Y

Y2K - ஒய்2கே: ஆண்டு 2000.

Y2K problem - ஒய்2 சிக்கல் : 2000 ஆண்டுச் சிக்கல். வேறு பெயர் 2000 ஆண்டுப் பிழை. 1999 லிருந்து 2000க்குள் கணிப்பொறி எண் குழப்பம். 2000 என்பதற்குப் பதிலாக 1990க்குச் செல்லலாம் எனக் கருதப்பட்டது. சிக்கல் ஓர் எண்ணைப் பொறுத்ததே. அனைவரும் நினைத்தபடி அவ்வளவு கடுமையாக அமையவில்லை. பெருஞ்செலவில் உலகம் முழுதும் இச்சிக்கல் எளிதாகத் தீர்க்கப்பட்டுக் கணிப்பொறி கள் ஒழுங்காக இயங்கத் தொடங்கின. பா. Millennium bug.

Y-position - ஒய் நிலை : துளையிட்ட அட்டையின் மேல் வரிசையின் துளையிட்டநிலை வேறு 90 நிலை. இரண்டாம் வரிசை எக்ஸ் அல்லது 11. மூன்றாவது 0. எஞ்சியவை 1.9. குறிமானங்கள் எக்ஸ், ஒய் ஆகிய இரண்டும் (10, 1) அவ் வப்பொழுது தனியாக ஒதுக் கப்படுபவை.

Y-punch - ஒய் துளை: ஒர் அட்டையில் ஒய் நிலையில் இடப்படும் பொத்தல், வழக்க மாக, மேல் வரிசை. ஆனால் ஒய் நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/Y&oldid=1047073" இலிருந்து மீள்விக்கப்பட்டது