V

validation -செல்திறனாக்கல்: தரத்திற்கேற்றவாறு இருப்பதற்குரிய ஆய்வைச் செய்தல்.

validity check -செல்திறன் சரிபார்ப்பு : குறிப்பிட்ட வரை யறைகளுக்குள் தகவல் தவறுவதை உறுதிசெய்யும் சரிபார்ப்பு.

valid programme -செல்லுபடியாகும் நிகழ்நிரல் : இது ஒரு கணிப்பொறி நிகழ்நிரல். இதன் கூற்றுகள் தனியாகவும் தொகுதியாகவும் நிகழ்நிரல் மொழியின் சொற்றொடரியல் விதிகளைப் பின்பற்றுபவை. இவை எந்திர மொழி நிகழ்நிரலாக மாற்றுவதற்குரியவை.

value - மதிப்பு : இது பாடப் பெட்டி மதிப்பு. இப்பெட்டியின் தவறுதல் மதிப்பைக் குறிக்கப் பயன்படுவது.

variable -மாறி:ஒரு நிகழ் நிரலில் பயன்படும் குறியீடு. ஒரு மதிப்புள்ள அளவை இது குறிக்கும். இம்மதிப்பை நிகழ் நிரல் நிறைவேற்றலின் பொழுது மறு ஒதுக்கீடு செய்யலாம். நினைவக இடமே மாறிலியாகும். இதற்குப் பெயர் உண்டு.ஒ. Constant.

variable block -மாறுதொகுதி : தொகுதியின் அளவு நிலையாக இல்லாமல் மாறுவது. இது தகவல் தேவைகளைப் பொறுத்து அமையும். variable connector -மாறு இணைப்பி :விதிமுறைப் படத்தில் ஒரு முனைக்குமேல் இணைக்கப்படும் இணைப்பி.

variables, kinds of -மாறியின் வகைகள் : நினைவக இடத்தில் தகவல்கள் உள்ளதைப் பொறுத்து மாறிகள் வகைப்படுத்தப் படுகின்றன. அவ்வகையில் இவை நான்கு.

1) முழுஎண் மாறிகள் ; இவை மேலும் நான்கு வகை. i) நீள் முழுஎண் மாறிலி, ii)குறு முழு எண் மாறிலி, iii) குறியிலா முழு எண் மாறிலி, iv) முழு எண் மாறி.

2)மெய் மாறிகள் :இவை மேலும் இரு வகைப்படும்.

vari

225

view


|

i) மிதப்பு மாறி, ii) இரட்டை மாறி. 3) பண்பு மாறிகள்: இவை மேலும் இரு வகைப்படும். i) குறியிட்ட பண்பு மாறி, ii) குறியிடாப் பண்பு மாறி. 4)சர மாறிகள் :முழு எண் மதிப்புள்ளது முழு எண் மாறிகள். மெய் மதிப்புள்ளது மெய்மாறி. ஒரு பண்பை மட்டும் கொண்டது. பண்பு மாறி. ஒரு சரத்தகவலை மட்டுங்கொண்டது சரமாறி.

variable, scope of -மாறியின் எல்லை : ஒரு மாறியை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பதே எல்லை. அதைப் பார்க்கும் நடைமுறைகள் என்ன என்பதும் இதில் அடங்கும். அவ்வகையில் இந்த எல்லை மூன்று வகைப்படும் : 1) உள்ளிட எல்லை 2) அலகு எல்லை 3) முழு எல்லை.

vector - திசைச்சாரி: இது சுட்டளவுகளைக் குறிப்பது. இச்ச சுட்டளவுகள் திசை, தொலைவு ஆகியவற்றைக் குறிப்பவை.

verb - பயனிலை : கோபல் மொழியில் ஒரு நிபந்தனை யற்ற கூற்றின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் பகுதியின் செயல்.

vertical instruction -செங்குத்துக் கட்டளை:எந்திர மொழிக் கட்டளை. இது ஒரு தனிக் கட்டளையை நிறை வேற்றுவது.

vertical resolution -செங்குத்துப் பகுப்புத் திறன்: பிரிதிறன் அளவு. திரையில் தோன்றும் குறும்படங்களின் எண்ணிக்கையால் இது உறுதி செய்யப்படும். very large scale integration, VLSI - பேரளவுத் தொகை யாக்கல்,பேஅதொ: ஒரு சிலிகன் நறுவலில் ஒருங்கிணை சுற்றினை அமைத்தல். இது 100,000 படிகப் பெருக்கிப் பகுதிகளைக் கொண்டது.

VGA - Video Graphic Array - விஜிஏ : ஒளிக்காட்சி வரை கலை அணி.

video - ஒளிக் காட்சி ; காட்சி வெளிப்பாட்டு அலகு திரை.

video bandwidth -ஒளிக்காட்சிக் அலைவரிசை அகலம் : கணிப்பொறிக் கண்காணிப்பில் ஒரு வினாடிக்குத் தோன்றும் புள்ளிகளின் எண்ணிக்கை.

video computer -ஒளிக்காட்சிக் கணிப்பொறி : பொதுவாக விளையாட்டு நிகழ்ச்சிகளைப் போட்டுப் பார்க்கப் பயன்படும் வணிகநிலைக் கணிப்பொறி.

video signal -ஒளிக் காட்சிக் குறிகை : மின்னணுக் குறிகை எல்லாத் தகவல்களையும் சுமந்து செல்வது எடு நிறம், செறிவு, இடம் ஒத்திசைதல்.

view - காட்சி: பார்வை எல்லை.

viewing time -காட்சி நேரம் : சேமித்த தகவலுக்கேற்பச் சேமிப்புக் குழாய் காட்சிப் பலனை அளித்தல்.

vintoncerf- விண்டன் சர்ஃப் :

இணையத்தின் தந்தை இவர் கருத்துப்படி இணையம் எல்லையிலா நன்மைகளையும் நலங்களையும் அளிக்கக் கூடியது. இவர் மனைவி 50 ஆண்டுகள் செவிடாக இருந்தார். இதை இவர் குணப்படுத்தினார். இணையத்தை ஆராய்ந்த பொழுது இவர் இதைக் கண்டறிந்தார்.

மனித உடலியலுக்கும் மின்னணுவியலுக்கும் இடையே பாலமாக அமைந்த கருவியமைப்பு இவ்விந்தையை நிகழச் செய்தது. இது ஓர் உணர்கருவி. இவர் இக்கண்டு பிடிப்பை இணையத்தில் நிகழ்த்தினார். இணையம் என்பது ஒரு பெரிய கரையான் புற்று போன்றது என்று இவர் கூறுகின்றார்.

VIPNET, Vigyan Prasar Network - விப்நெட், விஞ்ஞான பிரசார வலையமைவு, விபிவ : மக்கள் அறிவியல் பரப்பும் இந்தியத் தேசிய வலையமைவு.1989 இல் நிறுவப்பட்டது. தன்னாட்சி நிறுவனம்.

virgin medium -கன்னி ஊடகம்: எவ்வகைத் தகவலும் இல்லாத கருவி எடு நெகிழ்வட்டு

virtual address -மாய முகவரி: சேமிப்பு இடத் தொடர்பானது.

virtual circuit -மாயச் சுற்று: குறிப்பிட்ட செய்திக்காக உள்ளது; சிப்பச் சொடுக்கி வலையமைவு மூலம் செல்லும் வழி.

Virtual Mahazine, The -மாய இதழ்: உலகின் பன்ம, ஊடக முதல் இதழ். இந்தியாவில் 2000 செம்படம்பரில் தொடங்கப் பட்டது. இதழ்ச் சிறப்புகள் எல்லாவற்றையும் கொண்டது.

virtual memory -மாய நினைவகம் : கருவி நினைவகத்திற்கு அப்பால் நினைவக வெளியை இனங்காண முறையாக்கியை அனுமதிக்கும் தொகுதி.

virus - நச்சுப்பிழை : இது ஒரு

virus

227

visu


|

வரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நச்சுயிரி அன்று. மாறாகக் காழ்ப்புள்ள நிகழ் நிரல். ஒரே இரவில் உலகம் முழுதும் ஒரு கணிப்பொறியி லிருந்து மற்றொரு கணிப்பொறிக்குப் பரவுவது. இணையம் இதற்குக் கருவியாக இருப்பது. இதைத் தடுக்க இயலும் ஒ.love bug, MTX.

virus primer -நச்சுபிழை அரிச்சுவடி : கணிப்பொறி நச்சுப் பிழை ஒரு நிகழ்நிரலாகக் கூறப்படுவது. இது ஒரு நிறைவேற்றக்கூடிய குறிமுறைத் தொகுதி, ஏனைய நிகழ்நிரல்களைத் தொற்றி மாற்றித் தன் கூற்றையளிப்பது. கோப்பு நச்சுப்பிழை, பெருநச்சுப்பிழை முதலிய பிழைகளை விளக்குவது. அவற்றைப் போக்கும் வழிகளையும் விளக்குவது. எல்லா நச்சுப்பிழைகளும் தம்மைத் தாமே நகலாக்கவல்லவை. இதை இவை இரட்டிப்பு மூலம் செய்கின்றன. 1988-இல் முதல் நச்சுப்பிழை தோன்றலாயிற்று. 1990-க்குள் மக்கள் ஊடகங்களில் புதிய நச்சுப்பிழைகள் பரவத் தொடங்கின. இப்பிழைகள் பல நிறங்களில் நிலைகளில் வந்தன. வைப்பிடப் பகுதி நச்சுப்பிழை (பூட்செக்டர் வைரஸ்) நெகிழ் வட்டோடு ஒட்டிக் கொள்வது; வைப்பிடப் பகுதியின் கைவட்டில் தன்னை நகலாக்கும். கோப்புப் பிழை என்பது நிறை வேற்றக்கூடிய பிழையோடு ஒட்டிக்கொள்ளும். பொதுவாக, இந்தச்சுப்பிழை முயன்று உருவாக்கிய நிகழ்நிரலைப் பாதிப்பது.

virus writer -நச்சுபிழை எழுதுபவர் : காழ்ப்புள்ள நிகழ்நிரலை எழுதுபவர். எ.டு. விரும்பு பிழை | ஐ எழுதிய ஒனல் டி காஸ்மன்.

virus writing -நச்சுபிழை எழுதுதல் : அண்மைக் காலத்தில் தோன்றியது. இணையத்தில் பங்குகெள்ளும் நச்சுப்பிழை எழுத்தாளர்கள் மற்றும் திரட்டுபவர்கள் ஆகியோர் இதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நச்சுப்பிழைக் குறிமுறையைத் தாராளமாகக் கையாளுகின்றனர். இவர்கள் பணி நச்சுப்பிழை சாரா ஆராய்ச்சி யாளர்களின் பணியையும் விஞ்சுவது. அவ்வகையில் இவர்கள் முயற்சிகள் அமைந்துள்ளன. இவை இணையத்தில் காட்டப்படுகின்றன. இவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இது வேண்டத்தகாத ஒன்று. ஏனெனில் இதில் காழ்ப்புள்ளதும் பிழை யுள்ளதுமான நிகழ்நிரல்கள் எழுதப்படுகின்றன.

Visual Basic-விஷுவல் பேசிக்: விஷ"வல் பேசிக் என்னும் பெயரில் விஷூவல் என்பது 

visu

228

visu


|

வரைகலை பயனாளி இடை முகத்தை (கிராபிகல் யூசர் இண்டர்பேஸ், ஜியூஐ) உருவாக்குவதைக் குறிக்கும். பேசிக் என்பது பேசிக் மொழியைக் குறிப்பது. கணித்தல் வரலாற்றில் இம்மொழியே அதிகம் பயன்படுவது. விஷூவல் பேசிக் என்பது மூல பேசிக் மொழியிலிருந்து உருவானது. தற்பொழுது இது பல நூறு கூற்றுகள், சார்பலன்கள், திறவுச் சொற்கள் முதலிய வற்றைக் கொண்டது. விஷுவல் பேசிக் பயன்பாட்டிலுள்ள பயனாளி இடைமுகத்தில் அடிப்படைக் கூறுகள், படிவங்களும் கட்டுப்பாடுகளும் ஆகும். இவை பொருள்கள் எனப்படும். இவை அன்றாடம் நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்கள் போன்றவையே. ஏனைய பருப்பொருள்கள் போலவே இவற்றிற்குப் பண்புகள் உண்டு புற நிகழ்வுகளுக் கேற்பத் துலங்குபவை. விஷுவல் பேசிக் இடைமுகத்தில் படிவம், கருவிப்பட்டை கருவிப்பெட்டி, பட்டிப்பட்டை, புராஜெக்ட் எக்ஸ்புளோரர் (திட்ட ஆராய்வி), புராபர்ட்டிஸ் விண்டோ (பண்புச் சாளரம்) ஆகியவை உண்டு. நேரடி உதவி வசதிகள் மூலம் விஷுவல் பேசிக்கைப் பொறுத்த என்வினாவிற்குரிய விடையையும் பெறலாம்.

தற்பட்டி உறுப்புகள், தன் விரைவுத் தகவல் ஆகிய இரண்டும் மிகப்பயனுள்ளவை. விஷூவல் பேசிக் இவ்விரண்டையும் கொண்டது.

Visual Basic events - விஷுவல் பேசிக் நிகழ்வுகள்: இவை பல பயன்பாடுகளை எளிதாக உருவாக்க நமக்கு உதவுபவை. திறவை அழுத்தல், சுட்டெலியை நகர்த்தல், ஒரு பொருளை அழுத்தல் முதலியவை விஷுவல் பேசிக்கல் நடைபெறும் நிகழ்வுகள். நிகழ்நிரல் அண்மையில் நடந்த நிகழ்வைப்புரிந்து கொண்டு அதற்கேற்ற் வாறு துலங்கலை உண்டாக்கும்.

Visual Basic events, kinds of - விஷூவல் பேசிக் நிகழ்வு வகைகள் : இவை பின்வருமாறு. 1) பயனாளி நிகழ்வு: இது பயனாளிக்குரியது. 2) அமைப்பு நிகழ்வு: இதில் பயனாளிக் கட்டுப்பாடு இல்லை. இதில் அடங்குபவை. நேரச் செயல்கள், தகவல் அணுக்கப் பிழைகள், படிவ நிலை மாற்றங்கள், கட்டுப் பாட்டு நிலை மாற்றங்கள். 3) சுட்டெலி நிகழ்வுகள் : பா. mouse events. 4) விசைப் பலகை நிகழ்வுகள் :

Visu

229

VSNL


பா. keyboard events.

5) ஏனைய நிகழ்வுகள் : பா.other events


Visual Basic, features of - விஷூவல் பேசிக்கின் இயல்புகள் : உதவி வழி அமைந்த இரு இயல்புகள் இதற்குள்ளன. அவை பின்வருமாறு:

1) தற்பட்டியல் உறுப்புகள் : இவை நேரத்தைச் சேமிக்கும் தெரிவுகள். இவை பட்டியல் பெட்டியைத் திரையில் காட்டு பவை. இப்பெட்டி பண்புகளையும் முறைகளையும் கொண்டவை.

2) தன் விரைவுத் தகவல் (ஆட்டோகுயக் இன்பா) : இத்தெரிவு ஒரு சார்பலனின் சொற்றொடரியலைத் திரையில் காட்டும்.


Visual Basic interface - விஷூவல் பேசிக் இடைமுகம் : பா. Visual Basic.

'Visual Display Unit, VDU - காட்சி காட்டும் அலகு காசு.அ : காட்சியலகு. இது தகவல்களைக் காட்சியாக அல்லது படமாகக் காட்டுவது. தொலைக்காட்சி போன்று தென்படும். இது பலவகை. இதன் திறன் ஏற்பி அட்டையால் உறுதி செய்யப்படுவது. இந்த அட்டை ஒரு தனிமின்சுற்று ஆகும். பரவலாக உள்ள சில ஏற்பி அட்டைகள் பின்வருமாறு.

1) வண்ண வரைகலை ஏற்பி (சிஜிஏ) 2) விரி வரை கலை ஏற்பி (ஈ.ஜி.ஏ) 3) திசைச்சாரி வரைகலை ஏற்பி (விஜிஏ) 4) மீத்திசைச்சாரி வரைகலை ஏற்பி (எஸ்.விஜிஏ) வேறுபெயர் கண்காணிப்பி.


VLINK attribute - காட்சி இயல்பு : இது இணைப்புகளின் நிறத்தை மாற்றவல்லது. தவறுதல் மூலம் இணைய ஆராய்வியும் நெட்ஸ்கேப் செலுத்தியும் இதற்காக ஊதா நிறத்தைப் பயன்படுத்துபவை.


voice recognition - குரலெறிதல் : தெளிவாகப் பேசும் சொற்களை உட்பலன் கட்டளைகளாக ஏற்றுக் கொள்ளும் தொகுதி.


voice response - குரல் துலங்கல் : கணிப்பொறிக் கட்டுப் பாட்டுப் பதிவுத் தொகுதி. இதில் அடிப்படை ஒலிகள், எண்கள், சொற்கள் சொற் றொடர்கள் ஆகியவை தனித் தனியே மீட்புக்குச் சேமித்து வைக்கப்படும்.


volatile memory - அழியும் நினைவகம் : மின்னாற்றல் நிற்கும் பொழுது நீங்கும் நினைவகம்.


volume - பருமன் : புறச்சேமிப் பின் தனியலகு. உட்பல்ன் வெளிப்பலன் கருவியமைப் பினால் இதிலுள்ளவற்றை எளிதாகப் படிக்கலாம், எழுதலாம்.

VSNL, Videsh Sanchar Nigam - விஎஸ்என்எல், விதேஷ் சஞ்சார் நிகம், விசதி : உலக அளவுச் செய்தித் தொடர்புள்ள இந்திய நிறுவனம். உலகத்தை அறியும் இந்தியவாயில், தொலைத் தொடர்பு வலையமைவு.

VTOC, Volume Table of Contents - உள்ளடக்கப்படும் அட்டவணை, உபஅ : ஓர் இயங்கும் தொகுதி பயன்படுத்தும் அட்டவணை. நிகழ் நிரல் கோப்புகள் அல்லது தகவல்களை இடங் காண்பது. இயல்பாகக் கோப்புகள் வட்டில் அமைந்திருக்கும்.

V-34 - வி-34 : 33.6 கேஎம்பிஎஸ் வரை இயங்கும் இருபண்பிகளுக்குரிய நடப்புத் திட்ட அமைப்பு. (சீரி)

V-90 - வி-90 : 56 கேபிபிஎஸ் இருபண்பிகளுக்குரிய புதிய திட்ட அமைப்பு. அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/V&oldid=1047070" இலிருந்து மீள்விக்கப்பட்டது