கலைக்களஞ்சியம்/அகமதாபாத்

அகமதாபாத் பம்பாய் இராச்சியத்திலுள்ள ஒரு நகரம். ஆக்ராவுக்கும் டெல்லிக்கும் அடுத்தபடியாக அழகிய சிற்பங்களுக்குப் பர்போனது. கி.பி.1411-ல் அகமத்ஷா என்பவனால் இந்துப் பட்டணங்கள் இருந்த இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. ஸர் தாமஸ்ரோ 1615-ல், அது லண்டன் அளவு பொிய நகரம் என்று கூறினார். அங்குள்ள ஜமா மஜீத் முந்நூறு அழகான தூண்கள் உடையது. அது இந்துக் கோயிலை இடித்து மசூதியாக அமைக்கப்பட்டதாகும். நகரம் சபா்மதியின் இடது கரையில் உள்ளது. பம்பாய் இராச்சியத்தில் பம்பாய்க்கு அடுத்ததாகவுள்ள பொிய வியாபாரத்தலம். ஏராளமான நெசவாலைகள் உடையது. கைத் தொழில்களுக்கும் போ்போனது. மக்: 591,267 (1941).