கலைக்களஞ்சியம்/அகஸ்டின், செயின்ட்

அகஸ்டின், செயின்ட் (354 - 430) கிறிஸ்துவ மதப் பெரியார்களில் ஒருவர். இவர் 386-ல் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து, ஒரு பாதிரியாகி, 395-ல் வட ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவில் பிஷப்பாக நியமனம் பெற்றார். இவர் இயற்றிய நுல்களில் சுயசரிதமும் (Confession), இறைநகர் (De Civitate Dei) என்னும் நுலும் இன்னும் பல நாடுகளிலும் வாசிக்கப்படுகின்றன.

கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவ மதமே ரோமானிய சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குச் காரணம் என்று குறூகூறி வந்தனர். இக்கூற்றை மறுக்கவே அகஸ்டின் இறைநகர் என்னும் நுலை இயற்றினார். இந்நுல் இயற்றப்பட்ட காலம் 413-426 இவ்வுலகில் கடவுளை மதியாது தனக்கென வாழ்ந்துவரும் கூட்டத்தினரின் சமூகம் மண்ணகர் என்றும் தனக்கென வாழாது இறைவனையே ஆராய்பவர்களது சமூகம் இறைநகர் என்றும் இவர் வேறுபாடு காண்கிறார். மண்ணகர் என்பதை இராச்சிய அரசாங்கம் எனவும், விண்ணகர் என்பைதச் சமயச் சபைகள் எனவும், பொருள் காணுதல் தவறாம். அரசாங்கம் பாவியான மனிதனுக்கு இன்றியைமயாதது என்பதே இவர் கருத்து. ஆகையால், அரசாங்கத்தின் மூலம் இயங்கும் இராச்சியம் மண்ணகராகாது. சமயத்திற்கும் இராச்சியத்திற்கும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பிணக்கு அகஸ்டின் காலத்தில் ஏற்படவில்லையாகலால், அரசிற்கு அடங்கி கடத்தலை அவர் வற்புறுத்தினர். ஆயினும் அவர் விண்ணகரின் உயர்வைப்பற்றிக் கூறியிருப்பதைப் பயன்படுத்திப் பிற்காலச் சமயவாதிகள் இராச்சியத்திலும் மதகுருக்கள் குழு உயர்ந்தது என்னும் கொள்கையை வற்புறுத்தினர்.

பிளேட்டோவும் சிசெரோவும், அகஸ்டினுைடய கொள்கைகளுக்கு ஓரளவு கருத்துட்டியவர்கள். இவர் கருத்துப்படி, "உடைமைளை யெல்லாம் பொதுவுடைமையாகக் கொள்ளும் இராச்சியமே இலட்சிய இராச்சியம். மனிதனது பாவ இயல்பே சொத்துக்கைள இன்றியைமயாதவை யாக்குகின்றது; ஏழைகளைக் காக்கவேண்டிய பொறுப்பு செல்வர்களுக்கு உண்டு; பொருள்களுக்கு நியாய விலை என்பதொன்றுண்டு; அதற்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிகமாக வாங்குவதும் குற்றம்; வட்டி வாங்குவது குற்றம்". இடைகாலப் பொருளாதாரக் கருத்துக்கள் இக்கருத்துக்களை ஒத்திருத்தல் காணத்தக்காது.