கலைக்களஞ்சியம்/அக்பர் நாமா
அக்பர் நாமா : இது அக்பரைக் குறித்து அபுல்பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர்வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹுமாயூனையும் அக்பர் ஆட்சிக்கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுபசல் அக்பரை அளவிற்கு மிஞ்சி புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர். ஆயினும் அத்தகைய பகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்கு பாத்திரமானவன் என்பது கருதத்தக்கது.