கலைக்களஞ்சியம்/அக்பர்பூர்

அக்பர்பூர் உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன.