கலைக்களஞ்சியம்/அனுமான்

அனுமான் புராண வீரன், அஞ்சனை என்னும் அப்சரசுக்கும் வாயுவுக்கும் பிறந்தவன். இராகு பற்றியிருந்த சூரியனைப்
அனுமான்
உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை.
பழமெனக் கவரப் போகையில் இந்திரன் அடிக்க, இவனது கன்னம் (ஹனு) முறியப் பெற்றதால் பிரமன் முதலிய தேவர்களால் அனுமன் என்று பெயரிடப் பெற்றான் பிரமாத்திரத்தாலும் தேவாத்திரத்தாலும் இறவா வரம் பெற்றான். சுக்கிரீவனுக்கு அமைச்சனாக இருந்தான். இராம இலக்குமணரைச் சுக்கிரீவனுக்கு நண்பராக்கினான். இலங்கை சென்று, சீதையைக் கண்டு வந்து இராமனுக்குச் சொன்னான். பின்னர் இராவணனுடன் நடந்த போரில் இராமனுக்கு வாகனமாயிருந்தான். இலக்குமணன் மூர்ச்சித்தபொழுது சஞ்சீவி கொண்டுவந்து பிழைப்பித்தான். பரதனுக்கு இராமனுடைய வரவை அறிவித்து, முத்திரை மோதிரம் காட்டி தீயில் விழாது தடுத்து, மீண்டும் இராமனிடம் சென்று சிரஞ்சீவிப் பட்டம் பெற்றான். பஞ்ச பூதங்களாலும் அழியாதவன். இவன் நைட்டிகப் பிரமசாரி. இவனுக்கு மாருதி, ஆஞ்சனேயன், கேசரி புத்திரன், வாயு புத்திரன் எனவும் பெயர் உண்டு.

ஆஞ்சனேயனுக்கு ஆலயம் அமைத்து வழிபடுவதுண்டு. படைக்கலப்பயிற்சி, உடற்பயிற்சி முதலிய கலைப்பயிற்சி செய்வோர் இவனைத் தமக்கு உரிய தெய்வமாகக் கொள்வதுண்டு. பிரமசாரியும், வியாகரணம் வல்ல பண்டிதனும், ஞானியும், சிறந்த பக்திமானுமான இவனை அறிவும் துணிவும் விழைவோர் வணங்குவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனுமான்&oldid=1455575" இலிருந்து மீள்விக்கப்பட்டது