கலைக்களஞ்சியம்/அசுவான்

அசுவான் : இது இப்பெயர் கொண்ட எகிப்திய மாகாணத்தின் தலைநகர். கைரோவிற்கு 590 மைல் தெற்கே நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகருக்குக் கைரோவிலிருந்து ரெயில் போகிறது. மாகாணத்தின் பரப்பு: சு .337 ச. மைல்; மக்; 286,854(1947).

இந்நகர்ப் புறத்தே புராதன எகிப்திய நாகரிகத்தின் சின்னங்கள் பல காணக்கிடைக்கின்றன. இங்குப் பல பழைய கோயில்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து இந்நகர் சென்ற 40 நூற்றுண்டுகளாகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 16ஆம் நூற்றுண்டில் சலீம் என்னும் துருக்கி சுல்தான் இதைக் கைப்பற்றி இங்கு ஒரு ராணுவத்தையும் நிறுத்தினான். அக்காலத்தில் இங்கு வந்து குடியேறினவர்களுடைய வழித்தோன்றல்களே இப்போது இங்கு மிகுதியாகப் காணப்படுகின்றனர். 19ஆம் நூற்றுண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் எகிப்தியப் படையின் உதவியைக் கொண்டு இந்நகரை ஆக்கிரமித்துக் கொண்டனர். எகிப்திற்கும் சூடானிற்கும் அபிசீனியாவிற்கும் இடையே இது ஒரு முக்கியமான சரக்கு இறக்கேற்றுத்தலமாக விளங்குகிறது. இதற்கு 3 1/2மைல் வடக்கே அசுவான் அணை கட்டப்பட்டிருக்கிறது. நகரின் பரப்பு:3.7. சதுர மைல்; மக்:25,397 (1947).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசுவான்&oldid=1455615" இலிருந்து மீள்விக்கப்பட்டது