கலைக்களஞ்சியம்/அணிலாடு முன்றிலார்

அணிலாடு முன்றிலார் சங்க காலத்துப் பெண் கவிஞர். கணவர் பிரிவு கண்டு வருந்தும் தலைவியின் நிலை அணிலாடு முன்றில் போலப் புல்லென்றிருந்தது என்ற கருத்துடைய செய்யுள் பாடியதால் இப்பெயர் பெற்றார். (குறுந்: 41)