N

name - பெயர் : பாடப் பெட்டி யின் இயல்பு புலப் பெயரைக் குறிப்பிடுவது. இப்புலத்தில் பதிவு செய்யப்படும் பாடம் சேமிக்கப்படும்

NAND gate - A decision making building block in digital circuits. It produces an output of binary 1 when one or more of its inputs are at binary 0. and an output of binary 0 when all its inputs are of binary 1. NAND gates are generally used in itegrated circuit packages.

இல்லது வாயில் : உம் வாயிலுக்கு எதிரானது. இயக்கச் சுற்றில் முடிவு செய்யும் கட்டு மானத்தொகுதி. ஒன்றுக்கு மேற்பட்ட இதன் உட்பலன்கள் இரும 0 இல் இருக்கும் பொழுது, 1 என்னும் வெளிப் பலனை உண்டாக்கும். அதன் எல்லா உட்பலன்களும் இரும 1 இல் இருக்கும் பொழுது இரும 0 வெளிப்பலனை உண்டாக்கும். பொதுவாக, இல்லது வாயில்கள் ஒருங்கிணை சுற்றுச் சிப்பங்களில் பயன்படுபவை

nanosecond, ns - நேனோ வினாடி, நேவி : ஒரு வினாடியில் 1 ஆயிரம் மில்லியனாவதற்குச் சமமான கால இடைவேளை (10-9). 1 மீட்டர் தொலைவைக் கடக்கக் கதிரவன் ஒளிக்கு ஆகும் நேரம் 3 நேனோ வினாடிகள்.

Napster - நேப்ஸ்டர் : கோப்புப் பகிர்வுப் பணியகம். இசைக் கோப்புகளைப் பயனாளிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப் பயன்படுவது.

пarrative - விளக்கவுரை : ஒரு நிகழ்நிரலின் குறிமுறையில் சேர்க்கப்ப்ட்டுள்ள கூற்றுகள். குறிமுறைச் செயல்களின் விளக்க ஆவணமாக்கலாகப் பயன்படுவது.

NASSCOM - நாஸ்காம் : பணி நிறுவனங்களின் மென்பொருள் தேசியக் கழகம். இதன் கருத்துப்படி தற்பொழுது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் 1 மில்லியன். இது 2003க்குள் 23 மில்லியனாக உயரும்.

native language - இயல் மொழி : ஒரு கணிப்பொறி மொழி, ஒரு வகைக் கணிப் பொறிக்காக உருவாக்கப்பட்டது. கணிப்பொறித் தொகுதியிலுள்ள மென்பொருள் எல்லைக்கு ஏற்றவாறு மொழிமுறை சரியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.

Naviscope - நேவிநோக்கி : ஒன்றில் பல வேலைகளைச் செய்வது. வெப்ப மேய்தல் செயலை விரைவுப்படுத்துவது. ஆவணங்களை வளையத்திலிருந்து மீட்டுச் செப்பமாக்க மேய்விக்கு அனுப்புவது.

needle printer - ஊசி அச்சியற்றி : இது ஓர் அச்சியற்றுங் கருவி. இதில் ஊசிகள் தாளிலும் நாடாவிலும் குத்துவதால் உருக்கள் உண்டாகின்றன.

negation - எதிர்மை : ஒரு தனிச் செயலிடத்தில் நிறைவேற்றப்படும் செயல். உண்டாகும் முடிவு ஒவ்வொரு இலக்க நிலையிலும் தலைகீழாக இருக்கும். எ-டு பிட்கோலம் P : 01 010 இது r:101001 ஆகத் தோன்றும்.

negator - எதிர்மையாக்கி : ஒரு முறைமைக் கூறு. ஓர் இரும உட்பலன் குறிகை கொண்டது. எதிர்மறைக்குறிகையுள்ள ஓர் தனி இரும வெளிப் பலனைக் கொடுக்கும். இதன் பொருள் : ஒரு பிட்டை உட்பலனாகப் பயன்படுத்த, சுழிப்பிட் வெளிப் பலனாக உண்டாகும்.

nesting - கூட்டில் வைத்தல் : ஒரு நிகழ்நிரலின் ஒரு பகுதி யை மற்றொரு பகுதியில் பதியச் செய்தல். A என்னும் நடைமுறைச் செயலை B என் னும் நடைமுறைச் செயலோடு சேர்த்தால். இதனால் B செயற்பாடு தானாகவே A யைச் செயற்படவைக்கும்.

nesting loop - கூடுடை சுற்று : ஒரு நிகழ்நிரல் துணுக்கம். இதில் ஒரு சுற்றுக் கட்டளைகள் மற்றொரு சுற்றைக் கொண்டிருக்கும். இச்சுற்றுகள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.

net monitor - இணையக் கண்காணிப்பி : வலையகப் பயணத்தின் பொழுது நல்ல தகவல்களைத் தரும்.

net parameters - இணையச் சுட்டளவுகள் : இவை நாம் பெறும் அல்லது அனுப்பும் மின்னோட்ட விரைவு, தகவல் அளவு ஆகியவை; இணைய வாழ்வை வசதியுள்ளதாக்குபவை.

net, the - இணையம் : உலகின் மிகப்பெரிய கணிப்பொறி வலையமைப்பு. இண்டர்நெட் என்ற சொல்லின் சுருக்கம். அகவை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தும் கருவியமைப்பு. எப்பொருள் பற்றியும் செய்தியளிப்பது. உலகைப் பார்க்க உதவும் பலகணி. நன்மை தீமை ஆகிய இரண்டையுங் கொண்டது.

network - A series ofinter connected computer terminals providing a data communication service. Eg. Prestel. வலையமைவு : வலையம் ஒன்றுடன் மற்றொன்று இணைந்த கணிப்பொறி முனையங்கள்: தகவல் தொடர்புப் பணியை அளிப்பது, எ-டு. பிரஸ்டல்.

network addressing - வலைய முகவரி : வலையத்தை இணைக்க இரு பண்பி பயன்படும் பொழுது, தொலைவிலுள்ள கணிப்பொறிகள் அதன் தொலைபேசி எண்ணால் அடையாளங் கண்டறியப்படுகின்றன. ஒரு வலையத்தின் கணுக்களைச் செல்வழிகள் மூலம் தோற்றுவிக்கக் கணிப்பொறிகள் இணைக்கப்படுமானால், ஒவ்வொரு கணுவையும் அடையாளம் கண்டறிய வேண்டும். இதற்கு ஒரு தனி எண் கொடுக்கப்படுகிறது. இதற்கு இணைய மரபுச்சீர் Opsas (Internet protocol address) என்று பெயர். இந்த எண் 4 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 255க்குக் கீழ் இருக்கும்; முற்றுப் புள்ளிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். எ-டு. 192.168.1.1, 192112.246.65, 12345.74. 254 இந்த எண்களில் ஒவ்வொன்றும் எண்மி (Octet) எனப்படும். நான்கு எண்மிகள் சேர்ந்து 32 பிட்டுகளைக் கொள்ளும்.

network applications - வலை யப்பயன்பாடுகள் :இவை பின் வருமாறு.

1) சிக்கலைத் தீர்க்குங் கருவி

2) வங்கியில் நிதி மாற்றம் செய்யப்பயன்படுவது.

3) பல ஊடகங்களாலும் இணையத்தாலும் தொலை பேசிச் சாவடிகள் இணைக்கப்படும்.

4)முடிவு செய்யும் பயன்பாடுகள் : மின்னாட்சி, சட்டம் ஒழுங்கு உடல் நலம் பேணல்,

5) கல்விப் பயன்பாடுகள் : இணைய அடிப்படைக் கல்வி (web-based education). ஒருவர் தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கற்கலாம்.

6) கேளிக்கைகள் : இசை, விளையாட்டு.

7) வணிகப் பயன்பாடுகள் : மின்னஞ்சல், மின்வணிகம்.

network bus - வலையப் போக்குவாய் : உள்ளுர்ப் பகுதி வலையமைவு (LAN).

network communication protocol - வலையச் செய்தி தொடர்பு மரபுச்சீரி : கணிப் பொறி வலையங்களில் இரு தனித் தொடர்பு மாதிரிகள் பயன்படுகின்றன. 1) இணைபகுதி (Clipart) 2) இணை இணை முறைகள் (Peer - to - peer systems) இவ்விரண்டில் முன்னது பொதுவான மாதிரியாகும். வலையப் பணியகங்க்ளில் இதையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எ-டு. உலகளாவிய இணையம் (WWW)

network data base - வலையத் தகவல் தளம் : படிநிலை அமைப்புத் தகவல் தளத்தைப் போன்றது. இதில் ஒரு பதிவுவகை மற்றொரு பதிவுவகையோடு தொடர்புடையது.

network, diagram - வலையப் படம் : ஒரு வலையத்தின் மொத்த அமைப்பைக் காட்டும் படம். இதில் முக்கிய கணுக்கள் அவற்றிற்கிடையே உள்ள வழிகள் முதலியவை அடங்கும். இது ஒரு செய்தித் தொடர்பு வலையமைப்பு ஆகும்.

network, future of - வலைய எதிர்காலம் : பின்வருவன கருத்தில் கொள்ள வேண்டியவை. 1) மிக நேர்த்தியானதாகவும் அரிய அமைப்பு உடையதாகவும் இருக்கும். 2) விரைவு அதிகமிருக்கும். 3) வணிக நடவடிக்கைகள் விரியும். பயனாளி தொடர்பு கொள்ளலாம்; மென்பொருளைப் பெருக்கலாம். 4) முழு வலையமைப்பும் பயனாளிக்கு ஒரு கணிப்பொறி போலவே தோன்றும்.

network interface card, NIC- வலையமைவு இடைமுக அட்டை, வஇஅ : தகவல் மாற்றங்களை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்யும் கருவியமைப்பு திட்ட வ.இ அக்கள்: எத்தர்நட் / ஆர்க்நட்

network programme - வலையமைவு நிகழ்ச்சி : ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி: வானொலி, தொலைக்காட்சி.

network topology - வலையமைவு இட அமைப்பு : ஒரு வலையமைவிலுள்ள பல கணிப்பொறிகளையும் இணைக்கும் செய்தித்தொடர்பு வழிகளின் திட்ட அமைப்பு. இவ்வலையமைவிலுள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் கணு எனப்படும். இவ்வமைப்பு மூவகை :

1) நீள் போக்குவாய்,

2) விண்மீன்,

3) வளையம்.

இதில் கணக்கில் கொள்ள வேண்டியவை : 1) கணுவகை 2) செயல்திறன் 3) பயன் படுத்தும் கம்பி வகை 4) ஆகும் செலவு, கலப்பின இட அமைப்புகளும் உண்டு.

networks, types of - வலையமைவு வகைகள் : இவை முதன்மையாக மூவகை.

1) உள்ளூர்ப் பகுதி வலையமைவுகள், உபவ (LAN) . இவை கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறித் தொகுதி. ஒரு தனிக் கட்டிடத்திலோ கட்டிடத்தொகுதிகளிலோ இருக்கலாம். கணிப்பொறிகள் எண்ணிக்கை இரண்டிலிருந்து இரு நூறுகள் வரை இருக்கலாம். பொதுவாக உபவ என்பது வன்பொருள், மென்பொருள் தகவல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது.

2) அகல் பகுதி வலையமைவுகள் அபவ (WAN) . இரண்டிற்கு மேற்பட்ட உள்ளுர்ப் பகுதி வலையமைவுகள் சேர்ந்ததே அபவ என்பது. தனிப்பட்ட உபவக்களை உரிய இணைப்புகள், ஒளி இழை வடங்கள், செயற்கை நிலா ஆகியவை மூலம் இணைக்கலாம்.

3) பெருநகர்ப் பகுதி வலையமைவு, பெபகுவ (MAN): இது நெடுந்தொலைவில் உள்ள கணிப்பொறிகளை இணைப்பது.

nexus - பிணைப்பு : ஒரு தொகுதியிலுள்ள முனை. இதில் இடை இணைப்புகள் அமையும்.

nibble - நிபிள் : 4 பிட் அலகு அதாவது நான்மி. பா. bit, byte.

nines complement-ஒன்பதின் நிரப்பு : ஒரு பதின்ம எண்ணின் 9-இன் நிரப்பைப் பெற, அந்த எண்ணிலுள்ள இலக்கங்கள் ஒவ்வொன்றையும் 9 லிருந்து கழித்து எழுதவும். கிடைக்கும் எண் 9-இன் நிரப்பு எண்ணாகும். காட்டாக, 456 என்னும் பதின்ம எண்ணின் 9

இன் நிரப்பு எண் 543 ஆகும்.

NLB - non-linear behaviour - நீள்சார்பிலா நடத்தை :

node - The control point in a network.
கணு :
வலையமைவிலுள்ள கட்டுப்பாடு.

noise - A disturbance in a circuit.
இரைச்சல் :
ஒரு மின் சுற்றிலுள்ள அலைக் கழிவு.

non-print character - அச்சிடா உரு : அச்சிடும் குறி இல்லாக் கட்டுபாட்டு உரு.

non-volatile memory - அழியா நினைவகம் : மின் சாரம் நின்ற பின்னும் நீங்கா நினைவகம்.

nor circuit -இல்லாச் சுற்று : இலக்கச் சுற்று. இரு ஒத்த உட்பலன் குறிகைகளும் இல்லாதபொழுது இது வெளிப் பலன் குறிகையை உண்டாக்கும்.

NOR elements - இல்லாக் கூறுகள் : இரும இலக்கங்களோடு செயலாற்றும் முறைமைக் கூறு. எ.டு. உட்பலன் 1, 0 என்றால் வெளிப்பலன் 0.

NOR gate - இல்லா வாயில் : இலக்கச் சுற்றில் உள்ள முடிவு செய் கட்டுமானத் தொகுதி. அதன் எல்லா உட்பலன்களும் இரும நிலை 0 இல் இருக்கும் பொழுது இரும 1 என்னும் உட்பலனை உண்டாக்கும். அதேபோல, அதன் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன்கள் இரும நிலை 1 இல் இருக்கும் பொழுது, இரும 0 என்னும் வெளிப்பலனை உண்டாக்கும்.

NOT gate -இல்லை வாயில் : ஓர் இலக்கச் சுற்றில் முடிவு செய் கட்டுமானத் தொகுதி. இதன் தனி உட்பலன் இரும நிலை 0 என்று இருக்கும் பொழுது, இது இரும 1 ஐ வெளிப்பலனாக உண்டாக்கும். இல்லை வாயில்கள், பொது வாக, ஒருங்கிணை சுற்றுச் சிப்பங்களில் பயன்படுவது.

null - இன்மை : தகவல் இல்லாமை

null cycle - இன்மைச் சுழற்சி : புதிய தகவலைச் சேர்க்காமல் முழு நிகழ்நிரலையும் சுழல விட ஆகும் நேரம். -

number generator - எண் இயற்றி : ஒரு சுட்டளவை அல்லது மாறிலியை உண்டாக்கும் கருவியமைப்பு.

number system, base - அடிஎண் எண்முறை : அடி எண் மூலம் வேறுபடும் எண்முறை. எ-டு அறுபதின்ம எண் 10,பதின்மம் 16, எண்மம் 20, இருமம் 10000.

numeral - number - எண்.

numerical analysis - எண் பகுப்பு : கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படும் கணிப்புமுறை எ-டு. சமன்பாடுகளும் அணிகளும்.

numerical character - எண்ணுறு : 0-9.

numeric constants - எண் மாறிலிகள் : இவை எண்களே. எ-டு 24, 3, 15, 6. இவை இருவகை :

1) முழு எண் மாறிலிகள்

2) மெய் மாறிலிகள் பா. C Constants.

numeric data - எண் தகவல் : உருப்புலம் , எண் தகவல்களை மட்டும் கொண்டது.

Num TV-நம் தொலைக் காட்சி : மின் தொலைக்காட்சி. 24 மணி நேரமும் நடைபெறும் உலகின் முதல் தொலைக் காட்சி. பன்மக் கேளிக்கை வாயில்களைக் கொண்டது. 30 + தொலைக்காட்சி அலை வரிசைகளைக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/N&oldid=1047053" இலிருந்து மீள்விக்கப்பட்டது