கனியமுது/கூட்டுறவே நாட்டுயர்வு.

“பொன்னய்யா, புளிவிலைதான் என்ன என்றேன்;
    புலிவிலையைச் சொல்கின்றீர் போலும் மேலும்,
என்னய்யா அரிசிவிலை என்றால், நீரோ
    இங்கிலாந்தின் அரசிநிலை இயம்பு கின்றீர்!
சின்னய்யா பருப்புவிலை கேட்டான், ஆனால்
    சீர்யானை மருப்புவிலே கூறி விட்டீர்!
தன்னையன்றி வேறெவரும் இல்லை என்ற
    தருக்குடனே இருக்கின்றீர் அன்ருே? பாரும்!”


முனைப்போடு கல்லூரிப் பட்டம் பெற்ற
    முனியப்பன் ஊரார்முன் முறையிட் டானே!
“தனிப்பட்டோர் வாணிபத்தை நடத்தி வந்தால்
    தன்னலமும் தரமில்லாச் சரக்கும் மிஞ்சும்!
இனிப்பான சொல்பேசி இலாபஞ் சேர்ப்பார்:
    ஏராள சொத்துகளைத் திரட்டிக் கொள்வார்!
தனிப்பாதை இனிப்போவோம் வாரீர்” என்றான்,
    தயக்கமுற்றோர் மயக்கத்தைத் தெளிய வைத்தான்!

76

கூட்டுறவுத் திட்டத்தின் கொள்கை, நோக்கம்,
    குணம்மற்ற யாவையுமே விளக்கிச் சொன்னன்.
நாட்டுயர்வுக் கானகல்ல இயக்கம் என்று
    நல்லோர்கள் பாராட்டும் மொழிபு கன்றான்.
வீட்டுக்கு வீடிதிலே பங்கு பெற்று,
    விளைகின்ற பயன்முற்றும் பொதுவாய் ஆக்கி,
ஈட்டுகின்ற சமவாய்ப்புக் காண்போம்; என்றே
    எடுத்துரைத்தான்; தடுத்துரைக்க ஆளே இல்லை!


மறுநாளே ஆளுக்குப் பத்து ரூபாய்
    மதிப்புள்ள பங்குகளை ஊரா ரெல்லாம்
விறுவிறுப்பாய் வாங்கிடவே, பதிவு செய்யும்
    வேலையெல்லாம் விரைவாக முடித்து விட்டார்!
சுறுசுறுப்பாய் அரசாங்க உதவி பெற்றுச்
    சொந்தமுதல் மிகுதியாக்கி ஊருக் கென்று
வறுமையோட்டும் கூட்டுறவுப் பண்ட சாலை
    வகையாக முனியப்பன் அமைத்துத் தந்தான்!

நல்லதொரு பசுமரத்தைச் சாய்ப்ப தற்கும்
    நன்செய்யின் விளைச்சலினைக் குறைப்ப தற்கும்
புல்லுருவி-களைமுளத்தல் போலே, இந்தப்
    பொதுநலனை வளர்க்கின்ற செயலில் கூடப்
பொல்லாத மாக்களுமே புகுதல் உண்டாம்!
புனிதத்தை இதனலே கெடுக்க வேண்டாம்;
வல்லதொரு சட்டத்தின் உதவி கொண்டு
    வால்டு வோர்கொட்டம் அழிப்போம் ” என்றான்.


தரமுடைய சரக்குகளைத் தேர்ந்தெ டுத்துத்,
    தாங்குகின்ற மலிவுவில் போட்டு விற்றுச்
சிரமமின்றி அனைவர்க்கும் வழங்கி வந்தான்.
    திறமுடைய முறையிதனை ஊரார் மெச்சி,
உரமுடைய நெஞ்சத்தால் உற்ற நன்மை,
    ஒருமனிதன் கொழுக்கின்ற நிலைமை மாற்றி
மரமனைய மானிடர்க்கும் உரிமை ஈந்த
மகத்தான திட்டமென வாழ்த்தி நின்றார்!