கலைக்களஞ்சியம்/அக்ரிலிக அமிலம்

அக்ரிலிக அமிலம் (Acrylic Acid): [CH2 CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும்.