H

hacker - Computer programmer கணிப்பொறி நிகழ்நிரலர்.

hact - Stop: நிறுத்து .

hammer - A small pivoted flat head striking an embossed character against the paper in an impact printer. Eg. Daisywheel printer. சுத்தி : மையமாகப் பொருந்தியுள்ள சிறிய தலை. ஒரு தாக்கு அச்சியற்றியில் தாளுக்கு எதிராகப் புடைப்புருவை அடிப்பது.

Hamming code - A code system used for detecting and correcting errors in a flow of digital information. ஹேமிங் குறியீடு : இலக்கத் தகவல் நுட்பத்தில் பிழைகளைக் கண்டு சரிசெய்யப் பயன்படும் குறியீட்டு முறை.

hard copy - Data printed on paper Eg, programme listing. வன்படி : தாளில் அச்சிடப் படும் தகவல். எ.டு. நிகழ்நிரல் பட்டியலிடல்.

hard disk - A rigid disk of plastic coated with a magnetic film for storing computer data. வன்தட்டு : பிளாஸ்டிக்காலான விறைப்பான தட்டு. கணிப் பொறித் தகவல் சேமிக்க மெல்லிய படலம் போர்த்தப் பட்டிருக்கும்.ஒ floppy disk.

hard disk drive, HDD - Fixed permanently in the PC. The max. storing capacity is 17 GB. வன்தட்டு இயக்கி, எச்டிடி : வதஇ. தனியாள் கணிப்பொறியில் நிலையாகப் பொருத்தப் பட்டிருப்பது. இதன் உயர் வரை சேமிப்புத் திறன் 17 ஜி.பி.

hardware - Any electronic or mechanical equipment making up an electronic system. Eg. CPU. - வன்பொருள் : வன்னியம். மின்னணு அல்லது எந்திரக் கருவித் தொகுதி. ஒரு மின்னணுத் தொகுதியை உண்டாக்குவது. எ.டு. மையச் செயலகம்.ஒ. software, firmware, brainware.

hardware availability ratio - It is expressed as the ratio of difference between accountable time and down time otherwise known as service ability ratio. , வன்பொருள் கிடைப்பு வீதம் : கணக்கிடப்படும் நேரம், இறங்குநேரம் ஆகிய இரண்டிற்குமுள்ள வேறுபாட்டுத் தகவு. வேறுபெயர் பணித்திறன் வீதம்.

hashing - 1) A direct addressing technique. 2) Any computer operation transforming one or more fields into a different arrangement. It is generally more compact and easily manipulated. Otherwise known as hash coding. கலவையாக்கல் : 1) நேரடியாக முகவரி எழுதும் நுணுக்கம். 2) ஒன்றுக்கு மேற்பட்ட புலங்கள் வேறுபட்ட அமைவாக மாற்றும் கணிப்பொறிச் செயல். பொதுவாக, இது மிக நெருக்கமானது எளிதாகக் கையாளக் கூடியது. வேறுபெயர் கலவைக் குறியிடல்.

HDLC - High level data link - எச்டிஎல்சி: உயர்நிலைத் தகவல் இணைப்பு.

HDML, Handheld Device Markup Language - எச்டிஎம்எல் : கைப் பிடிக் கருவியமைப்பு குறிமொழி.

HDTP, Handheld Device Transfer Protocol -எச்டிடிபி: கைப்பிடிக் கருவியமைப்பு மாற்றுச் சீரி.

head - A small electro - magnetic device able to read, record and erase data on a magnetic storage medium, Eg. a disk. Otherwise known as read / write head. தலை : ஒரு சிறு மின்னணுக் காந்தக்கருவி, காந்தச் சேமிப்பு ஊடகத்திலுள்ள தகவலை எழுத, படிக்க, பதிய, அழிக்க உதவுவது. எ-டு வட்டு, வேறு பெயர் படி / எழுது தலை.

header - The area at the top of a page. It can be created as we desire. தலைக் குறிப்பு : ஒரு பக்கத்தின் மேலுள்ள பகுதி. நாம் வேண்டியவாறு இதை உரு வாக்கலாம். ஒ. footer.

heading tag -தலைப்பொட்டு: ஒட்டுகளில் ஒருவகை. இது எச்டிஎல் ஆவணத்தைக் கவர்ச்சியுள்ளதாக்கும்.

help - assistance;உதவி.

hesitation - A short automatic suspension of a main programme to carry out all or part of another operation. Eg. fast transfer of data from a peripheral unit. தயக்கம் : ஒரு செயலைப் பகுதியாகவோ முழுதுமாகவோ நிறைவேற்றும் ஒருமுதன்மை நிகழ்நிரல். குறுகிய நேரம் தானாக நிற்றல் எ-டு. வெளிப்புற அலகிலிருந்து விரைவாகத் தகவலை மாற்றல்.

hexadecimal numbers - அறுபதின்ம எண்கள் : உயர் மதிப்புள்ள இரும எண்களை மீக நீண்ட இரும வரிசையாய்க் குறிக்கலாம். இதைத் தவிர்க்க அறுபதின்ம எண் பயன்படுகிறது. இம்முறையில் 16 எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F இதில் A, B, C, D, E, F என்னும் எழுத்துகள் 10, 11, 12, 13, 14,15 என்னும் மதிப்புகளை முறையே பெறுகின்றன. அறுபதின்ம முறையின் அடி எண்மதிப்பு 16 ஆகும் இந்த எண்களின் இட மதிப்பு வலமிருந்து இடம் 16இன் இரு மடங்காகும். இரும எண் வரிசையின் ஒவ்வொரு 4 இருமிகளும் ஓர் அறுபதின்ம எண்ணைக் குறிக்கும். காட்டாக, 01101011 என்னும் இரும எண்ணை எடுத்துக்கொள்க. இதைக் கீழ்க்கண்டவாறு நன்னான்கு இருமிகளாகப் பிரித்து எழுதலாம். பின் ஒவ்வொரு 4 இருமிகளையும் சமமான அறு பதின்ம எண்களாக எழுதுக.

0110 ....> 6B

இவ்வாறு இரும எண்களை அறுபதின்ம எண்களாக எளிதாக மாற்றி எழுதலாம். இதே போல் ஓர் அறுபதின்ம எண்ணை இரும எண்களாகவும் எளிதில் மாற்றலாம். எ.டு. 3E1 . . . > 0011 1110 0001 ...> 1111100001. பதின்ம எண்களின் அறு பதின்ம எண்களாக மாற்ற, இரும எண் மாற்றத்திற்கு 2 ஆல் வகுத்தது போல, இங்கு 16 ஆல் வகுத்து அறுபதின்ம எண்ணைப் பெறலாம். எடுத் துக்காட்டு பின்வருமாறு :

69172 என்னும் பதின்ம எண்ணை அறுபதின்ம எண்ணாக மாற்றல்.

ஆகவே (6972)10 = (10E34)16

hidden line - A graphic display of a three dimensional object in line form. மறைவரி : வரிவடித்தல் முப் பரும வரைகலைக் காட்சி.

hierarchial data base -படிநிலைத் தகவல் தளம்: இது முதன்மையாக முதன்மைக் கணிப்பொறிகளில் பயன்பட்டது. இதில் பதிவுருக்கள் மரம் போல் இருக்குமாறு வகைப்படுத்தி அடுக்கப்படும். பதிவுரு வகைகளுக்கிடையே உள்ள தொடர்பு தாய் சேய் தொடர்பு போன்றது.

hierarchial file - A file with a grandfather - father - son structure. படிநிலை வரிசைக் கோப்பு :தாத்தா தந்தை மகன் என்னும் படிமரபுள்ள கோப்பு.

high level languages - உயர்நிலை மொழிகள் : பயன் பாட்டு நிகழ்நிரல்களைச் செயற்படுத்த இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொழி யமைப்பைப் பயன்படுத்திப் புரியக்கூடிய குறிமுறைகளைப் பயனாளி அறிந்து கொள்ளலாம். இவற்றைச் செயற்படுத்த, இவை எந்திர மொழியாக்கப் பட வேண்டும். இதற்குத் தொகுப்பியைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான உயர் நிலை மொழிகளாவன :1) பேசிக் 2) கோபல் 3) போர்ட்டன் 4) விஷூவல் பாக்ஸ்புரோ 5) விஷூவல் பேசிக், விபி 6) ஜாவா 7) விஷூவல் C++.

high speed printer, HSP - A printer printing 600 lines per minute. உயர் விரைவு அச்சியற்றி, எச்எஸ்பி : ஒரு நிமிடத்திற்கு 600 வரிகள் அச்சியற்றும் கருவி.

high speed reader - The fastest input device existing at a particular time. உயர்விரைவு படிகருவி : குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு உட்பலனைக் கொடுக்கும் கருவி.

high resolution graphics - Images displayed on a VDU showing fine detail. உயர் பகுப்பு வரைகலை : காட்சித்திரையில் காட்டப்படும் மிக நேர்த்தியான விளக்கமுள்ள உருக்கள்.

hit rate - The ratio of the number of records addressed in a run to the number of records in a file expressed as percentage. - ஒட்ட வீதம் : ஓர் ஓட்டத்தில் அணுக்கமுள்ள ஆவணங்களின் எண்ணிக்கைக்கும் கோப்பிலுள்ள ஆவணங்களின் எண்ணிக்கைக்குமுள்ள தகவு, விழுக்காடாகத் தெரிவிக் கப்படுவது.

HLL - High Level Language.உநிமொ : உயர்நிலை மொழி.

hold - The preservation of data in one storage. பிடிப்பு : ஒரு சேமிப்பில்சேமிக்கப்படும் தகவல் அளவு.

hold facility- A method of interrupting the operation of an anolog computer. பிடி வசதி : ஓர் ஒப்புமைக் கணிப்பொறியின் செயலை விளக்கும் முறை.

home computer - A microcomputer. இல்லக் கணிப்பொறி : நுண் கணிப்பொறி.

home page -தொடக்கப்பக்கம் : மின்னஞ்சலில் வருவது. ஒரு வலையத்தளத்தின் முதல் பக்கம். தளத்தைப் பற்றிய செய்திகளையும் தளத் திலுள்ள பிறபக்கங்களோடு உள்ள இணைப்புகளையும் கொண்டது.

Hopper, Grace -கிரேஸ் ஹாப்பர் : கணிப்பீட்டில் முன்னோடியாக அமைந்த பெண்மணி. அமெரிக்காவில் 1940 களில் திறப்பியுள்ள கணிப் பொறிகளை அமைக்க உதவியவர். அவற்றிற்குரிய மென்பொருள் உருவாக்கவும் உதவியவர். இவர் தம் அருஞ் செயல்களில் மூன்று : 1) உயர்நிலை மொழியான கோபலை உருவாக்கியவர். 2) உயர்நிலை மொழிகளை எந்திர மொழியாக மாற்றும் தொகுப்பியை உருவாக்கியவர். 3) முதல் கணிப்பொறிப் பிழையைக் கண்டறிந்தவர். பா. Computer, history of.

horizontal rule tag -கிடைமட்டக் கோட்டு ஒட்டு : கிடை மட்ட வரி வரையப் பயன்படுவது. வேறுபெயர் <HR> ஒட்டு.

host computer - 1) A computer having overall control in a communication network. Eg. Prestel. 2) A computer preparing programmes for execution on another type of computer.

ஒம்பு கணிப்பொறி : 1) ஒரு தகவல்தொடர்பு வலையமைவில் முழுக் கட்டுப்பாடுள்ள கணிப்பொறி. எ-டு. பிரிஸ்டெல். 2) மற்றொரு வகைக் கணிப்பொறியில் செயற்படுத்த நிகழ்நிரல்களை உருவாக்கும் கணிப்பொறி.

hosting - ஒம்புதல் : தொடக்கப் பக்கத்தை வலையத்தின் ஒரு பகுதியாக்கி, இணையப் பயனாளிகள் அனைவரும் அதைப் பார்க்குமாறு செய்தல். தவிர, நம் கணிப்பொறியிலிருந்து எச்டிஎம்எல் குறிமுறையைப் பணியாளிக்கு (சர்வர்) மாற்றுவதும் ஆகும்.

host processor - A micro processor having overall control of other microprocessors in a multiprocessor system. ஒம்பு செயல்முறையாக்கி : இது ஒரு நுண் முறையாக்கி, ஒரு பன்ம முறையாக்கித் தொகுதியிலுள்ள நுண்முறையாக்கிகளை முழுவதும் கட்டுப்படுத்துவது.

house-keeping - Routineswithin a programme not directly concerned with solution of the problem நடைமுறை ஒழுங்கு : ஒரு நிகழ்நிரலிலுள்ள நடைமுறைகள். இவை ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு நேரடியாகத் தொடர்புடையன அல்ல.

HTML, Hyper Text Markup Language - எச்டிஎம்எல், மீப் பாடக் குறிமொழி.

HTML, advanced concepts and trends in -எச்டிஎம்எல் லில் முற்போக்குக் கருத்துகளும் போக்குகளும் : இது இன்று எல்லோரும் நன்கு அறிந்த ஒன்று. வேறுபட்ட மேய்விகளில் உள்ள ஒட்டுகளில் சிறு வேறுபாடுகள் உள் ளன. ஆகவே இதற்குத் திட்டமான ஒட்டுகள் உண்டாக்க வேண்டும் என்னும் தேவை ஏற்பட்டது. ஜனவரி 2000 திட்டம் என்பது எச்டிஎம்எல் 40 ஆகும். இதன் உட்கருத்து இதுவே: எல்லா மேய்விகளும் ஒரே பெயருள்ள ஒட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். இது திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்புகளுக்கும் பொருந்தும். இதனால் எல்லா மேய்விகளும் ஒரே மாதிரியான எச்டிஎம்எல் பக்கத்தைக் காட்டும். இது இன்றுவரை எட்டாத உண்மை. இருப்பினும், குறிப்பிட்ட பண்புகளும் ஒட்டுகளும் உள்ள மேய்விகளும் உள்ளன. வலையத்தில் (வெப்) ஒம்புவதற்குமுன் ஒன்றிற்கு மேற்பட்ட மேய்வியைப் பயன்படுத்தி எவ்வாறு ஆவணம் நன்கு காட்சிக்கு உள்ளாகிறது என்று பார்ப்பது அறிவுடைமை ஆகும்.

ஓர் இணைப்பாகச் செயலாற்ற நங்கூர ஒட்டில் ஓர் உருவைப் பயன்படுத்தலாம். இவ்வுரு ஓர் இணைப்பு என்பதை மேய்வி, பயனாளிக்குக் குறிப்பால் காட்டும். பயனாளி உருவைத் தட்டி இணைப்புக்குச் செல்கிறார். ஒரே உருவிற்குரிய வேறுபட்ட பகுதிகளுக்கான வேறுபட்ட இணைப்புகளை வரையறை செய்ய எச்டிஎம்எல் நமக்கு உதவுகிறது. உருவின் ஒருபகுதி மேல் சுட்டெலி நகரும் பொழுது, அதை ஒத்த இணைப்பு இருப்பதைக் குறிப்பால், அது காட்டும். இவற்றிற்கு சுட்டெலி நுண்ணுர்வு உருக்கள் என்று பெயர்.

பயனாளியால் வழங்கப்படும்.குறிப்பிட்ட அட்டவணைச் சொற்களைக் கொண்டு, எச்டிஎம்எல் ஆவணங்களை நாம் தேட இயலும். இச்சொற்களை அடையாளமறிதலும் ஒரு விரைந்த தொழில் முறையாகிவிட்டது.

எச்டிஎம்எல் என்பது விஷவல் பேசிக் படி எழுத்தையும், ஜாவா படி எழுத்தையும் சேர்க்க வாய்ப்பளிக்கிறது. இதில் வினையுறு எக்ஸ் கட்டுப்பாடுகளும் அடங்கும். இவை எல்லாம் எச்டிஎம்எல் ஆவணத்தில் இருக்கும். பொருளறி மற்றும் ஆப்லெட் ஒட்டுகளைப் பயன்படுத்தி, இதைச் செய்ய இயலும். இவ்வசதிகளைப் பயன்படுத்தி, ஆவணங்களை ஒன்றுக்கு மற்றொன்று வினைகொள்ளக்கூடியதாகச் செய்யலாம். மேலும், ஆவணத்தில் பல முற்போக்கு இயல்புகளையும் புகுத்தலாம்.

HTML, definition of - எச்டிஎம்எல் இலக்கணம் : இச்சொல்லின் விரிவு Hyper Text Markup Language என்பதாகும். மீப்பாடக் குறிமொழி. மீபாகுமொ. இது ஒர் ஆவணத்தின் அடக்கப்பொருள். இந்த ஆவணம் பாடம், படம் முதலியவற்றால் பிற ஆவணங்களோடு இணைப்பு கொள் வது. இது ஒருமொழி ஆவணத்துடன் தொடர்புள்ள படங்களையும் மீப்பாடத்தையும் காட்டுவது எப்படி, உலகளாவிய இடையத்தில் உள்ள ஏனைய ஆவணங்களோடு இணைப்புகளை உண்டாக்குவது எப்படி என்பதை இது மேய்விக்கு அறிவுறுத்தும். ஆவணங்களைக் கவர்ச்சியாகக் காட்டவும் உதவுவது.

HTML document, creation of எச்டிஎம்எல் ஆவணத்தை உருவாக்கல் : இந்த ஆவணங்களை உருவாக்கப் பதிப்பிப்பி (சொல்முறையாக்கி) தேவை. காட்டாகக் குறிப்புத்தாளை, சாளரங்களைப் பயன்படுத்தும் பொழுதும், டாஸ் பதிப்பிப்பி யை டாசைப் பயன்படுத்தும் பொழுதும். பயன்படுத்தலாம். நம் பணியைப் போட்டுக் காட்ட ஒரு மேய்வியும் தேவை: இணைய ஆராய்வி, வலைக் காட்சிக் செலுத்தி. இணைய இணைப்பும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பயன்களாவன: இணையத்திலுள்ள எச்டிஎம்எல் ஆவணக் குறிமையைச் சுமை இறக்கம் செய்யவும் ஆராயவும், கிடைக்கக்கூடிய ஆவணங்களோடு இணைப்புகளை உண்டாக்கவும், இணையத்தில் நம் ஆவணங்களை வெளியிடவும் உதவும்.

அங்காடியில் பல மென் பொருள்கள் உள்ளன. இவை எச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்க உதவுபவை. எ-டு மைக்ரோசாஃப்ட் சொல் 97, முன்பக்கம், இணையக்காட்சிக் கோப்பி, காட்டாக, மைக்ரோசாஃப்ட் சொல்லைப் பயன்படுத்தி, நம் பாடத்தைத் தட்டச்சு செய்து படிவமைப்பு செய்யலாம். படத்தை ஒட்டலாம், ஆவணத்தை எச்டிஎம்எல் ஆவணமாகச் சேமிக்கலாம். இது தானாகவே நமக்குத் தேவைப்படும் ஒத்தமையும் குறிமையை உருவாக்கும்.

HTML document, structure of எச்டிஎம்எல் ஆவன அமைப்பு : இந்த ஆவணம் ஒவ்வொன்றும் எச்டிஎம்எல் ஒட்டோடு தொடங்கும். இந்த ஆவணத்தைத் தொடர்வது என்ன என்ன என்பதை இந்த ஒட்டு குறிக்கும் இந்த ஆவணத்தில் இருபகுதிகள் உண்டு 1) தலைப் பகுதி 2) உடல் பகுதி.

தலைப் பகுதி: ஆவணத்தின் தலையைச் சுட்டிக் காட்டுவது இப்பகுதி. இது தலை ஒட்டோடு தொடங்கும். இதைத் தலைப்பு ஒட்டு தொடரும். இதற்குப்பின் ஆவணத் தலைப்பு வரும். நம் தகவலுக்காகவே இத்தலைப்பு உள்ளது. மேய்வியின் தலைப்புப் பட்டையில் காட்டப்படும். தலைப்பு, தலைப்பு முடிவு ஒட்டோடு முடியும் தலைப் பகுதியை முடிக்க </Head> ஒட்டைப் பயன்படுத்த வேண்டும்.

உடல் பகுதி ! இப்பகுதியில் ஆவணம் மட்டும் இருக்கும். இப்பகுதி உடல் ஒட்டோடு தொடங்கும். அடுத்து வருவது ஆவணங்களின் பாடம் உடல் முடிவு ஒட்டோடு இது முடியும். ஆவணத்தின் கடைசிவரி எச்டிஎம்எல் முடிவு ஒட்டாகும். இந்த ஆவணம் முடிவதை இந்த ஒட்டு குறிக்கும்.

HTML, history of -எச்டிஎம்எல் வரலாறு : டிர்ன் பெர்னர்லீ என்பார் ஓர் ஆராய்ச்சியாளர். இவரே இதை முதன்முதலில் கருத்தில் கொண்டவர். கொண்ட ஆண்டு 1989. பின் இது மிகப் பரவலாகி கோபரை மாற்றீடு செய்தது.

HTML, kinds of - எச்டிஎம்எல் வகைகள் :1)DHTML-டிஎச்டிஎம்எல் 2)XML-எக்ஸ்எம்எல் விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க HTML tags - எச்டிஎம்எல் ஒட்டுகள் : இம்மொழியைப் பயன்படுத்தி நம் ஆவணத்தை எவ்வாறு திரையில் காட்ட லாம் என்பதை மேய்விக்கு அறிவுறுத்தலாம். இந்த அறிவுறுத்தல்கள் அல்லது குறிகளே ஒட்டுகள் எனப்படும். நம் ஆவணத்தின் உள்ளடக்கங்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய, இந்த ஒட்டுகளை மேய்வி பயன்படுத்தும். இந்த ஒட்டுகளில் ஒரு திறவுச் சொல் இருக்கும். இச்சொல் கோண அடைப்புகளைக் (<>) கொண்டிருக்கும். இச்சொல்லே ஒட்டின் வேலையைச் சுட்டிக்காட்டும். எ-டு.

<Head> - தலை

<Title> - தலைப்பு

<HTML> - எச்டிஎம்எல்

பொதுவாக, இந்த ஒட்டுகள் வேற்றுமைப் பொருள் உடையவை அல்ல. <HEAD>, <Head>, <hEAd>, <head> என்பதெல்லாம் ஒன்றே. பெரும்பான்மை ஒட்டுகள் இணையாக இருக்கும் முதல் ஒட்டு. Start tag - தொடங்கு ஒட்டு இது ஒரு பயன் தொடங்குவதைக் குறிக்கும். இரண்டாவது ஒட்டு End tag - முடிவு ஒட்டு. ஒரு பயன் முடிவதைக் குறிக்கும். இவ்விரு வகை ஒட்டுகளும் ஒன்றே.

HTML tags, kinds of - எச்டிஎம்எல் ஒட்டு வகைகள் : இவை பின் வருமாறு 1) Start tag - தொடங்கு ஒட்டு 2) End tag - முடிவு ஒட்டு 3) Nested tags - கூடுகை ஒட்டுகள் : தலைப்பு ஒட்டு தலை ஒட்டோடு சேரும். இத்தலை ஒட்டு மீண்டும் எச்டிஎம்எல் ஒட்டோடு கூடும். இதேபோல உடல் ஒட்டு எச்டிஎம்எல் ஒட்டோடு சேரும். இவ்வகை ஒட்டுகளே கூடுகை ஒட்டுகள் ஆகும். எச்டிஎம்எல் ஆவணங்களை எழுதும் பொழுது இந்த ஒட்டுகள் அடிக்கடி பயன்படும். ஒட்டுகளைச் சேர்க்கும் பொழுது, புற ஒட்டோடு உள் ஒட்டு முழுதுமாகச் சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டுக்கு முன்பும் பின்பும் தவறாது கோணக்குறி இட வேண்டும். (<>). 4) Bold tag - பெரிய எழுத்து ஒட்டு. 5) Italics tag - சாய்வெழுத்து ஒட்டு. 6) Underline tag - கீழ்க்கோடிடல் ஒட்டு. 7) Centre tag - மைய ஒட்டு. அதாவது பாடத்தை 4 லிருந்து 5 வரை உள்ள எழுத்துகளால் காட்டவேண்டும். இவை எல்லாம் இணை இணையாகவே பயன்படும்.

8) BR tag - பிஆர் ஒட்டு : இது வரிமுறிவை உண்டாக்குவது.

9) P tag - பி ஒட்டு : இது பத்தி ஒட்டு. ஒரு புதிய பத்தியை உண்டாக்கப் பயன்படுவது.

10) Anchor tag - நங்கூர ஒட்டு.

11) Small tag - சிறிய ஒட்டு: சிறிய எழுத்துப் பாடத்தைக்காட்டுவது.

12) Bit tag - பெரிய எழுத்து ஒட்டு : பெரிய எழுத்தில் பாடத்தைக் காட்டுவது.

13) DL tag - வரையறை ஒட்டு.

14) Form tag - படிவ ஒட்டு.

15) Input tag - உட்பலன் ஒட்டு.

hub - The hole in the middle of a reel of magnetic tape. குடத்துளை : காந்த நாடாச் சுருளின் நடுவிலுள்ள துளை.

human body- wetware : நனைபொருள்.

hybrid computer - Any mixed computer system in which analog and digital computing devices are combined. கலப்பினக் கணிப்பொறி: இது ஒரு கலப்புக் கணிப்பொறித் தொகுதி. இதில் ஒப்புமை மற்றும் இலக்கக் கணக்கீடும் கருவியமைப்புகள் ஒருங் கிணைந்திருக்கும்.

hyper text - மீப்பாடம் : மீ உரை. இது ஓர் ஆவணத்தின் உள்ளடக்கம். பாடம், படம், இணைப்புகள் ஆகியவற்றைக்கொண்டது. இவை ஏனைய ஆவணங்களுடன் தொடர் புள்ளவை.

Hyper Text Markup Language - மீப்பாடக் குறிமொழி : List. HTML.

hyper text navigation - மீப்பாடச் செலுத்துகை : வலைய வடிவமைப்பில் ஒரு பெரும் பகுதி இது. இதற்குப் பின்வரும் முடிவுகள் தேவை : 1) இணைப்புகள் தோற்றம் 2) பயனாளிகள் எங்கே செல்ல வேண்டும், ஓர் இணைப்பு அவர்களை எங்கு அழைத்துச் செல்கிறது என் பதை விளக்க வேண்டும். 3) பயனாளியின் நடப்பு இடத்தை ஐயமறக் காணல். 4) தகவல் கட்டமைப்பு. பொதுவாகச் செலுத்துகை என்பது ஒரு பக்கத்தைக் திருப்புவதை மட்டுமே குறிக்கும்.

hyper visor - A control programme enabling two operating systems to share a common computing system. மீப்பார்வையாளி: இது ஒரு கட்டுப்பாட்டு நிகழ்நிரல். இதில் இரு இயங்குதொகுதிகள் ஒரு பொது கணக்கிடும் தொகுதியைப் பகிர்ந்து கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/H&oldid=1047047" இலிருந்து மீள்விக்கப்பட்டது