR- : தனியாள் ஒளிக்காட்சிப் பதிப்பி.

personal form letter : தனியாள் படிவக் கடிதம்.

personal and personality interview: நேரடி மற்றும் ஆளுமைக்கான நேர்காணல். perspective view : தொலையணிமைக் காட்சி : கணினி வரைகலையில் பொருள்களை முப்பரிமாணத்தில் (உயரம், அகலம், ஆழம்) காட்டும் ஒரு காட்சி முறை. ஆழத் தன்மையை விருப்பப்படும் அளவுக்கு அமைத்துக்கொள்ளும் முறை. மனிதக் கண்களுக்கு ஓர் உண்மையான காட்சியைக் காண்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

peta : பீட்டா : ஒரு குவாட்ரில்லியனைக் (1015) குறிக்கும். P என்ற எழுத்தால் குறிப்பர். 2-ஐ அடியெண்ணாகக் கொண்ட இரும எண் முறையில் பீட்டா என்பதன் மதிப்பு 1,122,899,906,842,624 ஆகும். இரண்டின் அடுக்காகக்கூறுவதெனில் 200 எனலாம்.

petabyte : பீட்டா பைட்: PB என்ற எழுத்துகளால் குறிக்கப்படும். ஒரு குவாட்ரில்லியன் பைட்டுகளைக் (1,125,899,906,842,624) குறிக்கிறது.

.pg : பீஜி : ஓர் இணைய தள முகவரி பாப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PGP : பீஜிபீ : மிகச் சிறந்த அந்தரங்கம் என்று பொருள்படும் Pretty Good Privacy என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஃபிலிப் ஸிம்மர்மான் (Philip Zimmermann) உருவாக்கிய ஆர்எஸ்ஏ படிமுறைத் தருக்கத்தின்அடிப்படையில் அமைந்த பொதுத் திறவி மறையாக்க (Public Key Encryption) முறைக்கான ஒரு நிரல். பிஜிபீ மென்பொருளின் பராமரிப்பு உதவியில்லாத இலவசப் பதிப்பும், உதவியுள்ள வணிகப் பதிப்பும் கிடைக்கின்றன.

.ph : .பீ.ஹெச்: ஓர் இணைய தள முகவரி ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

phase : அலையிடைப் படி; மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 முதல் 180 டிகிரிகள் வரை முந்தவோ பிந்தவோ முடியும்.

phase encoding :அலையிடைப்படி குறியாக்கம் : 1. தொடர்முறை (Analog) சுமப்பி அலைமீது இலக்க முறைத் தகவலை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தகவல் அனுப்புகையில் துண்மி (பிட்) அடர்வு அதிகரிக்கப்படுகிறது. 2. மின்காந்த சேமிப்புச் சாதனங்களில் தகவலைப் பதியும் ஒருவகைத் தொழில்நுட்பம். இந்த முறையில் தகவல் சேமிப்பு அலகு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்று எதிரெதிர்துருவ நிலை கொண்டதாக காந்தப்படுத்தப் படுகிறது.

phase-shift keying: படிநகர்வு குறியாக்கம் : தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு வழிமுறை. இலக்கமுறைத் தகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படிநிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இந்த நுட்பத்தின் எளிய வடிவம், சுமப்பி அலையின் படிநிலை இருநிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். 0 டிகிரி நகர்வு இருக்கும் அல்லது 180 டிகிரி நகர்வு இருக்கும். அலையின் படிநிலையை நேரெதிராக மாற்ற முடியும்.

phoenix BIOS: ஃபோனிக்ஸ் பயாஸ்: ஃபோனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரிக்கும் ரோம் பயாஸ் (ROM BIOS) ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்கு உகந்தது. பீசி வார்ப்புக் கணினிகளுக்கான மிகவும் செல்வாக்குப் பெற்ற ரோம் பயாஸ். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளிடையே, சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டவுடனேயே ஃபோனிக்ஸ் மிகவும் புகழ்பெற்று விட்டது.

phone dialer : தொலைபேசிச் சுழற்றி.

phoneme occurance : சொல்லில் எழுத்து வருகை.

phonetic key board : ஒலியியல் விசைப்பலகை,

phone connector: பேசி இணைப்பு: நுண்பேசி அல்லது ஒரு இணை தலைபேசி (Head Phone) போன்ற ஒரு சாதனத்தை ஒரு கேட் பொலிக் கருவி அல்லது ஒரு கணினியின் புறச் சாதனம் அல்லது கேட் பொலித் திறனுள்ள தகவி ஆகிய வற்றுடன் இணைக்கப் பயன்படும் ஓர் உடனிணைப்பு.

phonological analysis ஒலியமைப்புப் பகுப்பாய்வு

photocD : ஃபோட்டோ சிடி, ஒளிப் பட சிடி, ஒளிப்படக் குறுவட்டு :கோடாக் நிறுவனம் உருவாக்கிய இலக்கமுறையாக்கத் தொழில் நுட் பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப் பட்ட படிமங்கள் ஆகியவற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃபோட்டோ சிடி இமேஜ் பேக் என்னும் கோப்பு வடிவாக்க முறை என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக பிசிடி என்பர். பெரும் பாலான ஒளிப்பட, படச் சுருள் தொழிலகங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. ஃபோட்டோ சிடியில் சேமிக்கப்படும் படிமங் களை சிடி-ரோம் மற்றும் பிசிடி கோப்புகளைப் படிக்கும் மென்பொருள் உள்ள எந்தவொரு கணினியிலும் பார்க்க முடியும். சிடி-க்களில் பதியப்பட்டுள்ள படிமங்களைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட எந்தவொரு கருவியிலும் இப்படிமங்களைக் காண முடியும்.

photoconductor : ஒளியில் கடத்தி: ஒளிபடும்போது கடத்தும் திறம் அதிகரிக்கின்ற ஒரு பொருள். ஒளியில் கடத்திகள் பெரும்பாலும் ஒளியுணர்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒளியிழை வடங்களில் ஒளியை ஏற்று அதனை மின்துடிப்பாக மாற்றும் பணியை இவை செய்கின்றன.

photo editor : ஒளிப்பட தொகுப்பி: வருடப்பட்ட ஒளிப்படம் போன்ற படிமங்களை இலக்கமுறை வடிவில் கையாள்வதற்கான வரை கலைப் பயன்பாடு.

photographic : ஒளிப்படம்.

photorealism : நடப்பியல் ஒளிப்படம், ஒளிப்பட நடப்பியல்; ஒளிப் பட எதார்த்தம் : ஒளிப்படத்துக்கு அல்லது நடப்பு வாழ்வின் தரத்துக்கு படங்களை/படிமங்களை உரு வாக்குகின்ற செயலாக்கம். கணினி வரைகலையில் எதார்த்த ஒளிப் படத்திற்குத் திறன்மிக்க கணினிகள் தேவை. சிக்கலான கணிதத்தின் அடிப்படையிலான நுட்பம்மிக்க மென்பொருளும் தேவை.

phrase search : சொல்தொடர் தேடல்.

phreak1: அத்துமீறி : ஒரு தொலைபேசிப் பிணையம் அல்லது பிற பாதுகாக்கப்பட்ட கணினி அமைப்புகளின் அரண்களை உடைத்து நொறுக்குபவர் அல்லது அத்துமீறி உள்ளே நுழைபவர்.

phreak2 : அத்துமீறல் : தொலைபேசிப் பிணையம் அல்லது கணினி அமைப்புகள்-இவற்றின் அரண்களை உடைத்து நொறுக்கி அத்துமீறல்.

physical-image file: பருநிலை படிமக் கோப்பு : குறுவட்டில் (சிடி-ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தகவலை நிலைவட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு. இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக குறுவட்டில் எழுதும் நேரம் மிச்சமாகிறது. சிதறிக் கிடக்கும் கோப்புகளை தேடிப் பிடித்து தொகுத்து எழுதுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் அதிக நேரம் தவிர்க்கப்படுகிறது.

physical layer : பருநிலை அடுக்கு : ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு. முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது. தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளின் அனைத்து கூறுகளையும் கவனித்துக் கொள்கிறது. வட (cable) இணைப்பு,மின்சார சமிக்கைகள் மற்றும் எந்திர இணைப்புகள் ஆகியவை இவ்வடுக்கின் வரன்முறைகளுள் சில.

physical memory : பருநிலை நினைவகம் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினைவகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு கணினியில் 200எம்பி வரை மெய்நிகர் நினைவகம் வைத்துக்கொள்ள முடியும்.

picoJava : பிக்கோ ஜாவா : ஜாவா மொழி நிரல்களை நிறைவேற்றுகிற நுண்செயலி. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியது.

PICS : பிக்ஸ்: இணைய உள்ளடக்கத் தேர்வுக்கான பணித்தளம் எனப் பொருள்படும் Platform for Internet Content Selection என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பயனாளர் ஒருவர் இணையத்திலுள்ள தமக்குப் பிடித்த தகவலடங்கிய குறிப்பிட்ட தளங்களைத் தாமாகவே தேடி அணுகுமாறு செய்ய முடியும். அதேவேளையில் விரும்பத்தகாத தகவலடங்கிய தளங்களைப் புறக்கணிக்குமாறும் செய்ய முடியும். இவ்வாறு தளங்களைத் தேர்வுசெய்ய வெவ்வேறான தர மதிப்பீட்டு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

.pict : பிக்ட் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் பிக்ட் (PICT) வடிவாக்க முறையில் பதிவு செய்யப்படும் வரைகலைப் படிமக் கோப்புகளை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர். PICT : பிக்ட்: பொருள்நோக்கு முறையிலோ பிட்-மேப் முறையிலோ வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க வரையறை. ஆப்பிள் மெக்கின்டோஷ் பயன்பாடுகளில் முதன் முதலாக பிக்ட் கோப்பு வடிவாக்க முறை பயன்படுத்தப்பட்டது. எனினும், பல ஐபிஎம் ஒத்தியல்புப் பயன்பாடுகளும் பிக்ட் கோப்புகளை படிக்க முடியும்.

picture : படம்.

picture box : படப்பெட்டி.

picture in picture : படத்துள் படம்.

ping of death :மரண பிங், ; மரண அடி மரணத் தாக்கு : இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஓர் அழிவு நடவடிக்கை. இணையத் தகவல் பரிமாற்றத்தில் ஒரு தகவல் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதைவிடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறிமுறையில் இணையத்தின் வழியாக ஒரு தொலைவுக் கணினிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அக்கணினியை நிலைகுலையச் செய்ய முடியும்.

ping-pong buffer : பிங்-பாங் இடையகம் : இரு கூறுகளான இடை நினைவகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளீட்டால் நிரப்பப்படுவதும் வெளியீட்டுக்கு வழித்தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் ஏறத்தாழ தொடர்ச்சியான உள்ளீட்டு/வெளி யீட்டுத் தகவல்களின் தாரை பாய்ந்து கொண்டிருக்கும்.

pin grid array : பின் கட்டக் கோவை: பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்புகளுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இரட்டை உள்ளிணைப்புத் தொகுப்புள்ள சிப்புகளிலும், ஈயமில்லா சிப்புச் சுமப்பித் தொகுப்புகளிலும் பின்கள் சிப்புவின் பக்கவாட்டு ஒரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும்.

pipelining : முறைவழிப்படுத்தல் : 1. நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்த முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட நிரலை வேகமாகச் செயல்படுத்த முடியும். நுண்செயலி தேவையின்றிக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நுண்செயலி ஓர் ஆணையைச் செயல்படுத்தி முடிக்கும்போது அடுத்த ஆணை தயாராக இருக்கும். 2. இணைநிலைச் செயலாக்கத்தில் (parallel processing) ஆணைகள் ஒரு செயலாக்க அலகிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பிவைக்கப்படும். தொழிலகங்களில் தொகுப்புப் பணித்தொடர் அமைப்பு (assembly line) போன்றது. ஒவ்வோர் அலகும் ஒரு குறிப்பிட்ட வகைச் செயல் பாட்டில் திறன் பெற்றிருக்கும்.

.pit : .பிட் : பேக்ஐடீ (pack IT) எனும் முறையில் இறுக்கிச் சுருக்கப்படும் ஆவணக் கோப்புகளின் வகைப்பெயர் (extension). piracy investigaters :களவினைக் கண்டுபிடிப்பவர்கள்.

pit and land : குழி,சமதளம். குறுவட்டில் 0,1 பிட்டுகளை எழுதும் இடம்.

pits : குழிகள்,

pivot table: ஆய்ந்தறி அட்டவணை.

pivote table report : ஆய்ந்தறி அட்டவணை அறிக்கை.

pixel : படப்புள்ளி.

pixel map . படப்புள்ளி இயல்படம் : ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடிவாக்க முறை மற்றும் ஒரு படப்புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்)கள் இவை உட்பட விளக்கும் ஒரு தகவல் கட்டமைப்பு (data structure).

PJ/NF : பீஜே/என்எஃப் : முன்னிறுத்து-சேர் இயல்புப் படிவம் என்று பொருள்படும் Projection-join Normal Form என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

.pk: .பிகே: ஓர் இணைய தள முகவரி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

PKUNZIP : பீகேஅன்ஸிப் : ஒரு பகிர் மென்பொருள் பயன்கூறு நிரல். பீகேஸிப் (PKZIP) என்னும் நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கிய கோப்புகளை விரிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் பீகேலிப், பீகே அன்ஸிப் இரண்டும் சேர்ந்தே கிடைக்கும். பீகேவேர் (PKWare) என்னும் நிறுவனம் இவற்றை வெளியிடுகிறது. இந்த மென்பொருள்களை இந்த நிறுவனத்தின் அனுமதியின்றி வணிகப் பயன்பாடுகளுக்காக வெளியிட முடியாது.

PLA (Programme Logic Array) : நிரலாக்கு தருக்க கோவை.

planar : ஒருதள நிலை : 1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறைகடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின்போது முழுமையும் சிலிக்கான் மென்தகடு களின் மேற்பரப்பின் மூலத் தட்டை அமைப்பு மாறாமல் பராமரித்தல். மின்னோட்டப் பாய்வைக் கட்டுப் படுத்தும் தனிமங்களடங்கிய வேதியல் பொருட்கள் இந்த மேற் பரப்பின்கீழ் பரப்பப்பட்டுள்ளன.

planar transistor : ஒருதள மின்மப்பெருக்கி : மின்மப் பெருக்கிகளுள் ஒரு தனிச்சிறப்பான வகை. மின்மப் பெருக்கியின் மூன்று பகுதிகளும் (திரட்டி, உமிழி, அடிவாய்) குறை கடத்திப் பொருளின் ஒற்றை அடுக்கில் இழையப்பட்டிருக்கும். வழக்கத்தைவிட அதிக அளவிலான வெப்பம் வெளியேறுவதற்கேற்ற வகையில் ஒருதள மின்மப் பெருக்கியின் கட்டமைப்பு அமைந்துள்ளது. எனவே இது மின்சக்தி மின்மப்பெருக்கிகளுக்கு (Power Transistors) உகந்த வடிவமைப்பாகத் திகழ்கிறது.

platform - dependent : பணித்தளம் சார்ந்த,

platform independant:பணித்தளம் சாராமை.

platform independent development environment : பணித்தளம் சாரா உருவாக்கச் சூழல்.

platform independent language: பணித்தாளம் சாரா மொழி, ஜாவா மொழியை இவ்வாறு சிறப்பித்துக் கூறுவர். play button : இயக்குக் குமிழ்.

player : இயக்கி.

PLCC : பீ.எல்சிசி : ஈயமற்ற பிளாஸ் டிக் சிப்புச் சுமப்பி என்ற பொருள்படும் Plastic Leadless Chip Carrier என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பலகைகளில் சிப்புகளைப் பொருத்துவதில் பின்பற்றப்படும் ஈயமற்ற சிப்புசுமப்பி முறையின் ஒரு வேறுபாடான வகை. செலவு குறைவானது. இரண்டு சுமப்பிகளும் தோற்றத்தில் ஒன்று போல இருப்பினும் பீ.எல்சிசி-க்கள் பருநிலையில் ஈயமற்ற சிப்புச் சுமப்பியுடன் ஒத்தியல்பற்றவை. ஏனெனில் அவை பீங்கான் (ceramic) பொருளால் ஆனவை.


plotter, data : தரவு வரைவி; தரவு வரைவுபொறி.


plotter resolution : வரைவு தெளிவுத் திறன்.


plotter, x-y : x-y வரைவி.


plug and play : இணைத்து - இயக்கு; பொருத்தி-இயக்கு : இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக்கும் போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களை தானாகவே அடையாளங் கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளும். பயனாளர் ஒருவர் புறச்சாதனம் ஒன்றை கணினியுடன் இணைத்து இயக்கிக் கொள்ளலாம். தனியாகத் தகவமைவுகளைக் குறிக்க வேண்டியதில்லை. இணைத்து - இயக்கு வசதி வேண்டிய பிசி-க்களில், இணைத்து-இயக்கு வசதியுள்ள பயாஸ், இணைத்து இயக்குவதற்கான விரிவாக்க அட்டையும் இருக்க வேண்டும்.


plug-in : கூடுதல் வசதி : 1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென் பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசதி மென்பொருள்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இணைய உலாவி (Internet Browser) ஹெச்டீஎம்எல் ஆவணத்திற்குள் உட்பொதித்த, அசைவூட்டம், ஒளிக் காட்சி, கேட்பொலி தொடர்பான கோப்புகளை அடையாளம் காணாது. கூடுதல் வசதி மென்பொருளை நிறுவிக் கொண்டால் இது இயல்வதாகும். இப்போதெல்லாம் அனைத்து நிறுவனங்களுமே தத்தமது மென் பொருள் தொகுப்புகளுக்குக் கூடுதல் வசதி மென்பொருள்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.


.pm . .பீ.எம் : ஒர் இணைய தள முகவரி. செயின்ட் பியாரே மிக்குலான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.


.pn : .பீ.என் : ஒர் இணைய தள முகவரி. பிட் கைர்ன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


PNP transistor : பீஎன்பீ மின்மப் பெருக்கி : இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒருவகை. இதன் அடிவாய் (base) என்(N) - வகைப் பொருளால் ஆனது. பீ - வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும் திரட்டி (collector)

இவற்றுக்கு இடையே செயல்படும். ஒரு மின்மப் பெருக்கியின் மூன்று முனையங்களான அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்றுக்குமிடையே மின்னோட்டம் பாயும். ஒரு பீ.என்.பீ. மின்மப் பெருக்கியில்துளைகளே (மின்னணு இடம் பெயர்ந்த வெற்றி டம்) பெருமளவு மின்சுமப்பிகளாகச் செயல்படுகின்றன. அவை உமிழி யிலிருந்து திரட்டியை நோக்கி நகர்கின்றன.

point, actual decimal : உண்மைப் பதின்மப் புள்ளி.


point arithmatic, fixed : நிலைப் புள்ளிக் கணக்கீடு.


point arithmatic, floating : மிதவை புள்ளிக் கணக்கீடு.


point, assumed decimal : எடுகோள் பதின்மப் புள்ளி.


point-and-click : சுட்டு-பின்-சொடுக்கு : பயனாளர் ஒரு குறிப்பிட்ட தரவினைத் தேர்வுசெய்து உரிய நிரலினை இயக்குவதற்கான ஒரு சுட்டி அல்லது பிற சுட்டுக் கருவிகள் மூலம் இதனை எளிதாகச் செய்ய முடியும். சுட்டியில் பொத்தானைச் சொடுக்கியும், பிற சுட்டுக் கருவிகளில் அதற்குரிய பகுதியில் அழுத்தியும் இதனைச் சாதிக்கலாம்.


Pointcast : பாயின்ட்காஸ்ட், முன் பரப்பு : இணையத்தில் ஒவ்வொரு பயனாளருக்கும் அவருக்கே உரித் தான செய்திக் கட்டுரைகளைத் தொகுத்துக் காட்டும் இணையச் சேவை. வைய விரி வலையில் உள்ள ஏனைய இணையப் பயன்பாடு களைப் போலன்றி பாயின்ட்காஸ்ட் தள்ளு தொழில் நுட்பத்தைப் (push technology) பின்பற்றுகிறது. கிளையனிலிருந்து குறிப்பிட்ட கட்டளை வரப்பெறாமலே, வழங்கன் தானாகவே தகவலை அனுப்பி வைக்கும்.


point, decimal : பதின்ம புள்ளி.


point, entry : நுழைவு புள்ளி; உள்ளிட்டு புள்ளி.


point representation, fixed : நிலைப் புள்ளி உருவகிப்பு.


point representation, floating : மிதவைப் புள்ளி உருவகிப்பு.


pointer arithmatic : சுட்டுக் கணக்கீடுகள்.


pointer type : சுட்டு இனம்.


pointing : சுட்டுதல்.


point listing : சுட்டுப் பட்டியலிடல் : பலரும் விரும்பிப் பார்வையிடும் வலைத்தளங்களைகொண்ட ஒரு தரவுத் தளம். தலைப்பு வாரியாக வகைப் படுத்தப்பட்டிருக்கும். வடிவமைப்பு, உள்ளடக்கத்தின் அடிப்படையில் வலைத் தளங்கள் தர வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.


point of presence : கிளைப்புள்ளி ; தொடு முனை கிளை; முனை தொடு புள்ளி : 1 விரிபரப்புப் பிணையத்தில் ஒரு பயனாளர் தொலைபேசி மூல மாகப் பிணைத்துக் கொள்ளும்முனை. 2. நீண்ட தொலைவு தொலைபேசி இணைப்புத் தடத்தில், உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்துக்கு அல்லது தனிப்பட்ட ஒரு பயனா ளருக்கான இணைப்பு பிரிந்து செல்லும் புள்ளி/முனை.


point of sale termination : விற்பனை முனைய முடிவிடம்.


point of sale software : விற்பனை முனைய மென்பொருள்.

point-to-point channel : நேரடி இணைப்புத் தடம்.


Point-to-Point Protocol (PPP) : நேரடி இணைப்பு நெறிமுறை : நேரடி இணைப்பு மரபொழுங்கு.


Point-to-Point Tunneling Protocol : நேரடி இணைப்பு சுரங்கவழி நெறி முறை : மெய்நிகர் தனியார் பிணையங்களுக்கான (Virtual Private Networks-VPN) நெறிமுறை. குறும் பரப்புப் பிணையத்தின் சில கணுக்கள் இணையத்தோடு தொடர்பு கொள்ள முடியும்.


polarized component : துருவப்பட்ட கருவிப்பொருள் : ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப்பொருளை இணைக்கும் போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்க வேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் மற்றும் சில மின்தேக்கிகள் ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.


polling cycle : தேர்வு சுழற்சி : ஒரு நிரல் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு சாதனம் அல்லது பிணையக் கணு ஆகியவற்றுக்கு தகவல் அனுப்ப எடுத்துக்கொள்ளும் நேரமும் தொடர்நிகழ்வுகளும்.


pollution free : மாசு அற்ற; மாசு இல்லாத.


Pong : பாங்க் : 1972ஆம் ஆண்டில் அட்டாரிக்கைச் சேர்ந்த நோலன் புஷ்நெல் (Nolan Bushnell) என்பவர் உருவாக்கிய உலகின் முதல் வணிக ஒளிக்காட்சி விளையாட்டு (first commercial video game). மேசை டென்னிஸ் போன்ற விளையாட்டு.


pop : எடு : ஓர் அடுக்கை (stack) யில் மேலே உள்ள (கடைசியாகச் சேர்க்கப்பட்ட) உறுப்பினைக் கொணர்தல். இந்தச் செயலாக்கத்தில் அடுக்கையிலிருந்து அவ்வுறுப்பு நீக்கப்பட்டு விடுகிறது.


POP3 : பாப்3 : அஞ்சல் நிலைய நெறிமுறை3 என்று பொருள்படும் Post Office Protocol3 என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி பிணையங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் அஞ்சல் நிலைய நெறிமுறையின் தற்போதைய பதிப்பு.


pop-up Help . மேல்விரி உதவி : ஒரு மென்பொருளில் வழங்கப்பட்டுள்ள நிகழ்நிலை (Online) உதவி அமைப்பு. பயனாளர் ஒரு குறிப்பிட்ட தலைப் பின்மீது சொடுக்கினால் உதவிச் செய்திகள் மேல்விரி சாளரங்களில் தோற்றமளிக்கும். பெரும்பாலும் சுட்டியின் வலது பொத்தானை அழுத்துவதால் இத்தகைய உதவி விளக்கக் குறிப்புகள் கிடைக்கும்.


pop-up menu or popup menu : மேல்விரி பட்டி : வரைகலைப் பயனா ளர் இடைமுகத்தில், பயனாளர், ஒரு குறிப்பிட்ட உருப்படி மீது வைத்து, சுட்டியில் வலப் பொத்தானைச் சொடுக்கினால் உடனடியாய்த் திரை யில் தோற்றமளிக்கும் ஒரு பட்டி. திரையில் எந்த இடத்தில் வேண்டு மானாலும் மேல்விரி பட்டி தோன் றும். பொதுவாக, பட்டியில் ஒர் உருப்படியைத் தேர்வு செய்தவுடன் பட்டி மறைந்துவிடும்.


pop-up messages : மேல்விரி செய்திகள் : மேல்-விரி உதவிக் குறிப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் போது திரையில் தோன்றும் செய்திகள்.


pop-up window : மேல்விரி சாளரம்  : ஒரு குறிப்பிட்ட விருப்பத் தேர்வை தேர்ந்தெடுத்தவுடன் திரையில் தோன்றும் ஒரு சாளரம். பெரும்பாலும் சுட்டியின் பொத்தானை விடும்வரை இந்தச்சாளரம் பார்வையில் இருக்கும்.

port1 : துறை : ஒரு கருவியில் பிற சாதனங்களைப் இணைப்பதற்கான பொருத்துவாய்.

port2: கையாண்மை; ஏற்றுமதி : 1. வேறுவகைக் கணினியில் இயங்கும் வகையில் ஒரு நிரலை மாற்றியமைத்தல். 2. ஆவணங்கள், வரைகலைப் படங்கள் மற்றும் பிற கோப்புகளை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு மாற்றுதல்.

portable : கையாளத் தகு: கையாண்மைத் திறன் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல்படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை கணிசமான முயற்சிக்குப் பின் பிற கணினிகளில் இயக்க முடியும். கையாண்மைத் திறனற்ற மென் பொருள்களைப் பிற கணினிகளில் இயக்கவேண்டு மெனில் ஏறத்தாழ புது மென்பொருளை உருவாக்கு வதற்கு எடுக்க வேண்டிய அளவுக் கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

portable computer : கையாண்மைத் கணினி கையில் எளிதாக எடுத்துச் செல்லுமாறு வடிவமைக் கப்பட்ட கணினி, உருவ அளவு சிறிதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். கையேட்டுக் கணினி, மடிக்கணினி, உள்ளங்கைக் கணினிகளை இவ் வகையில் அடக்கலாம்.

portable distributed objects : கையாளத்தகு பகிர்ந்தமைப் பொருள்கள்: நெக்ஸ்ட் (NeXT) நிறுவனம் உரு வாக்கிய மென்பொருள். யூனிக்ஸில் செயல்படும். ஒருவகைப் பொருள் மாதிரியத்தை (object model) வழங்கு கிறது. ஒரு பிணையத்தில் பல்வேறு கணினிகளில் சேமித்து வைக்கப் பட்டுள்ள மென்பொருள் கூறுகளை அவை ஒரே கணினியில் இருப்பது போன்று எளிதாக அணுக முடியும்.

Portable Document Format கையாண்மை ஆவண வடிவாக்கம் : அடோப் நிறுவனத்தின் வரன்முறை. மின்னணு ஆவணங்களைப் பற்றி யது. அடோப் அக்ரோபேட் குடும்ப வழங்கன்களிலும், படிப்பிகளிலும் பயன்படுத்தப்படும் ஆவண வடி வாக்கம். சுருக்கமாக பீடிஎஃப் (PDF) என அழைக்கப்படும்.

portable document software : கையாளத்தகு ஆவண மென்பொருள்.

portable language : கையாளத்தகு மொழி:வேறுவேறு கணினிகளில் ஒன்று போலச் செயல்படும் ஒரு கணினி மொழி. வெவ்வேறு கணினிஅமைப்பு களுக்கான மென்பொருள் களை உருவாக்க இம்மொழியைப் பயன் படுத்தலாம். சி, ஃபோர்ட்ரான், அடா போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஏனெனில் இவை வெவ் வேறு கணினி இயக்க முறைமை களில் ஒன்றுபோலச் செயலாக்கப் படுகின்றன. அசெம்பிளி மொழி கையாண்மைத் திறனற்ற மொழி யாகும். குறிப்பிட்டஅசெம்பிளி மொழி யின் ஆணைத் தொகுதி குறிப்பிட்ட நுண்செயலியில் மட்டுமே செயல்படும்.

Portable Network Graphics; கையாண்மைப் பிணைய வரைகலை : பிட்மேப் வரைகலைப் படிமங் களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க முறை. ஜிஃப் (GIF) வடிவாக்க முறைக்கு மாற்றானது. ஆனால் ஜிஃப் வடிவாக்க முறைக் குள்ள சட்டக் கட்டுதிட்டங்கள் எதுவுமில்லை. சுருக்கமாக பிஎன்ஜி (png) என்பர்.


portal : வலைவாசல்.


port conflict : துறை முரண்.


port enumerator : துறைக் கணக்கெடுப்பி : விண்டோஸ் இயக்க முறைமையில் இணைத்து-இயக்கு (play and play) அமைப்பின் ஓர் அங்கம். கணினியை இயக்கும் போது, இந்த நிரல் உள்ளிட்டு/ வெளியீட்டுத் துறைகளைக் கண்டறிந்து தகவமைவு மேலாளருக்குத் (configuration manager) தெரிவிக்கும்.


port expander : துறை விரிவாக்கி : ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒருவன் பொருள்நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத் தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன்படுத்திக் கொள்ளும்.


port number : துறை எண் : இணையத்தில் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு குறிப்பிட்ட செயலாக் கத்துக்கென ஐபி பொதிகளை அனுப்பிவைக்கப் பயன்படும் எண். சில துறை எண்கள் நன்கறிந்த துறையெண்கள் என்றழைக்கப்படுகின்றன. உலகளவில் ஒரு குறிப் பிட்ட சேவைக்கென நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, எஸ்எம்டீ.பீ.யின்கீழ் மின்னஞ்சல் தகவல்கள் எப்போதுமே துறையெண் 25-க்கு அனுப்பப்படுகின்றன. எஃடீபீ-க்கு துறை எண் 21. ஹெச்டீடீ.பீ-க்கு துறை எண் - 80. டெல்நெட் போன்ற சேவைகளுக்கு அவை தொடங்கும்போது தற்காலிக நிலையில்லா துறையெண்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தில், அந்த எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முடிந்தவுடன் அந்த எண்ணின் பயனும் முடிந்துவிடும். டீசிபீ மற்றும் யுடிபீ நெறிமுறைகளில் மொத்தம் 65,535 துறை எண்களைப் பயன்படுத்த முடியும். 1 முதல் 1024 வரை சிறப்புத் துறை எண்கள். நிரலர்கள் தம் சொந்த நிரல்களில் 1024க்கு மேற்பட்ட எண்களையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


port settings : துறை அமைப்புகள்.


portrait format : நீள்மை வடிவம்; செங்குத்து உருவமைவு.


portrait monitor : நீள்மை திரையகம் : அகலத்தைவிட உயரம் அதிகமிருக்கும் கணினித் திரையகம்.



நீள்மைத் திரையகம்

8½-11 அங்குலத்தாளின் அளவுக்கு ஒத்த விகிதத்தில் இருக்கும் (அதே அளவு இருக்கும் என்பதில்லை). ports : துறைகள்.

POS : போஸ் : விற்பனை முனையம் எனப் பொருள்படும் Point Of Sale என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கடையில் பொருள்களுக்கான விலையைச் செலுத்தும் இடம். பெரும்பாலும் இந்த முனையங்களில் விற்பனைக்கான விலைச்சிட்டை தயாரிப்பு பணிகள் முழுக்கவும் கணினிமயமாக்கப்பட்டிருக்கும். பொருளின் மீது ஒட்டப்பட்டுள்ள விலைச்சீட்டு அல்லது பட்டைக் கோடு, வருடி மூலம் படிக்கப்பட்டு விலைச் சிட்டை தயாரிக்கப்படும். மின்னணு பணப் பதிவேடுகள் இருக்கும். விற்பனை தொடர்பான அனைத்து தகவல்களும் சிறப்பு சாதனங்கள் மூலம் பதியப்படும். இதுபோன்ற முனையங்கள் மிகப்பெரிய தானியங்கு பல்பொருள் அங்காடிகளில் செயல்படுகின்றன.

POSIT : போஸிட் : திறந்தநிலை முறைமை இணையச் செயல் பாட்டுத் தொழில் நுட்பத்துக்கான தனிக் குறிப்புகள் எனப் பொருள்படும் Profiles For Open Systems Internet Working Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க அரசின் பிணையக் கருவிகளுக்கான கட்டாயமற்ற தர வரையறைகள். டீசிபி/ஐபீ நெறிமுறையை முற்றிலும் போஸிட் ஏற்கிறது. இது காஸிப் (GOSIP) புக்கு அடுத்து வந்ததாகும்.

position : நிலை.

position, bit: துண்மி நிலை; பிட்இடநிலை.

position x : x அச்சு ஆயத்தொலை.

position y : y அச்சு ஆயத்தொலை

POSIX : போசிக்ஸ் : யூனிக்ஸுக்கான கையாண்மை இயக்க முறைமை இடைமுகம் எனப் பொருள்படும் Portable Operating System Interface for Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். போசிக்ஸ் தர வரையறைப்படி அமைந்த நிரல்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினியில் எளிதாக செயல்படுத்த முடியும். போசிக்ஸ், யூனிக்ஸ் முறைமைச் சேவைகள் அடிப்படையில் அமைந்தது. எனினும் வேறுபல இயக்க முறைகளாலும் செயல் படுத்தப்படும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

post : அஞ்சல்; அஞ்சல்செய்; அஞ்சலிடு : செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடலில் ஒரு கட்டுரை அளித்தல், பருநிலையிலுள்ள அறிக்கைப் பலகையில் அறிவிப்புகளை ஒட்டுதல் என்ற சொல்லிலிருந்து இச்சொல் உருவானது.

post document operator: பின்குறிப்பு செயற்குறி.

post increment operator: பின்கூட்டு செயற்குறி.

postmaster : போஸ்ட் மாஸ்டர் (அஞ்சல் அதிகாரி) : 1. ஓர் அஞ்சல் வழங்கனில் மின்னஞ்சல் சேவைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை வகிப்பவரின் புகுபதிகைப் (logon) பெயர் (அதுவே, அவரின் மின்னஞ்சல் முகவரியுமாகும்). மின்னஞ்சல் சேவையில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்/பெறுதலில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதெனில் போஸ்ட்மாஸ்டர் என்ற பெயருக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தால், அஞ்சல் வழங்கனின் நிர்வாகிக்கு சென்று சேர்ந்துவிடும். (எ-டு) postmaster @ yahoo.co.in. 2. மின்னஞ்சல் அனுப்புதல்/பெறுதல் பராமரித்தலுக்கான ஒரு மென்பொருள். நூறு சதவிகிதம் ஜாவா மொழியிலேயே உருவாக்கப்பட்டது.

post office protocol : அஞ்சல் நிலைய நெறிமுறை : இணையத்திலுள்ள அஞ்சல் வழங்கனுக்கான நெறிமுறை. மின்னஞ்சலைப் பெற்று சேமித்து வைக்கிறது. முகவரி தாரருக்கு அனுப்பிவைக்கிறது. வழங்கனில் பிணைத்துக்கொள்ளும் கிளையன் கணினியில் அஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவேற்றமும் செய்ய முடியும்.

post-processor : பின்செயலி : முதலில் வேறொரு செயலியினால் கையாளப்பட்ட தகவல்களின்மீது செயல்படக்கூடிய தொடுப்பி (linker) போன்ற ஒரு மென்பொருள் நிரல் அல்லது ஒரு சாதனம்.

PostScript : போஸ்ட்ஸ்கிரிப்ட் (பின் குறிப்பு) : அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க-விவரிப்பு மொழி. நெகிழ்வுமிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க-விவரிப்பு மொழியான போஸ்ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கும், எழுத்துருக்களை ஏற்றி வடிவமைக்கவும் ஆங்கிலம் ஒத்த எளிய கட்டளைகளைக் கொண்டது. அடோப் சிஸ்டம்ஸ் டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் என்னும் மொழியையும் வழங்குகிறது. டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் முற்ற முழுக்க விஸிவிக் (WYSIWYG-What You See Is What You Get) வசதியை வழங்குகிறது. திரையில் பார்வையிடவும் அப்படியே அச்சிடவும் இவ்விரண்டு மொழிகளும் இணைந்து பயன்தருகின்றன.

PostScript font : போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு : போஸ்ட் ஸ்கிரிப்ட் பக்க-விவரிப்பு மொழியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒர் எழுத்துரு. போஸ்ட்ஸ்கிரிப்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கென உருவாக்கப்பட்டது. போஸ்ட் ஸ்கிரிப்ட் எழுத் துருக்கள் பிட்மேப் எழுத்துருக்களிலிருந்து மாறுபட்டவை. நளினம், தெளிவு உயர்தரமானவை. அச்சுக்கலைத் துறையில் நிலை பெற்றுவிட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் இசைந்தவை.

PostScript printer: போஸ்ட்ஸ்கிரிப்ட் அச்சுப்பொறி : போஸ்ட்ஸ்கிரிப்ட ஆவணங்களை அச்சிடுவதற்கான அச்சுப் பொறி.

posture : நிலைப்பாடு.

POTS : பாட்ஸ் : மிகப் பழைய தொலைபேசி சேவை என்று பொருள்படும் Plain Old Telephone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அடிப்படையிலான எண்சுழற்றுத் தொலைபேசி இணைப்புகளிலிருந்து பொது இணைப்பகப் பிணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் முறையில் அமைந்தது. கூடுதல் வசதிகள், செயல்பாடுகள் எதுவும் இல்லாதது. ஒரு பாட்ஸ் இணைப்பு என்பது, மேசை மீதுள்ள ஒரு சாதாரண தொலைபேசிக் கருவியுடனான இணைப்பைக் குறிக்கிறது.

pour : ஊற்று : ஒரு கோப்பினையோ அல்லது ஒரு நிரலின் வெளிப்பாட்டையோ இன்னொரு கோப்புக்கு அனுப்பிவைத்தல் அல்லது இன்னொரு சாதனத்துக்கு அனுப்பி வைததல.


PowerBook : பவர்புக் : ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் கணினிக் குடும்பத்தைச் சேர்ந்தகையகக் கணினிவகை. இதனை கையேட்டுக் கணினி (Notebook Computer} என்பர்.


power failure : மின் நிறுத்தம்; மின்தடங்கல்; மின் துண்டிப்பு : கணினி செயல்பட்டுக் கொண்டி ருக்கும்போது மின்சாரம் தடைப் படல். மாற்று மின்வழங்கி இல்லை யெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தகவல்கள் இழக்கப்பட்டுவிடும்.


Power Macintosh : பவர் மெக்கின்டோஷ் : பவர்பீசி (Power PC) செயலி பொருத்தப்பட்ட

பவர் மெக்கின்டோஷ்

ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி. பவர் மெக்கின்டோஷ் 6100/60, 7100/ 66, 8100/80 கணினிகள் முதன்முதலில் 1994 மார்ச்சில் வெளியிடப்பட்டன.


power management: மின்மேலாண்மை.


power, memory : நினைவகத் திறன்.


power-on key : மின்இயக்கு விசை; மின் நிகழ்த்து விசை : ஆப்பிள் ஏடிபி மற்றும் நீட்டித்த விசைப் பலகைகளில் மெக்கின்டோஷ் II கணினிகளை இயக்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசை. இடப்புறம் நோக்கிய முக்கோணக் குறி இடப்பட்டிருக்கும். மின்சார நிகழ்/அகல் (on/off) நிலைமாற்றிக்குப் (switch) பதிலாகப் பயன்படுகிறது. மின்சாரத்தை நிறுத்துவதற்கென தனியான விசை கிடையாது. கணினியில் சிறப்புப் பட்டியிலிருந்து (menu) கட்டளையைத் தேர்வு செய்தால் கணினியின் இயக்கம் நின்றுபோகும்.


Power - On Self Test: மின்-நிழல் சுய சோதனை : கணினியின் அழியா நினைவகத்தில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுள்ள நிரல் கூறுகளின் தொகுப்பு. நிலையா நினைவகம் (RAM), வட்டு இயக்ககங்கள், விசைப்பலகை போன்றவை சரியாக இணைக்கப்பட்டு செயல்படும் நிலையில் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்கும் நிரல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் இந்த நிரல்கூறுகள், பீப் ஒலி எழுப்பியோ, பிழை சுட்டும் செய்தி மூலமாகவோ பயனாளருக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இச்செய்திகள் பெரும்பாலும் வழக்கமான கணினித் திரையில் காட்டப்படும். மின்-நிகழ் சுய பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பின், கட்டுப்பாடு, கணினியின் இயக்கத் தொடக்க நிரலேற்றிக்கு மாற்றப்படும்.


PowerPC platform : பவர்பீசிப் பணித்தளம் : 601 மற்றும் அதன்பின் வந்த சில்லுகளின் அடிப்படையில் ஐபிஎம், ஆப்பிள், மோட்டோ ரோலா நிறுவனங்கள் உருவாக்கிய பணித்தளம். ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளைப் பயன்படுத்த இப்பணித்தளம் வழிசெய்கிறது. மேக் ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் இயக்க முறைமைகளில் செயல்படலாம். அந்த இயக்க முறைமைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள்களையும் பயன்படுத்தலாம்.

PowerPC Reference Platform : பவர்பிசி மேற்குறிப்புப் பணித்தளம் : ஐபிஎம் உருவாக்கிய திறந்தநிலை முறைமை தர வரையறை. பல்வேறு பட்ட நிறுவனங்கள் உருவாக்கிய பவர்பீசி முறைமைகளுக்கிடையே ஒத்தியல்பை உறுதி செய்வதே ஐபிஎம் இதனை வடிவமைப்பதற்கான நோக்கமாகும். தற்போதைய ஆப்பிள் பவர்பிசி மெக்கின்டோஷ் முறைமைகள் ஐபிஎம்மின் பவர்பீசி மேற்குறிப்பு பணித்தளத்துடன் ஒத்தியல்பற்றவையாய் உள்ளன. வருங்காலப் பதிப்புகள் ஒத்தியல் புடையவையாய் இருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாக பீ.ரெப் (PReP) என்றழைக்கப்படுகிறது.

power telephone network: திறன்மிகு, தொலைபேசிப் பிணையம்.

PPP : பீபீபீ : நேரடி இணைப்பு நெறி முறை என்று பொருள்படும் Point to Point Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொலைபேசி இணைப்பு வழியாக ஒருகணினியை இணையத்தோடு இணைப்பதற்கென 1991ஆம் ஆண்டில் இணையப் பொறியியல் முனைப்புக்குழு (Internet Engineering Task Force) உருவாக்கிய தகவல் தொடுப்பு நெறிமுறை (Data Link Protocol). ஸ்லிப் (SLIP) நெறிமுறையைவிடக் கூடுதலான தகவல் ஒழுங்கு மற்றும் தகவல் பாதுகாப்புக் கொண்டது. ஆனால் சற்றே சிக்கல் மிகுந்தது.

.pr: .பீஆர்: ஓர் இணைய தள முகவரி போர்ட்டோ ரீக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PRAM : பிரேம் : அளபுரு ரேம் எனப்பொருள்படும் Parameter RAM என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளில் ரேம் நினைவகத்தின் ஒரு பகுதி. கணினியின் தேதி, நேரம், திரைத்தோற்றம் மற்றும் பிற கட்டுப்பாட்டுப் பலகத்தின் அமைப்புக் கூறுகள் போன்ற தகவமைவுத் தகவல்களை பதிந்து வைத்துள்ளரேம் நினைவகப் பகுதி.

P-Rating : பீ-தரமிடல்; பீ-தரஅளவீடு: செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் Performance Rating என்பதன் சுருக்கம். ஐபிஎம், சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகளின் ஒட்டுமொத்தத் பலன் (throughput) அடிப்படையில் அமைந்தது. முன்பெல்லாம் நுண் செயலியின் கடிகார வேகமே தர அளவீட்டின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. சிப்புக் கட்டுமானங்களில் உள்ள வேறுபாடு, கணினியைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்துவது போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை.

precedence : முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் மதிப்புகள் கணக்கிடப்படும் வரிசை. பொது வாக, பயன்பாட்டு நிரல்களில் பெருக்கல், வகுத்தல் முதலிலும், கூட்டல் கழித்தல் அதன்பிறகும் செய்யப்படுகின்றன. இந்த வரிசை முறையை மாற்றவேண்டுமானால் பிறை அடைப்புக்குறிகளைப் பயன்படுத்தலாம். அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது முதலில் நிறைவேற்றப் படும். 3+4x5 = 23 (3+4)x5 = 35.

காண்க : Operator Precedence.

pre decrement operator : முன் குறைப்பு செயற்குறி.

preemptive muititasking : முற்படு பல்பணியாக்கம் : பல்பணியாக்கத் தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடை வெளியில் ஒரு நிரலின் செயல் பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப்பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரும். இம்முறையில், ஏதேனும் ஒரு நிரல், கணினிச் செயல்பாட்டை ஏகபோகமாய் ஆக்கிரமித்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

preferences : முன்தேர்வுகள்; முன்னுரிமைகள்; விருப்பத் தேர்வுகள் : பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒரு சொல்செயலிப் பயன்பாட்டில் அளவுகோல் (ruler) தோன்ற வேண்டுமா, கருவிப் பட்டை, நிலைமைப் பட்டை போன்றவை இருக்க வேண்டுமா, ஆவணத்தின் தோற்றம் அச்சுக்குப் போவது போன்ற ஓர இடைவெளிகளுடன் தோற்றமளிக்க வேண்டுமா மற்றும் இதுபோன்ற விருப்பத் தேர்வுகளை முன் கூட்டியே அமைத்துக் கொள்ள முடியும்.

pre - increment operator : முன்கூட்டுச் செயற்குறி.

premium rate service : உயர்மதிப்புக் கட்டண சேவை : ஐஎஸ்டின் (ISDN - Integrated Services Digital Networks) தொலைதொடர்புச் சேவையில் ஒருவகை சேவை.

pressure-sensitive : அழுத்தம் உணரி : ஒரு மெல்லிய பரப்பின்மீது அழுத்தம் கொடுக்கும்போது ஒரு மின் இணைப்பு ஏற்பட்டு, கணினியால் உணர்ந்து பதிவுசெய்யும் வகையில் ஒரு நிகழ்வினை ஏற்படுத்தும் ஒரு சாதனம். தொடுஉணர்வு வரைவு பேனாக்கள், தொடுவிசைப் பலகைகள், சில தொடுதிரைகள் இந்த வகையைச் சார்ந்தவை.

prety print : அழகு அச்சு; ஒழுங்கு அச்சு : அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்னல் நிரல்கூறுகளுக்கு ஒர இடம்விடல், சில கட்டளை அமைப்புகளில் வரிகளை உள்ளடங்கி அமைத்தல்.

preparation, data : தகவல் தயாரிப்பு.

presentation : கருத்து விளக்கம்; முன் வைப்பு.

preventive : முன்தடுப்பு.

preview : முன்காட்சி : சொல்செயலி மற்றும் பிற பயன்பாடுகளில் உள்ள ஒரு வசதி. ஒர் ஆவணத்தை அச்சிடுவதற்கென வடிவமைத்த பின் நேராக அச்சுப்பொறிக்கு அனுப்பாமல், அச்சிடப்போகும் அதே வடிவமைப்பில் கணினித் திரையில் காணலாம். பயனாளருக்கு மனநிறைவு ஏற்படின் அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவிடலாம்.

previous : முற்பட்ட, முந்தைய.

previous page button : முந்தைய பக்கப் பொத்தான்.

primary and extended : முதன்மை மற்றும் நீட்டிப்பு.

primary storage : அடிப்படை சேமிப்பகம்; முதன்மைச் சேமிப்பகம்.

primary channel : முதன்மைத் தடம் : இணக்கி போன்ற தகவல் தொடர்புச் சாதனத்தில் தகவல் அனுப்புதடத்தின் பெயர்.

Primary Domain Controller : முதன்மைக் களக் கட்டுப்படுத்தி : 1. விண்டோஸ் என்டி-யில் பிணைய வளங்களையும், பயனாளர் கணக்குகளையும் மையப்படுத்தப்பட்ட முறையில் நிர்வகிக்க உதவும் ஒரு தரவுத் தளம். பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் நுழைவதற்குப் பதிலாக ஒரு களத்தினுள் நுழைய இந்த தரவுத் தளம் அனுமதிக்கிறது. ஒருகளத்தினுள் இருக்கும் கணினிகள் பற்றிய விவரங்களை வேறொரு கணக்கு வைப்புத் தரவுத் தளம் கவனித்துக் கொள்கிறது. களத்தின் வளங்களைப் பயனாளர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. 2. ஒரு குறும்பரப்புப் பிணையத்தில், களத்தின் பயனாளர் கணக்குகளுக்கான தரவுத் தளத்தின் முதன்மை நகலைப் பராமரித்து, பயனாளர்களின் புகுபதிகைக் கோரிக்கைகளைச் சரிபார்க்கும் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் வழங்கன் கணினி.

primary memory : முதன்மை நினைவகம்.

primary storage : முதன்மை சேமிப்பகம் : குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்கள் துணைநிலை சேமிப்பகங்கள் அல்லது சில வேளைகளில் காப்புச் சேமிப்பகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

prime factors : பகாஎண் காரணிகள்.

prime number : பகாஎண்.

primitive data type : மூலத் தரவு இனம்.

print : அச்சு; அச்சிடு : கணிப்பணியில் தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்புதல். சில மென்பொருள்களில் சிலவேளைகளில் இச்சொல், காண்பி, நகலெடு என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக பேசிக் மொழியில் PRINT என்னும் கட்டளை வெளியீட்டைக் கணினித் திரையில் காட்டும். அதுபோலவே சில பயன் பாட்டுத் தொகுப்புகளில், PRINT என்னும் கட்டளைமூலம் ஒரு கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்பு வதற்குப்பதில் வட்டில் பதிவு செய்யும்படி திசைமாற்ற முடியும்.

print area : அச்சுப் பரப்பு.

print buffer : அச்சு இடைகம்; அச்சு இடைநினைவகம் : ஒரு தகவலை அச்சுப்பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத் தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவல், நினைவகத்தின் ஒருபகுதியில் தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகிறது. இந்த நினைவகப்பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சில வற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடு வதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene)யில் நிறுத்திவைத்துக்கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப் பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்யமுடியும்.

print job : அச்சுப் பணி : பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப் பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்கலாம்; நூறுபக் கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக அச்சிடுவதைத் தவிர்க்க, சில மென்பொருள்கள், பல ஆவணங்களை ஒரு குழுவாகச் சேர்த்து ஒரு அச்சுப் பணியாகச் செய்வதும் உண்டு.

print mode : அச்சுப் பாங்கு : அச்சு வெளியீட்டின் வடிவமைப்பைக் குறிக்கும் பொதுவான சொல். நீளவாக்கில் (portrait), அகலவாக்கில் (landscape) அச்சிடலாம். எழுத்தின் தரம், உருவளவு ஆகியவற்றையும் இச்சொல் குறிக்கும். புள்ளியணி அச்சுப்பொறி (dot-matrix printer) இரண்டு வகையான அச்சுப்பாங்குகள் உள்ளன. எழுத்துத்தரம் (Letter Quality-LQ), உயர் எழுத்துத்தரம் (Near Letter Quality - NLQ). Sla, அச்சுப் பொறிகள் ஆஸ்கி மற்றும் போஸ்ட்கிரிப்ட் எழுத்து வடிவங்களையும் ஏற்கும்.

print preview : அச்சு முன்காட்சி

print screen key : திரை அச்சு விசை : ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளின் விசைப்பலகைகளில் இருக்கும் ஒரு விசை. இவ்விசையை அழுத்தும்போது திரையில் தோற்றமளிக்கும் எழுத்துகளை அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவைக்கும். விண்டோஸ் இயக்க முறைமையில் இந்த விசையை அழுத்தினால் திரைத்தோற்றம் கிளிப்-போர்டில் பதியும். அதனை ஒரு வட்டுக் கோப்பாகச் சேமிக்கலாம். மாற்று (Alt) மற்றும் திரையச்சு (print screen) ஆகிய இரு விசைகளையும் சேர்த்து அழுத்தினால் இயக்கத்தில் இருக்கும் சாளரம் (Active Window) மட்டும் கிளிப்-போர்டில் பதியும். ஆப்பிள் கணினிகளில் ஒத்தியல்பு கருதி இவ்விசை வைக்கப்பட்டுள்ளது.

print server : அச்சு வழங்கன் : ஒரு பிணையத்தில் அச்சுப்பொறிகளை மேலாண்மை செய்வதற்கென தனி யாக ஒதுக்கப்படும் ஒரு பணி நிலையக் கணினி, பிணையத்தி லுள்ள எந்தவொரு பணிநிலையக் கணினியும் அச்சு வழங்கனாகச் செயல்பட முடியும்.

print setup : அச்சு அமைப்புமுறை; அச்சு அமைவு.

print text page : அச்சிடு,

print wheel : அச்சு உருளை; அச்சு சக்கரம்.

print using the following driver : கீழ்காணும் இயக்கி மூலம் அச்சிடு.

print zone : அச்சு வட்டாரம், அச்சு மண்டலம்.

print to file : கோப்பில் அச்சிடு: அச்சிடுவதற்கென வடிவமைக்கப் பட்ட ஒர் ஆவணத்தை அச்சுப் பொறிக்கு அனுப்புவதற்குப் பதி லாக, அப்படியே ஒரு கோப்பில் சேமித்து வைப்பதற்கான கட்டளை. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இத்தகைய வசதி உள்ளது.

printer, barrel : சுழல் உருளை அச்சு.

printer, chain : தொடர் அச்சுப் பொறி.

printer, character எழுத்து அச்சுப்பொறி.

printer controller : அச்சுப் பொறிக்கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி : ஒர் அச்சுப்பொறி யில் குறிப்பாக ஒரு பக்க-அச்சுப் பொறியின் செயலாக்கத்திற்கான வன்பொருள். இது ராஸ்டர் படிமச் செயலி, நினைவகம் மற்றும் பொதுப்பயன் நுண்செயலிகளையும் உள்ளடக்கியது. அச்சுப்பொறிக் கட்டுப்படுத்தி சொந்தக் கணினியின் ஒர் அங்கமாகவும் இருக்க முடியும். அச்சுப் பொறி இயக்கி மிகுவேக வடத்தின் மூலமாக கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

Printer Control Language : அச்சுப் பொறி கட்டுப்பாட்டு மொழி ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் தன்னுடைய லேசர்ஜெட், டெஸ்க் ஜெட் மற்றும் ரக்டுரைட்டர் ஆகிய அச்சுப்பொறிகளில் பயன்படுத்திய மொழி. லேசர் அச்சுப்பொறிச் சந்தையில் லேசர்ஜெட் முன்னணி இடம் வகிப்பதால் அச்சுப்பொறி கட்டுப்பாட்டு மொழியே நிலைத்த தர வரையறையாய் ஆகிவிட்டது.

printer, daisy wheel : டெய்ஸி சக்கர அச்சுப்பொறி.

printer, dot : புள்ளி அச்சுப்பொறி.

printer, dotmatrix புள்ளி அச்சுப்பொறி.

printer driver : அச்சுப்பொறி இயக்கி: பல்வேறு பயன்பாட்டுத் தொகுப்பு கள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறி யில் அச்சிடுவதைச் இயல்விப்பதற் கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள். அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு, அகநிலை மொழிபற்றிக் கவலையின்றி அச்சிடலாம். பயன் பாட்டுத் தொகுப்புகள் பல்வேறு வகையான அச்சுப்பொறிகளை அவற்றுக்குரிய சரியான இயக்கி நிரல்களின் உதவிகளுடன் பயன் படுத்திக்கொள்ள முடியும். இக் காலத்தில் வரைகலைப் பணித்தள இயக்க முறைமைகள் தம்மகத்தே கொண்டுள்ள இதுபோன்ற இயக்கி நிரல்களை பயன்பாட்டுத் தொகுப்பு கள் ஒவ்வொன்றும், தங்களுக்கென இயக்கிநிரல்களைவைத்துக்கொள்ளத் தேவையில்லை. printer engine :அச்சுப் பொறி எந்திரம் : லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறைவேற்றுகிற பாகம். பெரும்பாலான அச்சுப் பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவை யாய், மாற்றத்தகு மைப்பேழை களைத் தம்மகத்தே கொண்டுள்ளன. இந்த எந்திரம் அச்சுப்பொறிக் கட்டுப் படுத்தியினின்றும் வேறுபடுகிறது. உலகில் பெருமளவு பயன்படுத்தப் படும் அச்சுப்பொறி எந்திரங்கள் கேனான் (Canon) நிறுவனம் தயாரித்தவை.

printer file : அச்சுப்பொறிக் கோப்பு : அச்சுப்பொறிக்கு அச்சிட அனுப்பப்படும் தகவல்களை ஒரு கணினிக் கோப்புக்கு திசைதிருப்பி சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இத்தகைய கோப்பு பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுக்கு அனுப்பப்படும் வெளியீட்டை அப்படியே இன்னொரு கணினிக்கு அல்லது இன்னொரு நிரலுக்கு உள்ளீடாகத் தர முடியும். பின்னொரு நாளில் இக் கோப்பினை நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பி எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சிலவேளைகளில் அச்சுப்பொறி இயக்கிக் கோப் பினைத் தவறுதலாக சிலர் அச்சுப் பொறிக்கோப்பு எனக் குறிப்பிடுகின்றனர்.

printer font : அச்சுப்பொறி எழுத்துரு: அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப்பொறிக்கென வைத் திருக்கும் ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத்துருக்கள் அச்சுப் பொறிக் குள்ளேயே உள்ளமைக்கப்பட்டிருக் கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துருப் பொதி யுறைகளிலும் கிடைப்பதுண்டு.

printer format : அச்சு வடிவம்.

printer head : அச்சுமுனை

printer layour sheet : அச்சுப் பொறி உருவரைத் தாள்.

printer, line : வரி அச்சுப் பொறி.

printer maintenance : அச்சுப் பொறி பாராமரிப்பு.

printer, matrix : அணி அச்சுப் பொறி.

printer, page : பக்க அச்சுப் பொறி.

printer port : அச்சுத்துறை: அச்சுப் பொறித் துறை : ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப்பொறியை இணைக்கக் கூடிய டம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும் பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன் படுத்தப்படுகின்றன. இயக்க முறைமை, இதனை எல்பீடீ (LPT) என்னும் தருக்க சாதனப் பெயராக அடையாளம் காண்கிறது. சில அச்சுப்பொறிகளுக்குத் நேரியல் துறைகளையும்(serial ports) பயன் படுத்திக்கொள்ள முடியும். ஆனால் முன்கூட்டியே இயக்க முறைமைக்கு இதை உணர்த்திவிட வேண்டும். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் பெரும்பாலும் நேரியல் துறைகளே அச்சுப்பொறிக்குப் பயன் படுத்தப்படுகின்றன.

printer, quality : அச்சுப் தரம்.

printer stand : அச்சுப் பொறி மனை.

printer, thermal : வெப்ப அச்சுப் பொறி

பொறி. printer, wheel : சக்கர அச்சுப்பொறி. printer, wire : 5ublSl.

printed circuit : அச்சிட்ட மின்சுற்று.

Printed Circuit Board (PEB) : மின் சுற்றுப் பலகை

priority : முன்னுரிமை முந்துரிமை : நுண்செயலியின் கவனத்தைக் கவர் வதில், கணினியின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னுரிமை பின்பற்றப்படுகிறது. கணினி, கண்ணுக்குப் புலனாகாத முன்னுரிமைகளின் அடிப்படையி லேயே பல்வேறு வகையான முரண் களும் மோதல்களும் தவிர்க்கப்படு கின்றன. அதேபோல கணினியால் நிறைவேற்றப்படும் பணிகளும், எப்போது, எவ்வளவு நேரம் நுண் செயலியின் நேரத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கணினிப் பிணையங்களில் பணி நிலையங்கள் எப்போது, எவ்வளவு நேரம் தகவல் தொடர்பு இணைப் பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முன்னுரிமை நிர்ணயிக்கப் படுகிறது. எவ்வளவு விரைவில் அனுப்பப்பட வேண்டும் என்கிற முன்னுரிமை செய்திப் பரிமாற்றத் துக்குப் வரையறுக்கப்படுகிறது.

priority assignment : முன்னுரிமைப் பணி

Priority Frame: பிரியாரிட்டி பிரேம்: (முன்னுரிமைச் சட்டம்) : இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைதொடர்பு நெறிமுறை. தகவல், படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப்பட்டது.

privacy : தனிமறைவு; அந்தரங்கம் : ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தகவல்கள் அவருடைய அனுமதி யின்றி வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனிமறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. கணினி அமைப்புகளை நிறுவிப் பராமரிப் பவர்கள் தங்கள் அமைப்புகளில் பதிவாகும் எந்தவொரு தகவலையும் பரிசோதிக்கும் உரிமையினைக் கோருகின்றனர். தனிமறைவினை முழுமையாகப் பெறப் பயனாளர் கள் மறையாக்கம் போன்ற முனைப் பான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

privacy enhanced mail : அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல்; தனிமறைவு மேம்பாட்டு அஞ்சல் : இணையத்தில் மின்னஞ்சல் செய்திகளின் தனி மறைவுத் தன்மை மற்றும் பாதுகாப் பினை உறுதிசெய்யும் மறையாக்க நுட்பங்களை பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் முறைமைக்கான இணையத் தர வரையறை.

private : தனியார்.

private automatic branch : தனியார் தானியங்கு கிளை.

private channel : தனியார் தடம் : இணையத் தொடர் அரட்டையில் (IRC) ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தடம். இத்தகைய தனியார்தடப்பெயர்கள் பிற பொதுப் பயனாளர்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு விடுவதுண்டு.

private chat : தனியார் அரட்டை: தனியார் உரையாடல்.

Private Communications Technology: தனிமுறைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்: இணையத்தில் பாது காப்பான பொதுப்பயன் வணிகத்துக் காகவும் சொந்தத் தகவல் தொடர்பு களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட வரன்முறை. தனிமறைவு, சான்றுறுதி, பரஸ்பர அடையாளங் காட்டல் போன்ற பண்புக் கூறுகளை யும் உள்ளடக்கியது.

private database : தனியார் தரவுத் தளம்.

private folders : தனிமுறை கோப்புறைகள்: ஒரு பகிர்ந்தமைப் பிணையச் சூழலில், ஒரு பயனாளரின் கணினி யில் இருக்கும் கோப்புறைகள். பிணையத்தின் பிற பயனாளர்கள் இந்தக் கோப்புறைகளை அணுக முடியாது.

private key : தனித்திறவி, தனிமறைக் குறி : மறைக்குறியீட்டு முறையில் இருதிறவி மறையாக்கத்தில் பயனாளர் பயன்படுத்தும் திறவி. பயனாளர் தன்னுடைய தனித் திறவியை கமுக்கமாய் வைத்துக் கொள்கிறார். தன்னுடைய இலக்க முறைக் ஒப்பங்களை மறையாக்கம் செய்யவும், பெறுகின்ற செய்திகளை மறைவிலக்கம் செய்யவும் பயன் படுத்திக் கொள்கிறார்.

private property : தனிப் பண்புகள்.

privatization : தனியார் மயமாக்கம்: பெரும்பாலும் ஒரு நிர்வாகத்தை, வணிக அமைப்பை கட்டுப்பாட்டி லிருந்து வணிகத் தொழிலகத்துக்கு மாற்றியமைப்பது. கணினித் துறை யைப் பொறுத்தமட்டில் இணை யத்தின் முதுகெலும்பான பல்வேறு பிணையக் கட்டமைப்புகளை தனி யார் துறைக்கு மாற்றுதல். எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் 1992இல் என்எஸ்எஃப்நெட் அரசுக் கட்டுப் பாட்டிலிருந்து தனியார் வணிக அமைப்புகளுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளது.

privileged mode : சலுகை பெற்ற பாங்கு

இன்டெல் 80286 மற்றும் அதனினும் மேம்பட்ட நுண்செயலி களின் பாதுகாக்கப்பட்ட இயக்கப் பாங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சிறப்புவகை இயக்கப் பாங்கு. இதில், நினைவகம் மற்றும் உள்ளிட்டு/வெளியீட்டுத் துறைகள் (தடங்கள்) போன்ற கணினியின் உயிர்நாடியான உறுப்புகளைக் கையாளும்போது, மென்பொருள்கள் மிகவும் வரம்புக்குட்பட்ட செயல் பாடுகளையே நிறைவேற்ற முடியும்.

PRN : பிஆர்என் : அச்சுப் பொறியின் தருக்கமுறைச் சாதனப் பெயர். டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான அச்சு சாதனத்துக்கென ஒதுக்கப்பட்ட பெயர். பீ.ஆர்.என் என்பது பெரும் பாலும் கணினியின் முதல் இணை நிலைத் துறையை (parallel port) குறிக் கும். எல்பீடி1 என்றும் அறியப்படும்.

procedure : செயல்முறை : ஒரு நிரலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் நிறைவேற்றுகின்ற கட்ட ளைத் தொகுதி. இக் கட்டளைத் தொகுதிக்கு ஒருபெயர் உண்டு. ஒவ்வொரு செயல்முறைக்கும் உரிய மாறிகள், மாறிலிகள் அவற்றின் தர வினங்கள் வரையறுக்கப்படுகின் றன. பெரும்பாலும் ஒரு செயல்முறை இன்னொரு செயல்முறையால் அழைக்கப்படுவதுண்டு (இயக்கப் படுவதுண்டு). நிரலின் பிரதான செயல்பகுதியிலும் அழைக்கப் படலாம். சில கணினி மொழிகளில் செயல்முறை, செயல் கூறு (procedure and function) என்று வேறுப்படுத்தி பேசப்படுகிறது. செயல்கூறு என்பது

தன்பணியை முடித்தபின் ஒர் ஒற்றை மதிப்பை (குறிப்பிட்ட தரவின மதிப்பை) அழைத்த நிரலுக்குத் திருப்பியனுப்பும். செயல்முறை, தனக்கிட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கும். மதிப்பு எதையும் திருப்பியனுப்பாது.

procedure call செயல்முறை அழைப்பு : நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல்படுத்து வதற்கான ஆணை. ஒரு செயல் முறை அழைப்பு இன்னொரு செயல் முறையில் உட்பொதிந்து இருக்க முடியும். அல்லது நிரலின் முதன்மை யான பகுதியில் இடம்பெறும்.

process colour : நிறுத் செயலாக்கம் : ஒர் ஆவணத்தில், அச்சிடுவதற்காக நிறங்களைக் கையாளும் வழிமுறை. ஒவ்வொரு நிறத்தொகுதியும் அதன் மூல அடிப்படை நிறக் கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மூன்று அடிப் படை வண்ணங்கள் : வெளிர்நீலம் (Cyan), செந்நீலம் (Magenta), மஞ்சள் (Yellow). கறுப்பு நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பிற நிறங் கள் அனைத்தும் இந்த அடிப்படை நிறங்களின் கலவையில் உருவாக்கப் பட்டு அச்சிடப்படுகின்றன.

process control system : செயல் பாங்குக் கட்டுப்பாட்டு முறைமை.

process signal : செய்முறை குறிகை செய்முறை சமிக்கை.

processing, automatic data தானியங்கு தரவுச் செயலாக்கம்.

processing, background : பின்புலச் செயலாக்கம்,

processing, commercial data : வணிகத் தரவுச் செயலாக்கம்.

processing, data: தரவுச் செயலாக்கம்.

product

processing, electronic data மின்னணுத் தரவுச் செயலாக்கம்.

processing mode, batch : தொகுதி செயலாக்கப் பாங்கு.

processing unit, central : மையச் செயலகம்

processing, remote: தொலை நிலைச் செயலாக்கம்,

processor: செயலி.

processor, array: கோவை செயலி.

processor, data : தரவு செயலி.

processor, micro : நுண் செயலி.

processor, remote : தொலைநிலைச் செயலி.

processor, word: சொல் செயலி.

Prodigy Information Service மேதமை தகவல் சேவை : ஐபிஎம் மற்றும் சியர்ஸ் இரண்டும் சேர்ந்து உரு வாக்கிய நிகழ்நிலை தகவல் சேவை. இதன் போட்டியாளர்களான அமெரிக்கா ஆன்லைன் மற்றும் காம்புசெர்வ் ஆகியவற்றைப் போலவே, தரவுத் தள அணுகல், கோப்பு நூலகங்கள், நிகழ்நிலை அரட்டை, சிறப்பு ஆர்வக் குழுக்கள், மின்னஞ்சல், இணைய இணைப்பு போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.

product பெருக்குத் தொகை; பண்டம்; அட்டவணைப் பெருக்கல்: 1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கி வரும் தொகை. 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தை யில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம், 3. தரவுத் தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு

செயற்குறி (operator). இரு அட்ட வணைகளைப் பெருக்கும்போது முதல் அட்டவணையிலுள்ள ஒவ் வொரு கிடக்கையும் இரண்டாவது அட்டவணையின் ஒவ்வொரு கிடக் கையுடனும் இணைந்து மூன்றாவ தாக ஒர் அட்டவணை உருவாக்கப் படும். 10, 20 கிடக்கைகள் உள்ள அட்டவணைகளைப் பெருக்கினால் 200 கிடக்கைகள் உள்ள அட்ட வணை கிடைக்கும்.

professional : தொழில்துறை ; தொழில்சார்ந்த தொழில்தரமான; தொழில்நெறிஞர்.

Professional Graphics Adapter : தொழில்முறை வரைகலைத் தகவி : கேட் (CAD) பயன்பாடுகளுக்கென ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத் திய ஒரு ஒளிக்காட்சித் தகவி. கிடை மட்டத் தெளிவாக 640 படப்புள்ளி களையும், செங்குத்துத் தெளிவில் 480 படப்புள்ளிகளையும் 256 நிறங் களையும் கொண்டது.

Professional Graphics Display : தொழில்முறை வரைகலைக் காட்சித் திரை : ஐபிஎம் நிறுவனம் தன்னு டைய தொழில்முறை வரைகலைத் தகவியுடன் பயன்படுத்தப்பட வேண் டும் என்ற எண்ணத்தில் அறிமுகப் படுத்திய தொடர்முறை (Analog) காட்சித் திரை.

profile : விவரக் குறிப்பு : ஒரு நிரலின் பல்வேறு பகுதிகள் இயங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள் கிறது என்பதைத் தீர்மானித்து பகுப் பாய்வு செய்வதற்கான விவரக்குறிப்பு.

profiling service பயனாளர் குறிப்பு சேவை.

programme, application : பயன்பாட்டு நிரல்.

programme, assembly : சில்லுமொழி நிரல்.

programme background : பின்புல நிரல்.

programme, computer: கணினி நிரல்

programme creation : நிரவல் உருவாக்கம்; நிரல் ஆக்கம் : ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப்பினை (executable file) தயார் செய்யும் செயல் முறை. வழக்கமாக, நிரல் உருவாக் கம் மூன்று படிநிலைகளைக் கொண் டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை சிப்புமொழி மூலக் குறிமுறையாக மொழிமாற்று தல். (2) சிப்புமொழிக் குறிமுறையை பொறிமொழி இலக்குக் கோப்பு களாக மாற்றியமைத்தல். (3) பொறி மொழிக் குறிமுறை இலக்குக் கோப்புகளை பல்வேறு தகவல் கோப்புகள், இயக்கநேரக் கோப்புகள், நூலகக் கோப்புகளுடன் தொடுப்பு ஏற்படுத்தி இயக்குறு கோப்பாக மாற்றியமைத்தல்.

programme documentation: நிகழ்ச்சி நிரல் ஆவணப்படுத்துகை.

programme, executive : நிறைவேற்று நிரல்.

programme generator: நிரவல் இயற்றி: பயனாளர் தரும் சில வரன் முறைகள் மற்றும் உறவுமுறைகள் அடிப்படை யில் ஒரு நிரலை (வழக்கமாக, மூலக் குறிமுறையில்) உருவாக்கித் தரும் இன்னொரு நிரல். ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும் பணியை எளிமைப்படுத்திட இது போன்ற நிரல் இயற்றிகள் பயன் படுத்தப்படுகின்றன.

programme listing : நிரல் வரைவு: நிரலின் மூல வரைவின் நகல்.  பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழிமாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற்குறிப்புகள் போன்றவற்றுடன் உருவாக்கித் தரும்.

programme, linear : நேரியல் நிரல்.

programme logic : நிரல் தருக்கம் : ஒரு நிரலின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்குப் பின்னாலுள்ள தருக்கம் - எப்படிச் செயல்பட வேண்டும் என்பதும் அப்படிச் செயல்படுவதற்கான காரணங்களும்.

programme, maintenance : நிரல் பாரமரிப்பு.

programme, mircro : நுண்நிரல்.

programme, object : இலக்கு நிரல்.

programme segment: நிரல் துண்டம்.

programme, segmented : துண்டமாக்கிய நிரல்.

programme, service : பணிநிரல்.

programme, source : மூலநிரல்.

programme stack : நிரல் அடுக்கை.

programme, stop : நிரல் நிறுத்தம்.

programme storage : நிரல் சேமிப்பு.

programme, supervisory : மேற்பார்வை நிரல்.

programme switch :நிரல்நிலைமாற்றி.

programme, test : சோதனை நிரல்.

programme testing: நிரல் சோதனை.

programme, utility : பயன்கூறு நிரல்.

programmable : நிரல்படு; நிரலாக்கத் தகு : ஒரு பணியை அல்லது ஒரு செயல்பாட்டை நிறைவேற்ற, ஆணைகளை ஏற்றுச் செயல்படும் நிலை. நிரலாக்கத் தகுநிலையில் இருப்பது என்பது கணினியின் பண்புக் கூறுகளில் ஒன்று.

programmable interrupt controller : நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி: குறுக்கீட்டுக் கோரிக்கைகளை (IRQs) கையாளும் இன்டெல் சிப்பு. அதிக அளவாக 15 ஐஆர்கியூக்களை கையாளக்கூடிய இரண்டு நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்திகள் ஐபிஎம் ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் இவற்றுக்குப் பதிலாக மேம்பட்ட நிரல்படு குறுக்கீட்டு கட்டுப்படுத்தி (APIC)கள் பயன்படுத்தப்பட்டன. இவை பல்பணியாக்கத்தை ஏற்கின்றன.

programmable logic device: நிரல்படு தருக்க சாதனம் : தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல்படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்று தயாரிப்பு நிலையிலேயே நிரலாக்கம் செய்து முடிக்கப்படவேண்டிய தேவையில்லை.

programmable memory : நிரல்படு நினைவகம்.

programmable communication interface : நிரல்படு தகவல் தொடர்பு இடைமுகம்.

programmable function key :நிரல்படு பணிவிசை.

programmatic interface : நிரல்நிலை இடைமுகம் : 1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின்  அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறைமைகள் இத்தகைய இடைமுகத்தைக் கொண்டுள்ளன. ஆப்பிள் மெக்கின்டோஷ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஆகியவை வரைகலைப் பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளன. காண்க: command line interface, graphical user interface, iconic interface. 2.நிரலர் ஒருவர் ஒரு பயன்பாட்டு மென் பொருளை உருவாக்கும்போது அவருக்கு இயக்க முறைமை வழங்கும் செயல்கூறுகளின் தொகுதி.

programmer : நிரலர்; செயல் வரைவாளர்.

programming environment : நிரலாக்கச் சூழல்.

programming, structured : ஆணைத் தொடர் கட்டமைப்பு நிரலாக்கம்.

programmers switch : நிரலர் விசை; நிரலர் நிலைமாற்றி ஆப்பிள் : மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பயன்படுகின்றன. தொடக்கக் காலங்களில் மென் பொருளை பரிசோதிக்கும் நிரலர் களுக்கே இத்தகைய செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே மெக்கின்டோஷின் தொடக்க மாதிரியங்களில் கணினிப் பெட்டியின் உள்ளே இந்தப் பொத்தான்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கணினிகளில் அவை வெளிப்படையாகப்பட்டன. மீட்டியக்கு பொத்தான் இடப்புறம் திரும்பிய முக்கோணக்குறியாலும் மற்றது ஒரு வட்டக்குறியாலும் குறிக்கப்பட்டிருக்கும்.

prgrammes : நிரல்கள்.

project : திட்டப் பணி; செயல்திட்டம்; முன்னிறுத்து : 1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினி மயபப்டுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குறிப்பிட்ட பண்புக்கூறுகளை (நெடுக்கைகள்) மட்டும் எடுத்து புதிதாக ஓர் அட்டவணையை உருவாக்கித் தரும்.

Project Gutenberg : கட்டன்பெர்க் திட்டப்பணி : இணையத்தில் பொதுக்களத்தில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கும்படி செய்யும் திட்டப்பணி. இந்தப் புத்தகங்களுக்கான கோப்புகள் கூடுமானவரை அதிகமான மக்கள் அணுகும் வகையில் வெளிப்படையான ஆஸ்கி எழுத்து வடிவில் இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தினர் இத்திட்டப் பணியை உருவாக்கியுள்ளனர். இத் திட்டப் பணியின் எஃப்டீபீ தள முகவரி : ftp://mrcnext.cso.uinc.edu. இதன் வலைப் பக்க முகவரி : http:// www.promo.net/pg/.

project life cycle : திட்டப்பணி செயல்படுகாலச் சுழற்சி : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரையுள்ள, முன்திட்டமிடப்பட்ட பல்வேறு கட்டப் பணிகளின் வரிசைமுறைத் தொகுதி.

project management :திட்டப்பணி மேலாண்மை : ஒரு குறிப்பிட்ட திட்டப் பணியின் நடைமுறை மற்றும் செயலாக்கத்தில் திட்டமிடல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்பாடு ஆகிய செயல்பாடுகளைக் குறிக்கின்றது.

project management programme : திட்டப்பணி மேலாண்மை நிரல்.

promiscuous mode: ஒழுங்கினப் பாங்கு.

promiscuous-transfer : ஒழுங்கினப் பாங்கு மாற்றி : ஒரு பிணையத் தகவல் தொடர்பில், கணுக் கணினி யானது, வருகின்ற தகவல் பொட்டலங்கள் அனைத்தையும் அவற்றின் இலக்கு முகவரியைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்கிற தகவல் பரிமாற்றப் பாங்கு.

propagated error: பரவும் பிழை; பரப்பி பிழை : ஒரு செயல்பாட்டில் ஏற்பட்ட பிழை இன்னொரு செயல் பாட்டுக்கு உள்ளீடாக அமைதல். இதனால் புதிதாக இன்னொரு பிழை உருவாகும்.

properties: பண்பியல்புகள், பண்புகள்.

properties and methods : பண்புகள் மற்றும் வழிமுறைகள்.

property : பண்பு; பண்பியல்பு : விண்டோஸ் குடும்ப (95/98/எம்இ/ என்டி/2000) இயக்க முறைமைகளில் ஒரு பொருள் அல்லது சாதனத்தின் பண்பியல்பு அல்லது அளபுருவைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பின் பண்புகள் அதன் வகை, அளவு, உருவாக்கப்பட்ட நாள் போன்றவற்றை குறிக்கின்றன. அந்த கோப்பின் பண்பியல்புத்தாளில் இது போன்ற விவரங்களை அறியலாம்.

property sheet : பண்புத்தாள் : விண்டோஸ் 95 மற்றும் அதன் குடும்ப இயக்க முறைமைகளில் இருக்கும் ஒரு வகை உரையாடல் பெட்டி. File என்ற பட்டித் தேர்வில் அல்லது ஒரு பொருள்மீது வலது சொடுக்கில் வரும் பட்டித் தேர்வில் Properties என்பதை தேர்வு செய்வதன் மூலம் இந்த உரையாடல் பெட்டியைப் பெற முடியும். இதில் ஒரு கோப்பு, பயன்பாடு அல்லது வன்பொருள் சாதனத்தின் பண்புக் கூறுகள் அல்லது தகவமைவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். பெரும் பாலும் பண்புத்தாள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய அடுக்குத்தாள் அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு தாளிலும் உரையாடல் பெட்டிகளில் காணப்படும் வழக்கமான கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருக்கும். பயனாளர் விருப்பப்படி அளபுருக்களை அமைத்துக் கொள்ள முடியும்.

proportional font : சரிவிகித எழுத்துரு : ஒரு குறிப்பிட்ட பாணியில், அளவில் உருவாக்கப்பட்ட எழுத்துரு வகை. இதில் ஒவ்வொரு எழுத்தும் எண்ணும் வெவ்வேறு அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக இவ்வகை எழுத்துருவில்i என்னும் எழுத்தின் அகலம் m என்ற எழுத்தின் அகலத்தைவிடக் குறைவு.

proprietary : தனியுரிமையுடைய.

protection : காப்பு.

protection, data : தரவுக் காப்பு.

protection, file :கோப்புக் காப்பு.

protected : காக்கப்பட்ட.

protect document : ஆவணப் பாதுகாப்பு.

protocol suite : நெறிமுறைக் கூட்டுத் தொகுப்பு.  pseudo machine : போலிப் பொறி; போலி எந்திரம்: இவ்வகைப் பொறியில் நுண்செயலி வன்பொருளாக இருப்பதில்லை. மென்பொருளிலேயே அது போல உருவாக்கப்படுகிறது. போலிப் பொறிக்காக எழுதப்பட்ட ஒரு நிரலை மறுமொழி மாற்றம் செய்யாமலே வெவ்வேறு பணித்தளங்களில் இயக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஜாவா மெய்நிகர் பொறியைக் (Java Virtual Machine-JVM) கூறலாம், ஒரு முறை பைட் குறிமுறையாக (Bytecode) மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜாவா புரோகிராம்களை (.class கோப்புகள்) எந்தக் கணினியிலுள்ள ஜேவிஎம்மிலும், மறுமொழி மாற்றம் செய்யாமலே இயக்க முடியும்.

.pt : .பீடீ : ஓர் இணைய தள முகவரி போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

public data network : பொதுத்தரவு பிணையம்.

public directory : பொதுக் கோப்பகம்: ஒரு எஃப்டிபீ வழங்கனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பகம். பெயரிலாப் பயனாளர்கள் (anonymous users) கோப்புகளைப் பெறவும் தரவும் இதனை அணுக முடியும். சுருக்கமாக pub என அழைக்கப்படும்.

public domain :பொதுக் களம் : பதிப்புரிமை அல்லது பிற சொத்துரிமைப் பாதுகாப்பின்கீழ் வராத புத்தகங்கள், இசை அல்லது மென்பொருள் போன்ற படைப்பாக்கத்தின் தொகுதியைக் குறிக்கிறது. பொதுக் களத்தில் இருக்கும் படைப்புகளை இலவசமாக நகலெடுக்கலாம். திருத்தலாம். எந்தப் பயனுக்காகவும் எந்த வகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவையும், உரைகள் மற்றும் மென்பொருள் பலவும் பொதுக்களத்தின் கீழேதான் உள்ளன. ஆனால் பதிப்புரிமை பெற்ற படைப்புகள் இணையத்தில் பொதுக் களத்தில் இடம்பெறுவதில்லை.

public key : பொது மறைக்குறி: பொதுத் திறவி : தனித்திறவி, பொதுத் திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத் திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செய்து பயனாளருக்கு அனுப்பலாம். பயனாளர் அச்செய்திகளை மறைவிலக்கம் செய்து படிக்க, தன்னுடைய இலக்க முறைக் ஒப்பமாகிய (digital signature)தனத்திறவியைப் பயன்படுத்திக் கொள்வார்.

public key encryption: பொதுத்திறவி மறையாக்கம்: மறையாக்கத்திற்கு இரட்டைத் திறவிகளைப் பயன் படுத்துகிற ஒர் ஒத்திசைவில்லா மறையாக்க முறை. பொதுத் திறவியைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை, செய்திக் குரியவர் தனக்கே உரிய தனித்திறவி மூலம் மறைவிலக்கம் செய்து கொள்வார். இலக்கமுறைக் ஒப்பத்தைப் பொறுத்தவரை இந்த வழிமுறை எதிர்முறையானது. அதாவது செய்தியை அனுப்புபவர் இரகசியத் திறவியைப் பயன்படுத்தி ஒரு தனித்த மின்னணு எண்ணை உருவாக்குகிறார். இச் செய்தியினைப் படிக்க விரும்புபவர் அதற்கேற்ற பொதுத் திறவி மூலம் பரிசோதித்து குறிப்பிட்ட நபரிடமிருந்துதான் செய்தி வந்ததா என அறிந்து கொள்ளலாம்.

public object ejement : பொதுப் பொருள் உறுப்பு. public property : பொதுப் பண்புகள்.

public rights : பொது உரிமைகள் : இணையத்தைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் எந்த அளவுக்கு இணையத் தகவல்களைப் பெறலாம் என்பதற்கு அறிவுபூர்வச் சொத்துச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள்.

public switched data network (PSDN): பொது இணைப்பகத் தரவுப் பிணையம்.

Public Switched Telephone Network (PSTN) :பொது இணைப்பகத் தொலைபேசிப் பிணையம்.

pull : இழு; மீட்பு.

pulldown list : கீழ் விரிப்பட்டியல்.

pulse duration modulation : துடிப்பு காலஅளவுப் பண்பேற்றம் : தொடர் முறை வடிவில் இருக்கும் தகவலை இலக்கமுறைச் செய்தியாக மாற்றியமைத்து குறியாக்கம் செய்வதில் ஒரு வழிமுறை. துடிப்பின் கால அளவை மாற்றியமைத்து இக்குறியாக்கம் செய்யப்படுகிறது. பண்பேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு, வீச்சு கொண்ட தொடர்ச்சியான துடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. பண்பேற்றத்தின்போது துடிப்பின் கால அளவு மாற்றப்பட்டு தகவல் குறியாக்கம் செய்யப்படுகிறது.

pulse modulation : துடிப்புப் பண்பேற்றம்.

pulse position modulation : துடிப்பு இடநிலைப் பண்பேற்றம் : தகவலைக் குறியாக்கம் செய்யும்போது துடிப்புகளின் இடநிலையை மாற்றி யமைத்து சமிக்கையைப் பண்பேற்றம் செய்யும் முறை. பண்பேற்றம் செய்யப்படுவதற்கு முன்பு சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு மற்றும் வீச்சு கொண்டதாக இருக்கும். பண்பேற்றத்தின் போது துடிப்பின் இடநிலை மாற்றப் பட்டு, தகவல், குறியாக்கம் செய்யப்படுகிறது.

pulses, clock : கடிகாரத் துடிப்பு.

punch : துளையிடல்.

punch, key : விசைத் துளையிடல்.

punch, keyboard : விசைப்பலகை துளையிடல்.

punch, x : எக்ஸ்-துளை.

punch, y : ஒய்-துளை.

punch buffer,card : அட்டைத்துளை இடையகம்.

punched card: துளையிட்ட அட்டை.

punched card code : துளை அட்டை குறிமுறை.

punched tape : துளை நாடா.

punching card: அட்டை துளைத்தல்.

punctuation நிறுத்தக் குறி : பகுப்பாய்வு.

purchase order: கொள்முதல் கோரிக்கை.

purge print document : அச்சு ஆவணங்களை நீக்கு.

purpose computer, general : பொதுப்பயன் கணினி.

purpose computer, special : சிறப்புப் பயன் கணினி.

psychology : உளவியல், மனவியல்.

punctuator : நிறுத்தற்குறிகள்.