I

IAL, International Algebraic Language.

ஐஏஎல் : அனைத்துலக இயற்கணித மொழி : இது பின் ஆல்கல் மொழியாக மாறிற்று.

IBM, International Business Machine - ஐபிஎம் : அனைத்துலகத் தொழில் எந்திரம், அதொஎ.

IBMS, Intelligent Guiding Management System - ஐபிஎம்எஸ் : நுண்ணறி வழிபடுத்து மேலாண் அமைப்பு : சென்னை தரமணி டைடல் பூங்காவில் உள்ளது. இது ஒரு கணிப்பொறிக் கட்டுப்படுத்தும் அமைப்பு. பூங்காவில் உள்ள பல பகுதிகளின் வேலைகளைக் கண்காணிப்பது. முதன்மையாக 2500 தீயறி கருவியமைப்புகளின் வேலையைக் கட்டுப்படுத்துவது (04-04-2000).

IC, Integrated Circuit - ஐசி : ஒருங்கிணைசுற்று, ஒசு.

icon - A symbol displayed for a user by a programme of an operating system. It represents an event or object. System based on this concept generally a pointing device is included. Eg. A mouse, a light pen. நுண்படம் : ஓர் இயங்கு தொகுதியின் நிகழ்நிரலால் பயனாளிக்காகக் காட்டப்படும் குறியீடு. இது ஒரு பொருள் அல்லது நிகழ்வைக் குறிக்கும். பொதுவாக இக்கருத்தின் அடிப்படையில் அமைந்த தொகுதிகள் குறிகாட்டும் கருவியமைப்பாக இருக்கும். எ-டு சுட்டெலி, ஒளி எழுதி.

icons commonly used - பொதுவாகப் பயன்படும் நுண் படங்கள் : இவை கருவிப் பட்டையில் உள்ளவை. 1) சேமி : தட்டில் செய்தியைச் சேமிக்க உதவுகிறது. 2) அச்சியற்று : செய்தியை அச்சியற்றுவது. 3) ஆசிரியருக்குப் பதில் : ஆசிரியருக்குப் பதில் அனுப்ப உதவுவது. 4) அனைத்துக்கும் பதில் : மூலச்செய்தியைப் பெறுபவர் அனைவருக்கும் இச்செய்தியின் படி அனுப்பப்படும். 5) அனுப்புதல் : ஒருவருக்குச் செய்தியின் படியை அனுப்ப உதவுவது. 6) முன்செய்தியும் பின்செய்தியும் : நடப்புச் செய்திக்கு முன்னும் பின்னும் உடன் செய்திகளைக் காண உதவுகிறது.

IDE, Integrated Drive Environment - A type of fast head drive typically used in laptop computers. ஐடிஇ : ஒருங்கிணைந்த இயக்கு சூழல். விரைவாக இயங்கும் ஒருவகை இயக்கி; பெட்டியடக்கக் கணிப்பொறிகளில் பயன்படுவது.

identification - A label having a coded name. It helps to identify any unit of data. Eg. A file name.

கணிப்பொறியுடன் புதிய வன்பொருளைச் சேர்க்கிறது

புதிய நிகழ்நிரல்களை நிறுவி அவற்றிற்குரிய குறுக்கு வழிகளை உருவாக்க அனுமதிக்கிறது.

நாள், நேரம், நேர மண்டலம் ஆகியவற்றை மாற்ற அனுமதிக்கிறது.

கவர்ச்சியான சுவர்த்தாள்கள் ஒலி முதலியவற்றைக்கொண்டு உங்கள் கணிப்பொறியைத் தனிவயமாக்க அனுமதிக்கிறது.

பின்னணி, திரை முதலிய காட்சிப்பண்புகளை மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

கணிப்பொறியில் புதிய எழுத்துகளைச் சேர்க்கவும், நீக்கவும், பார்க்கவும் அனுமதிக்கிறது.

விசைப்பலகை அமைவுகளை மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

சுட்டெலி அமைவுகளை மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

கடவுச் சொற்களை ஒதுக்கீடுசெய்யவும் மாற்றவும் அவற்றிற் குரிய காப்பு விருப்பங்களை அமைக்கவும் அனுமதிக்கிறது.

அச்சியற்றிகளின் அமைவைச் சேர்க்கவும் மாற்றவும் நீக்கவும் அனுமதிக்கிறது.

நாள், நேரம் எண் முதலியவற்றைக் காட்டுவதில் மாற்றம் உண்டாக்க அனுமதிக்கிறது.

கணிப்பொறிக்குப் பல பயனாளிகளைக் கொண்டுவர அனுமதிக்கிறது.

நுண்படம்

அடையாளமறிதல் : குறிமுறைப் பெயருள்ள குறியம். ஒரு தகவல் அலகை அடையாளங்காணப் பயன்படுவது. எ-டு ஒரு கோப்பின் பெயர்.

identification division - One of the four divisions of a COBOL programme. அடையாளமறிதல் பிரிவு : கோபல் நிகழ்நிரல் 4 பிரிவு களில் ஒன்று.

identifier - The valid variable. Eg. A beta pay. அடையாளங்காட்டி : செல்லத்தக்க மாறி, எ-டு பீட்டா பே.

identity element - A logical element with binary signals. அடையாளக்கூறு : இருமக்குறி கைகள் உள்ள (0,1) முறைமைக்கூறு.

idle time - The period during which a system or part of it is not used for lack of command. Eg. The printer may be in use but the CPU may have idle time. பயனில் நேரம் : கட்டளை இல்லாததால், ஒரு தொகுதி அல்லது அதன் ஒரு பகுதி இயங்காது இருக்கும் நேரம், எ-டு அச்சியற்றி இயங்கும் பொழுது, மையச் செயலகம் இயங்காது இருத்தல்.

if else structure - A useful one for easy handling. இருந்தால் தவிர அமைப்பு : எளிதாகக் கையாளுவதற்குரிய பயனுள்ள அமைப்பு.

ignore character - புறக்கணிப்பு உரு : கணக்கில் கொள்ளப்பட வேண்டியதில்லை. வேறுபெயர் அழியுரு.

IKBS, Intelligent Knowledge - Based System - - ஐகேபிஎஸ் : நுண்ணறிவு அறிவமை தொகுதி, நுஅ.அதொ.

llakiyasalaram - இலக்கியச்சாளரம் : இலக்கிய மின்னிதழ்.

image - An exact copy of an area of store located in another part of store. படம் : வேறு ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புப் பகுதியின் துல்லிய படி.

image control - படக் கட்டுப்பாடு : இது செவ்வக வடிவப் பகுதி. இதில் படக் கோப்புகள் அமைந்திருக்கும். வரைகலையில் பயன்படுவது.

image processing - A method of inputting two dimensional images to a computer and later enhancing or analyzing the imagery into a meaningful form to the user. Eg. Enhancement of drawings for animation, computer - aided - models. படமுறையாக்கல் : ஒரு கணிப்பொறிக்கு இரு பருமப் படங்களைச் செலுத்திப் பயனாளிக்கு உதவும் வகையில், அவற்றைப் பொருள் உள்ள வடிவத்தில் மாற்றுதல். எ.டு எழுச்சி யூட்டும் வரைபடங்களை உருவாக்கல், கணிப்பொறிவழி மாதிரிகள் அமைத்தல்.

IMIS, Integrated Management Information System - ஐஎம்ஐஎஸ் : ஒருங்கிணை மேலாண் தகவல் தொகுதி, ஒமேததொ.

immediate access - A store in which information got back at once. உடன் அணுக்கம் : செய்தி உடன் கிடைக்கும் சேமகம்.

immediate access store - A storage device having immediate access to data. உடன் அணுக்கச் சேமிப்பு : தகவலுக்கு உடன் அணுக்கமளிக்கும் கருவியமைப்பு.

immediate address - The value of an operand contained in the address part of an instruction. உடனறி முகவரி : கட்டளையின் முகவரிப் பகுதியிலுள்ள செயலிடத்தின் மதிப்பு.

immediate data - Data appearing at once. உடனறிதகவல் : உடன் தோன்றும் செய்தி.

implement - Carry out something, eg. plan. நிறைவேற்று : எ-டு திட்டம்.

implementation - The procedures involved in installing and testing hardware and software in computer systems. நிறைவேற்றல் : கணிப்பொறித் தொகுதிகளில் மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைப் நிலைநிறுத்தலும் ஆய்ந்து பார்த்தலும் இவற்றிற்குரிய செயல்முறைகளாகும்.

Inaiya Tamil - இணைய தமிழ் : ஒரு மின்நூல். 2000 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. ஆறாந்திணையை அரிதில் விளக்கும் அறிமுக நூல்.

incident - failure to be rectified. நேர்ச்சி : திருத்தப்பட வேண்டிய தவறு.

inconsistency - A contradictory data condition defected by software. இசைவின்மை : மென்பொருளால் கண்டறியப்படும் முரண்பட்ட தகவல் நிலைமை.

increment - உயர்வு : குறித்த அளவுக்கு முழு எண்ணை மதிப்பில் உயர்த்தும் பயனிலையும் பெயர்ச் சொல்லும்.

indentation - ஒதுக்கிச்செய்தல்: இடைவெளி விட்டுச்செய்தல். பொதுவாக, இது பத்திக்குப் பயன்படுவது. இதனால் ஆவணத்தை எளிதில் படிக்க இயலும். ஓ.justification.

index - 1) A table of reference held in memory in some key sequence : eg. items in a file. 2) A number used to select a particular item from array of items found in memory. அட்டவணை : அடைவு திறவுத்தொடர் வரிசையில் நினைவகத்திலுள்ள பார்வை அட்டவணை. எ-டு கோப்பிலுள்ள இனங்கள். குறியீட்டெண் : நினைவகத்தில் காணப்படும் இன நெடுவரிசையிலுள்ள குறிப்பிட்ட இனத்தைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் எண்.

index arithmetic unit - A section of a computer doing index calculations. (addition, subtraction) குறியீட்டு எண்கணித அலகு : குறியீட்டுக் கணக்கீடுகள் (கூட்டல், கழித்தல்) செய்யும் கணிப்பொறியின் பகுதி.

indexed address - Variable address. குறியிட்ட முகவரி : மாறு முகவரி.

indexing - A method used to retrieve information from a table in memory or file on a direct access store. அட்டவணையிடல் : நேரடி அணுக்கச் சேமிப்பிலுள்ள நினைவகம் அல்லது கோப்பில் அட்டவணை உண்டு. இதிலிருந்து தகவலைப் பெறும் முறை.

index marker - The beginning and end of each track in a disk. அடைவுக்குறிப்பி : ஒரு வட்டிலுள்ள ஒவ்வொரு தடயத்தின் தொடக்கமும் முடிவும்.

index point - reference point. குறியிடல்புள்ளி : பார்வைப் புள்ளி

index register - A register having a modifier to enable data to be indirectly addressed. குறியீட்டுப் பதிவகம் : மாற்றியமைப்பியைக் கொண்டுள்ள பதிவகம். இது தகவலை மறைமுகமாக இனங்காண்பது.

index variable - A particular variable. குறியீட்டு மாறி : ஒரு குறிப்பிட்ட மாறி

index variable, steps in - குறியீட்டு மாறியின் படிகள் : இதிலுள்ள நான்குபடிகள் பின்வருமாறு : 1) தொடக்க மதிப்பு தொடங்கும் பொழுது, இம்மாறி முழு எண்ணாகவே இருக்கும். 2) இம்மாறியின் மின்னோட்டமாறி, இறுதி மதிப்போடு ஒப்பிடப்பட வேண்டும். திரும்பத்திகும்ப நடைபெறும் செயல்கள், ஒன்றிற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய இது தேவை. 3) விடை 'ஆம்' எனில், உடன் தேவையான செயல்களைச் செய்ய வேண்டும். 1 என்னும் வகையில் குறியீட்டு மாறியை உயர்த்துக. இரண்டாம் படி நிலைக்குச் சென்று, மீண்டும் சரிபார்த்தலைச் செய்க. 4) விடை 'இல்லை' எனில், திரும்பத் திரும்பச் செய்யும் நடைமுறைகள் முடிவுற்றன என்பது பொருள்.

index word - The word used to address data stored in a table in memory. குறியீட்டுச் சொல் : நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல்.

India Internet World 2000 - இந்திய இணைய உலகம் 2000 : இது ஒரு மாநாடு. 2000 செப்டம்பர்த் திங்கள் தில்லியில் பிரகதி திடலில் நடைபெற்றுப் பொது மக்கள் கலந்து கொண்ட மாநாடு.

indicator - 1) A lamp on a peripheral unit 2) A device set when a specified condition occurs. It may be tested by a programme for initiating an appropriate course of action. நிலைகாட்டி : 1) வெளிப்புற அலகிலுள்ள விளக்கு. 2) குறிப்பிட்ட நிலைமை உருவாகும் பொழுது அமைக்கப்படும் கருவியமைப்பு, உரிய செயல் முறையைத் துவக்க, நிகழ்நிரலால் இதை ஆய்ந்து பார்க்க இயலும்.

indicator chart - A chart used by a programmer during the logical design and coding of a programme. This procedure records details about the use of indicators in the programme. நிலைகாட்டிப்படம் : முறைமை வடிவமைப்பிலும் நிகழ்நிரல் குறிமுறையாக்கலிலும் நிகழ்நிரலர் பயன்படுத்தும் படம். இச்செயல் முறை நிகழ்நிரலிலுள்ள நிலை காட்டிகளைப் பயன்படுத்துவது பற்றிய விவரங்களைப் பதிவு செய்யும்.

infinity - Any number larger than the maximum number, A computer can store this number in any register. முடிவிலி : கந்தழி. பெரும எண்ணைவிடப் பெரியதாக உள்ள எண். எப்பதிவகத்திலும் இந்த எண்ணைக் கணிப்பொறி சேமித்து வைக்க வல்லது.

infix notation - A notation used for representing logical operators. In these operations the operator is written between the operands, eg. A & B. Here & represents the operation ‘and'. உள்ளமை குறிமானம் : முறைமைச் செயல்களைக் குறிக்கப் பயன்படுவது. இச்செயல்களில் செயலி, செயலிடங்களுக்கிடையே எழுதப்படும். எ-டு A& B. இங்கு & என்பது செயல் and ஐக் குறிக்கும். informatics, infomology - The study of processing data to provide information. தகவலியல் : செய்தியளிக்க முறையாக்கப்படும் தகவல்கள் பற்றி ஆராயுந்துறை.

information - That which got from the processing of data. செய்தி : தகவல்களை முறையாக்குவதிலிருந்து பெறப்படுவது.

information bits - characters or digits. செய்தி நுண்மிகள் : உருக்கள் அல்லது இலக்கங்கள்.

information channel - The hardware used in a data transmission link between two terminals. செய்தி வழி : இரு முனையங்களுக்கிடையே தகவல் செலுத்தும் இணைப்புக்காகப் பயன்படும் வன்பொருள்.

information processing - data processing. செய்தி முறையாக்கல் : தகவல் முறையாக்கல்

information provider, IP - செய்தியளிப்பவர், செ.அ : காட்சித்திரையில் காட்ட நிறையச்செய்திகளை வழங்கும் ஆள் அல்லது அமைப்பு.

information retrieval - செய்தி மீட்பு : பயனாளிகள் அணுகுவதற்கு ஏற்றவாறு செய்திகளை முறையாக்கல், எ-டு நூலகப் பணிகள்.

information society - செய்திச் சமுதாயம் : வருங்காலச் சமுதாயம், மின்னணுக் கருவியமைப்புகள் வழியாகத் தொடர்பு கொள்வது.

information technology - பா.ΙΤ.

information theory - செய்திக் கொள்கை : ஒரு செய்தித் தொடர்பு வலையமைவில் செய்திச் செலுத்தும் வீதம் பற்றிய கருத்துத் தெரிவு.

infotech park - செய்தித் தொழில் நுட்ப இயல் பூங்கா : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உள்ளது. எ-டு தரமணி டைடல் பூங்கா.

inherited error - An error in a result attributed to some previous stage of processing. Eg. In a single - step operation an error carried thro from a previous step வழிவரு பிழை : முன்னரே நடைபெறும் முறையாக்கலினால் கிடைக்கும் முடிவிலிருந்து உண்டாகும் பிழை. எ-டு ஒருபடிச்செயலில், முன்னரே உள்ள படியிலிருந்து பிழை தொடர்கிறது.

inhibit-prevent-தடு: நிறுத்து.

inhibiting signal - A signal preventing an operation from being performed.

initial instructions - தொடக்க அறிவுறுத்தல்கள் : ஒரு கணிப் பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நடைமுறைச் செயல்கள் நிகழ்நிரலைச் சுமை யேற்றப் பயன்படுவது.

initialization - A process carried out at the beginning of a programme by suitable means.

தொடங்கல் : தகுந்த வழி வகைகளால் ஒரு நிகழ்நிரலில் தொடக்கத்தில் நிறைவேற்றப் படும் செயல்.

inkjet printer - A printer using a technique of projecting droplets of ink at paper to form the required image.

மைப்பீச்சு இயற்றி : வேண்டிய உருவை உருவாக்கத் தாளில் மைத்துளிகளைத் தெளிக்கும் நுட்பத்தைக் கொண்ட அச்சியற்றி. ஒ. Laser Printer.

inkjet printer, technique of - மைப்பீச்சு அச்சியற்றியின் நுட்பம் : இதன் அச்சுத் தலையில் பல துளைகள் இருக்கும். ஒருங்கினை தடையளிப்பி விரைவாக வெப்பப்படுத்தப்படும். இது வெப்பம் அடையும்பொழுது, அதற்கருகிலுள்ள மை ஆவியாகித் துளைவழியாக வெளிவரும்; தலைக்கு அருகிலுள்ள தாளில் புள்ளியை உண்டாக்கும்.

ஓர் உயர்பகுப்புத்திறனுள்ள மைப்பிச்சு அச்சியற்றியில் 50 துளைகள் இருக்கும். ஓர் அங்குலத்திற்கு 300 புள்ளிகளை அச்சியற்றுபவை பன்மத் தலைகளைக் கொண்டவை. ஒரு தலை ஒரு நிறத்திற்கு. இதனால் வண்ண அச்சிடல் எளிதாகும். அச்சியற்றும் விரைவு ஒரு வினாடிக்கு 120 உருக்கள்.

input - information fed into a computer

உட்பலன் : உட்பாடு. கணிப்பொறியினுள் செலுத்தும் செய்தி. ஒ. output.

input box - உட்பலன் பெட்டி : இது பயனாளியிடமிருந்து கட்டளையைப் பெறப் பயன்படுவது.

input box function - உட்பலன் பெட்டிச் சார்பலன் : இப்பெட்டியிலிருந்து பெறப்படும் விளைவு. இதற்கு இப்பெட்டி உதவுகிறது.

input device - The device sending data into a computer Eg. mouse.

உட்பலன் கருவியமைப்பு : கணிப்பொறிக்குள் தகவலைச் செலுத்தும் கருவியமைப்பு. எ-டு சுட்டெலி. ஒ. output device.

input devices - உட்பலன் கருவியமைப்புகள் : இவை பின்வருமாறு விசைப்பலகை, சுட்டெலி, கட்டுப்பாட்டுக் கோல்.

input tag - உட்பலன் ஒட்டு : இதன் இயல்புகள் : வகை, பெயர், அளவு, மதிப்பு. <article data-mw-proofreadpage-wrapper=""><header data-mw-proofreadpage-wrapper=""></header><footer data-mw-proofreadpage-wrapper=""></noinclude></footer></article> சுற்று. இதில் படிகப் பெருக்கிகள், தடையளிப்பிகள், இரு முனை வாய்கள், மின்ஏற்பிகள் ஆகியவை எல்லாம் சேர்ந்து ஒரு சிறிய தனித்துள்ள சிலிகன் நறுவலில் அமைந்திருக்கும். இச்சுற்று வந்த பின்னரே கணிப்பொறி விரைந்து வளரலாயிற்று. இந்த ஒருங்கிணை சுற்று நறுவல் 1964 இல் புனையப் பெற்றது.

Intel - இண்டல் : அமெரிக்க நிறுவனம் நுண்முறையாக்கிகள் உருவாக்குபவர்கள். இதன் மூளை ஆண்ட்ரூ குரோவ், எ-டு இண்டல் 8080, 8086, 8088. பா. Grove.

Intel E-Business Forum - இன்டல் மின்வணிக அரங்கம் : மும்பையில் செயல்படுவது, இட்டியத்தை உருவாக்கியுள்ளது. இணைய வளர்ச்சியில் அதிகம் நாட்டம் செலுத்திவருவது.

Intelligent Chip - நுண்ணறிவு நறுவல் : மீயுணர்வுள்ள நறுவல் வகை. செயற்கை நுண்ணறிவைச் சார்ந்தது. நிறைவிலாக் காசோலைகளைப் படிக்கப் பயன்படுவது.

interactive programme - இடைவினை நிகழ்நிரல் : வேறு பெயர் பயனாளி நட்பு நிகழ்நிரல். இதில் பயனாளிகளுக்கும் எந்திரமிடத்திற்கிடையே துலங்கல் தகவல் தொடர்புகள் உடனுக்குடன் கையாளப்படும்.

interface - A circuit or device connecting a peripheral device to a computer in order to enable the transfer of data between the two. இடைமுகம் : இது ஒரு மின்சுற்று அல்லது கருவியமைப்பு. கணிப்பொறியோடு வெளிப்புறக்கருவியமைப்பை இணைப்பது. இதனால் இவ்விரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் மாறுகை நடைபெறும்.

interface standards - இடைமுகத்திட்ட அமைப்புகள் : மையச்செயலகம், நினைவகம் ஆகிய இரண்டினோடு திட்டப்படுத்திய வகையில் பல உட்பலன் / வெளிப்பலன் கருவியமைப்புகள் இணைக்கப்படுகின்றன. இவையே இடைமுகத் திட்ட அமைப்புகள். எ-டு ஆர்எஸ் 232C

interlace - இடைப்பின்னல் : சேமிப்பு நாடாவில் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்தடுத்து நினைவக இட எண் வழங்கல். அணுக்க நேரத்தைக் குறைக்க இது செய்யப்படுகிறது.

inter leaving - இடைவிடல் : இது ஒரு நுணுக்கம். பன்ம நிகழ்நிரலாக்கலில் பயன்படுவது. இதில் ஒரு நிகழ்நிரலின் துண்டுகள் மற்றொரு நிகழ்நிரலில் செருகப்படும். ஒரேசமயம் இரு நிகழ்நிரல்களையும் நன் முறையில் இயக்க இம்முறை உதவுவது.

interlock - இடைப்பூட்டு : வன்பொருள் அல்லது மென்பொருளில் நிறைவேற்றப்படும் பொறிநுட்பம். ஒரு கணிப்பொறித் தொகுதியில் ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுவது.

interlude - இடைநிகழ்வு : சிறியனவாகவுள்ள தொடக்கச் செயல்களைச் செய்ய வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். எ-டு குடும்ப மேலாண்மை.

internal arithmetic - உள்எண் கணிதம் : மையச் செயலகத்தில் கணிப்பொறி எண்கணித அலகில் நடைபெறும் எண்கணிதச் செயல்கள்.

International Protocol Address - அனைத்துலகத் திட்ட மரபு முகவரி. பா. network addressing.

International Standards Organization - பா. ISO.

internet-இணையம் : சுருக்கம் Net. வலையமைவுகளின் வலையமைவு இணையமாகும். சிறியனவாகவும் பெரியனவாகவுமுள்ள பல வலையமைவுகள் உலகம் முழுவதும் இணைக்கப்படுகின்றன. இன்று இணையத்தில் 50 மில்லியன் கணிப்பொறிகள் உள்ளன. 100 மில்லியன் பயனாளிகள் உள்ளனர். இணையத்துடன் தொடர்பு கொண்டு, உலக அளவில் செய்தித் தொடர்பு கொள்ளலாம். கணிப்பொறி வளர்ச்சியில் ஓர் எல்லைக்கல் இணையம். இது உலகை ஒரு சிற்றூராக மாற்றியுள்ளது. உலகத்தைப் பார்க்கும் மாயச்சாளரமாகவும் உள்ளது. ஒ. world wide web.

internet account - இணையக் கணக்கு : இது தொடங்குவதற்குரியது.

internet, advantages of - இணைய நன்மைகள் : இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு, தேர்வு முடிவுகள் 3) இணையப் பக்கங்களில் பெரும்பான்மைப் பொத்தான்களைக் கொண்டுள்ளன. இவற்றைச் சொடுக்கக் கீழிறக்கம் ஏற்படும். 4) இதில் நிறைய மென்பொருள் உள்ளது, இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் கணிப்பொறிக்கு மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5) டெல்நெட் (தொலை இணையம்) என்பது ஒரு கருவியமைப்பு, இதன்மூலம் தகவல் அணுக்கம் பெறலாம். எக்கணிப்பொறியிலும் சேமித்து வைத்த நிகழ்நிரல்களை ஓட விடலாம். 6) மின்னஞ்சல் மூலம் பல பயனாளிகளுடன் உலக அளவில் தொடர்பு கொண்டு, பயனுள்ள கலந்துரையாடல் நடத்தலாம். 7) நல்ல வணிக வாய்ப்புள்ளது.

internet booth, community - சமுதாய இணைய நிலையங்கள் : நன்கு வகுக்கப் பட்டுள்ள திட்டத்தில் தமிழக அரசால் 1500 நிலையங்கள் அல்லது சாவடிகள் அமைக்கப்படும். இலண்டனில் அமைந்துள்ள வோர்ல்டுடெல் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இதைச் செயற்படுத்த உள்ளது. 2005 ஆம் ஆண்டிற்குள் இந் நிலையங்கள் 10,000 என்னும் அளவுக்கு உயரும் (1999).

internet connections in India - இந்தியாவில் இணைய இணைப்புகள் : நாஸ்கம் அளவைப்படி 1988 நவம்பர் வரை 17 இலட்சம், 1999 டிசம்பர் வரை 61 இலட்சம். பயனாளிகள் 2.1 மில்லியன். இணைய ஆற்றல் இனி இந்தியாவில் வளரவேண்டும். கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்புகளைப் பயன்படுத்தினால் இணையம் வரும் ஆண்டுகளில் 37 மில்லியன் வீடுகளை அடையலாம். தனியாள் கணிப்பொறி வளர்ச்சி 25% அளவே உள்ளது. 2004 க்குள் இது பலமடங்காகப் பெருகும்.

internet connection requirements - இணைய இணைப்புத் தேவைகள் : அவையாவன: 1) கணிப்பொறி 2) தொலைபேசி 3) இருசெயலி 4) இணைப்புப் பணி வழங்குபவர்.

Internet crimes - இணையக்குற்றங்கள் : கணிப்பொறிக் குற்றங்கள். இவற்றிற்கு நிலையான தீர்வுகள் இல்லை. சட்டங்களும் இவற்றை கட்டுப்படுத்த இயலா. அவ்வளவு சந்து பொந்துகள் உள்ளவை அவை. இக்குற்றங்களில் முதன்மையானவை 1) தகவல் திருட்டு. 2) ஒற்றறிதல் 3) பணவரவு அட்டையில் ஏமாற்றுதல். 4) பாலியல் படங்கள் 5) தீரவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம். இக்குற்றங்களால் ஆண்டுக்குப் பலகோடி ரூபாய் அளவுக்குப் பண இழப்பு ஏற்படுகிறது.

internet growth factors - இணைய வளர்ச்சிக் காரணிகள் : இவை பின்வருமாறு. 1) தகவல் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருதல். 2) கேளிக்கை அவா

3) பொருளீட்டல்

internet, history of - இணைய வரலாறு 1960 களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, இணையத்தின் இன்றியமையாத் தேவையை உணர்ந்தது.இது தங்கள் நாட்டிலுள்ள கணிப்பொறி ஒருங்கிணைப்பையே நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி, இவ்வொருங்கிணைப்பில் ஓர் வலையமைவு பழுதுபட்டால் முழு ஒருங்கிணைப்பும் சிதையும்.ஆகவே,கணிப்பொறி ஒருங்கிணைப்புத்திட்டம் ஒன்றை அது உருவாக்கியது.

இத்திட்டம் தகவல் தொடர்பு விதிகளைத் தொகுத்தது.இதனால் ஒரு கணிப்பொறி,மற்றொரு கணிப்பொறியோடு தொடர்பு கொள்ளலாம் என்னும் நிலை உருவாயிற்று.இதில் ஒரு வலையம் (net) பழுதுபட்டால் ஏனைய வலையங்கள் வேலைசெய்யும்.இது நன்கு பரவியது.வணிக அமைப்புகள்,பல்கலைக்கழகங்கள் முதலிய கல்வி நிலையங்கள் இணையத்தைப் பயன்படுத்திப் பெருநன்மை பெறலாயின.ஆக,இணையம் 40 ஆண்டு நடைமுறை வரலாறு உடையது. தமிழக அரசும் 1999 இல் தமிழ் இணையத்தைத் தொடங்கியுள்ளது.ஆந்திராவும் இதில் முன்னோடியாக உள்ளது.பிற மாநிலங்களும் இதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இணையம் இன்று உலகத்தைத் தன் கைக்குள் வைத்துள்ளது.இதன் தந்தை விண்டன் செர்ஃப்.பா.Computer, history of.

internet magazines, Tamil - தமிழ் இணைய இதழ்கள் :' பல இதழ்கள் உள்ளன.மேலும் பல வர உள்ளன. எ-டு மின்னம்பலம். அனைத்துலகத் தமிழ் இதழ். சென்னையிலுள்ள டிஷ் நட் வெளியிடுகிறது. பா. Tamil internet.

internet pirates - இணைய திருடர்கள் : இணையக் குற்றங்கள் செய்பவர்.இவற்றைப் போக்க டிவிடி வட்டு உதவும்.

internet service provider, ISP - இணையப்பணி வழங்குபவர், இபவ: இந்த அமைப்பு குறிப்பிட்ட கட்டணத்தில் தங்கள் இணையத்தைப் பயன் படுத்திக் கொள்ள பயனாளிக்கு அனுமதி வழங்கும். இதைப் பயன்படுத்துபவர் இந்த அமைப்பில் தன் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முடிந்தவுடன் இப்பணி வழங்குபவர் பின் வருவன வற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அளிப்பார்.

1) பயனாளி : தனித்த பெயர்

2) கடவுச் சொல் : மறைவு குறிமுறை

3) மின்னஞ்சல் முகவரி மின்னஞ்சல்களை அனுப்பப் பெற. 4) அணுக்கத் தொலைபேசி எண்கள்: இவை இணைப்பி வழங்குபவரிடம் தொடர்பு கொள்ளப்பயன்படும்.

interpreter - மொழிபெயர்ப்பி : இது ஒரு மொழிபெயர்ப்பு அமைவு நிகழ்நிரல்; உயர் மொழி நிகழ்நிரலை எந்திர மொழி நிகழ்நிரலாக்குவது. இதில் செயல் விரிவாகவும் விளக்கமாகவும் நடைபெறும்.

interrupt system - The means of interrupting a programme and proceeding with at a later time. குறுக்கீட்டு அமைப்பு : ஒரு நிகழ்நிரலைக் குறுக்கிட்டு நிறுத்திப் பின் நடைபெற விடும் வழிவகை.

intranet - அக இணையம் : இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்தல். இணையம் உலகளவில் நடைபெறுவது. ஆனால், அகஇணையம் ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமே நடைபெறுகிறது. இதன் முதன்மை நோக்கம் வேலைகளை ஒழுங்குப்படுத்தி நேரத்தைச் சேமித்துச் செலவுகளைக் குறைத்து ஆதாயத்தை அதிக மாக்கல்.

inversion - The process of creating an inverted file from a file organized in some different way. தலைகீழாதல் : சிறிது வேறுபட்ட வழியில் உருவாக்கிய கோப்பிலிருந்து ஒரு தலைகீழான கோப்பை உருவாக்கும் முறை.

inverter - A logic element with one binary input digit signal to carry out the logical function of negation. தலைகீழாக்கி : ஒருமுறை மைக்கூறு, ஓர் இரும உட்பலன் குறிகையைக் கொண்டது. இல்லை எனும் முறைமைச் செயலைச் செய்வது.

invigilator - A device checking the performance of a control unit. மேலாளி : ஒரு கட்டுப்பாட்டு அலகின் செயல்திறனைச் சரிபார்க்கும் கருவியமைப்பு.

invisible failure - A failure of either software or hardware. It does not have any noticeable effect on the operating system. காணாப்பிழை : மென்பொருள் அல்லது வன்பொருள் பிழை, இயங்குதொகுதியில் இது பார்க்கத்தக்க விளைவை உண்டாக்காது.

ISDN, International Services Digital Network - அனைத்துலக இலக்கப் பணி இணையம், அஇபஇ : இது மிக முன்னேறிய தொலைத் தொடர்பு வலையமைவு. உயர்விரைவும் செலவு நன்மையுள்ள வலை யமைவை அமைக்க உதவுவது. வருங்கால உலகின் மெய்யான தொலைத் தொடர்புத் தேவைகளுக்குரிய தீர்வை அளிப்பது. இது நம்புமை அளிப்பது, உடன் தகவல் இணைப்பைத் தருவது. மிக விரைவான ஒப்புமை இரு செயலியைவிட (மோடம்), இந்த இணைப்பி பல மடங்கு விரைவுள்ளது. தற்பொழுது உலகிலுள்ள அகக் கட்டமைப்பு மூலமோ குரல் மூலமோ நகல் மூலமோ நடைபெறுவது. பா. CSI, VSNL, ISP.

ISO, International Standards Organization - அனைத்துலகத் தர அமைப்பு, அதஅ : ஓர் அனைத்துலக முகமையகம். அமெரிக்க அன்சைபோல் (ANSI - American National Standards Institute) சிறப்பாக இயங்குவது தகவல் பரிமாற்றத்திற்குரிய தரங்களை உருவாக்கி வருவது. எ-டு உருக்குறிமுறை.

IT, Information Technology - ஐடி, தகவல் தொழில்நுட்பவியல் : மின்னணுவியல், கணித்தல், தொலைத்தொடர்பு ஆகிய மூன்றின் கூட்டு. இதன் மூளைக் கணிப்பொறி. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் புரட்சி உண்டு பண்ணி வருவது. நாம் தற்போது தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கின்றோம். வருங்காலத்தில் தகவல்கள் பெருகுமே தவிரக் குறையா.

IT Act - தொழில்நுட்பவியல் சட்டம் : தொழில்நுட்பவியலில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க இந்திய அரசு இயற்றியச் சட்டம். ஐ. நா. முன்மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.குறிப்பாக இணையக் குற்றங்களைத் தடுக்க இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 17-10-2000 அன்று நடைமுறைக்கு வந்தது.

IT Business Network - தொழில்நுட்ப வணிக இணையம் : 19-10-2000 அன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு முறை சாரா உடன்பாட்டுக் குறிப்பாணையில் கையெழுத்திட்டன. இது தொழில்நுட்ப வணிகம் பற்றியது. இதற்கு இணையம் அமைக்கப்படும். இருநாடுகளிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தொழிலைப் பெருக்க இவ்விணையம் உதவும்.

item - A single unit of information தகவல் இனம் : ஒரு தனிச் செய்தியலகு.

item advance - A method used for operating successively upon a group of items in memory. தகவல் இனம் முற்பாடு : நினைவகத்திலுள்ள இனத் தொகுதியில் அடுத்தடுத்து மேற்கொள்ளும் செயலுக்குரிய முறை.

item design - The designing of a record or a file in order to achieve efficient processing. தகவல் இன வடிவமைப்பு : பயனுள்ள முறையாக்கலைப் பெற ஒரு கோப்பு அல்லது ஆவணத்தை வடிவமைத்தல்.

iteration - A repetition of one or more statements in a programme : eg. a sequence of statements in a do loop. திரும்பத்திரும்பச் செய்தல் : ஒரு நிகழ்நிரலில் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகளை மீண்டும் மீண்டும் செய்தல். எடுத்துக்காட்டு : செய்வளையத்தில் கூற்றுத் தொடர் வரிசை

iteration, kinds of - திரும்பத் திரும்பச் செய்தலின் வகைகள் : 1) வரம்புள்ளவை, 2) வரம் பற்றவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/I&oldid=1047048" இலிருந்து மீள்விக்கப்பட்டது