கலைக்களஞ்சியம்/அடகு

அடகு ஒரு பொருகளை ஜாமீனாகப்‌ பெற்றுக்‌ கொண்டு பணம்‌ கடன்‌ கொடுத்தலாகும்‌. இந்தமுறை எல்லா நாடுகளிலும்‌ தொன்றுதொட்டே நடந்து வந்திருக்கிறது. சீன தேசத்தில்‌ அடகுக்‌ கடை இப்போது காணப்படுவது போலவே மூவாயிரம்‌ ஆண்டுகட்கு முன்னரும்‌ காணப்பட்டதாகத்‌ தெரிறது. சீனாவில்‌ அடகு வாங்குபவர்‌ 3 சதவீத வட்டியே வாங்கலாம்‌. அடகு வைப்போர்‌ மூன்று ஆண்டுக்‌ காலத்துக்குள்‌ அடகுப்‌ பொருளை மீட்கலாம்‌. அடகுமுறை ரோமாபுரியிலும்‌ கிரேக்க நாட்டிலும்‌ நடந்து வந்தது என்பதற்குச்‌ சான்றுகள்‌ உண்டு. ரோமானிய அடகுமுறை விதிகளை ஒட்டியே இக்காலத்து ஐரோப்பிய நாட்டு விதிகள்‌ இருந்து வருகின்றன.

ஐரோப்பாவில்‌ இப்போதுள்ள அடகுமுறை முதன்‌ முதலில்‌ தோன்றியது இத்தாலிய நாட்டிலாகும்‌. தொடக்கத்தில்‌, அதாவது 19ஆம்‌ நூற்றாண்டில்‌ போப்‌பாக இருந்தவர்கள்‌ ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக வட்டியின்‌றி அடகின்மேல்‌ பணங்‌ கொடுத்து வந்தனர்‌. ஆனால்‌, இம்முறையால்‌ நஷ்டம்‌ ஏற்பட்டதால்‌ வட்டி வாங்குவது தவறாகாது என்று முடிவு செய்யப்பட்டது. இத்தாலியிலிருந்து ஐரோப்பா முழுவதும்‌ அடகுமுறை பரவியது. பிரான்சு நாட்டில்‌ இது அரசாங்கத்தின்‌ ஆட்சியிலேயே நடைபெற்று வருகிறது. நகராண்மைக்‌ கழகங்களே நகரங்களில்‌ அடகுக்‌ கடைகள்‌ வைத்து. நடத்தி வருகின்றன. இங்கிலாந்து தவிர ஏனைய ஐரோப்பிய காடுகளில்‌ பொதுவாக இவ்வாறு நடைபெறுன்‌றது.

1-ம்‌ வில்லியம்‌ இங்கிலாந்தை வென்று ஆளத்‌தொடங்கியபொழுது அடகுமுறை அங்கு உண்டானது. ஆயினும்‌ அரசாங்கம்‌ அனுமதி தரத்‌ தொடங்கியது 1785 முதலாகும்‌, இதுபற்றிச்‌ சட்டங்கள்‌ இயமற்றப்‌பட்டுள்ளன. ஜெர்மனியிலும்‌ ஆஸ்‌திரியாவிலும்‌ அரசாங்கத்தாலும்‌ நகராண்மைக்‌ கழகங்களாலும்‌ தனிப்‌பட்டவர்களாலும்‌ அடகுக்‌ கடை நடத்தப்படுகிறது. சோவியத்‌ ரஷ்யாவில்‌ நகரச்‌ சோவியத்‌துக்களே அடகுக்‌ கடை வைத்து நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டிலும்‌ ஒற்றிமுறையும்‌ அடகுமுறையும்‌ பழமை வாய்ந்தவை எனத்‌ தெரிகிறது. ஏறக்குறைய ஆயிரம்‌ ஆண்டுகட்கு முன்பிருந்த சேனாவரையர்‌ தொல்காப்பியத்‌துக்கு எழுதிய உரையில்‌ நிலத்ததொற்‌றிக்கலம்‌ என்று கூறுகிறார்‌. ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகட்கு முன்பிருந்த அருணகிரிநாதர்‌ இயற்றிய திருப்புகழில்‌ ஆபரணம்‌ வைத்து அடகுதேடு பொருள்‌ (594) என்னும்‌ சொற்றொடர்‌ காணப்படுறது.

இப்போதுள்ள அடகுமுறை பற்றிய விதிகள்‌ இந்திய ஒப்பந்தச்‌ சட்டம்‌ என்னும்‌ சட்டத்தில்‌ கரணப்படுகன்‌றன. அவ்விதிகள்‌ கூறுவது இது :—

அடகு என்பது கடனைச்‌ செலுத்துவதற்கேனும்‌, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கேனும்‌ ஜாமீனாகப்‌ பொருள்களைத்‌ தருவதாகும்‌. அடைமானம்‌ என்பதில்‌ அடைமானப்‌ பொருளை அடைமானம்‌ வாங்குபவரிடம்‌ தருவதில்லை. ஆனால்‌ அடகு வைப்பவர்‌ தமது பொருளை அடகு வாங்குபவரிடம்‌ தந்‌துவிடவேண்டும்‌. அடகு வாங்குபவர்‌ அப்பொருளைத்‌ தாம்‌ கொடுத்‌துள்ள பணத்‌துக்காகவும்‌, அதன்‌ வட்டிக்காகவும்‌ அப்பொருளைப்‌ பாதுகாப்பதற்காகத்‌ தாம்‌ செலவிடும்‌ பணத்துக்காகவும்‌ ஜாமீனாகப்‌ பெற்றுக்‌ கொள்வார்‌. ஆனால்‌, ஏந்தக்‌. கடனுக்காக அல்லது எந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவர்‌ அடகைப்‌ பெற்றாரோ அதற்‌காக மட்டுமே அப்பொருளைப்‌ பெற்றுக்‌ கொள்ள அவர்‌ உரிமையுடையவர்‌. அடகுப்‌ பொருள்களைப்‌ பாதுகாப்‌பதற்காக ஏற்படும்‌ விசேஷச்‌ செலவை அடகு வைப்பவரிடமிருந்து பெற உரிமை உடையவர்‌. அடகு வைப்‌பவர்‌ குறித்த நாளில்‌ கடனைச்‌ செலுத்தாமலும்‌ வாக்‌குறுதியை நிறைவேற்றாமலுமிருந்தால்‌ அடகு வாங்கியவர்‌ அடகுப்‌ பொருளைத்‌ தம்மிடமே வைத்துக்கொண்டு அவர்மீது வழக்குத்‌ தொடரவோ அல்லது அவருக்கு நியாயமான அவதி கொடுத்த பின்னர்‌ அப்பொருளை விற்றுவிடவோ செய்யலாம்‌. அப்படி விற்கும்‌ விலை அடகுப்‌ பணத்திலும்‌ குறைவாயிருந்தால்‌ அக்குறைவுப்‌ பணத்தை அடகு வைத்தவர்‌ அடகு வாங்கியவர்க்குத்‌ தரவேண்டும்‌. விலைப்பணம்‌ அதிகமாயிருந்தால்‌ அதிகமாக உள்ள பணத்தை அடகு வாங்கியவர்‌ அடகு வைத்தவர்க்குத்‌ தரவேண்டும்‌. ஆயினும்‌ பொருளை விற்றுமுடிவதற்குமுன்‌ அடகு வைத்தவர்‌ கொடுக்கவேண்டிய பணத்தையும்‌ மேற்கொண்டு ஏற்பட்ட செலவுகளையும்‌ அடகு வாங்கியவரிடம்‌ கொடுத்துவிட்‌டுப்‌ பொருளை மீட்டுக்‌ கொள்ளலாம்‌. அடகு வைத்தவர்க்கு அப்பொருளில்‌ எத்தகைய உறிமையுண்டோ அத்தகைய உரிமையைத்தான்‌ அடகு வாங்கியவர்‌ பெறுவர்‌. அடகுப்பொருளுக்குச்‌ சேதம்‌ உண்டாகுமாறு பிறர்‌ ஒருவர்‌ செயல்‌ புரிவாரானால்‌ அவர்மீது அடகு வைத்தவரும்‌ வழக்குத்‌ தொடரலாம்‌; அடகு வாங்கியவரும்‌ வழக்குத்‌ தொடரலாம்‌.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அடகு&oldid=1455933" இலிருந்து மீள்விக்கப்பட்டது