கலைக்களஞ்சியம்/அடைப்பு

அடைப்பு (Lock) : ஒரு நீர் மட்டத்திலுள்ள கப்பலையோ படகையோ இன்னொரு மட்டத்திற்கு உயர்த்தவோ தாழ்த்தவோ உதவும் சாதனம் அடைப்பு எனப்படுகிறது. இது இரு புறங்களிலும் மதகுகளைக். கொண்டு நீரைக் கசியவிடாத பெட்டிபோன்றது. ஓர் ஆறும் அதன் கால்வாயும் வெவ்வேறான மட்டங்கள் கொண்டிருக்கலாம். இப்போது ஒரு படகு ஆற்றிலிருந்து கால்வாய்க்குள் போகவேண்டுமானால் ஆற்றின் பக்கத்திலுள்ள மதகு திறக்கப்பட்டுப் படகு அடைப்புப் பெட்டிக்குள் நுழையும். அதிலுள்ள நீரின் மட்டம் கால்வாயின் மட்டத்திற்குச் சமமாக்கப்படும். இதன் பின் இரண்டாவது மதகு திறக்கப்பட்டுப் படகு அடைப்பிலிருந்து கால்வாய்க்குள் பிரவேசிக்கும். உலகிற் பெரிய அடைப்பு ஐரோப்பாவில் வடகடல்—ஆம்ஸ்டர்டாம் கப்பல் கால்வாயில் உள்ளது (படம்). இது 1312 அடி நீளமும், 164 அடி அகலமுமுள்ளது. ஏற்றவற்றம் அதிகமாக உள்ள இடங்களில் கப்பல் துறைகளிலும் இத்தகைய அடைப்புக்களை அமைக்
அடைப்பு
உதவி : நெதர்லாந்து தூது நிலையம், புதுடெல்லி.

கிறார்கள். வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் பிரிக்கும் பானமா கால்வாயில் ஒரு பெரிய அடைப்புள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அடைப்பு&oldid=1455918" இலிருந்து மீள்விக்கப்பட்டது