கலைக்களஞ்சியம்/அண்டோரா
அண்டோரா: உலகிலுள்ள மிகச் சிறு குடியரசு நாடுகளில் ஒன்று. பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையே, மத்தியதரைக் கடலுக்கு 80 மைல்
மேற்கே யமைந்துள்ளது. 9 ஆம் நூற்றாண்டில் சார்லமேன் காலத்திலிருந்து இது சுதந்திர நாடாக இருந்து வருகிறது. இந்நாட்டவர்கள் விவசாயம், ஆடு மேய்த்தல் முதலிய தொழில்களில் ஈடுபடுபவர்கள். இங்குப் புகையிலை மிகுதியாக விளைகிறது.
இக்குடியரசின் ஆட்சி இருபத்துநான்கு அங்கத்தினர்கள் கொண்ட ஒரு சபையால் நடத்தப்படுகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் வழங்கும் காட்டலான் என்னும் மொழியே இங்கும் பேசப்படுகிறது. பரப்பு : 191 சதுர மைல். மக்.5400 (1950).