கலைக்களஞ்சியம்/அசென்ஷன் தீவு
அசென்ஷன் தீவு : தென் அட்லான்டிக் கடலில் செயின்ட்ஹெலினா தீவிற்கு 700 மைல் வடமேற்கேயுள்ள எரிமலைத் தீவு. இத்தீவைச் சுற்றியுள்ள கடலில் பலவகை மீன்களும், ஆமைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. தீவில் முயல்களும், காட்டாடுகளும் காணப்படுகின்றன. இத்தீவை முதல் முதலில் போர்ச்சுகேசியர்கள் 1501-ல் அசென்ஷன் தினத்தன்று கண்டுபிடித்ததால் இது இப்பெயர் பெற்றது. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இத்தீவு 1815-ல் நெப்போலியன் செயின்ட் ஹெலினுவிற்கு வந்த பின் ராணுவ முறையில் வலுப்படுத்தப்பட்டது. சுமார் 200 மக்களே இத்தீவில் வசிக்கின்றனர்.