கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/006-010


நீ
“எங்கள் கிராமத்திற்கு
மின்சார வசதியில்லை”
என்று வருத்தப்படுகிறாய்;
அதிகாரிகள் மேல் ஆத்திரப்படுகிறாய்.

நான்
“உன்வதனப்
பொன் வெளிச்சம் இருக்கும்போது
மின் வெளிச்சம் எதற்கு”
என்று பேசாமல் விட்டிருப்பார்கள்
என்கிறேன்.

உன் முகத்தில்
வெட்கம் சித்திரம் வரைய,
நீ “போங்கள்” என்கிறாய்,
நான் உன் அருகே வருகிறேன் -
உண்ணும் போது
வாய்க்கு அருகே வரும் கையைப் போல!



47



என் இதழ்கள்
விண்ணப்பம் அளிக்கின்றன.

நீ
“இப்போது எதுவும் இல்லை” என்கிறாய்.

ஏக்கத்தோடு
“இந்த ரோஜாப் பூவுக்காவது” என்கிறேன்.

நீ கண்ணால் சிரித்தபடி
ரோஜாப் பூவுக்கு
ஒன்று கொடுக்கிறாய்.

அடுத்த வினாடி
அது என் கைக்கு வருகிறது.

“ரோஜாப் பூவே
நீயாவது கொடு” என்கிறேன்.
அது
என் உயிருக்கு ஊதியம் தருகிறது.

ரோஜாப்பூ நல்லபூ


48



செம்படவன் ஒருவன்,
இரண்டு வரால் மீன்களைப்
பிடித்து வருகிறான்;

நீ அவற்றை விலைக்கு வாங்கித்
தடாகத்தில் துள்ள விடுகிறாய்.

வேடன் ஒருவன்
இரண்டு புறாக்களைப்
பிடித்து வருகிறான்;

நீ அவற்றையும் வாங்கி
வானத்தில் பறக்க விடுகிறாய்.

நான்
என்றோ என்றோ
என் உள்ளுயிரை வாங்கி வைத்திருக்கும்
உன்னை வியந்து பார்க்கிறேன்.

“என்ன பார்க்கிறீர்கள்... உங்களுக்கும்.

“வேண்டாம்... வேண்டாம்...
என்னை மட்டும் விட்டு விடாதே!
விடுதலை செய்து விடாதே!”
என்று கெஞ்சுகிறேன்.



49


“தெரியுமா.
போன பிறவியில்
நீயும் நானும் தம்பதிகளாய் இருந்தோம்”
என்கிறேன்.

இந்தப் பிறவியில் நாம் இருவரும்
இணைய வேண்டும் என் அசையால் தான்
அப்படிச் சொல்கிறேன்.

இது உனக்குத் தெரியாதா, என்ன?

நீயோ,
“அடுத்த பிறவியிலும்
நாமிருவரும் தம்பதிகள் தாம்
அதில் என்ன சந்தேகம்?”
என்கிறாய்.

இந்தப் பிறவியைப் பற்றி
எதுவும் சொல்லாமல்
என்னை அந்தரத்தில் தவிக்க விடுகிறாயே?



50


மதுரைவீரன் பார்த்த மயக்கத்தில்
ஒரு மதுரக்காட்சி...

நீ ஆற்று வெள்ளத்தில்
தத்தளிக்கிறாய்.
என்னைக் கரைசேர்க்கக் கூடாதா
என்று கதறுகிறாய்.

நான் மீன் குஞ்சாகிறேன்.
துள்ளிக் குதிக்கிறேன்.
தூண்டிலாய் மாறித்
தூக்கி வருகிறேன்.
நீ நன்றியை உதிர்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறாய்.

நான் அபயக்குரல் கொடுக்கிறேன்;
“என்னைக் கரைசேர்க்கக்கூடாதா?”


51



“கண்ணில் தூசுவிழுந்து விட்டது.
கொஞ்சம் ஊதி எடுங்கள்” என்கிறாய்;

நல்ல உதவி... நான் மறுப்பேனா?
ஊதிக் கொண்டிருக்கிறேன்.

“நீங்கள் ஊதுகிறீர்களா? உறிஞ்சுகிறீர்களா?
இது உதடு அல்ல; கண் ?”
என்கிறாய்.

நான் சிரித்துக்கொண்டே,
“எனக்கு
இப்படியெல்லாம்
வித்தியாசம் பார்க்கத் தெரியாது”
என்கிறேன்.

“உங்கள் உதட்டில்
தூசு ஒட்டிக் கொண்டிருக்கிறதே”
என்று தொடர்கிறாய்.

அதை விட்டு விடு.
அது என்னுள்ளே போகட்டும்;
உன் கண்ணின் செய்தியைத்
தூதாக இருந்து சொல்லட்டும்”
என்கிறேன்.

இதுவும் ஒரு கற்பனைதான்!


52


“மார்கழி மாத்தில்
என் பிறந்த நாள் வரப்போகிறது”
என்று கூறிவிட்டுப் போகிறாய்.

உன் பிறந்ததினப் பரிசாக
ஒரு மானையோ மயிலையோ
கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்

என் பரிசு
உயிருள்ள பரிசாக
இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

அடுத்த வினாடியே
அப்படிக் கொடுத்தால்
நீ என் மீது பொழியும்
அன்பு வெள்ளத்தில்
ஒரு துளியை
அந்த உயிரின் மீது
சிந்தி விடுவாயோ
என்று பயப்படுகிறேன்.

நான்
வெறுங்கேையாடு வரத்
தீர்மானிக்கிறேன்.


53

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)


ஒரு நாள் ஒடோடி வந்து
"எங்கள் கிராமத்தில்
அறுவடை ஆரம்பமாகப் போகிறது”
என்கிறாய்.

"உங்கள் வயலிலுமா?" என்று
கேட்கிறேன்
"இல்லை; இன்னும் சிறிது காலம் ஆகும்.
 எங்கள் வயலில் வளரும் பயிர்
ஆறு மாதப் பயிர்”
என்று பதிலுரைக்கிறாய்.

இன்னொரு நாள்,
குதூகலத்தைத்
தோளில் தூக்கிக் கொண்டு வந்து
"எங்கள் வயலில்
அறுவடை நடக்கப் போகிறது"
என்கிறாய்.

இதுதான் நல்ல சமயம் என்று எண்ணி
"நமது வயலில் எப்போது..”
என்று மெல்லக் கேட்கிறேன்,

"அவசரப்படாதீர்கள்.
 அது ஆயிரங்காலத்துப்பயிர்"
என்று சொல்லிக்
காலைச் சிறகாக்குகிறாய்.



                    



54