B

back button -
பின் பொத்தான் : ஒரு செலுத்தும் பொத்தான்.

backing -
வளை பொருள் :ஆக்சைடு பூச்சைச் சுமந்து செல்லக் காந்த நாடாவிலுள்ள நெகிழ்பொருள்.

backing storage -
வளை சேமிப்பு : பருமச் சேமிப்பு.

background attribute -
பின்னணி இயல்பு : ஒரு பக்கத்தின் பின்னணியாக ஒரு படத்தை இதன்மூலம் காட்டலாம்.

background noise -
பின்னணி இரைச்சல் : நுண் முறையாக்கி செயல்படும் பொழுது, குறுக்கிடும் அலைக்கழிவு. வழக்கமாக இது புறத்திலிருந்து வரும் தகவல்.

band -
பட்டை : 1) வட்டப் பதிவுத்தட்டைத் தொகுதி. எ-டு காந்த உருளை வட்டு. 2) அலை வரிசை.

bandwidth -
அலை வரிசை : செலுத்து வழியில் உண்டாகும் தகவல்களின் அதிர்வெண் எல்லை. இது அதிகமாக அதிக மாகத் தகவல் தொடர்புத் திறனும் அதிகமாகும். அலகு ஒரு வினாடிக்கு இத்தனை மெகாபிட்டுகள் (MBPS)

barcoding -
பட்டைக்குறி முறை : இதில் வேறுபட்ட தடிமனும் இடமும் உள்ள சிறு பட்டைகள், அடைப்பங்கள், வில்லைகள் முதலியவை அச்சிடப்படும். இவை ஒளிப் படிப்பானால் படிக்கப்பட்டு மின்துடிப்புகளாக மாற்றப்படும். படைக் கோலங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. நன்கு திட்டப்படுத்தப்பட்டிருக்கும். எ.டு மளிகைப் பொருள். இது 10 இலக்கக் குறிமை கொடுக்கப்பட்டிருக்கும்; பொருளின் ஒவ்வொரு கொள்கலத்திலும் இருக்கும்.

barrel printer -
உருளை அச்சியற்றி : கணிப்பொறி அச்சியற்றி இதில் உருக்கள் தொகுதி முழுதும் விரைவாகச் சுழலும் உருளை வழியாகச் செல்லும்.

base -
அடிஎண் : எண்முறையில் பயன்படும் தனிக்குறிமுறையுள்ள எண், சுழியில் தொடங்கும் அடிஎண் 2 என்பது 0.1 ஆகிய இரு எண்களைக் கொண்டது.

base band -
அடிவரிசை : தகவல்; குரல் ஒலி கொண்டது.  base language -
அடிப்படை மொழி : குறைந்த அளவு வசதிகளைக் கொண்டது. தொடக்கத் தகவல் வகைகள், எளிய செயல்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள்.

BASIC, beginners all-purpose symbolic instruction code -
பேசிக் : தொடக்க நிலையடுக்குக்குரிய அனைத்து நோக்க குறிபாட்டுக் கட்டளைக் குறிமுறை. ஓர் உயர் நிலைக் கணிப்பொறி மொழி, வல்லுநர் அல்லாதவர்களும் இதை எளிதாகக் கையாளலாம்.

basic concepts -
அடிப்படைகருத்துகள் : கணிப்பொறி பின் வரும் நான்கு கருத்துகள் அடிப்படையில் அமைந்தது. 1) சிக்கல், 2 விதிமுறை, 3) விதி முறைப் படம் 4 நிகழ்நிரல் மொழி.

basic software -
அடிப்படை மென்பொருள் : தகவல் முறையாக்கு வன்பொருளை வடிவமைப்பதில் பயன்படும் மென் பொருள்கள்.

basic units -
அடிப்படை அலகுகள் : கணிப்பொறியின் அடிப்படை அலகுகள் பின் வருமாறு உட்பலன், 2) மையச்செலகம் அலகு கட்டுப்பாட்டு அலகு), 3) நினைவக அலகு, 4) வெளிப்பலன் அலகு. விளக்கம் அவ்வப்பதிவுகளில் காண்க.

batch -
தொகுதி : இனங்கள்,பதிவகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டது. இது ஒரு தனி அலகாக முறையாக்கப்படும்.

batch processing -
தொகுதி முறையாக்கல் : தகவல்களை முறையாக்கும் ஒருவகை முறை. இதில் நடவடிக்கைகள் தொகுதி தொகுதியாக ஒருங்கு சேரத் திரட்டப்படும். கணிப்பொறியால் இயக்கப்படுவது எ-டு தனிப்பட்ட பணிகளைச் செய்தல்.

beat -
விம்மல் : ஒர் ஆணைக் குறிப்பைச் செயல்படுத்துவதோடு தொடர்புள்ள அலகு நேரம் மைய முறையாக்கியின் நிகழ்நிரல் கட்டுப்பாட்டுக் கருவியில் இக்குறிப்பு இருக்கும்.

BEGIN -
தொடங்கு : ஆல்கல் மொழிக் கூற்று. ஒரு தொகுதி தொங்குவதைச் சுட்டிக் காட்டுவது. இத்தொகுதியின் மாறியில் இது இருக்கும். ENDமுடி என்பதும் இதில் அடங்கும்.

bemchmark -
நிலைக்குறி : வேறுபட்ட கணிப்பொறிகளுக்கு அளிக்கப்படும் ஆய்வு. அவற்றின் தகவல் முறையாக்கும் திறன்களையும் செயல் விரைவையும் ஒப்பிடப் பயன் படுவது.

Tag -
பேரொட்டு : இது பாட எழுத்தை வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாகக் காட்டுவது. எப்பொழுதும் இது முடிவு பெரிய ஒட்டோடு பயன்படுத்தப்படும். எ-டு.

<BIG> Happy New Year</BIG> இது பின்வருமாறு திரையில் தெரியும்.

Нарpy New Year

Bgcolour attribute - பின்னணி நிற இயல்பு: உடல் ஓட்டோடு இது சேர்ந்து ஒரு பக்கத்திற்குரிய பின்னணி நிறத்தைச் சுட்டிக்காட்டும். Bg-back ground- பின்னணி.

Bharat Bhasha - பாரத் மொழி : மாய்ட் (MAT) நாஸ்கம் (NASSAGOM) ஆகிய இரண்டு அமைப்புகளும் மென்பொருள், வன்பொருள் துறைகள் சார்ந்தவை. பாரத் மொழி என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஆங்கிலம் பேசாதவர்களுக்காக வகுக்கப்பட்ட திட்டம். வட்டார மொழிகளில் கணித்தலை வளர்ப்பதே நோக்கம் (1998).

Bill Gates - பில்கேட்ஸ் : அமெரிக்க மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் தலைவர். கணிப்பொறிக் கோடீஸ்வரர். கணிப் பொறித்துறையில் மென்பொருள் உருவாக்குவதில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியவர். எ-டு விண்டோஸ். இணைய வளர்ச்சியிலும் இன்று அதிக நாட்டம் செலுத்திவருகிறார்.

பில் கேட்ஸ்

bin - குதிரகம் : காந்த நாடா நினைவகம். இதில் ஒரே தொகுதியாகக் காந்த நாடாக்கள் அமைந்திருக்கும்.

binary arithmetic - Arithmetic done with binary numbers, 0,1. The addition of binary numbers is the basis of binary arithmetic done by the arithmetic and logic unit of a microprocessor. இரும எண்கணிதம் : 0, 1 என்னும் இரும எண்களால் நடைபெறும் எண்கணிதம். எல்லா இரும எண்கணித அடிப்படை இரும எண் கூட்டலே. இது நுண்முறையாக்கியின் எண்கணித முறைமை அலகலால் செய்யப்படுவது.

binary arithmetic, components of - இரும எண் கணிதத்தின் பகுதிகள் : 1) நிரப்பு குறி மானம், 2) மாற்றல், 3) குறிப்பிட்ட விரிவு, 4) பெருக்கல். பொதுவாக, இக்கணிதம் எண்முறை சார்ந்தது.

binary cell - இரும நுண்ணறை : கணிப்பொறி நினைவகத்தின் அடிப்படை அலகு 1, 0 எண்களைச் சேமித்து வைக்க வல்லது.

binary code - இரும குறிமுறை : கணிப்பொறி பயன்படுத்தும் வகையில் எண்கள் இரும எண் தொகுதிகளாகத் தெரிவிக்கப் படுவது.

binary digit number - இரும இலக்கம் : இரும எண் முறையில் ஓர் எண்ணைத் (010) தெரிவிக்கப் பயன்படும் 0, 1 இலக்கங்கள்.

binary operation - இருமச் செயல் : இரும எண்கணிதச் செயல். இதில் இரு செயலிடங்கள் பயன்படும்.

biobreak - கழிவறை செல்லுதல்.

bistable storage device - இரு நிலைச் சேமிப்புக் கருவியமைப்பு : இவை கணிப்பொறியிலுள்ள நுண்ணறைகளை வடிவமைப்பது.

binary numbers - இரும எண்கள் : இடக்குறி மானத்தைப் பயன்படுத்தி இவை உண்டாக்கப்படுபவை எ-டு 10111. இரும எண்முறையில் 2 இன் மடங்குகள் தொகுதிகளாகப் பயன்படுகின்றன.

bit - A binary digit, 0,1, the basic unit of information in computer and a contraction of binary digit. இருமி: இரும இலக்கம், 0, 1. தகவலின் அடிப்படையலகு. binary digit. என்பதன் சுருக்கம். ஒ.byte.

bit matrix - A two-dimensional array in which each element is equal to 0, 1. இருமியணி : ஒர் இரு பரும நெடுவரிசை இதில் ஒவ்வொரு கூறும் எண் 0 அல்லது l க்குச் சமம்.

bit pattern - The sequence of 0s and 1s in a binary word. இருமிக் கோலம் : ஓர் இருமச் சொல்லில் 0, 1 என்னும் எண்கள் இருக்கும் வரிசை முறை.

bit rate - The speed in bits per second unit KBPS, MBPS. இருமி வீதம் : ஒரு வினாடியில் உண்டாகும் இருமிகளின் விரைவு அலகு ஒரு வினாடிக்கு இத்தனை கிலோ இருமிகள், ஒரு வினாடிக்கு இத்தனை மெகா இருமிகள்.

Blaise Pascal (1623-1662) - The 17th century scientist who developed the mechanical calculator.

பிளாய்சி பாஸ்கல் (1623-1662) : 17ஆம் நூற்றாண்டு அறிவியலார், எந்திரக் கணிப்பானை அமைத்தவர். blamestorming - குழுக்கலந்துரையாடல்

blank - வெற்றகம் : பொருளற்ற தகவலிடம்.

blast - வெடிப்பு : இயக்கக் சேமிப்பின்பொழுது ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலிருந்து நினைவகப்பகுதிகளை விடுவித்தல். இதனால் ஏனைய நிகழ்நிரல்களின் மறு ஒதுக்கீட்டிற்கு இப்பகுதிகள் கிடைக்கும்.

block - A group of information units considered as a single unit, eg. records, words and characters. தொகுதி: ஒரு தனித் தொகுதியாகவுள்ள தகவல் அலகுகளின் தொகுதி. எ-டு பதிவகங்கள், சொற்கள், உடுக்கள்.

block data - A statement in FORTRAN. தொகுதித் தகவல் : பார்ட்ரான் மொழியிலுள்ள கூற்று.

block diagram - The diagramatic representaion of any system: eg. computer programme. தொகுதிப்படம் : கட்டப்படம் ஓர் அமைப்பின் படக்குறியீடு. எ-டு கணிப்பொறி நிகழ்நிரல்.

blocking - The grouping of individual records into blocks to achieve a greater efficiency for input / output operators. தொகுதியாக்கல் : உட்பலன்/வெளிப்பலன் செயல்களின் பெரும் பயனுறுதிறனைப் பெற தனிப் பதிவகங்களை ஒன்று சேர்த்தல்.

block mark - A special character indicating the end of a block. தொகுதிக்குறி : ஒரு தொகுதி முடிவதைக் குறிக்கும் தனி உரு.

board - பலகை : விரைப்பான காப்புப் பொருள் கொண்ட பலகை. இதில் ஒருங்கிணைந்த சுற்று பொருந்தி இருக்கும்.

Bob Franhston - பாப் பிராங் கஸ்டன் : 1979-இல் ஆப்பிள் கணிப்பொறிக்காகக் காட்சிக் கணிப்பானைப் புனைந்தவர்.

Body tag - உடல் ஒட்டு : இதன் இயல்பைப் பயன்படுத்திப் பின்னணி நிறத்தை மாற்றலாம், புதிய படத்தைச் சேர்க்கலாம்.

Boolean algebra - A shorthand way of writing complex combination of logical statements either false or true. It was developed by George Boole, a 19th century mathematician. பூல் இயற்கணிதம் : உண்மை அல்லது தவறான முறைமைக் கூற்றுகளை அரிய முறையில் சுருக்கி எழுதும் வழி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணக்கறிஞர் பூல் என்பவரால் உருவாக்கப்பட்டது.

Boolean operator - A logic function: eg AND.

பூல் செயலி : ஒரு முறைமைச் சார்பலன் எ-க. உம்.

Boolean Search - A search for selected information expressed by AND, OR and NOT functions.

பூல் தேடல் : தெரிவு செய்ய வேண்டிய தகவலைத் தேடிக் காணல், மற்றும், அல்லது, இல்லை என்னும் சார்பலன்களால் தெரிவிக்கப்படுவது.

boot - The mode of loading an operating system from a magnetic disk into a computer's memory.

பொதி ஏற்றல் : காந்த வட்டிலிருந்து கணிப்பொறியின் சுமை ஏற்றும் முறை. ஓர் இயங்கும் அமைப்பில் இது நடைபெறுவது.

bootstrap button - Otherwise known as boot button. The first button pressed to turn on a computer. It causes the operating system to be loaded into memory.

புதைமிதிநாடா பொத்தான் : வேறுபெயர் புதைமிதி பொத்தான். கணிப்பொறியை இயக்க முதலில் கொடுக்கப்படும் பொத்தான். இயங்கு அமைப்பில் நினைவகம் ஏறி அமரச் செய்வது.

bootstrapping - பொதியேற்றல். boot.

border attribute - This attribute specifies the thickness of the border around the table.

கரைப்பண்பு : இப்பண்பு கரையின் தடிமனைக் குறிப்பது கரை அட்டவணையைச் சுற்றி அமைந்திருக்கும்.

borrow - A carry signal arising a subtraction when the difference between digits is less than zero.

கடன் வாங்கல் : இது ஒரு கொண்டுசெல் குறிகை. இலக்கங்களுக்கிடையே வேறுபாடு சுழிக்குக் குறைவாக இருக்கும் பொழுது கழித்தலில் தோன்றுவது.

box - A flow chart symbol representing the logical unit of a system or program.

பெட்டி - வழிமுறைப்படக் குறியீடு. ஓர் அமைப்பு அல்லது நிகழ்நிரலின் முறைமையலகைக் குறிப்பது.

brainware - அறிவுப்பொருள்: நிகழ் நிரல் சார்ந்தது

branch - A portion of a network having one or two more terminal elements in series. Otherwise known as arm. பிரிவு : ஓர் வலையமைப்பின் பகுதி தொடர்வரிசையில் ஒன்று அல்லது இரண்டு முனைக் கூறுகளைக் கொண்டிருக்கும். வேறு பெயர் கை.

branching - Selection of one or two more branches under the control of a computer programme, a fundamental control structure. பிரிதல் : கிளைத்தல். ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளைத் தேர்ந்தெடுத்தல். ஓர் அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்பு.

branching, kinds of - பிரிதல் வகைகள் : 1) இருவழிப் பிரிதல்: ஒரு வினாவைக் கேட்டு விடை 'ஆம்', 'இல்லை' என்று வருவதாக வைத்துக்கொள். விடையைப் பொறுத்துக் கிடைக்கக் கூடிய இரு வழிகளில் ஒன்றுக்குச் செல். 2) பல்வழிப் பிரிதல் : சில வினாக்களுக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' விடை இராது. எ-டு இச்சிறுவனின் அகவை என்ன? இதற்குரிய விடை பல முழு எண்களால் ஒன்றாக இருக்கும், விடையைப் பொறுத்து, வேறுபட்ட பல கணிப்பீடுகளைச் செய்ய வேண்டும். இதற்கு வேறுபட்ட வழிகளில் செல்ல வேண்டும்.

<BR>Tag-பிஆர் ஒட்டு : இது வரிமுறிவை உண்டாக்கப் பயன்படுவது. பா. tags.

brain - மூளை : ஒரு நிகழ்நிரல் மென்பொருளகத்தால் உருவாக்கப்பட்டது. கோப்புகள் இடையப் (வெப்) பக்கங்கள், அடைவுகள் ஆகியவற்றை அடைக்கப் பயன்படுவது.

branch instruction - The instruction making the computer choose between alternative sub-programmes. பிரிவு ஆணைக்குறிப்பு : மாற்றுத் துணை நிகழ்நிரல்களுக்கிடையே ஒன்றைக் கணிப்பொறி தேர்ந்தெடுக்குமாறு செய்யும் குறிப்பு.

break - An interruption of a transmission. முறிவு : ஒரு தகவல் செலுத்துகைத் தடைப்படல்.

break contact - The contact of a switching device opening a circuit upon the operation of the device. முறிதொடர்பு : சொடுக்கு கருவியமைப்பின் தொடர்பு. இது செயற்படும் கருவியமைப்பின் மின்சுற்றைத் திறப்பது.

breakpoint - A port in programme. Here the instructor digit enables a programmer to interrupt the run by external intervention. முறிநிலை : ஒரு நிகழ்நிரல் நிலை. இங்கு ஆணைக் கட்டளைக் குறிப்பு இலக்கம் ஓட்டத்தைத் தடைசெய்ய நிகழ்நிரலடுக்கு உதவும். இது புறக்குறுக்கீட்டினால் நடைபெறுவது.

bridgeware - Either software or hardware aids. இணைப்புப் பொருள் : மென் பொருள் அல்லது வன்பொருள்.

broad band Technology - அகல்வரிசைத் தொழில் நுட்பம் : உயர் அதிர்வெண்கள் பற்றிய தொழில் நுணுக்கம். இணையத்திற்கு உயர் அகல் வரிசை வழங்குவதில் நான்கு முறைகள் உள்ளன.

1) தற்பொழுதுள்ள செம்பு அல்லது ஒளி இழைக் தொலை பேசிக் கம்பிகள் வழியாக புதிய தொழில் நுட்பமான இலக்க உறுப்பினர் வழியைப் (DSL) பயன்படுத்தல்.

2) இலக்க அனைத்து வழிக் கம்பிகள் வழியாக அனுப்புவது (ISDN).

3) கம்பிவடத் தொலைக்காட்சி வழியாக அனுப்புவது.

4) நேரடியாக வீட்டிற்கு (DTH) அனுப்புதல். இதற்குச் செயற்கை நிலாக்கள் பயன்படுதல். இவற்றைத் தனியார் வட்டு உணரியுடன் இணைத்தல். அகல்வரிசை வழியாகத் தகவல், குரல், காட்சி ஆகியவை செல்பவை.

broadcast - Simultaneous transmission of information to a member of terminals.

தகவல் பரப்பு : பல முனையங்களுக்கு ஒரே சமயம் தகவல் செல்லுதல்.

browsing - Finding information in internet at random.

மேய்தல் : இணையத்தில் தகவலை மேலோட்டமாகப் பார்த்தல்.

browser- மேய்வி : மேய்தலைச் செய்யும் ஒரு தனிநிகழ் நிரல். இதன்மூலம் வலையமைவிலிருந்து தகவலைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இது இரு வகை: 1) இணைய ஆராய்வி, இது விண்டோஸ் 98 இன் ஒரு பகுதி. 2) வலைக் காட்சிச் செலுத்தி. இது பரவலாக உள்ளது.

bubble memory - The computer memory. In this memory the presence or absence of a magnetic bubble in a localised region of a thin magnetic film shows 1 or 0.

குமிழி நினைவகம் : கணிப் பொறி நினைவகம். இதில் ஒரு மெல்லிய காந்தப் படலத்திலுள்ள உள்ளிடப் பகுதியில் காந்தக்குமிழி உள்ளதா இல்லையா என்பதை 1 அல்லது 0 என்னும் எண் காட்டும்.

budgetting - The process of allocating resources to a particular development.

பாதீடுசெய்தல் : ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு வளங்களை ஒதுக்கும் முறை.

buffer - A device connected between two other devices in order to strengthen a signal: eg. buffer in microprocessor.

தாங்கமைவு : வேறு இரு கருவியமைப்புகளுக்கிடையே உள்ள கருவியமைப்பு. இதன் வேலை குறிகைக்கு வலுவூட்டுதல். எ.டு. நுண்முறையாக்கியிலுள்ள தாங்கமைவு.

buffer zone - An area of main memory set aside for temporary storage. தாங்குமண்டலம் : முதன்மை நினைவகப் பகுதி; தற்காலிகச் சேமிப்பிற்காக உள்ளது.

bug - An error in a computer programme.

பிழை : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலிலுள்ள தவறு. ஒ. virus.

உணர்வி : இயக்கம், வெப்ப நிலை, கதவைத் திறத்தல் மூடுதல் முதலியவற்றை அளக்கப் பயன்படும் கருவியமைப்பு.

A device to measure movement, temperature and closing and opening of door.

building block - A circuit having a particular function: eg. flip-flop. கட்டுதொகுதி : குறிப்பிட்ட வேலையுள்ள எழுவிழு கருவி.

bullets - பொழிவுகள் : இவை முக்கியக் குறிப்புகளையும் செய்திகளையும் பட்டியலிடப் பயன்படும்.

burster - An off-line device in a computer to separate the continuous roll of paper in a printer into individual sheets.

பிரிப்பி : கணிப்பொறித் தொகுதியிலுள்ள மையக் செயல கத்தின் கட்டுப்பாடு இல்லாமல இயங்கும் கருவியமைப்பு. ஓர் அச்சியற்றியில் சுழலும் தொடர் சுருள்தாளைத் தனித் தாள்களாகப் பிரிப்பதும் தாளில் உள்ள துளைகள் வழியாகப் பிரிப்பது நடைபெறும்.

bus - An electrical route along which data flows.

போக்குவாய் : தகவல் செல்லும் மின் வழி.

bus driver - A specially designed integrated circuit in a computer system. It ensures that data from the microprocessor is in a form suitable for tansmission along a data bus.

போக்குவாய் இயக்கி : ஒரு கணிப்பொறித் தொகுதியிலுள்ளது; சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைச் சுற்று. ஒரு தகவல் போக்குவாய் வழியாக நுண்முறையாக்கியிலிருந்து தகவல் செல்வதற்குரிய வடிவத்தை உறுதிசெய்வது.

buses, standard - திடடப் போக்குவாய்கள் : இவை மின்னணுப் பகுதிகளை இணைக்க உதவும். பயனாளி இவற்றை விற்பனையாளரிட மிருந்து வாங்கலாம்.

business computer - A personal computer. தொழில் கணிப்பொறி : தனியாள் கணிப்பொறி.

bus network - A popular communication system between computers. போக்குவாய் வலையமைவு : கணிப்பொறிகளுக்கிடையே உள்ள மிகப்பரவலான தகவல் தொடர்முறை.

button - This is the simplest of the controls used in forms. In HTML it is used to indicate that the user has finished a current form and he can take up something further. It is of many kinds: OK, cancel buttons.
பொத்தான் : படிவங்களில் பயன்படும் மிக எளிய கட்டுப்பாடுகளில் ஒன்று. எச்டிஎம் எல்லில் நடப்பிலுள்ள படிவத்தை முடித்து மேற்கொண்டு ஏதாவது ஒன்றைப் பயனாளி எடுக்கின்றாரா என்பதைக் காட்டுவது. வகை பல. எ-டு சரி, நீக்கு, பொத்தான்கள்.

buzzword - அருஞ்சொல் : புரியாக் கலைச் சொல். 1960இல் ஹனிவெல் என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிப்பொறி இயலில் இது போன்ற சொற்கள் பல உண்டு.

bypass capacitor - А capacitor connected in a circuit to divert an unquoted signal: eg a carrier wave in a radio receiver.
புறவழி மின்தேக்கி : தேவையில்லாத குறிகையை விலக்க ஒரு மின்சுற்றில் இணைக்கப்படுவது. எ-டு ஒரு வானொலிப் பெறுங்கருவியிலுள்ள ஊர்தியலை.

byte, B - A group of binary digits. It is run generally used for a 8 bit Word moved around as a single unit of data in a computer system.
இருமித்தொகுதி, பி : இரும இலக்கங்களின் தொகுதி. 8 இருமிச் சொல்லைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுவது. ஒரு கணிப்பொறித் தொகுதியில் ஒரு தனிச் செய்தி அலகாக நகர்ந்து செல்வது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/B&oldid=1047039" இலிருந்து மீள்விக்கப்பட்டது