கலைக்களஞ்சியம்/அகர்

அகா் (Agar): கிழக்கு நாடுகளில உள்ள செந்நிறக் கடற்பாசி யொன்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகைப் பசைபோன்ற பொருள். இது நிலையான வடிவமற்ற பொருளாயினும் தெளிவான தோற்றமுடையது. இது தூளாகவோ, கட்டிகளாகவோ கடைகளிற்கிடைக்கும். இது முக்கியமாகப் பாக்டிாியாவை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது. உணவிலும், பலவகை மி்ட்டாய்களிலும், பாலிலிருந்து தயாாிக்கப்படும் பொருள்களிலும் இதைச் சோ்க்கிறாா்கள். இது தண்ணீரை ஏராளமாக உட்கொண்டு பெருக்கிறது. வெந்நீரில் இது எளிதிற் கரைந்து குளிா்வித்தபின் பசைபோல் நிலைப்படுகிறது. சில மருந்துகளிலும் இதைக் கலப்பதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகர்&oldid=1453434" இலிருந்து மீள்விக்கப்பட்டது