கணிப்பொறி அகராதி/Z
zap - சேப் : திரையைத் தெளி வாக்கப் பல நிகழ்நிரல்களில் பயன்படும் ஆணை. அனைத் துலக அளவில் பயன்படுவது.
zero access storage - சுழியணுக்கச் சேமிப்பு: தற்பொழுது இது வழக்கில் இல்லை.
zero balance - சுழிச் சமன்: விவரங்களும் கூட்டுத் தொகை களும் சரியாக இருத்தல்
zero condition - சுழிநிலை: காந்த துண்ணறையின் நிலை; சுழியைக் குறிப்பது.
zero error - சுழிப்பிழை: செலுத்தும் பெறும் சுற்றுகளில் ஏற்படும் தாமத நேரத்தைக் குறிப்பது.
zero level address - சுழி மட்ட முகவரி.
zero outpùt signal - சுழி வெளிப் பலன் குறிகை: காந்த நுண்ணறையால் அளிக்கப்படு வது சுழிநிலையில் உண்மைத் துடிப்பு அளிக்கப்படும் பொழுது உண்டாவது.
zero suppression - சுழி ஒடுக்கம்: சிறப்பிலாச் சுழியை அச்சியற்று முன் நீக்குதல். பதிப்பித்தலின் ஒரு பணி இது.
Z-net-இசட் இணையம்: உள்ளூர்ப்பகுதி வலையமைவு.
zone - மண்டலம்: காந்த வட்டுப் பகுதி, முதன்மை நினைவகப் பகுதி.
zone digit - மண்டல இலக்கம்: ஒரு குறிமையின் பகுதிக்குத் திறவாக உள்ள எண்.
zoom - மலர்ச்சி: வரைகலை மென்பொருள் வசதி. இதில் படத்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது பெருக்கலாம்.