U

UART, Universal Asynchronous Receiver/Trasmitter- யூஆர்ட்,அனைத்து ஒத்திசையாப் பொறுவி / செலுத்தி, அஒபெசெ : பேரளவு தொகையாக்கு முறைமைச் சுற்று. தொடர் செய்தித் தொடர்பு வலையமைவோடு ஒரு போக்குவாயிலை இணைக்கப் பயன்படுவது.

UCSD Pascal, University of California, San Diego Pascal - யூசிஎஸ்டி பாஸ்கல், கலிபோர்னியப் பல்கலைக் கழகம், சேன்டிகோ பாஸ்கல் : பாஸ்கல் மொழியின் வடிவம். இப்பல்கலைக் கழகத்தால் உருவாக் கப்பட்டது.

unattended operation -உன்னிப்பிலாச் செயல் : வன் பொருளில் பகுதிகள் தாமாக இயங்குதல்.

unattended time -உன்னிப்பிலா நேரம் : கணிப்பொறி நிறுத்தப்படும் நேரம் பேணுகைப் பணிக்கு உட்படுத்தப் படுவதில்லை.

uncommitted logic array - கட்டுப்படா முறைமை அணி : இது ஒருவகை ஒருங்கிணை சுற்று. முறைமைப் பகுதிகள் பலவற்றைக் கொண்டது. இவற்றின் வேலைகள் உற்பத்தியின் பொழுது வரையறைப்படுத் தப்படுவதற்கில்லை. இரண்டாம் முறையாக்கு நிலையில் இன்னது என்று கூறலாம்.

unconditional branch in-struction - நிபந்தனையற்ற கிளைக் கட்டளை : ஒரு நிகழ் நிரலின் மற்றொரு பகுதிக்குக்கட்டுப்பாட்டை மாற்றுவதற் குரிய கிளைக்கட்டளை.

unexpected halt - எதிர்பாரா நிறுத்தம் : குறுக்கீடு இல்லாமல் ஒரு நிகழ்நிரலில் ஏற்படும்தடை

uniform resource locator, URL - ஒரு சீர் இடங்காணி, ஓசீஇ : ஒவ்வொரு இடையப் பக்கத்தின் (வெப்பேஜ்) தனித்த முகவரி இது; நம் அஞ்சல் முகவரி போன்றது.

unit delay - அலகுத் தாமதம் :இது வலையமைவு தொடர்பானது. இதன்வெளிப் பலன் ஓரலகு நேரத்தால் தாமதிக்கப்படும் உட்பலனுக்குச் சமம்.

uniterm - ஒற்றைச் சொல் : ஒரு சொல், குறியீடு அல்லது எண் ஒரு திரட்டிலிருந்து தகவலை மீட்க, ஒரு வண்ணனையாகப் பயன்படுத்தப்படுவது.

unitor - ஒருங்கியக்கி : கணிப்பொறிகளில் பூல் செயல் ஒன்று கையை ஒத்த வேலையைச் செய்யும் கருவியமைப்பு அல்லது மின் சுற்று.

unit - அலகு : ஒப்பீட்டு அளவு மதிப்பு. அதே அளவின் மற்ற மதிப்புகளை தெரிவிக்கப பயன்படுவது.

unit record - அலகாவணம் :சேமிப்பு ஊடுகம். எ-டு துளையிட்ட அட்டை.

unit string - அலகுச்சரம் :ஒரே ஒரு உறுப்புள்ள சரம்.

UNIX - யூளிக்ஸ் : இந்த இயங்கு தொகுதி பயனாளிகளைக் கணிப்பொறியோடு ஒரேசமயம் வேலை செய்ய அனுமதிப்பது. ஆக, இது பன்மப்பயனாளி இயங்கு தொகுதியாகும். இது கோப்புகள் அடைவுகள் ஆகியவற்றை எவரும் முறைகேடாக அணுகாவண்ணம் பாதுகாப்பளிப்பது

unmodified instruction - மாறாக்கட்டளை:அடிப்படைக் கட்டளை.

unpaged segment - பக்கமிடாப் பகுதி :பக்கங்களாகப் பிரிக்கப் படாத பகுதி.ஆகவே, இது முதன்மைச் சேமகத்திற்கும் மாயச் சேமகத்திற்கும் இடையே ஒரு முழுத் தொகுதியாக மாற்றப்படுவது.

unused time- பயன்படா நேரம் :இந்நேரத்தில் சொடுக்கி திறக்கப்படும். கருவி வேலை செய்யாது.

unwind - அகற்று : கட்டளைகள் கொண்ட வரிசையைக் குறிப்படுத்தலும் மீள் ஒழுங்கு செய்தலும்.சிவப்பு நாடாச் செயல்களை நீக்கப் பயன் படுவது.

update - மேம்படுத்து : கோப்புகள் ஆவணங்கள் முதலிய வற்றை உயர்வாக்கல்,

USART, Universal Synchronous | Asynchronous Receiver ! Transmitter யூசார்ட், அனைத்து ஒத்திசையும் / ஒத்தி சையாப் பெறுவி / செலுத்தி, அஒஒபெசெ இது வெளிப்புறக் கருவியமைப்பைக் குறிக்கும். மையச் செயலகத்திலிருந்து ஒரு போக்குத் தகவலை இக்கருவியமைப்பு செலுத்துகைக்காகத் தகவல் தொடராக மாற்றும். அதே சமயம் தொடர் தகவல்களைப் பெற்றுக் கணிப் பொறிப் பயனுக்காக, அவைகளை ஒருபோக்குப் பிட்டுகளாகவும் இக்கருவியமைப்பு மாற்றவல்லது.

user defined character -பயனாளி வரையறையுள்ள உரு : ஒரு குறிமைத் தொகுதியிலுள்ள உரு.

user friendly -பயனாளி நண்பி : சிறப்பறிவு இல்லாமல் ஒரு பயனாளி இயக்கக்கூடிய மென்பொருள் அல்லது வன்பொருள் தொகுதி.

user group, UG -பயனாளிக் குழு, பகு : குறிப்பிட்ட கணிப்பொறியைத் தகவல் பகிர்வுக்காகப் பயன்படுத்தும் மக்கள்.

user hot line -பயனாளி நேரடிச் செய்தித் தொடர்பு:உற்பத்தியாளருக்கு நேரடித் தொலைபேசி அணுக்கம். பயனாளிகளிடம் தங்கள் பொருள்கள் குறித்த சிறப்பு களைக் கூறல்,

user interaction -பயனாளி இடை வினை : கணிப்பொறித் தொகுதிக்கும் பயனாளிக்கும் இடையே உள்ள வினைமிகு செய்தித் தொடர்பு.

User memory -பயனாளி நினைவகம் : இது மையச் செயலக நினைவகம். பயனாளி இதற்கு அணுக்கம் உடையவர். பயன்பாட்டு நிகழ்நிரல்களால் பயன்படுத்தப்படும் வரம்பிலா அணுக்க நினைவகத்தின் ஒரு பகுதி.

user port-பயனாளி வாயிள்:ஒரு தகவல் தொடர்பு வலையமைவில் கணிப்பொறியோடு பயனாளி தொடர்புகொள்ளும் வாயில்.

using screen savers -திரைக் காப்பிகளைப் பயன்படுத்தல் : வேடிக்கைக்காகப் பயன்படுத்தலாம். இவை பல.

USRT, Universal Synchronous Receiver / Transmitter -யூசர்ட், அனைத்து ஒத்திசை பெறுவி / செலுத்தி, அஒயெசெ: இது விரைவுச் செலுத்தி மாற்றி. இதில் ஒத்திசை கருவியமைப்பு உள்ளது. இதில் தொடர் தகவல் ஒரு போக்கு தகவலாகவும், ஒரு போக்கு தகவல் தொடர் தகவலாகவும் மாறும்.

utility functions -பயன்பாட்டு வேலைகள் : பொது முறைச் செய்முறைகளைச் செய்யப் பயன்படுபவை இவை. எ-டு அச்சிடல், நகரும் தகவல், வட்டிலிருந்து படித்தல்.

utility routines-பயன்பாட்டு நடைமுறைகள் : அமைப்பு நிகழ்நிரல்களின் தொகுதியை இவை குறிக்கும். வன்பொருள் வழங்குபவரால் அளிக்கப்படுபவை. குறிப்பிட்ட வேலைகளைச் செய்யப் பயன்படுபவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/U&oldid=1047067" இலிருந்து மீள்விக்கப்பட்டது