கலைக்களஞ்சியம்/அப்பாலோ
அப்பாலோ (Apollo) கிரேக்கக் கடவுளாகிய ஜூஸ் (Zeus) மகன்; ஒளி, கவிதை, உடல் நலம், ஆணழகு ஆகியவற்றின் தேவதை ; பிற்காலத்தில் சூரிய தேவதையாகக் கருதப்பட்டான். ரோமானியர்கள் கி. மு. 280-ல் 90 அடி. உயரமான ஒரு சிலை செய்தனர். அது உலக அதிசயங்கள் ஏழனுள் ஒன்றாகக் கருதப்பட்டது; கி. மு. 226-ல் பூகம்பத்தால் கீழே விழுந்தது. அராபியர் 653-ல் ரோம் நகரைக் கைப்பற்றியபோது அதை உலோகமாக விற்றனர்.