கலைக்களஞ்சியம்/அகல்யாபாய் ஹோல்கார்
அகல்யாபாய் ஹோல்கார் (1735-1795) மகாராஷ்டிர இராச்சியங்களுள் ஒன்றாகிய ஹோல்காரில் தலைநகரான இந்தூரை நிருமாணித்த அரசி. மலகரி ராவ் ஹோல்காரின் ஒரே மகனான காண்டேராவின் மனைவி. தன் மகனான மல்லேராவ் சில காலம் ஆண்டு இறந்துவிட்டபின் தானே ஆட்சி எற்றுக்கொன்டாள். 30 ஆண்டுகள் இவ்வரசி செங்கோல் நடாத்தி மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றாள். 60 ஆம் வயதில் இறந்தாள், தரும சிந்தனையுள்ளவள்; தற்பெருமை சிறிதும் இல்லாதவள். தே. வெ. ம.