கணிப்பொறி அகராதி
A

Aaraamthinai - ஆறாம்திணை : ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியலை இது ஆறாம் திணையாகக் கருதுகிறது. சென்னையிலிருந்து வருவது. சென்னை இண்டர் ஆக்டிவ் சர்வீஸ் வெளியிடுகிறது.

abacus - The counting frame having beads, the forerunner of computer and developed 2000 years ago. மணிச்சட்டம்: மணிகள் கொண்ட எண்ணும் சட்டம். 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணிப்பொறியின் முன்னோடி.

abend - Terminating a computer programme early due to an error. முடித்தல் : பிழை காரணமாகக் கணிப்பொறி நிகழ்நிரலை முன்கூட்டியே நிறுத்தல்.

abort - To cancel deliberately a procedure in progress நிறுத்து : இயக்கத்தில் இருக்கும் ஒரு நடைமுறையைக் கட்டாயம் காரணமாக நீக்குதல்.

absolute address - The actual location in storage for a piece of data. தனிமுகவரி : ஒரு தகவல் துணுக்கிற்குரிய சேமிப்பிடம். தனி இனவரி என்றும் கூறலாம்.

absolute cell addressing - cell referencing, kinds of.

absolute code - A programming code using absolute address and operator. தனிக்குறிமுறை : தனி முகவரி யையும் செயலியையும் பயன் படுத்தும் நிகழ்நிரலாக்கும் குறிமுறை.

absolute error - The magnitude of deviation of a computation. தனிப்பிழை : ஒரு கணிப்பீட்டின் திரிபளவு.

absolute maximum rating - The machine's maximum working limit as mentioned in it.
தனிப்பெரும அளவிடல் : ஓர் எந்திரத்தின் உயர்வரை வேலை செய்யும் எல்லை. இது அதில் குறிக்கப்பட்டிருக்கும்.

acceleration time - The time taken between the interpretation of an instruction and its transfer for storage.
முடுக்க நேரம் : ஓர் ஆணைக் குறிப்பை விளக்குவதற்கும் அது சேமிப்பதற்காக மாற்றப் படுவதற்கும் இடையிலுள்ள நேரம்.

access - The ability either to get data or to store it.
அணுக்கம் : தகவலைப் பெறுவதற்கு அல்லது சேமிப்பதற்குரிய திறன்.

access control register - This is used to record the access level assigned to an active procedure.
அணுக்கக் கட்டுப்பாட்டுப் பதிவகம் : ஒரு வினையுறு நடைமுறைக்கு ஒதுக்கப்பட்ட அணுக்க மட்டத்தைப் பதிவு செய்ய இது பயன்படுவது.

access control words - Permanently wired instructions sending transmitted words into reserved locations.
அணுக்கக் கட்டுப்பாட்டுச் சொற்கள் : நிலையாக அனுப்பப்படும் ஆணைக்குறிப்புகள் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சொற்களைச் செல்லுமாறு செய்தல்.

access level - The number of levels at which control mechanisms disallowing interference between modules of software.
அணுக்க மட்டம் : மென் பொருள் தொகுதிகளுக்கிடையே குறுக்கீட்டை அனுமதியாது இருக்கும் கட்டுப்பாட்டுப்பொறி நுட்பங்கள். இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்.

access time - The time interval between presenting information for storage in a computer memory device and the instant this information is stored.
அணுக்க நேரம் : ஒரு கணிப்பொறி நினைவகக் கருவியமைப்பில் சேமிப்பதற்காகச் செய்தி அனுப்பப்படுவதற்கும் உடன் அது சேமிக்கப்படுவதற்கும் இடையிலுள்ள நேரம்.

accumulator - A register in a microprocessor for storing binary numbers to be used for arithmetic logical and input s output operations.
சேமகம் : நுண்முறையாக்கியிலுள்ள பதிவகம் எண் கணிதம், முறைமை மற்றும் உட்பலன் / வெளிப்புலன் செயல்களுக்கு இரும எண்களைச் சேமித்து வைப்பது.

accuracy - Nearness of a measured value to its trueness. துல்லியம் : நுட்பம்,அளக்கப்பட்ட மதிப்பு கிட்டத்தட்ட உண்மைத் தன்மையை பெற்றிருத்தல்.

accurating control character - A character showing if any data is incorrect for manipulation.
துல்லியக் கட்டுப்பாட்டு உரு : கையாள்வதற்கு ஒரு தகவல் தவறானதா என்பதைக்காட்டும் உரு.

acknowledge, ACK - A control signal checking if transmitted data has been accepted by the receiver.
ஒப்புகை : ஒரு கட்டுப்பாட்டுக் குறிகை செலுத்தப்பட்ட தகவல். பெறுங்கருவியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதைச் சரிபார்ப்பது.

acoustic compiler - A device in a modem allowing a telephone to transmit digital data over an ordinary telephone line.
ஒலி இணைப்பி : இருதிலைச் செயலியில் உள்ளது. பொதுவாக உள்ள தொலைபேசிக் கம்பி வழியாக இலக்கத்தகவலைச் செல்லச் செய்யுமாறு தொலைபேசியை அனுமதிப்பது.

active element - The part of the computer, carrying operations.
வினையுறுகூறு : செயல்களைச் செய்யும் கணிப்பொறியின் பகுதி.

active master file - The computer master file as determined by usage data.
வினையுறு முதன்மைக் கோப்பு : வழக்காற்றுத் தகவலினால் உறுதிசெய்யப்படும் கணிப்பொறியின் முதன்மைக் கோப்பு.

Active Server Pages -
வினையுறு பயனாளிப் பக்கங்கள், விபப.

activity level - The value assumed by a structural variable during solving a problem.
செயற்பாட்டு மட்டம் : ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது, ஓர் அமைப்பு மாறித், தான் கொள்ளும் மதிப்பு.

activity ratio - The ratio between the number of records moved in an updating file and the total number of records in that file.
செயற்பாட்டு வீதம் : உயர்த்த வேண்டி, ஒரு கோப்பில் செலுத்தப்படும் பதிவகங்களின் எண்ணிக்கைக்கும் அக்கோப்பிலுள்ள மொத்த பதிவகங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள தகவு.

actuator - Any device under a signal control to do a mechanical action.
வினையாற்றி : ஒர் எந்திரச்செயலைக் கட்டுபாட்டுக்குறிகை வழிச் செல்லுமாறு செய்யும் கருவியமைப்பு. Ada - அடா : அமெரிக்கப் பாதுகாப்புத்துறை உருவாக்கிய உயர்நிலை மொழி. அறிவியல், தொழில், போர் ஆகிய துறைகளில் பயன்படுவது. கவுண்ட்லஸ் அடா ல்வ்லாஸ் பெயரால் அமைந்தது. இவர் சார்லஸ் பாபேஜின் நண்பர்.

adapter - A device in the inquiry buffer unit converting bits of receiving information serially into parallel bit form for use.
இணைப்பி : ஆய்வுதாங்கு அலகில் உள்ள கருவியமைப்பு. பெறும் செய்தித் துணுக்குகளைத் தொடர்ச்சியாக ஒரு போகு துணுக்காக நாம் பயன்படுத்துவதற்காக மாற்றுவது.

adapter card - This is a special circuit determining the capability of a monitor.
இணைப்பி அட்டை : இது ஒரு மின்சுற்று. கண்காணிப்பியின் திறன்களை உறுதிசெய்வது.

adapter card, kinds of -
இணைப்பி அட்டை வகைகள் : 1) வண்ண வரைகலை இணைப்பி, சி.ஜி.ஏ. 2) விரிவு வரைகலை இணைப்பி, ஈ.ஜி.ஏ. 3) திசைச்சாரி வரைகலை இணைப்பி, விஜிஏ. 4) மீத் திசைச்சாரி வரைகலை இணைப்பி, எஸ்.விஜிஏ.

adder - A digital circuit used in calculators and computers. It adds together two binary numbers.
கூட்டி : கணிப்பான்களிலும் கணிப்பொறிகளிலும் பயன்படும் இலக்க மின்சுற்று. இரண்டு இரும எண்களைக் கூட்டுவது.

adding -
கூட்டல் : நிறம்,படம் முதலியவற்றை ஆவணத்தோடு சேர்த்தல்.

add-on - The ability to increase memory capacity by attaching circuitry.
மேல்சேர் : மின்சுற்றை இணைத்து நினைவகத்திறனை உயர்த்தும் திறன்.

address - A number in binary code identifying a particular location where data is stored in a computer memory.
முகவரி : இனவரி. இருமக்குறிமுறையிலுள்ள எண். குறிப்பிட்ட இடத்தை இனங் காண்பது. இந்த இடம் கணிப்பொறியில் தகவல் சேமித்து வைக்கப்படுவது.

address bus - An electrical pathway between the micro processor and memory in a computer.
முகவரிவாய் : இனவரிவாய். ஒரு கணிப்பொறியில் நினைவகத்திற்கும் நுண்முறையாக்கிக்கும் இடையிலுள்ள மின்வழி.

address field - The part of a computer programme instruction. Here a particular piece of information is located in the computer memory.
முகவரிப் புலம் : இனவரிப்புலம் கணிப்பொறி நிகழ்நிரல் ஆணைக்குறிப்பின் பகுதி. இங்குக் கணிப்பொறி நினைவகத்தில் குறிப்பிட்ட தகவல் துணுக்கு அமைந்திருக்கும்.

address format - The description of the member of addresses included in a Computer instruction.
முகவரிப் படிவமைப்பு : இன வரிப் படிவமைப்பு. கணிப் பொறி ஆணைக் குறிப்பில் உள்ள முகவரி எண்ணின் வண்ணனை.

address instruction - The address of a location having an instruction.
முகவரி ஆணைக்குறிப்பு : ஒரிடத்தின் முகவரி, ஆணைக் குறிப்பைக் கொண்டுள்ளது.

address register - Here the address part of an instruction is stored by a computer.
முகவரிப் பதிவகம் : இங்கு ஆணைக்குறிப்பின் முகவரிப் பகுதி கணிப்பொறியால் சேமித்து வைக்கப்படுகிறது.

address space - The range of address used by a computer for storing programme instructions.
முகவரி இடம் : இனவரி எல்லை. நிகழ்நிரல் ஆணைக் குறிப்புகளைச் சேமித்து வைக்கக் கணிப்பொறி பயன்படுவது.

add time - The time required to do an addition or subtraction.
கூட்டல்நேரம் - கூட்டல் அல்லது கழித்தலைச் செய்ய ஆகும் நேரம்.

ADO, Activex Data Objects -
அடு : வினையுறுகொள் தகவல் பொருள்கள் விதபொ. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமைத்தது. தகவல் மூலத்துடன் கட்டுப்பாடுகளை இணைக்கப் பயன்படுவது.

ADO Data Control -
அடு தகவல் கட்டுப்பாடு : இது ஒரு வரை கலைக் கட்டுப்பாடு. இதில் அடிப்படைச் செலுத்து இயல்புகள் அமைக்கப்பட்டடுள்ளன. இதைக்கொண்டு பல கட்டுப்பாடுகளைப் பின்வருமாறு தகவல் தளத்தோடு இணைக்கலாம். அக்கட்டுப் பாடுகள் பின்வருமாறு. 1) சரிபார்ப்புப் பெட்டி 2) கூடுகைப் பெட்டி 3) உருவம் அல்லது படம் 4) குறியம் 5) பட்டிப்பெட்டி 6) படப் பெட்டி 7) பாடப் பெட்டி

ADSL, asynchronous digital subscriber line -
ஏடிஎஸ்எல் ஒத்திசையா இலக்க உறுப்பினர் வழி.

advanced option - An option helping us to find files based on file type.
முன்னேறிய விருப்பம் : கோப்பு வகை அடிப்படையில் அமைந்த கோப்புகளைக் காண நமக்கு உதவும் விருப்பம்.

adventure - A popular computer game.
பரபரப்பு விளையாட்டு : அனைவரும் விரும்பும் கணிப்பொறி விளையாட்டு.

agenda - The sequence of control statements required for the solution of a computer problem.
செயல்நிரல் : கட்டுப்பாட்டுக் கூற்றுகளின் தொடர்; கணிப்பொறிச் சிக்கலைத் தீர்க்கப் பயன்படுவது.

algebraic manipulation language - A programming language used to solve analytic problems.
இயற்கணிதக் கையாளல் மொழி : பகுப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படும் நிகழ்நிரல் மொழி.

ALGOL, algorithmic language - A high level language used mainly for mathematical and scientific applications.
ஆல்கால், விதிமுறை மொழி : கணித மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்கு உதவும் உயர் நிலை மொழி. வழிமுறை மொழி என்றுங் கூறலாம்.

algorithm - In computer programming it is a list of instructions to solve a problem.
விதிமுறை : கணிப்பொறி நிரலாக்கலில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆணைக் குறிப்புப் பட்டியல்

algorithm, properties of -
விதிமுறைப்பண்புகள் :1)குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருத்தல். 2) ஒவ்வொரு வழியும் குழப்பத்திற்கு இடமில்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும்.3) குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு வழியும் நிறைவேற்றப்படவேண்டும். இதற்கு குறிப்பிட்ட அளவு நினைவக இடத்தைப் பயன்படுத்தவேண்டும்.4) குறிப்பிட்ட அளவு நேரத்தில் முழு நிகழ்நிரலும் முடிக்கப்பட வேண்டும்.

alignment - The process of adjusting components of a system for proper interrelationship.
வரிசையாக்கம் : உரிய இடைத்தொடர்புக்கு ஒரு தொகுதியின் பகுதிகளைச் சரிசெய்யும் முறை.

align attribute -
வரிசையாக்க இயல்பு : ஒரு பக்கத்தில் பாடத் தொடர்பாகப் படம் எங்கு இருக்க வேண்டும் என்பதை இது மேய்விக்குக் கூறுவது, இடப்பக்கமாக அமைவது.

alink attribute -
வினையுறு இணைப்பு இயல்பு : சுட்டெலியை இணைப்பில் தட்டும்பொழுது, அது வினையுறு இணைப்பு ஆகிறது. தவறு என்பதன் மூலம் இணைய ஆராய்வியும் வலைய நோக்கு செலுத்தியும் இந்த இணைப்புகளைச் சிவப்பாகக் காட்டும். இந்த இயல்பு இந்நிறத்தை மாற்ற உதவும்.Alink-active link.

allocation - Earmarking complete programmes to a storage system.
ஒதுக்கீடு:ஒரு சேமிப்புத் தொகுதிக்குரிய முழு நிகழ்நிரல்களைக் குறித்தல்.

alphabetic string-
பா.character string.

alphanumeric-
எண்ணெழுத்து : எழுத்து,எண்,குறி,உரு முதலியவற்றைக் கொண்டது.

alphascope-An interactive device.
அல்பாநோக்கி:ஓர் இடை வினைப்படும் கருவியமைப்பு.

alternate method of formatting-
படிவமைப்பு மாற்று முறை :ஒரு குறிப்பிட்ட பாணியை உருவாக்கி, அதை ஓர் ஆவணத்திற்குப் பயன்படுத்தல். வரி இடை வெளிவிடல், பத்தி வரிசையாக்கம், ஒதுக்கிச் செய்தல் முதலியவை இதில் தேவைப்படா.

alteration switch- sense switch
மாற்றுச் சொடுக்கி :நுண்ணுணர் சொடுக்கி

aiter clause-
மாற்று உட்பிரிவு:உட்பிரிவுகளில் ஒருவகை.

ALU,Arithmetic and Logic Unit -
ஏஎல்யூ:எண்கணித மற்றும் முறைமை அலகு.

Ambalam-
அம்பலம்: ஒரு மின்னிதழ்.1999 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. சென்னை டிஷ் நெட்டிலிருந்து வருவது.பா.Minambalam.

ambiguity error- An error in reading a number in two ways,eg 699-799.
இருமைப்பிழை:ஓர் எண்ணை இருவழிகளில் படிப்பதிலுள்ள பிழை. எ-டு 699-799.

amplitude-The magnitude of a variable.
வீச்சு:ஒரு மாறியின் அளவு.

analogue- 1.Having a continuous range of values.
2.Things in the real world.
1)ஒப்புமை:தொடர் மதிப்பு எல்லைகளைக் கொண்ட
2)மெய்ப்புமை:உண்மை உலகப்பொருள்கள்.

analogue computer-That which produces continuously varying signals.
ஒப்புமைக் கணிப்பொறி: தொடர்ந்து மாறுபடும் குறிகளை உண்டாக்குவது.

analogue signal-An electronic signal got by variations in the signal voltage; a continuous wave on like digital signal.

ஒப்புமைக் குறிகை: குறிகை மின்னழுத்தத்தால் ஏற்படும் மாறுபாடுகளால் பெறப்படும் மின்னணுக் குறிகை; இலக்கக் குறிகை போல் அல்லாமல் தொடர்ச்சியான அலை.

analytical engine - பகுப்பு எந்திரம்: சார்லஸ் பாபேஜ் என்பவரால் அமைக்கப்பட்டது. தற்கால இலக்கக் கணிப்பொறிக்கு அடிப்படையாக அமைந்தது. நீராவியாற்றலால் இயங்கியது.

analogue-to-digital converter, ADC- Digitizer - A device converting an analogue signal into a coded digital signal. ஒப்புமை-இலக்கமாற்றி, ஏடிசி : இலக்கமாற்றி, ஒப்புமைக்குறிகையை குறிமுறையுள்ள இலக்கக் குறிகையாக மாற்றும் கருவியமைப்பு.

Ananthakrishnan M. Dr. - முனைவர் மு. அனந்த கிருஷ்ணன் (1928- ): தமிழக அரசு முதல்வர் கலைஞருக்குத் தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். கணிப்பொறி அறிவைத் தமிழ்நாடு மின்னாட்சி மூலம் முழுதும் பெற முயன்று கொண்டிருப்பவர். அண்ணாப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்.

anchor tag - one of the tags used to create link in connection with documents. நங்கூர ஒட்டு : ஒட்டுகளில் ஒன்று. ஆவணங்களை இணைக்கப் பயன்படுவது.

AND gate - A decision making building block in digital circuits producing an output of binary 1. உம்வாயில் : இலக்க மின்சுற்றுகளில் உள்ள முடிவுசெய்யும் தொகுதி, இரும 1 என்னும் வெளிப்பலனை உண்டாக்குவது.

AND operaion - Alogical operation. உம் செயல் : ஒரு முறைமைச் செயல்.

AND operator - This operator returns a true value only when both operands are true. In other cases it returns a false value. உம் செயலி : இரு செயலிடங்களும் உண்மையாக இருக்கும் பொழுது, செயலி உண்மை மதிப்பையே தரும். ஏனைய நிலைகளில் அது தவறான மதிப்பையே கொடுக்கும்.

animated graphics - Pictures moving across a screen under the control of a programme. எழுச்சியூட்டும் வரைகலை : ஒரு நிகழ்நிரல் கட்டுப்பாட்டில் படங்கள் திரையில் ஒடுதல்.

animation control - It enables the user to display AVI chips, miniature movies sequentially to create the animation. எழுச்சியூட்டும் கட்டுப்பாடு: இதைக்கொண்டு பயனாளி வரிசையாக ஏவிஐ நறுவல்கள், சிறுபடங்கள் ஆகியவற்றைத் திரையில் காட்ட இயலும், எழுச்சியூட்டலை உருவாக்க இயலும்.

animation control, optional parameters of-
எழுச்சியூட்டும் கட்டுப்பாட்டின் தெரிவுச் சுட்டளவுகள்: இவை மூன்று. 1) திரும்பச்செய், 2) தொடங்கு 3) நிறுத்து.

animatronics -
எழுச்சிமிகு மின்னணுத்தொலைஇயல் : இச்சொல் animation, electronics, robotics ஆகிய மூன்று சொற்களின் தொகுப்பு. தவிர, இது ஒரு தொகுப்புத் தொழில் துட்பம், இறப்பு,நிகழ்வு,எதிர்வு ஆகிய மூன்று காலங்களிலும் கற்பனை உண்மையைக் காட்டுவது. மிகப்புதிய அறிவியல் துறை (17-10-2000).

Anjal -
அஞ்சல்: தமிழ் மின் னஞ்சல் பணி, பதிவுபெற்ற பயனாளிகள் 25,000.

annotation - Explanation added to a programme to help the reader.
விளக்கவுரை: வாசகருக்கு உதவ ஒரு நிகழ்நிரலோடு சேர்க்கப்படும் விளக்கம்.

ANSI, American Standards Institute - A committee designing standards for data processing.
ஆன்சி, அமெரிக்கத் தர நிலையம்: தகவல் முறையாக்கலை வரையறைப்படுத்தும் குழு.

anti piracy software-
கள்ள எதிர்ப்பு மென்பொருள்: மென்பொருள்கள் கள்ளத்தனமாகக் கையாளப்படுகிறது. இதைத் தடுக்க இம்மென்பொருள் பயன்படுகிறது. இது ஒரு பாதுகாப்புமுறை. யாரும் உரிமையில்லாமல் இதை அணுக இயலாது. டில்லி, உற்பத்தித் திறன் மன்றம் உருவாக்கியுள்ள எண் சுருள் சுற்று (DSW-Digital Spring Winding) என்னும் கருவியமைப்பைக் கொண்டு இத்திருட்டை தடுக்கலாம்.

Anto Peter.M-
எம்.ஆண்டோ பீட்டர்:துத்துக்குடியைச் சார்ந்தவர். தமிழில் தணியா ஆர்வங்கொண்டு கணிப்பொறித் தமிழை நாளும் வளர்த்து வருபவர். இவர் தொடங்கிய தமிழ் சினிமா முதல் தமிழ் இணைய இதழ் என்று சொல்லலாம். இவரிடம் 300 வகைத் தமிழ் அச்செழுத்துகளும் 1500 கேளிக்கைக் கலைகளும் உள்ளன. கணிப்பொறித்தமிழ் உலகில் இவருக்கு நல்ல பெயர்.

Anugraphics-
அனுவரைகலை : உரிமையாளர் முரளிகிருட்டினன் இந்திய மொழிகளில் கணிப்பொறி அச்செழுத்துகளை உருவாக்கி வருகிறார். அனு எழுத்துகள் அனைவரும் அறிந்த தமிழ் அச்செழுத்துகள்.

Apple-
ஆப்பிள்:இது ஒரு தனியாள் கணிப்பொறி, 1975இல் ஸ்டீவ் ஜான், ஸ்டீபன் வோஸ்னியக் ஆகிய இருவரும் இதைப்புனைந்தனர்.

APL- A high level language meant for mathematical operations.
ஏபில்: ஓர் உயர்நிலை மொழி. கணிதச் செயல்களுக்காக உள்ளது.

application - A programme doing some useful task. It has a large number of objects like form, controls, and menus. The small sections of code control these objects.
பயன்பாடு: இது பயனுள்ள பணியைச் செய்யும் நிகழ்நிரல்,படிவங்கள், கட்டுப்பாடுகள்,பட்டிகள் முதலிய பல பொருள்களைக் கொண்டது. குறிமுறையின் சிறு பகுதிகள் இப்பொருள்களைக் கட்டுப்படுத்துபவை.

application file -
பயன்பாட்டுக் கோப்பு : வேறுபெயர் நிகழ் நிரல் கோப்பு. ஏதாவது ஒன்றை நாம் செய்ய உதவுவது. எ-டு விளையாட கணக்கீடுகள் செய்ய.

application programme-
பயன்பாட்டு நிகழ்நிரல்: குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க எழுதப்படும் நிகழ்நிரல். குறிப்பிட்ட அறிக்கையை உருவாக்கலாம். ஒரு குறிப்பிட்ட கோப்பை மேம்படுத்தலாம்.

application project-The organization of different files making up the application.
பயன்பாட்டுத்திட்டம் : பயன்பாட்டை உருவாக்கும் வேறுபட்ட கோப்புகளின் தொகுதி.

application project, starting of-
பயன்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கல்: ஒரு புதிய பயன்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கப் பின்வரும் படி நிலைகள் உள்ளன. 1) திட்ட மடிப்பட்டையைத் தட்டு. இது திட்ட ஆராய்விச்சாளரத்தில் உள்ளது. 2) பண்புச்சாளரத்திலுள்ள (பெயர்) வரிசையின் வலப்பத்தியைத் தட்டு. திட்டம் 1 லிருந்து திட்ட முதல் பயிற்சிக்குத் திட்டத்தின் பெயர்ப் பண்பை மாற்ற இது பயன்படும். 3) படிவச்சாளரத்திலுள்ள படிவத்தைத் தட்டு. இது தவறான படிவத்தை நடப்புப் பொருளாக மாற்றும். 4) பண்புச் சாளரத்திலுள்ள பெயர் வரிசையின் வலப்பகுதியைத் தட்டு. தவறான படிவப் பெயர்ப் பண்பை மாற்ற இது பயன்படும். கூட்டுவட்டி போல, தலைப்புப் பண்பையும் மாற்று. இப்பொழுது படிவம் தயாராகும். படிவத்தையும் திட்டத்தையும் மறுபெயரிடு. தொடர்வதற்கு முன் திட்டம் சேமிப்புக்குள்ளாகும்.

application software-
பயன்பாட்டு மென்பொருள்: ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்குரிய செயல்களை நிறைவேற்றப் பயன்படும் நிகழ்நிரல்களின் தொகுப்பு. மென்பொருளில் ஒருவகை. எ-டு சமன்பாடுகளைத் தீர்க்க, தேர்வு முடிவுகளை முறையாக்க, சம்பளப் பட்டியல் தயார்செய்ய, மாத மின் பட்டியல் தயார் செய்ய பா. system software.

architecture - The arrangement, design and interconnection of components within the system.
கட்டமைப்பு : ஒரு தொகுதியில் பல பகுதிகள் அமைந்திருக்கும் முறை, மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைக் குறிப்பது.

Arithmetic and Logic Unit, ALU - An essential hardware component of CPU doing arithmetic(addition, subtraction)and logical(AND, OR...)operations on data.

எண்கணித மற்றும் முறைமை அலகு,ஏஎல்யு: ஓர் இன்றியமையா வன்பொருள், கூட்டல் கழித்தல் முதலிய எண் கணிதச்செயல்களையும் உம், அல்லது முதலிய முறைமைச் செயல்களையும் தகவல்களைக் கொண்டுசெய்வது. மையச் செயலகத்தின் ஒருபகுதி.

arithmetic operation- - எண் கணிதச் செயல்: 3+4+5 இதில் படிநிலை வரிசை உண்டு.

arithmetic operator - This operator returns numerical results: eg operator:+ name:addition,example 1 + 1.

எண்கணிதச் செயலி: எண் பலன்களைத் தருவது.எடு செயலி பெயர் கூட்டல், எ-டு. 1+1.

arithmetic statement- - எண் கணிதக் கூற்று: இது சி மொழி தொடர்பானது. பொதுவாகச் சி மொழி எண்கணிதக் கூற்று. செல்லத்தக்க சி கோவையை மதிப்பிடப் பயன்படுவது. வேண்டிய மாறிலியாக விளை பயனைச் சேமிப்பது இதன் பொது படிவமைப்பு பின்வருமாறு.

variable = expression
மாறிலி = கோவை

எ-டு.

i = j + k3
x = y + 2
z = a + 2
L = k

ARPANET- - ஆர்பா இணையம்: 1967-68 ல் உருவாகியது. இணையத்தின் வடிவமைப்பை பற்றியது. அணுப்போர் ஏற்பட்டால் கூட. இது அழியாது.

array-A collection of memory locations in a computer.

நெடுவரிசை: ஒரு கணிப் பொறியிலுள்ள நினைவக இடங்களின் தொகுப்பு.

array declaration-
நெடுவரிசை அறுதியீடு:ஏனைய மாறிலிகளைப்போல,அறுதியிடப்பட வேண்டும். இண்ட் புளோட் சார் முதலிய வகைகளில் ஏதாவது ஒன்று இருக்கலாம். ஒரு பரும நெடுவரிசையை அறுதியிடுவதற்குரிய பொதுப்படிவமைப்பு பின்வருமாறு.

data type array-name(n)
தகவல் வகை நெடுவரிசை : பெயர் (என்).

array,kinds of-
நெடுவரிசை வகைகள்:
1.இரு பரும வரிசை: இரு ஒரு பரும வரிசைகளைக் கொண்டது.
2.முப்பரும வரிசை: இது இரு பரும வரிசைகளைக் கொண்டது.
3.கே பருமவரிசை:கே பரும வரிசைகளைக் கொண்டது.
4.பன்மப் பரும வரிசை: ஒரு பரும வரிசையை ஒத்தது.

array, multidimensional-
பன்மப் பரும நெடுவரிசை:இது சி மொழியில் இயலக் கூடியது. இதில் தகவல்கள் வரிசையாகச் செல்லும்

array processing-
நெடுவரிசை முறையாக்கல்: ஒரு தனிச்செயலில் முழு நெடுவரிசையையும் முறையாக்க இயலாது. இதன் ஒவ்வொரு கூறும் தனித் தனியே பார்க்கப்பட வேண்டும். இதற்கு வளையங்கள் பயன்படும். சி மொழியில் பல வளையங்கள் இருந்த போதிலும்,மிகப்பரவலான வளையம் பாஃர் லூப் என்பதாகும்.

array processor-A high speed computer.
நெடுவரிசை முறையாக்கி:ஓர் உயர்விரைவு கணிப்பொறி.

artificial intelligence, Al-
செயற்கை நுண்ணறிவு, ஏஐ: கணிப்பொறி அறிவியலின் ஒரு பிரிவு. மனித அறிவு நடத் தையை ஒத்த எந்திரங்களை உருவாக்க முயல்வது. 1950 களில் உருவானது.

ASCII, American Standard Code for Information Interchange-
அசைய், அமெரிக்கத் தகவல் இடைமாற்ற தரக் குறிமுறை:தகவல் செலுத்து வதற்குரியது. இதில் 7 பிட் குறிமுறைகள் உள்ளன. இது ஒரு வகைக் கோப்பே. படிக்கக் கூடிய பாடத்தை மட்டுமே கொண்டிருக்கும்.

ASDL, asynchronous subscriber digital line-
ஏஎஸ்டிஎல், ஒத்திசையா உறுப்பினர் இலக்க வரி.

ASP -
ஏஎஸ்பி:
பயனுள்ள இடையப் பக்கங்களை அமைப்பதற்குரிய தொழில் நுட்பம் இது 1966 ஜூலை 6. இல் அமெரிக்க மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

assembler-
கோவையாக்கி:
மற்றொரு மொழிபெயர்ப்பு நிகழ்நிரல். கோவை மொழி நிகழ்நிரலை எந்திர மொழியாக்குவது.

assembly language-
கோவைமொழி:
இதில் நினைவுக் குறிப்பு முறை பயன்படுத்தப் படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்குரிய நிகழ்நிரல் களை அமைக்க இக்குறி முறை கள் பயன்படும்.
A,B என்னும் இரு எண்களைக் கூட்டுவதற்குரிய நிகழ்நிரல் பின்வருமாறு:
நிகழ்நிரல் வண்ணனை குறிமுறை
Aஐப்படி Aமதிப்பு படிக்கப்படுகிறது.
Bஐச்சேர் Aயுடன்Bஇன்மதிப்புசேர்க்கப்படுகிறது.
Cஐச்சேமி C இல் விளைபயன் சேமிக்கப்படுகிறது.
Cஐ அச்சிடு சி.இல் விளைபயன் அச்சிடப்படுகிறது.
நிறுத்து செயலை முடி.

assign clause-
ஒதுக்கு உட்பிரிவு:உட்பிரிவுகளில் ஒரு வகை

assignment operator-
ஒதுக்கு செயலி:சி மொழியிலுள்ள இன்றியமையாச் செயலி, எ-டு சமக்குறி = இதற்குரிய படிவமைப்பு. மாறி = கோவை

associative memory-A data storage device.
இயைபு நினைவுகம்:ஒரு தகவல் சேமிப்புக் கருவியமைப்பு.

associative processor-A digital computer
இயைபு முறையாக்கி:ஓர் எண்ணிலக்கக் கணிப்பொறி.

asynchronous computer-
ஒத்திசையாக் கணிப்பொறி:இதில் ஒவ்வொரு தகவலுக்கும் தொடங்கு பிட்டும் முடியும் பிட்டும் தேவை. குறிகை முதன்மைக் கடிகையிலிருந்து வருவதில்லை.

asynchronous data-
ஒத்திசையாத் தகவல்:தகவல் ஒழுங்கற்ற இடைவெளிகள் செல்லுமாறு அமையும்.

attack director-An electro mechanical analogue computer.
தாக்குஇயக்கி:மின் எந்திர முறையில் இயங்கும் ஒப்பு மைக் கணிப்பொறி,

attenuation equalizer-A corrective network.
செறிவொடுங்குசமனாக்கி:ஒரு திருத்தும் வலையமைவு.

attribute-A data item having extra information about a variable: eg action attribute. This information modifies the function of the tag. இயல்பு : ஒரு மாறிக்குரிய செய்தியைக் கொண்டுள்ள தகவல் இனம்: எ.டு செயல்இயல்பு, முக இயல்பு, இத்தகவல் ஒட்டின் வேலையை மாற்றவல்லது.

attribute, kinds of -
பண்பு வகைகள் : 1. அகலப்பண்பு, 2. கரைப்பண்பு, 3. அனைத்து இடைவெளிப்பண்பு, 4. நுண்ணறைத்திண்டுப் பண்பு.

audio cassette recording - A common serial access mass storage method
கேட்புப் பேழைப்பதிவு : ஒரு பொதுவான தொடர் பேரளவுச் சேமிப்புமுறை.

audio conferencing -
கேட்புக்கூட்டம் : வேறுபட்ட இடங்களிலுள்ள மக்களுக்கிடையே நடைபெறும் கூட்டம்; தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல்.

audit - The operations developed to confirm the evidence regarding authenticity and validity of the data in a system.
தணிக்கை : ஒரு தொகுதியி லுள்ள தகவலின் நம்புகை முறைமை பற்றிய சான்றை உறுதி செய்யும் செயல்கள்.

augment - To increase a quantity so as to bring it to a required value.
உயர்த்தல் : வேண்டிய மதிப்புக்கு ஓர் அளவின் மதிப்பை மேம்படுத்தல்.

authoring language - A programming language used for authors of computer based learning materials.
ஆசிரிய மொழி : நிகழ்நிரலாக்கும் மொழி. கணிப்பொறிப் பொருள்களை அறிய ஆசிரியர்களுக்குப் பயன்படுவது.

auto answer - The ability of a modem to answer automatically incoming phone calls.
தன்விடை: உள்வரும் அழைப்புகளுக்குத் தானாக விடையளிக்கும் இருபண்புச் செயலியின் திறன்

autocode - The processing of using a computer to convert automatically a symbolic code into a machine code.
தற்குறிமுறை : குறிபாடுள்ள ஒரு குறிமுறையை எந்திரக்குறி , முறையாகத் தானாக மாற்றும் முறை. இதைக் கணிப்பொறி செய்யும்.

auto-correct option -
தானே திருத்தும் விருப்பம் : இது மிகவும் பயனுள்ளது.பொதுவாக நிகழும் எழுத்துப் பிழைகளை நீக்குவது.

auto format sheet - A facility of StarCalc keeping to format the Worksheet with different predefined styles and colours.
தன் படிவமைப்புத் தாள் : ஸ்டார்கால்கின் வசதியகம். முன்னரே உறுதிசெய்த வேறுபட்ட பாணிகளையும் நிறங் களையும் கொண்டு வேலைத்தாளைப் படிவமைக்க உதவுவது.

automatic carriage - A mechanism to feed continuous paper thro a printing device.
தானியங்கு உருளை : அச்சியற்றும் கருவியமைப்பு வழியாகத் தொடர்ச்சியாகத் தாளைச் செலுத்தும் பொறிநுட்பம்.

automatic character recognition -
தானியங்கு உரு அறிதல் : எண்ணெழுத்துத் தகவல்களை அறிவதற்குரிய தொழில்நுட்பம்.

automatic data processing -
தானியங்கு தகவல் முறையாக்கல் : தானியங்கு கருவியினால் நடைபெறுவது.

automatic indexing - A selection of keywords from a document by computer as index entries.
தானியங்கு பொருளடைவு : கணிப்பொறி ஓர் ஆவணத்திலிருந்து திறவுச்சொற்களைப் பொருளடைவுப் பதிவுகளாகத் தேர்ந்தெடுத்தல்.

automatic programming - Preparation of machine language instructions by means of a computer.
தானியங்குநிகழ் நிரலாக்கல் : கணிப்பொறி மூலம் எந்திர மொழி ஆணைக் குறிப்புகளைத் தயாரித்தல்.

automatic semantics - A technique of describing a particular programme; the description is an attempt to prove that a programme is fault free.
தானியங்கு சொற்பொருளியல் : குறிப்பிட்ட திகழ்நிரல் கூற்றை வண்ணனை செய்யும் நுட்பம். ஒரு நிகழ்நிரல் தவறு. நீங்கியது என்பதை மெய்ப்பிக்கும் முயற்சியே இது.

auto monitor - A debugging computer program instructing a computer to make a record of its own operations.
தானியங்கு கண்காணிப்பி : பிழை நீக்கும் கணிப்பொறி நிகழ்நிரலாக்கல். இதில் கணிப்பொறி தன் செயல்களைத் தானே செய்யுமாறு ஆணைக் குறிப்பு வழங்கப்படும்.

auto-spelling correction -
தானியங்கு எழுத்துப் பிழை திருத்தம் : இது தவறான எழுத்துப் பிழைகளை நீக்கும் முறை.

auxiliary devices -
துணைக் கருவியமைப்புகள் : இவை காந்தப் பரப்புள்ள பதிவு செய்யும் கருவியமைப்புகள். அவை பின்வருமாறு 1) வன்வட்டுகள், எச்.டி.டி. 2) மென்வட்டுகள், எஃப்.டி.டி. 3) நெருக்க வட்டுகள், சி.டி.டி. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க. availability - The computer devices being ready for use.
பயனுடைமை : பயன்படுத்துவதற்குக் கணிப்பொறிக் கருவிகள் அணியமாய் இருத்தல்.

AVL tree - A binary research tree.
ஏவிஎல் மரம் : இரும ஆராய்வு மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/A&oldid=1047038" இலிருந்து மீள்விக்கப்பட்டது