M


machine - computer or processing unit. எந்திரம் : கணிப்பொறி அல்லது முறையாக்கும் அலகு.


machine address - absolute address. எந்திர முகவரி : தனி முகவரி.


machine code - coding system of the computer. எந்திரக் குறிமுறை : கணிப்பொறிக் குறிமுறை.


machine instruction - The instruction written in terms of a computer's machine code, எந்திரக் கட்டளை : எந்திரக் குறிமுறைக்கேற்ப எழுதப்படும் கட்டளை.


machine language - The language at its level in binary form. எந்திர மொழி : இரும வடிவத்தில் தாழ்நிலையில் உள்ள மொழி.


machine logic - The design of a computer wherein its various elements are interactive. எந்திரமுறைமை : கணிப்பொறியின் வடிவமைப்பு. இங்கு அதன் பல கூறுகளும் இடைவினை ஆற்றுபவை.


macro instruction - A frequently used set of predefined instructions designed to carry out a specific operation. பெருங் கட்டளை : அடிக்கடிப் பயன்படும் முன்னரே வரையறை செய்த கட்டளைத் தொகுதி. குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவது.


macro language - A Computer language manipulating stored strings. - பெருமொழி : சேமித்த சரங்களைக் கையாளும் கணிப்பொறி மொழி.


macro processor - A piece of software replacing each macro instruction. Otherwise known as macro generator. பெருமுறையாக்கி : ஒவ்வொரு பெருங்கட்டளையை மாற்றீடு செய்யும் மென்பொருள் துண்டு. வேறுபெயர் பெருமியற்றி.


macro programme - A series of statements in assembly language. பெரும் நிகழ்நிரல் : கோவை மொழியில் உள்ள கூற்றுத் தொடர்.


magazine - 1) An input hopper holding documents. 2) A device forming part of magnetic card file and holding magnetic cards. சுருள்மணை : 1) உட்பலன் திறப்பு வாயில் பெட்டி ஆவணங்கள் உள்ளன. 2) காந்த அட்டைக் கோப்பின் பகுதியாக உள்ள கருவியமைப்பு. காந்த அட்டைகள் உள்ளன.

magnetic bubble memory, MBM - காந்தக் குமிழி நினை வகம் : இருமத் தகவல்களைச் சேமிக்கும் கருவியமைப்பு. காந்தக் குமிழ்ச் சரம். காந்தப் பொருள் படலத்தில் உள்ளது.

magnetic card file - A direct access storage memory. காந்த அட்டைக் கோப்பு : நேரிடை அணுக்கச் சேமிப்பு நினைவகம்.

magnetic character reader - A character reader reading special type fonts printed in magnetic ink. காந்த உருப்படிப்பி : உருப்படிப்பி, காந்த மையில் அச்சிட்டுள்ள தனி வகை எழுத்துகளைப் படிப்பது.

magnetic disk - A storage device. காந்த வட்டு : ஒரு சேமிப்புக் கருவியமைப்பு.

magnetic disk file - A file of data held on a magnetic disk. காந்த வட்டுக் கோப்பு : காந்த வட்டிலுள்ள தகவல் கோவை.

magnetic drum - A storage device. காந்த உருளை : ஒரு சேமிப்புக் கருவியமைப்பு.

magnetic ink character recognition, MICR - காந்த மை உரு அறிதல், காமைஉஅ : காந்த மை உருக்களைப் பயன்படுத்தி ஆவணத்தில் செய்திகளைப் பதித்தலும் எந்திரம் மூலம் அவற்றை அறிதலும். இம்முறை தகவல்கள் உள் அனுப்பும் நேரத்தை மிச்சப்படுத்தும். கொடுக்கப்படும் தகவல்கள் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வழி செய்கிறது.

magnetic memory - A storage device functioning by the principle of electro magnetism. காந்த நினைவகம் : காந்தக் கருவியமைப்பு மின்காந்த நெறிமுறையில் இயங்குவது.

magnetic tape - காந்த நாடா : இது காந்தப்பொருள் கொண்டது. காந்த முனைப்புள்ளி வடிவத்தில் தகவல் சேமித்து வைக்கப்படும்.

magnetic tape file - A reel of magnetic tape containing records of information. காந்த நாடாக் கோப்பு : ஆவணச் செய்திகளைக் கொண்டுள்ள காந்த நாடாச் சுருள்.

mail box - A device exchanging data between two persons. அஞ்சல் பெட்டி : இருவருக்கிடையே தகவல் பரிமாற்றம் கொள்ளும் கருவியமைப்பு.


mainframe - a large computer. முதன்மைக் கணிப்பொறி : பொருங்கணிப்பொறி.


main memory - internal memory : Rom and Ram. முதன்மை நினைவகம் : உள் நினைவகம், ரோம், ரேம்.


main programme - the central part of a programme. முதன்மை நிகழ்நிரல் : ஒரு நிகழ்நிரலின் மையப்பகுதி.


main storage - The store from Which instructions are executed. முதன்மைச் சேமிப்பு : கட்டளைகள் நிறைவேற்றப்படும் சேமிப்பு.


management information system, MIS - மேலாண்மைத் தகவல் அமைப்பு, மேதஅ : தொழில் தகவல்களை அளிப்பது. பொருள்பட்டியல், விற்பனை, சம்பளப் பட்டியல், கொடுக்க வேண்டிய வர வேண்டிய கணக்கு. இவை மேலாளர்களுக்கு உதவியாக இருப்பவை.


manipulation - Changing data to some useful form. கையாளல் : பயனுள்ள வடிவத்தில் தகவலை மாற்றல்.


manual data processing, disadvantages of - கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள் : இவையாவன.

1) பயனுறுதிறனும் தகவல் திருத்தமும் வரம்புடையவை.

2) கையால் செய்வதால் நேரம் அதிகமாகும்.

3) பிழைகளுக்கு ஆளாகக் கூடியது.

4) தாள்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவதால், பாதுகாப்பதும் பேணுவதும் கடினம்.

5) திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்வது கடினம். ஒ. computerised data processing, advantages of.


map - குறிதாள் : காந்த வட்டில் உள்ள சேமிப்பு ஒதுக்கீட்டின் குறியீட்டெண்.


mapnet - படஇணையம் : இணையப்பணி. நம் முன் இணையத்தை படமாக்கிக் காட்டுவது.

margin - ஒரம் : இது பக்கத்தில் இடமும் வலமும் மேலுங் கீழும் உள்ளது. இவ்வியல்புகள் எல்லா ஆவணங்களுக்கும் உண்டு. ஒரங்களை உரையாடல் பெட்டி அல்லது கோடிடுவிகளைக் கொண்டு மாற்றலாம்.


mark - A character used to identify the end of a set of data, eg. tape mark. குறி : தகவல் தொகுதி முடிவைக் காட்டப் பயன்படும் உரு. எடுத்துக்காட்டு : நாடாக்குறி.


Marques tag - மார்குயு ஒட்டு : தொலைக்காட்சியிலும் விளம்பர மின் பலகைகளிலும் பாடங்கள் நகர்ந்து செல்லுதல்.


mask - மூடகம் : 1) ஒருங்கிணை சுற்றுகள் உருவாக்குவதில் பயன்படும் ஒளிப்படத்தட்டு, 2) இருமக்கோலம் பைட் (எண்மி).


mass data - Voluminous data unable to store in memory. பேரளவுத் தகவல் : நினைவகத்தில் சேமிக்க இயலாத அளவுக்குள்ள தகவல்.


mass storage - Large capacity secondary storage. Otherwise known as external memory. பேரளவுத் சேமிப்பு : பெருங் கொள்திறனுள்ள இரண்டாம் நிலைச் சேமிப்பு. வேறுபெயர் : புற நினைவகம்.


master card - A punched card holding fixed information. முதன்மை அட்டை : நிலையான தகவலைக் கொண்ட துளையிட்ட அட்டை


master data - The constant data elements of a record. முதன்மைத் தகவல் : ஒர் ஆவணத்தின் மாறத் தகவல் கூறுகள்.


master file - A computer file having relatively permanent information. முதன்மைக் கோப்பு : நிலையில் நிலையான தகவலைக் கொண்ட கணிப்பொறிக் கோப்பு.


master programme file - The tape record of all programmes. முதன்மை நிகழ்நிரல் கோப்பு : எல்லா நிகழ்நிரல்களின் நாடாப் பதிவு.


matching - The technique of comparing the keys of two records to select items at a particular stage of processing. பொருத்திப் பார்த்தல் : இரு ஆவணங்களின் திறவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும். நுணுக்கம். ஒரு நிலையில் ஆவணங்களிலிருந்து தகவல் இனங்களைத் தெரிவு செய்தல்.


matrix - An arrangement of data or devices in rows and Columns. As such each item is identified by two subscripts. eg. memory cells. அணி : வரிசைகளிலும் பத்திகளிலும் தகவல் அல்லது கருவியமைப்புகளின் அமைவு. இதனால் ஒவ்வொரு தகவல் இனமும் இரு கீழ்க் குறிகளால் இனங்காணப்படும். இக்குறிகள் பத்திகளிலும் வரிசைகளிலும் இருப்பவை.


matrix printer - அணியற்றி : ஊசி அச்சியற்றி. ஒருவகை அச்சியற்றி. M-Commerce - எம் வணிகம் : நடமாடும் வணிகம். கைத்தொலைப்பேசி, இருவழி வானொலி ஆகியவை மூலம் நடைபெறும் தொழில், பா. tele conferencing, telemedicine, teleshopping.

mean repair time - சராசரி பழுதுநேரம் : கொடுக்கப்பட்ட காலத்தில் அலகுத் தவறு தல்களுக்கும் ஓர் அலகைப் பேணுவதற்குச் செலவிடப்படும் நேரத்திற்கும் உள்ள வீதம்.

mechanical digital calculator - எந்திரத் இலக்கக் கணிப்பொறி : கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்களைச் செய்யவல்ல கருவி.

media conversion - ஊடக மாற்றம் : ஒரு சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்பிற்குத் தகவல் செல்லுதல். எ.டு. துளையிட்ட அட்டையிலிருந்து காந்த நாடாவுக்குச் செல்லுதல்

media eraser - Electro magnetic device to erase stored data. ஊடக அழிப்பி : சேமித்த தகவலை அழிப்பதற்குரிய மின் காந்தக் கருவியமைப்பு.

medium - A material holding information eg. magnetic tape. ஊடகம் : செய்தியைக் கொண்டுள்ள பொருள். எ-டு. காந்தநாடா.

medium scale integration, MSI - நடு அளவுத் தொகையாக்கல் : ஒருங்கிணைசுற்றுகளை உருவாக்கல், இவை நறுவலில் 20-100 முறைமை வாயில்களுக் கிடையே அமையும்.

medium speed - Data transmission rates between 600 and 4800 bits per second. நடு விரைவு : ஒரு வினாடிக்கு 600 - 4800 இருமிகள் உள்ள தகவல் செலுத்துகை.

mega bit - A quantity of binary data equal to 1 million (10%) bits. மெகாபிட் : ஒர் மில்லியன் பிட்டுகளுக்குச் (10) சமமான இருமத்தகவல்களின் அளவு. தற்காலக் கணிப்பொறி நினைவுக்கருவியமைப்புகள், இந்த அளவுத் தகவல்களைச் சேமிக்கவல்லவை.

mega byte, MB - A quantity of computer data equal to 1 million (10°) bytes, Present day floppy disks store this much data. மெகாபைட் : 1 மில்லியன் பைட்டுகளுக்குச் (10) சமமான கணிப்பொறித் தகவல்கள் அளவு. தற்கால மென்வட்டுகள் இந்த அளவுத் தகவல்களைச் சேமிக்கவல்லவை.

memory - The part of a computer system holding data and instructions for future use in binary form.

நினைவகம் : இது கணிப்பொறித் தொகுதியின் ஒரு பகுதி. இதில் எதிர்காலப் பயனுக்கு வேண்டிய தகவல்களும் கட்டளைகளும் இரும வடிவத்தில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

memory address register, MAR - நினைவக முகவரிப் பதிவகம், நிமுப : உள்ளிட முகவரியிலிருந்து மீட்கப்படும் அல்லது சேமிக்கப்படும் சொல் செல்லும் பகுதி இது.

memory data register, MDR - நினைவகத் தகவல் பதிவகம், நிதப : மீட்கப்படும் அல்லது சேமிக்கப்படும் தகவல்கள் வைக்கப்படும் பகுதி இது.

memory, kinds of - நினைவக வகைகள் : இவை பின்வருமாறு.

1) முதன்மை நினைவகம் : இது வரம்பில் அணுக்க நினைவக (RAM) அமைப்புள்ளது. அதாவது அழியும்.

2) துணை நினைவகம் : இது அழிவதற்கில்லை.

3) படிப்பதற்குரிய நினைவகம் (ROM) : இது அழியாது.

4) விரைவு நினைவகம் (Cache memory) : இதுவும் அழிவதற்கில்லை.

5) நிகழ்நிரலாக்கும் படிப்பதற்குரிய நினைவகம் (PROM) : இதுவும் அழிவதற்கில்லை. இவையனைத்தும் கருவிவகைச் சார்ந்தவை. மூளை நினைவாற்றலின் போலிகள் எனலாம்.

memory storage - நினைவக சேமிப்பு : கணிப்பொறியின் சேமிப்பு வசதிகளின் தொகு மொத்தம் உள்ளகம், உருளை, வட்டு, அட்டை, தாள் நாடா.

memory unit - நினைவக அலகு : நிகழ்நிரல்களையும் தகவல் களையும் சேமிக்கப் பயன்படுவது.

menu - A list of choices available in a computer programme. An important feature to be added to an application. பட்டி : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலிலுள்ள தெரிவு களின் தொகுப்பு, ஒரு பயன்பாட்டுடன் சேர்க்க வேண்டிய இன்றியமையா இயல்பு.

menu bar - பட்டிப் பட்டை : விண்டோசின் பகுதி. பல பட்டிகளைக் காட்டுவது. எல்லாத்துணைத் தெரிவுகளும் வரும். அவற்றில் வேண்டியவற்றைக் தேர்ந்தெடுக்கலாம்.

menu control - பட்டி கட்டுப்பாடு : விண்டோஸ் உரையாடல் பெட்டியில் பயன்படுத்தும் கீழிறக்கப்பட்டியலைப் போன்றது. <தேர்ந்தெடு> மற்றும் <தேர்ந்தெடு> ஒட்டு களைக் கொண்டு இதை உருவாக்கலாம். பட்டியலிலுள்ள வேறுப்பட்ட விருப்பங்களைக் குறிப்பிட <விருப்ப> ஒட்டு பயன்படும்.

menu creation, steps in - பட்டி உருவாக்கத்திலுள்ள படிகள் :

1) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2) பட்டிப் பதிப்பி இயற்றியைப் பெறவேண்டும்.

3) தலைப்புப் பாடப் பெட்டியில் முதல் பட்டிக்குரிய பாடத்தை (கோப்பு) தட்டச்சு செய்ய வேண்டும். பட்டிக்கட்டுப் பாட்டுப் பெட்டியில், பட்டித் தலைப்புப் பாடத்தைக் காட்ட வேண்டும்.

4) பெயர்ப் பாடப் பெட்டியில் பட்டிக்கட்டுப் பாட்டுக்கு வேண்டிய பெயரைக் குறி முறையில் தட்டச்சு செய்ய வேண்டும்.

5) அடுத்தது' என்பதை மற்றொரு பட்டியை உருவாக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6) பட்டிக் கட்டுப்பாட்டுப் பட்டியல் பெட்டியில் அனைத்து 7 பட்டிகளும் தோன்றும் வரை 1-5 வரையுள்ள படிநிலைகளைத் திருப்பிச் திருப்பிச் செய்யலாம்.

menu, features of - பட்டியின் இயல்புகள் : இவை பின்வரு மாறு.

1) பயன்பாட்டோடு சேர்க்கலாம்.

2) பயன்பாட்டின் பயன்களைப் பயனாளிக்கு வழங்குவது.

3) பயன்பாட்டுக்குக் குறுக்கு வழி அமைப்பது.

4) பிற கட்டுப்பாடுகளைப் போல் இதற்குப் பண்புகளும் நிகழ்வுகளும் உண்டு.

5) கருவிப் பட்டையைக் காட்டி லும் அதிக இயல்புகளை அளிப்பது.

menu, kinds of - பட்டியின் வகைகள் :

1) முதன்மைப் பட்டி : இது சிக்கலான நிகழ்நிரலுக்குரியது.

2) துணைப்பட்டி : எளிமையான நிகழ்நிரல்களுக்குரியது இது.

metropolitan area network, MPAN - பெருநகர்ப்பகுதி வலையமைவு, பொபவ : இது 10 கல் தொலைவிற்கு மேலுள்ளது. இந்த எல்லையிலுள்ள பயனாளிகள் இதைப் பயன்படுத்துவர்.

merge - Joining two sets of data together to make a single larger set. இணைப்பு : தனித்ததும் பெரியதுமான ஒரு தொகுதியை உருவாக்க இரு தொகுதித் தகவல்களை ஒருங்கிணைத்தல்.

message - Any information travelling between a source and destination. செல்செய்தி : மூலத்திற்கும் இலக்கிற்கும் இடையே செல்ல வேண்டிய செய்தி.


micro - micro processor, micro computer. - நுண்மி : நுண்முறையாக்கி, நுண்கணிப்பொறி.


micro chip - silicon chip. நுண்நறுவல் : சிலிகன் நறுவல்.


micro code - micro structure. நுண்குறிமுறை : நுண் கட்டளை.


micro computer - நுண் கணிப்பொறி : கையில் எடுத்துச் செல்லக் கூடிய கணிப்பொறி.


micro computer architecture - நுண்கணிப்பொறிக் கட்டமைப்பு : இந்த அமைப்பு 8 பிட், 16 பிட், 32 பிட் எனக் குறிப்பிடப்படும்.


micro film - நுண்படலம் : வெளிப்பலன் கருவி.


micro fiche - நுண்படல அட்டை : வெளிப்பலன் கருவி.


micro processor - நுண்முறையாக்கி : இதில் பேரளவு சுற்றுகளும் மீப்பேரளவு சுற்றுகளும் உள்ளன. 1960-இல் அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் ஜான் ஜி கெமினி, தாமஸ் குர்ட்ஸ். இது பலவகை : இண்டல் (1971-ல் தொடங்கியது) பிளாட்டினம் முதலியவை. பா. computer, history of.


micro programme - A sequence written in micro instructions and stored in the control unit of the micro-processor. - நுண் நிகழ்நிரல் : நுண் கட்டளைகளில் வரிசையாக எழுதி நுண் முறையாக்கியின் கட்டுப்பாட்டு அலகில் சேமித்து வைக்கப்படுவது.


Microsoft Corporation - மைக்ரோ சாஃப்ட் கழகம் : உலகின் மிகப் பெரியதும் வெற்றி நடைபோடுவதுமான மென்பொருள் நிறுவனம். இதில் 32,000 பேர் வேலை செய்கின்றனர். இதை நிறுவியவர் பில் கேட்ஸ், இவரே இதன் தலைவர். பா.Bill Gates.


millennium bug - 2000 ஆம் ஆண்டுப் பிழை : எண் 1999 லிருந்து 2000 க்குச் செல்லும் பொழுது ஏற்படும் எண் மாற்றம் சரிசெய்யப்படாதிருந்தால், கணிப்பொறிகள் பெரும் அழிவை நோக்கும் எனக் கணிப்பொறி அறிஞர்கள் கூறினர். இது ஒர் ஆற்றல் வாய்ந்த கணினிப்பிழை. Y2K எனக் கணிப்பொறித் தொழில் சுருக்கெழுத்தால் குறிப்பிடப்படும். ஒரெண் மாற்றத்தால் ஏற்பட்ட பெருங் குழப்பம். இக்குழப்பம் எவ்வகைப் பேரிழப்புமின்றி, இனிதே நீக்கப்பட்டுவிட்டது. அனைவரும் அஞ்சிய அளவுக்கு ஒன்றும் ஏற்படவில்லை. அறிவார்ந்த முன்னேற்பாடுகளால் தடுக்கப்பட்டது. குறிப்பாகச் செயல் 2000 (ஆக்க்ஷன் 2000) இதனை நீக்கியது. பா. love bug, MTX, YK2.


Minnambalam - மின்னம்பலம் : ஒரு மின் நாளிதழ். ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன். ஒரு நாளிதழுக்குரிய பல பகுதிகளையுங் கொண்டு சென்னையிலிருந்து வருவது. நன்கு நடைபெறுவது.


mini computer - சிறு கணிப்பொறி : நுண் கணிப்பொறியை விடப் பெரியது. விரைவானது, விலை அதிகமானது. இது 16 பிட் கொண்டது.


mini disk - diskette.
நுண்வட்டு : சிறுவட்டு.


minuend - கழிக்கப்படும் எண் : செயலிகளில் ஒன்று. கழித்தலில் பயன்படுவது.


mode - A way of operating a computer. As such it provides special facilities.
செயற்பாங்கு : கணிப்பொறியை இயக்கும் முறை. இது தனி வசதிகளை அளிப்பது. model - மாதிரி : ஒன்றின் பகர்ப்பு கணித வடிவத்தில் இருப்பது.

modem - இருபண்பி : modulator - demodulator என்பதன் சுருக்கம். இதன் பொருள் பண்பேற்றி, பண்பிறக்கி, ஆகவே, இருபண்பி எனலாம். இதற்கு வேறு பெயர் நேரடி இணைப்பி என்று பெயர். கணிப்பொறிகளை இணைக்கப் பயன்படுவது. தொலை பேசி வழிகளைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை அனுப்ப இது நமக்கு உதவுவது. இது புறப்பண்பி, அகப்பண்பி என இருவகை

modification - மாற்றியமைத்தல் : இது ஒரு நுணுக்கம். இது ஒரு நிகழ்நிரலிலுள்ள முகவரியையும் கட்டளையையும் மாற்றப் பயன்படுவது. இதற்கு அவை தகவல்களாகப் பயன்படுபவை. மற்றும் இதில் எண்கணிதச் செயல்களும் முறைமைச் செயல்களும் பயன்படுகின்றன.

modifier - மாற்றியமைப்பி : ஒரு நிகழ்நிரல் கட்டளையை மாற்றப் பயன்படும் தகவல் இனம்.

modulator - பண்பேற்றி : இது ஒரு கருவியமைப்பு. பண்பேற்ற அடிப்படையில் ஓர் ஊர்தியலையின் மேல் தகவல் குறிகையைப் படியவைப்பது.

module - பொதி : ஒரு முதன்மை நிகழ்நிரலிலுள்ள சார்பலன் தொகுதி.

module key - பொதித்திறவு : கோப்புச் சேமிப்பினுள் பொதிகையில் காணப்படும் பகுதியை அணுகவும் இனங்காணவும் பயன்படும் திறவுகோல்.

module, kinds of - பொதி வகைகள் : இவை பின்வருமாறு

1) வடிவப் பொதிகை (form modue): பயன்பாட்டின் பார்வைப் பகுதிகட்டுப்பாடுக்குரிய பண்பு அமைப்புகளையும் குறிப்புதவிகளையுங் கொண்டது.

2) வகுப்பு பொதி (chess module) : பார்வைக்குப் புலப்படாதது. வடிவப் பொதி போன்றது. பயனாளி இதைக் கொண்டு தனக்கு வேண்டிய பொருள்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

3) திட்ட பொதி (standard module): மாறிலிகள், மாறிகள், செயல்முறைகள் ஆகியவற்றின் பொதியளவு அறுதியீடுகளைக் கொண்டது.

module scope - பொதி எல்லை : தனி அறுதியிடு கற்றையைக் கொண்டு இந்தப் பொதி எல்லையோடு ஒரு மாறிலியை அறுதியிடலாம். வரை எல்லையில் ஒரு வகை.

monitor - A computer software lying in ROM. It looks after various routine duties. Eg. Display graphics. கண்காணிப்பி : படிப்பதற்குரிய நினைவகத்திறனுள்ள கணிப்பொறி மென்பொருள். பல நடைமுறைச் செயல்களைக் கவனிப்பது, எ-டு. வரைகலைகளைக் காட்டுதல்.

Moore's law - மூர் விதி : ஒரு தனிச் சிலிகன் நறுவலில் ஒருங்கிணைக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் இரட்டிப்பாகும். இம்முன்னறிவிப்பு இண்டல் நிறுவன நிறுவனரான கார்டன் மூர் என்பவரால் 1960களில் செய்யப்பட்டது. சிற்றளவு ஒருங்கிணைப்பு முறையில் இப்பொழுது ஒருங்கிணைப்பு சுற்றுகள் உருவாக்கப்பட்டன. இம் முன்னறிவிப்பு இன்றும் பொருந்துவதாக உள்ளது.

Motorola - மோட்டாரோலா : மின்னணுக் கருவித் தொகுதி உற்பத்தி செய்யும் நிறுவனம். எ.டு. மோட்டாரோலா 6800, 6809 M6800 நுண்முறையாக்கி. உலக அளவில் செய்தித் தொடர்பு கொள்ளச் செயற்கை நிலாக்களை விடும் திட்டத்தையும் நிறைவேற்றிவருவது.

mouse- சுட்டெலி : சுண்டெலி வடிவமுள்ளதாலும் சுண்டெலி போல் சுறுசுறுப்பாக இயங்குவதாலும் இதற்கு இப்பெயர். மேசையில் வைத்துக் கையை அசைத்துக் கணிப்பொறித் திரையில் உள்ள சுட்டியைத் திரையின் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம். இதனால் திரையிலுள்ள நுண் படங்கள் (icons), தத்தல்கள் (tabs) போன்றவற்றை இயக்கலாம். நிகழ்நிரலைச் செயற்படுத்துவதில் உயிர்நாடியாக உள்ளது.

mouse events - சுட்டெலி நிகழ்வுகள் : சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு. 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double Click) - மேற்குறித்த பொத் தானை இருதடவை அழுத்த இது ஏற்படும். 3) இழுப்பு வீழல் (Drag Drop) - சுட்டெலிப் பொத்தான் கீழேவர இது உண்டாகும். 4) மேல் இழு (Drag over) - ஒரு பொருளை இழுக்கும்பொழுது உண்டாகும். 5) சுட்டெலி கீழ் (Mouse down)- சுட்டெலிப் பொத்தானை அழுத்த உண்டாவது. 6) சுட்டெலி மேல் (Mouse up) - சுட்டெலிப் பொத்தானை விடு விக்கும் பொழுது ஏற்படுவது.

7) சுட்டெலி நகர்வு (Mouse move)- ஒரு பொருளின்மீது சுட்டெலியை நகர்த்தும் பொழுது உண்டாவது. இப் பொழுது பொத்தான்கள் அழுத்தப்பட்டிருக்கா.

moving - நகர்த்தல் : ஓர் ஆவணத்தின் பல பகுதிகளைத் திறவுபலகைக் குறுக்கு வழிகள் அல்லது சுட்டெலியைப் பயன்படுத்திப் பயனாளி அசைத்தல்.

MS-DOS - எம் டிஓஎஸ் : வட்டு இயக்க அமைப்பு. அண்மைக்காலம் வரை தனியாள் கணிப்பொறிகளில் ஒரு பரவலான இயக்கு அமைப்பாகவே இருந்தது. பல விளையாட்டுகளுக்கு நிலைக்களம்.

MS Front Page Express - எம்எஸ் முன்பக்க விரைவி : எளிதாகக் கையாளக் கூடிய வலையப் பக்கப் பதிப்பியற்றி இது வைசிவிக் (WYSIWYG - What You Seels What You Get) என்னும் நெறிமுறையில் வேலை செய்கிறது. ஒரு பக்கத்தினை வடிவமைக்கும் பொழுது, அது திரையில் எப்படிக் காட்சியளிக்கிறதோ அப்படியே மேய்வியிலும் காட்சியளிக்கும். இதனால் நாம் மேற்கொள்ளும் வடிவமைப்பு எளிதாகிறது. இதன் நன்மைகளாவன;

1) நுண்படங்களைத் தட்டிப் பாடம், பத்திகள் ஆகிய இரண்டையும் படிவமைப்பு செய்யலாம்.

2) பெரும்பாலான எச்டிஎம் எல் ஒட்டுகளுக்குரிய நுண் படங்கள் கொண்ட கருவிப் பட்டைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தலாம்; ஒட்டுகளை அச்சடிக்க வேண்டியதில்லை.

3) அணியப்படங்களையும் செருகலாம்.

4) ஒரு கணிப்பொறியிலிருந்தோ ஒரு வலையமைவிலுள்ள கணிப்பொறிகளைக் கொண்டோ இருப்பிலுள்ள பிற வலையப் பக்கங்களைத் திறக்கலாம்.

5) இவ்விரைவியுடன் தனியாள் தொடக்கப் பக்க மாயாவியும் உள்ளது. இம் மாயாவி நம்மைப் பல கேள்விகள் கேட்கும்; படிப்படியாகத் தொடக்கப்பக்கத்தை உருவாக்க நம்மை அழைத்துச் செல்லும்.

MSGBOX - செய்திப்பெட்டி : பயனாளிக்கு வேண்டிய பயனுள்ள செய்தியை அளிப்பது.

MSGBOX function - செய்திப்பெட்டிச் சார்பலன் : பயன் பாட்டை நிறைவேற்றும் பொழுது, ஒரு செய்தியைக் காட்டப் பயன்படும் சிறந்த வழி.

MTN - Maganagar Telephone

Nigam Ltd. - எம்டி என்,மகா நகர் தொலைபேசி நிகம் நிறு வனம் (வரையறை) : மும்பை, தில்லி ஆகிய இரண்டு இடங்களிலும் தொலைத் தொடர்புப் பணிகளை வழங்குவது.

MTX - எம்டிஎக்ஸ் : விரும்பு பிழைக்கு அடுத்ததாகப் பரவிய கணிப்பொறிப் பிழை. மின்னஞ்சல் வழியாகப் பரவியது. நீக்கப்பட்டது (செப் 7, 2000) பா. love bug, millennium bug.

multiaddress instruction - An instruction specifying the address of more than one operand.- பன்ம முகவரிக் கட்டளை: ஒரு செயலிக்கு மேல் உள்ள முகவரியைக் குறிப்பிடும் கட்டளை.

multiple length arithmetic -பன்ம நீள எண்கணிதம் : ஒவ்வொரு செயலியையும் சேமிக்க ஒன்றிற்கு மேற்பட்ட எந்திரச் சொற்களைப் பயன்படுத்தி நிறைவேற்றும் எண் கணிதம். நோக்கம் அதிகத் துல்லியம் பெறுதல்.

multiline text area - பன்ம வழிப்பாடப் பகுதி : உட்பலன் பயனாளியிடமிருந்து பல வழிகளுக்குச் செல்லப் பயன்படும் கட்டுப்பாடு.

multiplex - பன்மப் பகுதி : பலவழிகள் மூலம் தகவல்கள் செல்லுதல். குறைந்த விரைவுச் சேமிப்புக் கருவியமைப்பிலிருந்து உயர் விரைவுச் சேமிப்புக் கருவிக்குச் செல்பவை.

multiplicand - பெருக்கப்படும் எண் : பெருக்கலில் பயன்படும் காரணிகளில் ஒன்று. ஓர் அளவை மற்றொரு அளவால் பெருக்குதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/M&oldid=1047052" இலிருந்து மீள்விக்கப்பட்டது