கலைக்களஞ்சியம்/அகோ
அகோ (Akho) (1615-1675): அகோ என்னும் சாதியைச் சேர்ந்த ஒரு தட்டார். இவர் அகமதாபாதுக்குச் சமீபத்தில் இருக்கும் ஜேதல்புரத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து அகமதாபாத்திற்குக் குடியேறினார். நெருங்கிய உறவினரின் நடநத்தை காரணமாக இவர் வாழ்க்கையில் வேறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார். காசியில் இருவருக்குப் பிரம்மானந்தார் என்ற பெயருள்ள சற்குரு கிடைத்தார். அகோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் அவருடைய மனப்பான்னையைக் கண்டு மகிழ்ந்த குரு அவருக்குச் சத்திய ஞானத்தை உபதேசித்தார். அகோ அகே கீதா முதலிய வேதாந்தத்தைப்பற்றிய 10, 12, காவிய நூல்களும் சப்பே என்ற 6 அடிகள் கொண்ட சந்தப் பாக்கள் பலவும் இயறினர். இவருடைய சப்பே மிகப் பிரசித்தி பெற்றவை. இவர் குஜராத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வழியைக்காட்டி, ஒரு புது நடையையையும் கொடுத்திருக்கிறார். இவர் தத்துவ ஞானத்தை மக்களுக்குப் போதித்தார். பி. ஜி. தே.