c

C - A high level programming language, developed by Bell Labs for writing system software. It was designed for use by professional programmers.
சி - பெல் ஆய்வகங்கள் உருவாக்கிய உயர்நிலை நிகழ்நிரல் மொழி. அமைப்பு மென்பொருள் எழுதப் பயன்படுவது. தொழில் நிலை நிகழ்நிரலால் பயன்படுவதற்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டது.

C Character set - A C element. This set contains the following.
சி உருத் தொகுதி : சி யின் கூறு. இதிலுள்ளவை பின்வருமாறு:
பெரிய எழுத்துகள்:
A,B,C,D,E,F,G,H,\,J,K,I,NM, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
சிறிய எழுத்துகள்:
a,b,c,d,e,f,g,h,i,j,k,l,m,n,0,p,q, r,s,t, u,v,w,x,y,z இலக்கங்கள்:
0,1,2,3,4,5,6,7,8, 9,
குறிகள்:

  • + \ | " ( = | { # ) ~ ; } / % - [, ?^ - ]'. & blank

C constants, kinds of - சி மாறிலிகளின் வகைகள் :இவை பின்வருமாறு.
1) உருவகை: உருமாறிலி, சரமாறிலி
2) எண் வகை: முழு எண் மாறிலி, மெய்மாறிலி
3) முழுஎண் மாறிலி: குறியற்றது, நீண்டது, குறுகியது. முழு எண்
4) மெய்மாறிலி: மிதப்பது, இரட்டை

C language, elements of - சி மொழியின் கூறுகள் : இவை பின்வருமாறு:
1) சி உருத்தொகுதி 2) சி மாறிலிகள் 3) விடுபடு வரிசை 4) சி மாறிகள் 5) தொடங்குதல் 6) செயலிகள் 7) சேமகச் சார்பலன்கள் 8) எண்கணிதச் செயல்கள் 9) தகவல் வகை மாற்றல் 10) எண் கணிதக் கூற்றுகள்.

C programme, sections of - சி நிகழ்நிரலின் பகுதிகள்: இவை பின்வருமாறு 1) தலைப்புப் பகுதிகள் 2) எழுத்து அறுதியிடும் பகுதி 3) ஆணைக் குறிப்புப் பகுதி. இம்மூன்றின் விரிவை அவ்வப்பதிவில் காண்க.

C programme,steps in - சி மொழியின் படிகள் : 1) உருவாக்கல்/பதிப்பித்தல் 2)தொகுத்தல் 3)இணைத்தல் 4) நிறைவேற்றல்.

C variables - சி மாறிகள் : மொழித் தொடர்பாகப் பயன்படுபவை.
மூன்று எண்களின் சராசரியைக் காண்பதாகக் கொள்வோம். இம்மூன்று எண்களும் உட்பலன், சராசரி, வெளிப்பலன்.
மூன்று எண்கள் → கணிப்பொறி → சராசரி. இதற்குரிய பணியைக் கணிப்பொறி உரியமுறையில் செய்யும். A, B, C சேமிப்பு இடங்களாக இருக்கட்டும். விளைபயன் D இல் சேமிக்கப்படும். இங்கு A, B, C, D என்பவை மாறிகள். நினைவக இடப்பெயரே மாறி எனப்படும்.

cache - A small fast storage buffer integrated in the central processing unit of some large computers.
மறைவிடம் : இது சிறியதும் விரைவு உள்ளதுமான சேமிப்புத்தாங்கமைவு. சில பெரிய கணிப்பொறிகளின் மையச் செயலகத்தோடு இணைந்திருக்கும்.

cache memory - A high speed buffer memory found between processor and main memory. மறைவிட நினைவகம் : உயர் விரைவுத் தாங்கமைவு நினைவகம், முறையாக்கிக்கும் முதன்மை நினைவகத்திற்கும் இடையே காணப்படுவது.

calculator - A common data processing device to carry out logic and arithmetic operations. It has a limited programming ability.
கணிப்பான் : முறைமை மற்றும் எண்கணிதச் செயல்களைச் செய்யப் பொதுவாகப் பயன்படும் மின்னணுக் கருவியமைப்பு. இதற்கு வரையறையுள்ள நிகழ்நிரல் திறனே உண்டு.

calculation - கணக்கீடு : எண் கணக்குகளைக் குறிப்பது.

call - A keyword within a programme instructing a computer to start on another routine.
அழைப்பு : நிகழ்நிரலிலுள்ள திறவுச்சொல் மற்றொரு வழக்கமான செயலைத் தொடங்க ஆணைக்குறிப்பு வழங்குவது.

call in - Transferring of control of a digital computer from main routine to a subroutine.
உள்ளழை : ஓர் இலக்கக் கணிப்பொறியின் கட்டுப்பாட்டை வழக்கமான முதன்மைச் செயலிருந்து வழக்கமான துணைச் செயலுக்கு மாற்றுதல்.

call instruction - A type of instruction allowing a return to the programme's original sequence.
அழைப்பு ஆணைக்குறிப்பு : ஒருவகை ஆணைக்குறிப்பு. நிகழ்நிரலின் முதல் வரிசைக்குத் திரும்புகையை அனுமதிப்பது.

call number - A set of instructions to set up and a cell given sub-routine.
அழைப்பெண் : கொடுக்கப்பட்ட வழக்கமான துணைச் செயலை அழைக்க அமைக்கப்படும் ஆணைக் குறிப்புத் தொகுதி.

CANCEL - A deletion of information by a remote computing.
நீக்கு : தொலைக் கணிப்பொறித் தொகுதியினால் நீக்கப்படும் தகவல்.

capacity- The number of words or characters contained in a particular storage device. கொள்திறன் : குறிப்பிட்ட ஒரு சேமிப்புக் கருவியமைப்பில் உள்ள சொற்கள் அல்லது உருக்களின் எண்ணிக்கை.

card - 1.punched card. 2.A printed circuit board plugged into a main circuit board to increase the capacity and function of a computer system.
அட்டை : 1) துளையிட்ட அட்டை, 2) அச்சியற்றி மின் சுற்றுபலகை, முதன்மை மின் சுற்று பலகையில் செருகப் பட்டிருக்கும். ஒரு கணிப்பொறித் தொகுதியின் கொள்திறன், வேலை ஆகியவற்றை உயர்த்துவது.

card code - The representation of characters on a punched card by means of punching one or more holes per column,
அட்டைக் குறிமுறை : ஒரு அட்டையில் ஒரு பத்திக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துளைகளை இட்டு அதில் உருக்களைக் குறித்தல்.

card loader - A programming routine allowing a dock of cards to be read into a memory.
அட்டைச் சுமை ஏற்றி : வழக்கமான ஒரு நிகழ்நிரலாக்கு செயல். இதில் பல அட்டைத் தொகுதிகள் முதன்மை நினைவகத்தில் படிக்க அனுமதிக்கப்படும்.

card punch - A computer input device punching signals from the central processing unit.
அட்டைத்துளையிடுவி : கணிப்பொறி வெளிப்பலன் கருவியமைப்பு. மையச் செயலகத்திலிருந்து குறிகைகளைப் பெற்றுத் துளையட்டையில் துளைகள் இடும்.

carriage return - The operation causing the next character to be printed the extreme margin and usually advancing the next line at the same time.
இடம் செல்லல் : இது ஒரு செயல். இதில் அடுத்து அச்சியற்ற வேண்டிய உரு, கடைக் கோடி இட ஓரத்திற்குச் செல்லும். அதே சமயம் அடுத்த வரியும் முன் நகர்ந்து வரும்.

carry flag - The flip-flop circuit showing an overflow in arithmetic operation.
கொண்டுசெல் கொடி : இது எழுவிழு மின்சுற்று எண் கணிதச் செயல் வழிவதைக் காட்டும்.

carry signal - A signal produced in a computer when the difference between two digits is zero.
கொண்டுசெல் குறிகை : இரு இலக்கங்களுக் கிடையே வேறுபாடு சுழியாக இருக்கும் பொழுது உண்டாகும்.

carry time - The time needed to transfer all carry digits to the next higher column.
கொண்டுசெல் நேரம் : அடுத்த உயர்பத்திக்கு மாற்ற ஆகும் நேரம்.

cascade control - An automatic control system with various control units linked in sequence.
அருவிக் கட்டுப்பாடு : இது ஒரு தானியங்கு கட்டுப்பாட்டு முறை. இதில் பல கட்டுப்பாடுகளும் வரிசை முறையில் இணைந்திருக்கும். cassette - A package containing spools round which megnetic tape moves for recording and playing back computer programmes.
பேழை : வட்டுகளைக் கொண்டுள்ள சிப்பம். இவ்வட்டுகளைச் சுற்றிக் காந்த நாடா நகரும். இதனால் தகவலைப் பதிவுச் செய்து மீண்டும் அதைப் போட்டுப் பார்க்கலாம்.

cassette memory - The removable magnetic tape cassette storing computer programmes and data.
பேழை நினைவகம் : நீக்கக் கூடிய காந்த நாடாப் பேழை: கணிப்பொறி நிகழ்நிரல்கள் மற்றும் தகவல்களைச் சேமித்து வைப்பது.

cast - Converting one data type to another. The general format is this: (data type) expression.
வார்ப்பு : ஒருவகைத் தகவலை மற்றொன்றாக மாற்றல், இதன் பொதுப்படிவமைப்பு: (தகவல் வகை) வெளிப்பாடு (கோவை).

catalogue - Any list of information stored on tap or disk: eg programme titles.
பட்டியல் : தகவல் தொகுப்பு நாடா அல்லது வட்டில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது எ-டு நிகழ்நிரல் தலைப்புகள்.

categorization - The process of separating multipie addressed messages to form individual ones foi si;;guiar addresses.
வகையாக்கல் : பன்ம முகவரியிட்ட செய்திகளைத் தனிச்செய்திகளாகப் பிரிக்கும் முறை. தனிமுகவரிகளுக்காக இது செய்யப்படுகிறது.

catena - A series of data items in a chained sist.
தொடர் : ஒரு தொடர் பட்டியிலுள்ள தகவல் இனவரிசை.

CDA, Comintinications Decency Act - சிடிஏ தகவல் தொடர்வு நாகரிகச் சட்டம் : 1996இல் அமெரிக்காவில் சட்டமாக்கப்பட்டாலும் மாவட்ட நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இச்சட்டத்தை தள்ளுபடி செய்துவிட்டன. இதைச் சட்டமாக்கியவர் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் திரு. கிளிண்டன். இதன் நோக்கம் இணையக் குற்றங்களைத் தடுப்பது.

CD ROM - Compact diskROM. On the surface of this disk there are minute pits for storing computer data. The data can be read using laser light. சி.டிரோம் : நெருக்கவட்டு ரோம். இவ்வட்டின் மேற்பரப்பில் மிகச்சிறிய நுண்குழிகள் கணிப்பொறித் தகவல்களைக் சேமிக்க அமைந்திருக்கும். இவற்றை லேசர் ஒளியைப் பயன்படுத்திப் படிக்கலாம்.


cell - A subdivision of computer memory. It stores one unit of data, one bit, A computer contains millions of cells. நுண்ணறை : கணிப்பொறி நினைவகத்தின் உட்பிரிவு. ஓரலகுத் தகவலை மட்டும் சேமிக்கும் அதாவது ஒர் இருமி (பிட்), கணிப்பொறியில் மில்லியன் கணக்கில் இந்நுண்ணைறைகள் உள்ளன.


cell padding - The space between the border of the cell and its contents. Its value should also be in pixels. நுண்ணறை வெளி : நுண்ணறை மற்றும் அதன் உள்ளடக்கங்களின் கரைக்கு இடையே உள்ள வெளி. இதன் மதிப்பு படமத்தில் (பிக்சல்) அமையும். படமம் படக்கூறு.


cell referencing - Type the formula = C3+D3+E3+F3 in cell G3 and copy it to the cells G4 : G7. Click on the cell G4. Now the formula in this cell is = C4+D4+E4+F4. This happens because spread sheets refer the cell addresses in a formula only. நுண்ணறைப் பார்வை : வாய்பாடு = C3+D3+E3+F3 என்பதை G3 நுண்ணறையில் தட்டச்சு செய். பின் அதை G4 : G7 நுண்ணறைகளுக்குப் படி எழுத்து அனுப்பு. G4 என்னும் நுண்ணறையைத் தட்டு. இப்பொழுது இவ்வறையிலுள்ள வாய்பாடு = C4+D4+E4+F4. விரிதாள்கள் நுண்ணறை முகவரிகளை வாய்பாடாகவே பார்ப்பதால், இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.


cell referencing, kinds of - This is of two kinds:

1. Relative cell addressing: This is the default type of cell addressing used by StarCalc.

2. Absolute cell addressing: A cell address can be made absolute by using the dollar sign in front of row and column names.

நுண்ணறைப் பார்வை வகைகள் : இது இருவகை.

1. சார்பு நுண்ணறை முகவரியிடல் : ஸ்டார் கால்க் பயன்படுத்தும் நுண்ணறை முகவரியிடலின் தவறான வகை இது.

2. தனி நுண்ணறை முகவரியிடல் : ஒரு நுண்ணறை முகவரியை தனியாக்கலாம். இதற்கு வரிசைக்கும் பத்திப் பெயர்களுக்கும் முன்னுள்ள டாலர் குறியைப் பயன்படுத்த வேண்டும்.


cell spacing - The space between two cells. Its value should be in pixels. This is an attribute. நுண்ணறை இடைவெளிவிடல் : இரு நுண்ணறைகளுக்கு இடையிலுள்ள வெளி. இதன் மதிப்பு படமங்களில் இருக்க வேண்டும். இது ஒரு பண்பே.


central processing unit, CPU - The principal operating and controlling part of a computer. In micro computer the CPU is a microprocessor. மைய முறையாக்கு அலகு, சிபியூ : மையச் செயலகம். கணிப்பொறியின் கட்டுப்படுத்தும் பகுதி, இயக்கும் பகுதி. நுண் கணிப்பொறியில் மையச் செயலகம் நுண் முறையாக்கி ஆகும்.


central processing unit, components of - மைய முறையாக்கு அலகின் பகுதிகள் : இவ்வலகு மனித மூளை போன்றது. இதிலுள்ள மூன்று முக்கியப் பகுதிகள் 1) கட்டுப்பாட்டு அலகு. 2) எண் கணித முறைமை அலகு. 3) பதிவகங்கள்.


chain - A sequence of events linked together so that the completion of one event begins the next. தொடர் : இணைப்புள்ள நிகழ்ச்சி வரிசை. இதனால் ஒரு நிகழ்ச்சி முடியும் பொழுது, அடுத்த நிகழ்ச்சி தொடங்கும்.


chaining - A method of storing records for easy identification. தொடராக்கல் : எளிதாக அடையாளங் கண்டறியப் பதிவுருக்களைச் சேமித்து வைக்கும் முறை.


chain printer - A high speed printer. தொடர் அச்சியற்றி : ஓர் உயர் விரைவு அச்சியற்றி.


channel - The part of a computer system doing input and output functions. செல்வழி : உட்பலன் வெளிப் பலன் வேலைகளைச் செய்யும் கணிப்பொறியின் பகுதி.


channel width - The number of bits handled simultaneously by a communications channel. செல்வழி அகலம் : ஒரே சமயத்தில் ஒரு தகவல் தொடர்புச் செல்வழி கையாளும் இருமிகளின் எண்ணிக்கை.


character - Any letter, number or symbol produced on a keyboard for display on a VDU. உரு : காட்சித் திரையில் தோன்றும் எழுத்து, எண் மற்றும் குறி. விசைப் பலகைச் சாவியைத் தட்டி இதைச் செய்யலாம்.


character constant - One of the elements of C language. Each character has an integer value based on the character set that the computer uses. eg. ‘C’-67. உருமாறிலி : சி மொழிக் கூறுகளில் ஒன்று. ஒவ்வொரு உரு வும் ஒரு முழு எண் மதிப்பு கொண்டது. இம்மதிப்பு கணிப்பொறி பயன்படுத்தும் உருத் தொகுதியின் அடிப்படையில் அமைந்தது. எடுத்துக்காட்டு : 'C' - 67.


character generator - A special chip in a computer producing a character on a VDU. உரு இயற்றி : கணிப்பொறியிலுள்ள ஒரு தனி நறுவல், காட்சித் திரையில் உருவை உண்டாக்குவது.


character set - A group of characters suitable for transmission from one place to another. Eg. the alphabet. உருத் தொகுதி : உருக்கணம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்துவதற்கேற்ற உருக்களின் கூட்டம்.


character string - A sequence of characters in a computer memory. Otherwise known as alphabetic string. உருச்சரம்: கணிப்பொறி நினைவகத்திலுள்ள உருக்கள் வரிசை. வேறுபெயர் அகர வரிசைச்சரம்.


charge - coupled device, CCD - A data storage device. மின்னேற்ற இணைப்புக் கருவியமைப்பு : ஒரு தகவல் சேமிப்புக் கருவியமைப்பு.


chart - A diagram to analyse or solve a problem. படம் : ஒரு சிக்கலைப் பகுக்க அல்லது தீர்வு செய்யப் பயன்படும் விளக்கப்படம்.


chart recorder - An electronic device showing how some quantity varies with time. Eg. atmospheric pressure. படப் பதிவி : ஒரளவு காலத்திற்கேற்ப எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டும் மின்னணுக் கருவியமைப்பு.


Chassis - The metal frame on which circuit boards and components are mounted. சட்டகம் : உலோகச் சட்டம். இதில் மின்சுற்றுப் பலகைகளும் அதன் பகுதிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.


check - A test to find out a mistake. சரிபார்ப்பு : ஒரு தவறைக் கண்டறியும் ஆய்வு.


check bit - The binary bit, 0,1. சரிபார்ப்பு இருமி : இருமி 0, 1.


check box - This switch is used to enable or disable options. Clicking on a square in this box enables the options and clicking on it again disables it. A tick mark in this square shows that the option is possible and a blank square shows that the option is impossible. This is found in the Windows. சரிபார்ப்புப் பெட்டி : விருப்பங்களை இயலக் கூடியதாகவும் இயலக் கூடாததாகவும் செய்ய இச்சொடுக்கிப் பெட்டி உதவுகிறது. இப்பெட்டியிலுள்ள சதுரத்தைத் தட்ட விருப்பம் இயல்வதாக அமையும். அதை மீண்டும் தட்ட விருப்பம் இயலாததாகும் சரிக்குறி விருப்பம் உண்டு என்பதையும் வெற்று இடம் அது இல்லை என்பதையும் காட்டும். இப்பெட்டி சாளர மென் பொருளில் உள்ளது.


check box types - சரிபார்ப்புப் பெட்டியின் வகைகள் : 1) சரிபார்க்காப் பெட்டி, 2) இயலாப் பெட்டி.


check indicator - A device informing the operator the occurrence of an error. சரிபார்ப்புக் காட்டி : ஒரு பிழை தோன்றுவதை இயக்குபவருக்குக் காட்டும் கருவியமைப்பு.


check register - The register in which transferred data are temporarily stored. சரிபார்ப்புப் பதிவகம் : இதில் மாறிய தகவல்கள் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.


Chennai in IT Industry - தகவல்தொழில் நுட்பத் துறையில் சென்னை : இன்று இந்தியாவிலேயே இத்தொழில் நுட்பத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதற்கு நல்ல சூழலும் கணிப்பொறி அறிவு வளமும் இருப்பதே காரணங்கள். இத்துறையை உருவாக்கியவை மாண்புமிகு கலைஞர் தலைமையில் உள்ள தமிழ்நாடு அரசும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பவியல் பூங்காவும் (STPI) ஆகும்.


chip - An integrated micro-circuit doing a significant number of functions, நறுவல் : ஒருங்கிணைந்த நுண் மின்சுற்று, குறிப்பிடத்தக்க வேலைகளைச் செய்வது.


Chris Burton - கிரைஸ் பர்டன் : பிரிட்டன் பொறியர், தொடக்க காலக் கணிப்பொறிகளின் வரலாறு எழுதியவர்.


circuit - A path for two way communication between computer terminals. மின்சுற்று : கணிப்பொறி முனைகளுக்கிடையே இருவழிச் செய்தித் தொடர்புக்காக உள்ள வழி.


circuit diagram - Physical representation of components and inter-connections defining a specific hardware functional design. மின்சுற்று விளக்கப்படம் : ஒரு குறிப்பிட்ட வன்பொருள் வேலைசெய் வடிவமைப்பை வரையறை செய்யும் இணைப்புகளையும் பகுதிகளையும் குறிக்கும் படம்.


circuit elements - மின்சுற்று கூறுகள் : இவை படிகப் பெருக்கிகள், இருமுனை வாய்கள், தடையளிப்பிகள் ஆகியவை. சிலிகானின் மிகச் சிறிய பரப்பில் இவை ஒருங்கிணைக்கப்படும். இவற்றின் பெயர் ஒருங்கிணைசுற்று ஆகும்.


class modules, cls - வகுப்பு அலகுகள், வஅ : இவை படிவங்களை ஒத்தவை. கண்ணுக்குப் புலப்படா. தங்கள் சொந்தப் பொருள்களைப் பயனாளிகள் உருவாக்க இவை உதவும்.


clause - The part of a statement in the COBOL language describing the structure of an elementary item. உட்பிரிவு : கோபல் மொழியில் ஒரு கூற்றின் பகுதி, ஒரு தொடக்க இனத்தின் அமைப்பை விளக்குவது.


clause, kinds of - உட்பிரிவு வகைகள் : 1) ஒதுக்கீட்டு உட்பிரிவு. 2) முறைமை உட்பிரிவு. 3) மாற்று உட்பிரிவு.


clear - To restore a storage device usually denoting zero. தெளிவாக்கல் : சேமிப்புக் கருவியமைப்பை வழக்கமாகச் சுழியைக் காட்டும் நிலைக்குக் கொண்டு வருதல்.


clipboard - A temporary storage location in windows. கவ்வுபலகை : சாளர மென்பொருளில் உள்ள தற்காலிகச் சேமிப்பு இடம்.


clock, CLK - A source of accurately times pulses used for synchronisation in a digital computer. கடிகை, சிஎல்கே : துல்லிய நேரத்துடிப்புகளின் மூலம் இலக்கக் கணிப்பொறியில் ஒத்திசைவிற்காகப் பயன்படுவது.


close button - மூடுபொத்தான் : இது விண்டோஸ் என்னும் சாளர மென்பொருளை மூடப் பயன்படுவது.


closed file - மூடிய கோப்பு : படிப்பதற்கோ எழுதுவதற்கோ இயலாத கோப்பு.


closed loop - The loop whose execution continues indefinitely in the absence of any external control. மூடிய வளையம் : இதன் நிறைவேற்றும் செயல், புறக்குறுக்கீடு இல்லாத நிலையிலும் முடிவின்றித் தொடர்ந்து செல்வது.


closing - Bringing to a close: eg. file மூடல் : ஒரு முடிவுக்குக் கொண்டு வருதல், எடுத்துக்காட்டு : கோப்பு.


cluster - A group of components: eg microprocessor; a group of terminals or peripherals in close proximity to each other and order the control of a central device: eg. computer. கொத்து : இயைபுறுப்புகளின் தொகுதி: நுண்முறையாக்கி வெளிப்புறப் பகுதிகள் அல்லது முனைகளின் தொகுதி, ஒன்றுக்கு மற்றொன்று நெருக்கமாக அமைந்து, ஒரு மையக் கருவியமைப்புக் கட்டுப்பாட்டில் இயங்குவது, எடுத்துக்காட்டு : கணிப்பொறி.


COBOL, common business oriented language - A widely used high level computer language, suitable for non-mathematicians and business people. கோபல், பொது வணிக நோக்கு மொழி : மிகப்பரவலாகப் பயன்படும் உயர்நிலைக் கணிப்பொறிமொழி. கணக்கில் தேர்ச்சி இல்லாதவர்களும் வணிகர்களும் பயன்படுத்தக் கூடியது.


Codd E.F Dr - டாக்டர் ஈ.எப். காட் : ஆர்டிஎம்பிஎஸ் என்னும் அமைப்பை அறிமுகப்படுத்தியவர். தகவல் பேணுகைக்குப் பல நிறுவனங்களில் பயன்படுவது: ஆரகிள்.


code - A system of symbolic characters used to represent data. The set of instructions in a computer programme. குறிமுறை : தகவலைக் குறிக்கப் பயன்படும் குறியீட்டு உருக்களின் தொகுதி. ஒரு கணிப்பொறி நிகழ்நிரல் ஆணைக் குறிப்புகளின் தொகுதி.


COGO - A high level computer language meant for civil engineering. கோகோ : ஒர் உயர்நிலைக் கணிப்பொறி மொழி. பொதுப் பொறியியலில் பயன்படுவது.


collator - A collating unit. ஒருங்கிணைப்பி : ஒழுங்கு படுத்தும் கருவியமைப்பு.


column - The vertical arrangement of characters. பத்தி : உருக்கள் செங்குத்தாக அமைந்திருந்தல்.


column printer - A small line printer. பத்தி அச்சியற்றி : ஒரு சிறிய வரி அச்சியறி.


colour attribute - நிற இயல்பு : பாடம் காட்டப்பட வேண்டிய வண்ணத்தை இது சுட்டிக் காட்டும்.


colour combination - Combining columns suitably. The popular colour combinations are the following:

1. Triadic scheme: An equilateral triangle is drawn inside the circle. The columns at the vertices of the triangle are used.

2. Analogous scheme : Any three neighbouring columns on the circle are used in a 24 bit colour monitor the primary colours RGB have 8 bits each leading is 256 x 256 x 256 combinations.

வண்ணக் கூடுகை : தகுந்த முறையில் நிறங்களைக் கலத்தல். மிகப் பரவலாக உள்ள
அடிப்படை நிறங்கள்
இரண்டாம் நிலை நிறங்கள்
மூவண்ணத் தொகுப்பு
ஒப்புமை வழி
மூன்றாம் நிலை நிறங்கள்

நிற வகைகள் வண்ணக் கூடுகைகள் பின்வருமாறு,

1) மும்மைத் திட்டம் ஒரு வட்டத்தில் சம பக்க முக்கோணம் வரையப்படுகின்றது. முக்கோண உச்சிகளிலுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 24 இருமி நிறக் கண்காணிப்பியில் முதன்மை மூன்று நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் (RGB) ஆகியவை 8 இருமிகளைக் கொண்டவை. ஒவ்வொரு இருமியும் 256 x 256 x 256 என்னும் கூடுகைகளுக்கு வழிவகுக்கும்.


colour usage - வண்ணவழக்காறு :

முதன்மை நிறங்கள் மூன்று. சிவப்பு, பச்சை, நீலம்.

இரண்டாம் நிலை நிறம் = முதன்மை நிறம் + முதன்மை நிறம்.

மூன்றாம் நிலை நிறம் = இரண்டாம் நிலை நிறம் + முதன்மை நிறம்.

கறுப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய மூன்றும் நடுநிலை நிறங்கள்.

மூன்றாம் நிலையில் மூன்று முதன்மை நிறங்களும், 12 நிறங்களும் வழிவகுப்பவை. நிறங்கள் ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராக இருப்பவை நிரப்பு நிறங்கள் எனப் படும். அணிமை நிரப்பு நிறங்கள் நல்ல ஒப்பீட்டை அளிப்பவை.


colour usage terms - வண்ண வழக்காற்றுச் சொற்கள்: வண்ணப் பயன்பாட்டில் பின்வரும் சொற்கள் அடிக்கடிப் பயன்படுகின்றன,

1) நிறப்போலி (hue): நடுநிலை நிறம் சேர்க்கப்படாதது,

2) சாயல் நிறம் (tint): நிறப்போலி + வெள்ளை

3) நிழல் (shade). நிறப்போலி + கறுப்பு.

4) திண்மை (tone); நிறப்போலி + சாம்பல் நிறம் அதன் நிரப்பு நிறத்தின் வேறுபட்ட அளவுகள்.

5) மதிப்பு (value): வெளிர் அல்லது கறுப்பு நிறம் எவ்வாறு தோன்றுகிறது.

6) செறிவு எவ்வளவு ஒளிர்வாகவும் மங்கலாகவும் நிறம் தோன்றுகிறது என்பது. இதற்கு நிறத்திறன் என்று பெயர்.


combinational logic - A digital logic circuit, eg. NAND gate. கூடுகை முறைமை : இலக்க முறைமைச் சுற்று, எடுத்துக்காட்டு : அல் வாயில்.


combo box control - This control contains multiple items but occupies less space on the screen. கூடுகைப் பெட்டிக் கட்டுப்பாடு : இக்கட்டுப்பாட்டில் பன்ம இனங்கள் இருக்கும். ஆனால் இது குறைந்த இடத்தை அடைக்கும்.


command - computer programming instruction: eg. printer. It tells a computer what to do. ஆணை : கட்டளை. கணிப்பொறி நிரலாக்கும் ஆணைக் குறிப்பி, எடுத்துக்காட்டு : அச்சியற்றி இது கணிப்பொறி செய்ய வேண்டுவது என்ன என்பதைச் சொல்வது.


comma operator - One of the so many operators. காற்புள்ளிச் செயலி : பல செயலிகளில் ஒன்று.


comment - An expression identifying one or more steps in a routine having no effect on execution of the routine. It helps us to know the document. விளக்கவுரை : வழக்கமாக நடைபெறும் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட படிகளை அடையாளங் கண்டறியும் கோவை. செயலை நிறைவேற்றுவதில் அதற்குப் பங்கில்லை. ஆவணங்களை அறிய உதவுவது.


commercial language - A computer language designed for writing programmes for commercial application. Eg. COBOL. வணிகமொழி : வணிகப் பயன்பாட்டிற்காக நிகழ்நிரல்களை எழுத வடிவமைக்கப்பட்ட கணிப்பொறிமொழி, எடுத்துக்காட்டு : கோபல்.


common language - machine readable language common to a group of computers. பொதுமொழி : கணிப்பொறித் தொகுதிக்குப் பொதுவான எந்திரத்தால் படிக்கப்படும் மொழி.


communication channel - The medium used to connect. The computer is called a communication channel. தகவல் தொடர்பு வழி : கணிப்பொறிகளை இணைக்கப் பயன்படும் ஊடகமே தகவல் தொடர்பு வழி எனப்படும்.


communication channel, kinds of - தகவல் வழியின் பல வகைகள் : இவை பின்வருமாறு,

1) திருகிய இணைகம்பி: இது தொலைபேசிக் கம்பியே. எளிதில் கிடைப்பது விலை குறைவு. ஒரு சமயம் ஒரு தகவலையே ஓரிணை செலுத்தும். இக்கம்பிகளைக் கொண்டு கணிப்பொறிகளை இணைக்கத் தகவல் மாற்று வீதம் ஒரு மில்லியன் பிபிஎஸ் ஐ விஞ்சும். பிபிஎஸ் என்பது ஒரு வினாடிக்கு இத்தனை இருமி என்பதைக் குறிக்கும்.

2) மைய அச்சுக் கம்பி வட்டம் : கம்பி வடத் தொலைக்காட்சிகளுக்குப் பயன்படுவது, 10 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைச் செலுத்தவல்லது.

3) ஒளி நார்வடம்: இது ஒரு மெல்லிய கண்ணாடி இழை. ஒளிக்கற்றையைச் சுமந்து செல்வது. 100 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைக் கடத்துவது.

4) கம்பியிலா இணைப்புகள்: இதற்கு வானொலி அலைகள் தகவல் தொடர்பு வழியாகப் பயன்படுபவை. தொலைவு மாறும்பொழுது, செயற்கை நிலாக்கள் பயன்படும்.


community internet booths - சமுதாய இணைய நிலையங்கள்: இலண்டனில் செயற்படும் வோர்ல்டுடெல் என்னும் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஒரு திட்டம் வகுத்துள்ளது. இதன்படி 1500 சமுதாய நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். ஐந்தாண்டுகளுக்குப் பின் இவை 1000 என்னும் அளவில் பெருகும். (1999).


compact disk, CD - A storage device using optical laser storage techniques, easy to handle, high storage capacity. Eg. Books and encyclopedia. நெருக்க வட்டு, நெவ : சேமிப்புக் கருவியமைப்பு; ஒளி லேசர் சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவது, கையாளுவது. சேமிப்புத் திறன் அதிகம். எடுத்துக்காட்டு : நூல்கள், கலைக் களஞ்சியம்.


compact disk drive, CDD - நெருக்க வட்டு இயக்கி, நெவஇ.


compact disk read only memory, CDROM - படிப்பதற்குரிய நெருக்க வட்டு நினைவகம், பநெவநி : இது தகவல்களைப் பெறவும் படிக்கவும் லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்துவது. இதில் கலைக்களஞ்சியச் செய்திகள் அனைத்தையும் அடக்கலாம். கொள்திறன். 650 GB.


compact disk writer, CDW - நெருக்க வட்டு எழுதி, நெவஎ : இது தற்பொழுது பயனில் உள்ளது. இதைக் கொண்டு பநெவநி இல் தகவல்களைச் சேமித்து, வேண்டிய பொழுது பயன்படுத்தலாம்.


compactation - A technique used for reducing the space required for data storage without losing any information content. ஒடுக்குதல் : இது ஒரு தொழில் நுட்பம், தகவல் அடக்கம் குறையாமல் தகவல் சேமிப்புக்குரிய இடத்தைக் குறைத்தல்.


comparative operator - This operator returns either true or false. ஒப்பீட்டுச் செயலி : இச்செயலி தவறு அல்லது சரி என்பதையே திருப்பும்.


comparative operator table - ஒப்பீட்டுச் செயலி அட்டவணை.

செயலி பெயர் எடுத்துக்காட்டு
= சமம் Α1=Β1
> அதிகம் Α1>Β1
< குறைவு Α1<Β1
>= மிக அதிகம் A1<=B1
<> சமமின்மை A1<>B1


comparator, discriminator - An analogue circuit based on an integrated circuit. ஒப்பறிவி, பிரித்தறிவி : ஓர் ஒப்புகை மின்சுற்று. ஒருங்கிணை சுற்று அடிப்படையில் அமைந்தது.


complement notation - நிரப்புகுறிமானம் : குறி இருமியைக்கொண்டு (சைன் பிட்) கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண் நேரெண்ணா (+) எதிர்மறை எண்ணா (-) என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கணிப்பொறியில் எல்லா எண்களும் இயல்பு எண்களாகவே சேமித்து வைக்கப்படுவதில்லை. எதிர்மறை எண்கள் அவற்றின் நிரப்பு எண்களாகக் குறிக்கப்படுகின்றன. கணிப்பொறியில் நிரப்பு எண்களின் உதவியினால் கழித்தலையும் கூட்டல் போலவே இயக்கி விடை காணலாம். ஆகவே, எதிர்மறை எண்கள் அவற்றின் நிரப்பு எண்களில் குறிக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, -1010 என்னும் எண் கணிப்பொறியில் 2-இன் நிரப்பு எண்ணாகப் பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

இரும எண் 2இன் நிரப்பு எண் கணினி எண் குறிமானம்
-1010 0110 10110
+1010 - 00110

இதையே நிரப்புக் குறிமானம் என்கின்றோம்.


compiler - A programme converting a source code programme: eg. Basic. தொகுப்பி : மூலக்குறிமுறை நிகழ்நிரலை மாற்றும் நிகழ் நிரல். எடுத்துக்காட்டு : பேசிக்.


complement numbers - நிரப்பு எண்கள் : இருவகை நிரப்பு முறைகள் உள்ளன. இவை 10-இன் நிரப்பு, 9-இன் நிரப்பு எனப்படும். பதின்ம எண்ணின் அடி எண் என்பதைக் கருத்தில் கொள்க. 10இன் அடியெண் நிரப்பு என்றும் 9-இன் நிரப்பு (அடிஎண் 1) இன் நிரப்பு என்றும் பொதுவாகக் கூறப்படும். காட்டாக, 456 க் கொள்க. 4, 5, 6 ஆகியவற்றை 9-லிருந்து கழித்து எழுதுக. 456 என்னும் எண் 543 என்று ஆகும். இத்துடன் 1-ஐ கூட்டினால், இது 544 ஆகின்றது. ஆகவே, 456 என்னும் பதின்ம எண் னின் 10-இன் நிரப்பு எண் 544 ஆகும். இதே போல 87 என்னும் எண்ணின் 10-இன் நிரப்பு எண் 23 ஆகும்.


computation - கணிப்பீடு : பா. computing.


computer basic concepts - கணிப்பொறியின் அடிப்படைக் கருத்துகள் : 1) கணிப்பொறியைப் பயன்படுத்தி ஒரு சிக்கலைத் தீர்க் கலாம். அதற்கு விதிமுறை எழுத வேண்டும்.

2) வழிமுறை என்பது அறுதியிடப்பட்ட கட்டளைகளின் வரிசை.

3) ஒவ்வொரு கட்டளையும் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களைக் கொண்டது.

4) ஒவ்வொரு இயக்கமும் தெளிவானதும் ஐயமற்றதுமான செயற்கூறுகளைக் கொண்டது. அறுதியிடப்பட்ட நேரத்தில் செயற்படுவது.

5) குறிப்பிட்ட சில இயக்கங்களுக்குப் பின் விதிமுறை முடிவடைய வேண்டும்.

6) வழிமுறை, விதிமுறைப் பட வாயிலாகத் தெரிவிக்கப்படுகிறது.

7) விதிமுறைகளைத் தெரிவிக்கப் பயன்படும் துல்லிய குறிமானத்திற்கு நிகழ்நிரல் மொழி என்று பெயர்.

8) நிகழ்நிரல் மொழியில் தெரிவிக்கப்படும் வழிமுறை கணிப்பொறி நிகழ்நிரல் எனப்படும்.


computer, basic units of - கணிப்பொறியின் அடிப்படை அலகுகள் : 1) உட்பலன் அலகு, 2) மையமுறையாக்கும் அலகு, மையச் செயலகம், 3) நினைவக அலகு, 4) வெளிப்பலன் அலகு.


computer communications, assurance of - கணிப்பொறித் தகவல் தொடர்பின் உறுதி :

1) ஒரே தன்மை : அனுப்பப்படும் தகவலும் பெறப்படும் தகவலும் ஒன்றே.

2) பாதுகாப்பானது : அனுப்பப்படும் தகவல் ஏனையோரால் சேதாரம் அடைவதற்கில்லை.

3) நம்பகமானது : அனுப்பப்படும் தகவலின் நிலையை அனுப்புபவரும் பெறுபவரும் நன்கு அறிவர்.


computer communications, benefits of - கணிப்பொறித் தகவல் தொடர்பின் நன்மை கள் :

1) விலை உயர்ந்த கருவியமைப்பை நாம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

2) தனிப்பட்ட தகவல்களை ஒழுங்கு படுத்த முடிகிறது.

3) இன்றியமையாத் தகவல்களையும் நிகழ்நிரல்களையும் ஒரே சமயத்தில் பலரும் பயன்படுத்த முடிகிறது.

4) பகிர்ந்து கொள்ளக்கூடிய சேமிப்புக் கருவியமைப்பில் எல்லாத் தகவல்களையும் பயனாளிகள் சேமித்து வைத்துப் பாதுகாக்க முடிகிறது.


computer communications, required components of. கணிப்பொறித் தகவலின் தேவையான பகுதிகள்:

1) தகவல் : அனுப்பப்படும் செய்தியே.

2) நடைமுறை : பரிமாற்ற முறையில் ஒப்புக்கொள்ளப் பட்டமுறை.

3) வன்பொருள் : தகவல்களைச் சேமிக்க, அனுப்ப, பெறக் கருவியமைப்பு.

கணிப்பொறியின் தொகுதிப்படம்


வழிமுறைக் குறியீடுகள்


வழிமுறைப் படம்

4) மென்பொருள்: வலையமைவை இயக்கவும் தகவலைச் செலுத்தவும் மேலாண்மை செய்வதற்குரிய கட்டளைக் குறிப்புகள்.

5) மக்கள்: கணிப்பொறியைப் பயன்படுத்துவோர்.

computer communications, requirements of - கணிப்பொறித் தகவல்களின் தேவைகள்:

1) மாறாமை : அனுப்பும் தகவல் போலவே பெறும் தகவலும் அமைதல்.

2) பாதுகாப்பு : அனுப்பப்படும் தகவல்கள் வேண்டுமென்றோ தற்செயலாகவோ பழுதுபடாமல் இருத்தல்.

3) நம்பகம்: அனுப்பப்படும் தகவல்களின் உண்மை நிலையை பெறுபவரும் அனுப்புபவரும் தெரிந்திருக்க வேண்டும்.

computer definition - A programming electronic device designed for storing retrieving and processing data. கணிப்பொறி, கணிணி இலக்கணம் : நிகழ்நிரலாக்கும் மின்னணுக் கருவியமைப்பு. தகவலைச் சேமிக்கவும் மீட்கவும் முறையாக்கவும் வடிவமைக்கப்பட்டது.

computer education - கணிப்பொறிக் கல்வி : இது பல நிலைகளிலும் கல்விநிலையங்களாலும் தனியார் நிலையங்களாலும் நன்முறையில் அளிக்கப்படுவது. க.4

computer, features of - The features are; 1. speed. 2, reliability. 3. accuracy. 4. conversion- laser printing. கணிப்பொறியின் பண்புகள் : 1) விரைவு, 2) நம்புகை, 3) துல்லியம், 4) மாற்றல்-லேசர் ஒளியச்சு.

computer, generations of - கணிப்பொறித் தலைமுறைகள் : இவை பின்வருமாறு:

1 முதல் தலைமுறை: 1946-58. இத்தலைமுறை சார்ந்த கணிப்பொறிகளில் வெற்றிடக்குழல் பயன் படுத்தப்பட்டது. எ-டு ஈனியாக், எட்வாக்

2 இரண்டாம் தலைமுறை : 1959-64. இத்தலைமுறை சார்ந்த கணிப்பொறிகளில் படிகப்பெருக்கி பயன்பட்டது. எ-டு ஐபிஎம் 1620. பெல் ஆய்வுக் கூடம். 3) மூன்றாம் தலைமுறை: 1965-1970. இத்தலைமுறை சார்ந்த கணிப்பொறிகளில் ஒருங்கிணை சுற்றுகள் பயன் படுத்தப்பட்டன. எ-டு ஐபிஎம் 360.

4. நான்காம் தலைமுறை: 1970-2000. இத்தலைமுறைக் கணிப்பொறிகளில் நறுவல்கள் (சிப்ஸ்) பயன்படுகின்றன. எ-டு கிரே-1, சைபர்-205, ஐபிஎம்-370. நுணுகியறிதல் இவற்றின் தனிச் சிறப்பு.

computer, history of - கணிப்பொறி வரலாறு : கணிப்பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது கணிப்பொறியின் முன்னோடி 1623-இல் வில்ஹெல்ம் ஷிக்கார்டு என்பார் முதல் எந்திர எண்கணிப்பானை அமைத்தார். இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைக் கணக்குச் செயல்களைச் செய்வது. தானாக இயங்கியது.

17ஆம் நூற்றாண்டில் பினெய்ஸ் பாஸ்கல் என்பார் எந்திரக் கணிப்பானைப் புனைந்தார். 1630-இல் கலிலியோ என்பார் நழுவுகோல் என்னும் கணிப்பானை அமைத்தார்.

18 ஆம் நூற்றாண்டில் லெபனஸ் உருளை அமைக்கப்பட்டது. இது தானியங்கு முறையில் நான்கு கணக்கு அடிப்படைச் செயல்களைச் செய்தது. இதை லெபனிஸ் புனைந்தார்.

19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் பாபேஜ் என்பார் வேறுபாட்டு எந்திரம், பகுப்பு எந்திரம் என்னும் இரு பொறிகளை அமைத்தார். இவை நீராவியால் இயங்கின. இவர் கணிப்பொறியின் தந்தை. ஏனெனில், இவர் அமைத்த எந்திரங்கள் இரண்டும் மின்னணு ஆற்றலால் இயங்கும் கணிப்பொறிகளுக்கு வழிவகுத்தன.

20-ஆம் நூற்றாண்டில் மின்னணு ஆற்றல் அடிப்படையில் இயங்கும் கணிப்பொறிகள் அமைக்கப்பட்டன.

பாபேஜ் வழங்கிய நெறிமுறையின் அடிப்படையில் வடிவ மைக்கப்பட்ட முதல் கணிப் பொறி ஈனியாக். 1943-1945இல் இதை மாக்கிளி என்பார் அமைத்தார். இதில் வெற்றிடக் குழல் பயன்படுத்தப்பட்டது. எட்வாக் என்னும் கணிப்பொறி சேமிப்புத்திறன் கொண்டது. இதை 1944-இல் வான்நியூமான் என்பார் அமைத்தார். இதற்குப் பின் வந்த கணிப்பொறிகள் அனைத்தும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் கட்டமைப்பு நியூமான் கட்டமைப்பு எனப்படும். நுண்மின்னுவியல் 1940-1970 வரை நன்கு வளரத்தொடங்கியது. -

1948-இல் படிகப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) புனையப்பட்டது.

1964-இல் ஒருங்கிணைசுற்று நிறுவல்கள் (சிப்ஸ்) அமைக்கப்பட்டன. இவை கணிப்பொறி உலகில், பெரும் புரட்சியை உண்டாக்கின.

1969-இல் ஒரு நுண்முறை யாக்கி (மைக்ரோபுராசசர்) புனையப்பட்டது. புனைந்தவர்கள் ஜான் கெமினி, தாமஸ் குர்ட்ஸ்.

1981-இல் இணைமுறையாக்கக் கணிப்பொறிகள்: ஜப்பானியர்களால் வடிவமைத்து வழங்கப் பட்டது.

இதுகாறும் கூறிய கணிப்பொறி அறிஞர்களின் பெயர்களைத் தவிர, வேறு சில குறிப்பிடத்தக்க பெயர்களும் உள்ளன.

பேரா. டாம் கில்பர்ன், பேரா. பிரடி வில்லியம்ஸ் ஆகிய இருவரும் நினைவகம் உள்ள முதல் கணிப்பொறியை (1948-இல் அமைத்தனர் சுட்டெலியை 1968-இல் டவ் ஏஞ்சல் பார்ட் புனைந்தார்.

விண்டன் செர்ஃப் இணையத் தந்தை பில்கேட்ஸ் என்பார் கணிப்பொறி கோடிஸ்வரர், மைக்ரோசாஃப்ட் கழகத்தின் (அமெரிக்கா) தலைவர்.

பொதுவாக, இக்கணிப்பொறிகள் எல்லாம் நான்கு தலை முறைகளால் அடங்கும், நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் சேமிப்புத்திறன், விரைந்த செயற்பாடு ஆகியவை மிக உயர்ந்தவை. இன்று செயற்கை நுண்ணறிவை பெற்றவைகளாக விளங்குகின்றன. பா. internet history of HTML, history of.

computer, kinds or - They are mainly five in number : 1. mainframe computer. 2. digital computer. 3. microcomputer. 4. mini computer. 5. personel computer. கணிப்பொறி வகைகள் இவை முதன்மையாக நான்கு: 1) முதன்மைக் கணிப்பொறி, 2) எண்ணிலக்கக் கணிப்பொறி 3) நுண்கணிப்பொறி, 4) சிறு கணிப்பொறி, 5) தனியாள் கணிப்பொறி.

computerised data processing, advantages of - கணிப்பொறி மயமாக்கிய தகவல் முறையாக்கலின் நன்மைகள்:

1) மனித ஆற்றல் மிச்சப்படுத்தப்படுகிறது.

2) விரைவு அதிகம்; செயல் நேரம் மிகக்குறைவு நிமிகள் வினாடிகள்.

3) தவறுகளுக்குரிய வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.

4) சேமிக்கப்படும் தகவல் நன்கு பெர்ருந்தி இருக்கும். இடத்தைக் குறைப்பது.

5) ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை விரைவாகப் பரிமாறிக்கொள்ளலாம். எ-டு வானூர்தி முன்பதிவு.

6) தகவல்களைப் பதிப்பிப்பது எளிது. இதில் திருத்தம், மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

7) கோப்புகளைத் தேடவும் பிரிக்கவும் கணிப்பொறிமயமாகிய தகவல்தளம் மிகப்பயனுள்ளது. இதுபிற தகவல் கையாளும் செயல்களுக்கும் உதவும். ஒ. manual data processing, disadvantages of.

computer languages - கணிப்பொறி மொழிகள் : இவை உயர்நிலை மொழிகள் 1) போர்ட்ரான், 2) பேசிக், 3) கோபல், 4) விஷிவல் பாக்ஸ் புரோ, 5) விஷிவல் பேசிக், 6) விஷிவல் சி++ இவை தவிர எந்திர மொழியும், கோவை மொழியும், இதில் சேரும்.

Computer Literacy Programme - கணிப்பொறி அறிவொளித் திட்டம் : இது இணையத்தொடு இணைந்த திட்டம். 03-12-2000 அன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கணிப்பொறியைப் பயிலாத மாணவ மாணவியர்களுக்கு 60 அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

computer memory - கணிப்பொறி நினைவகம் : இது இரு வகை: 1) முதன்மை நினைவகம்: இதில் ஆர்ஏம், ஆர்ஓஎம், பிஆர்ஓம் ஆகியவை இருக்கும். 2) துணைச் சேமிப்புக் கருவியமைப்புகள்: இவற்றில் நெகிழ்வட்டு, வன்வட்டு காந்த நாடா, நெருக்க வட்டு ஆகியவை அடங்கும்.

computer networks - கணிப்பொறி வலையமைவுகள்: இவை இரண்டிற்கு மேற்பட்ட கணிப்பொறித் தொகுதிகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ள உதவுபவை. காட்டாக, ஓர் அலுவலகத்தில் பல கணிப்பொறிகளைக் கம்பிகள் மூலம் இணைத்து வலையமைவை உண்டாக்கலாம். இதற்கு ஊடகமாகப் பயன்படுவது தகவல் தொடர்பு வழியாகும். இந்த ஊடகம் பயனாளிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து, அவர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவுவது.

computer programme - கணிப்பொறி நிகழ்நிரல்: விதிமுறையைத் தெரிவிக்கும் துல்லிய குறிமானம்.

computer science - The technical study of computer working, the mathematics of their operation and the language with which we communicate with them. கணிப்பொறி அறிவியல் : கணிப்பொறி வேலைசெய்தல், அவை இயங்கும் கணித முறைமை, அவற்றுடன் நாம் கொள்ளப் பயன்படுத்தும் மொழிகள் ஆகியவை பற்றி ஆராயும் தொழில் நுட்பத்துறை.

computer usage - கணிப்பொறி வழக்காறு: கணிப்பொறித் துறையில் உருவாகியது. வியப்புக்குரியதாகவும் ஏற்பதற்குரியதாகவும் உள்ளது. எ-டு. biobreak - கழிவறை செல்லல். computing - The process of working with numbers to solve a problem. கணித்தல் : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண எண்களைக் கையாளும் முறை.

concatenation - in string processing the synthesis of longer character strings from shorter ones. கோவையமைத்தல் : சரமுறையாக்கலில் நீண்ட உருச்சரங்களை குறுகிய சர உருக்களாகத் தொகுத்தல்.

conditional assignment operator - கட்டுப்பாட்டு ஒப்படைப்புச் செயலி.

conditional processing - This is a test process. கட்டுப்பாட்டிற்குரிய முறையாக்கல்: இது ஒரு ஆய்ந்து பார்க்கும் முறை.

configuration table - The table maintained in a computer by the operating system. It signifies the status of the individual units of the system. உருவமைவு அட்டவணை : இயக்கு தொகுதியினால் கணிப்பொறியில் பேணப்படும் அட்டவணை. இது ஒரு தொகுதியின் தனியலகுகளின் நிலையைக் குறிப்பது.

constants - Data which do not get changed for each run in a program. They are of many kinds. மாறிலிகள் : ஒரு நிகழ்நிரலில் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் மாறாத தகவல்கள் இவை. பா. C Constants.

container control - கலக் கட்டுப்பாடு : இது எல்லாக் கட்டுப்பாடுகளையும் தன் சட்டகத்தில் அடக்குவது. பொத்தான் தொகுதிகளை ஒரே தொகுதியால் உருவாக்க உதவுவது. இவை பின்வருமாறு: 1) சட்டம், 2) படம், 3) வடிவம், 4) எஸ்எஸ் தந்தி.

contents - The information stored at any address or in any register of a computer. அடக்கம் : ஒரு முகவரியில் அல்லது ஒரு கணிப்பொறியின் பதிவகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்.

continue statement - தொடர் கூற்று : இது வளையங்களில் பயன்படுவது. வளையத்தின் ஒரு பகுதியைத் தாவிச் செல்லவும் வளையத்தின் அடுத்த சுழற்சியைத் தொடரவும் பயன்படுவது. இது கட்டுப்பாட்டை வளையத்தின் அடுத்த சுழற்சிக்கு மாற்றுவது இதன் பொதுப் படிவமைப்பு. தொடர், continue;

contour analysis - A reading technique employing a rowing spot of light. The light reaches out the character's outline by bouncing its inter edges. புறக்கோட்டுப் பகுப்பு : ஒரு படிக்கும் நுட்பம். இதில் ஒரு நகரும் ஒளி பயன்படுகிறது. இந்த ஒளி, உருக்களின் புறக்கோட்டை அடைந்து அதன் வெளிப்புற விளிம்புகளில் குதிக்கும்.

control - A device to direct or regulate some theory: eg joystick. கட்டுப்பாடு : ஒன்றை இயக்க அல்லது ஒழுங்குபடுத்த உதவும் கருவியமைப்பு.

control, kinds of - கட்டுப்பாட்டு வகைகள்: இவை வரைகலை சார்ந்தவை: 1) படப் பெட்டிக் கட்டுப்பாடு, 2) படக் கட்டுப்பாடு, 3) வரிக்கட்டுப்பாடு, 4) வடிவக் கட்டுப்பாடு, 5) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு. விரிவு அவ்வப் பதிவுகளில் காண்க.

control language - The set of commands in an operating system. கட்டுப்பாட்டு மொழி : ஓர் இயக்கும் தொகுதியில் உள்ள கட்டளைத் தொகுதி.

controlling user response - பயனாளித் துலங்கலைக் கட்டுப்படுத்தல்: இது பயனாளியின் விருப்பங்களை வரையறை செய்வது. பெற வேண்டிய பொருள்களைக் கட்டுப்படுத்திப் பெறலாம்.

control panel - கட்டுப்பாட்டுப் பலகை: கணிப்பொறியுடன் இணைந்த வேறுபட்ட வன்பொருள் பகுதிகளை நிறுவவும் மேலாண்மை செய்யவும் இது நமக்கு உதவுகிறது. தொடங்கு என்பதைத் தட்டி இப்பலகையைத் திறக்கலாம்.

control, property of - கட்டுப்பாட்டுப்பண்பு: ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் குறிப்பிட்ட ஒரு பண்புண்டு. இதற்குத் தவறு பண்பு என்று பெயர். இப்பண்பு பயன் அடிப்படையில் அமைவது. எ-டு பாடப் பெட்டிக்கு பாடப் பண்புண்டு.

controls, classification of - கட்டுப்பாடுகள் வகைப்பாடு : விஷூவல் பேசிக் தொடர்பாகவுள்ள கட்டுப்பாடுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். 1) நிலைக் கட்டுப்பாடுகள்: பொதுப் பொத்தான், குறிச்சீட்டு, சட்டக் கட்டுப்பாடுகள் இவை கருவிப் பெட்டியில் உள்ளவை, நீக்க முடியாதவை. 2) வினையுறு எக்ஸ் கட்டுப்பாடுகள்: இவை தனிக் கோப்புகளாக உள்ளவை, vbxஅல்லது ocxவிரிவு. இவை தனித்தன்மை வாய்ந்த கட்டுப்பாடுகள். 3) வழக்கக் கட்டுப்பாடுகள்: இவை செருகக் கூடிய பொருள்கள். எ-டு, சொல் ஆவணம். 4) வரிக் கட்டுப்பாடு: வரைகலையில் பயன்படுவது. 5) படப்பெட்டிக் கட்டுப்பாடு: படப்பண்பு அளிப்பது. control structures - கட்டுப்பாட்டு அமைப்புகள் : இவை பின்வருமாறு.

1) முறைமை அமை அமைப்பு (logical if structure)

2) வேறு இருந்தால் அமைப்பு (if else structure)

3) கூட்டினுள் கூட்டு வேறு இருந்தால் அமைப்பு (nested if else)

4) கட்டுபாடில்லாக் கோட்டுக் கூற்று (unconditional go to statement)

5) சொடுக்கி அமைப்பு (switch structure)

6) வடிவக்கட்டுப்பாடு : வடிவமளிப்பது.

7) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு: எழுச்சி ஊட்டுவது.


control unit, CU - கட்டுப்பாட்டலகு : பல அலகுகளுக்கிடையே தகவல்களையும் நிகழ்நிரல் குறிப்புகளையும் மாற்றும் வேலையை இது கட்டுப்படுத்துகிறது. மையச் செயலகத்தின் ஒரு பகுதி.


conversion - changing a data from one form to another.

1. from 10pt normal to 10 pt bold,

2. 4-bt numbers in the complement notation. decimal number +5, binary number 101, one's comp. 00101, two's complement. 00101 - மாற்றல் : ஒரு தகவலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றுதல்.

1) இயல்பாகவுள்ள 10 புள்ளி எழுத்தை 10 புள்ளி கொட்டை எழுத்தாக மாற்றுதல்.

2) நிரப்பு குறிமானத்தில் 4 இருமி எண்கள். தசம எண் +5. இரும எண் 101, 1இன் நிரப்பு, 00101, இரண்டின் நிரப்பு 00101.


cookies - சிறுகோப்புகள்.


coordinating data communications - தகவல் தொடர்புகளை ஒருங்கிணைத்தல் : இதில் தகவல் மோதலைத் தவிர்க்க மரபுச்சீரி (புரோட்டோகோல்) பயன்படுகிறது. இது முன்னரே வரையறை செய்யப்பட்ட நடைமுறையாகும். கணுக்களுக்கிடையே இச்சீரி தகவல் மாற்றத்தை நிறுவுவது, நிலை நாட்டுவது, தேவைப்படின் முறிப்பது.

உள்ளக நினைவகம் : காந்த உள்ளகங்களைக் கொண்ட கணிப்பொறி நினைவகம்.


copying files - கோப்புகளைப் படி எடுத்தல் : ஒரு கோப்பைப் படி எடுக்கும் பொழுது, மூலக்கோப்பு அப்படியே விடப்படும். கோப்பின் புதிய படி அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்கப்படும்.


copy programme - A system programme copying a data or programme file from one peripheral device to another. படி எடுக்கும் நிகழ்நிரல் : ஓர் அமைப்பு நிகழ்நிரல். ஒரு வெளிப்புறக் கருவியிலிருந்து மற்றொன்றுக்குத் தகவல் அல்லது நிகழ்நிரல் கோப்பைப்படி எடுப்பது.

core memory - The computer memory having magnetic cores.

correcting spelling mistakes - எழுத்துப் பிழைகளைத் திருத்தல்: சொல்முறையாக்கு மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஆவணங்கள் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கும். இதற்கு ஸ்டார் எழுதியில் அகராதியும், எழுத்துப்பிழை சரிபார்க்கும் நிகழ்நிரலும் இக்கும். ஆவணத்தைத் தட்டச்சு செய்யும் பொழுது, இந்த எழுதி, எழுத்துப் பிழைகளை அடையாளங் காட்டும்.

corruption - An error in an application system. பிழைபடல் ஒரு பயன்பாட்டுத் தொகுதியால் பிழை உண்டாதல்.

CQ, Contemporary Quotient - தொழில்நுட்ப ஈவு : தொழில் துறைகளில் சிறந்து விளங்குவதற்குரிய திறங்களை அளவிடும் நுணுக்கம். கல்வித் துறையில் பயன்படும் நுண்ணறிவு ஈவு (Q) போன்றது.

creating links - இணைப்புகளை உருவாக்கல்: எச்டிஎம்எல்லின் ஒரு சிறப்பியல்பு ஆவணங்களை உருவாக்குதல் ஆகும். இணைப்பு என்பது ஆவணத்தின் ஒரு பகுதி. இதைத் தட்டி அடுத்த ஆவணத்திற்குச் செல்லலாம்.

creating a programme - நிகழ்நிரலை உருவாக்கல்: ஒரு சிறிய நிகழ்நிரலை எழுதுவது எளிது. முதலில் இதற்கு வழிமுறைப் படத்தை வரைய வேண்டும். இதிலிருந்து நிகழ்நிரலை எளிதில் எழுதலாம். இம்முறை நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தா.அதற்கு முறையான அணுகுமுறை தேவை.

cross correlator, Synchronous detector- ஒத்திசைக் கண்டறிவி.

CSI, Computer Society of India-சிஎஸ்ஐ இந்தியக் கணிப்பொறிக் கழகம்: இது சிறந்த கணிப்பொறிப் பணி செய்வது, ஆதாயமில்லாமல் அதைச் செய்வது. 1965-இல் நிறுவப்பட்டது. உறுப்பினர்கள் 19000, 61 பிரிவுகள், 79 கிளைகள், தலைமை இடம் மும்பை. நோக்கம் "என்கடன் பணி செய்து கிடப்பதே"; எல்லோரும் இன்புற்றிருப்பதே. சிஎஸ்ஐ 2000 பொருட்காட்சி சென்னை தரமணி டைடல் பூங்காவில் செப்டம்பர்-2000, 13-17 வரை நடந்தது. இதன் 35 ஆம் ஆண்டுக் கூட்டத்தோடு இணைந்து நடத்தப்பட்டது. இக்கழகம் 1979-இல் நிகழ்நிரல் திறன் தேசிய அளவைத் தேர்வை (NSTPC- National Standard Test in Programming Competence) நடத்தியது. இதுபோன்று பல நல்ல பணிகளைச் செய்து வருவது.


cursor - A movable marker on the screen of a VDU indicating where the next character will be printed. குறிப்பி : காட்சித் திரையிலுள்ள நகரும் சுட்டி அடுத்த உரு எங்கு அச்சியற்றப்படும் என்பதைக் காட்டும்.


cursor control keys - Keys for moving a character round the screen of a VDU using the keyboard arrows up, down, right and left. குறிப்பிக் கட்டுப்பாட்டுத் திறவுகள் : காட்சித் திரையைச் சுற்றி ஓர் உரு நகர்வதற்குரிய திறவுகள். விசைப் பலகை அம்புக் குறிகளை மேல், கீழ், வலம், இடம் எனப் பயன்படுத்தும்.


customising - பயனுக்கேற்ப அமைத்தல் : பயனாளியின் வசதிக்கேற்ப ஒன்றைச் செய்தல். எடுத்துக்காட்டு : பணிப்பட்டை என்பது மேசை அடியில் இருப்பது. இதை மேசையின் நான்கு பக்கங்களில் ஏதாவது ஒன்றிற்கு எளிதாக நகர்த்தலாம்.


custom software - user's software - பயனாளி மென்பொருள்.


cut and paste - வெட்டி ஒட்டல் : சொல் முறையாக்கும் தொகுதியின் பதிப்புப் பணி. இதில் பாடப் பகுதி தொடக்கத்திலும் முடிவிலும் குறிப்பிட்ட உருவினால் குறிக்கப்படும். பின் அதே பாடத்தில் வேறு ஓர் இடத்திற்கு அது படிமாற்றம் செய்யப்படும்.


cyber - computer : கணிப்பொறி.


cyber attack - கணிப்பொறித் தாக்குதல் : இது 1997 ஏப்ரலில் அமெரிக்காவில் நடைபெற்றது. 26000க்கு மேற்பட்ட பாதுகாப்புத் துறை கணிப்பொறிகள் இத்தாக்குதலுக்கு உள்ளாயின. ஒருவாறு இது நிறுத்தப்பட்டது.


cyber career centre - கணிப்பொறி வாழ்க்கைத் தொழில் மையம் : இது தனியார் கணிப்பொறி நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் நடத்துவது. இத்தொழிலுக்கு நல்ல எதிர்கால வாய்ப்புள்ளது. புதுப்புது கணிப்பொறி முறைகள் , மொழிகள், நுட்பங்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளன.


cyber guide - கணிப்பொறி வழிகாட்டி : கணிப்பொறி வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது. எ-டு இணையம், மின் வணிகம்.


cyber future - கணிப்பொறியின் எதிர்காலம் : நன்மை ஒரு பக்கம் இருந்தாலும் தீமையும் மற்றொரு பக்கம் உள்ளது. தவறுதலாகப் பயன்படுத்துவதே தீமை, இதைத் தவிர்க்கக் கணிப்பொறிக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று கூறலாம்.

cyber land - கணிப்பொறி உலகம் : பல காரணிகளினால் செல்வாக்குள்ள உலகு. பாப் பண்பாடு, நூல்கள், திரைப்படங்கள் முதலியவை இக்காரணிகள்.

cyber laws - கணிப்பொறிச் சட்டங்கள் : கணிப்பொறித் துறையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க ஐ.நா. வினால் 1997-ல் உருவாக்கப்பட்டவை. உலகின் பல நாடுகளும் ஒரு முன்மாதிரியாக பயன்படத்தக்க அளவுக்கு அமைந்துள்ளது. இந்தியா இதைப் பின்பற்றித் தன் தகவல்தொழில் நுட்பவியல்ச் சட்டத்தை வகுத்துள்ளது (TT ACT 2000).

cybernation - Manufacture by means of computer. கணிப்பொறி உற்பத்தி : கணிப்பொறி வழி பொருள்களை உருவாக்குதல்.

cybernetics - The study of how communications and control systems can be combined to simulate human functions. கணிப்பொறிவழி இயல் : கட்டுப்பாட்டுத் தொகுதிகளையும் தகவல் தொடர்புகளையும் இணைத்து, மனித வேலைகளை எவ்வாறு பகர்ப்பு செய்யலாம் என்பதை ஆராயும் தொழில் நுட்பத்துறை.

cyber phobia - கணிப்பொறி அச்சம்: கணிப்பொறியைக் கண்டாலே கடும் அச்சம்.

cyber poron - கணிப்பொறி இழிசுவை : 1995இல் டயம் என்னும் ஆங்கில இதழ் இணையத்தில் நடைபெறும் பாலியல் தொடர்பாகக் காட்டபெறும் இழிசுவைகளைப் பற்றி விரிவாக எழுதி, இவையே அதில் முனைப்பாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. கணிப்பொறி அல்லது இணையக் குற்றங்களில் இதுவும் ஒன்று. பா. Internet crimes.

cyber punk - A genre of science function. கணிப்பொறிக்கதை : அறிவியல் கதை வகை.

cyber slang - கணிப்பொறி கொச்சை மொழி: கணிப்பொறி தொடர்பாகப் பயன்படும் பொருள் வேறுபாடுள்ள சொற்கள். எ-டு மின்னஞ்சல் - பார்க்கும் அஞ்சல்.

cyber space - கணிப்பொறி வெளி : வானவெளிபோன்று பரந்த உலகம். இதற்கு நாடு வழிப்பட்ட எல்லைகள் இல்லை. ஆகவே, சிக்கல்களும் நிரம்ப உண்டு. cyberspeak - something that connot be assessed in a keyboard alone.

கணிப்பொறி பேசுகிறது : இதை ஒரு விசைப்பலகையில் மட்டும் மதிப்பிட முடியாது.

cyberterrorism - கணிப்பொறி வன்முறை : சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் செயல்கள். இதைத் தடுக்கத் தேசியத் திட்டத்தை வகுத்த நாடு அமெரிக்கா. இதற்காகக் கணிசமான தொகை ஒதுக்கிக் கணிப்பொறித்துறை அறிஞர்கள் உதவி நாடியுள்ளது. இதைக் கொண்டு தனித்திட்டம் வகுக்கப்பட்டு வன்முறை ஒடுக்கப்படும். இத்திட்டத்தை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் அறிவித்துள்ளார். (2000)

cyborg - A robot made of biological and machine components கணிப்பொறி உயிரி : உயிரியல் மற்றும் எந்திரப் பகுதிகளால் செய்யப்பட்ட தொலை இயக்கி.

cycle time - memory cycle. சுழற்சி நேரம் : நினைவகச் சுழற்சி.

cyclic storage - A computer storage device; eg magnetic drum. சுழல் சேமிப்பு : கணிப்பொறிச் சேமிப்புக் கருவியமைப்பு. எ-டு காந்த உருளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/C&oldid=1047041" இலிருந்து மீள்விக்கப்பட்டது